வெள்ளி, 5 மார்ச், 2010

சாமியார்களின் தவறுகளை அரசு வேடிக்கை பார்க்காது: முதல்வர் கருணாநிதி



சென்னை, மார்ச் 4: சமுதாயத்தைச் சீரழிக்கின்ற சாமியார்களின் தவறுகளை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:பாமர மக்களின் வாழ்வையும், அறிவையும் பாழாக்கி வருகின்ற, பணக் கொள்ளை அடிக்கின்ற பகல் வேடக்காரர்களை, மக்களுக்கு அடையாளம் காட்ட, பகுத்தறிவு இயக்கம் பல்லாண்டு காலமாக, பல சான்றுகளைக் காட்டி, பலத்த எதிர்ப்புகளுக்கு இடையிலும் பிரசாரம் செய்து வருகிறது.சந்திரகாந்தா, சொர்க்கவாசல், மனோகரா, வேலைக்காரி, பராசக்தி, தூக்குமேடை போன்ற படங்கள், நாடகங்கள் மூலம் காவியுடைதாரிகளின் கபட நாடகத்தை எடுத்துக் காட்டியது.எனினும், இதையெல்லாம் இன்னும் புரிந்து கொள்ளாத, புரிந்து கொண்டாலும், திருந்திக் கொள்ள இயலாதோர் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்.சமூக நலனும், கண்ணியமும் காக்கப்பட வேண்டுமென்று, அவற்றில் அக்கறை காட்டுகிற ஒரு மக்கள் நல அரசு, அண்மையில் நடைபெற்றதாகக் கூறப்படும் கயமைத்தனமான சாமியார்களின் ஏமாற்று வித்தைகளை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.ஊடகங்களின் பொறுப்புணர்வு: குற்றங்கள் எப்படி, எங்கே, யாரால் நடத்தப்பட்டன என்பதைச் சான்றாகக் காட்ட, பத்திரிகைகளிலோ, தொலைக்காட்சிகளிலோ காட்டப்படும் செய்திகளும், படங்களும் அளவுக்கு அதிகமாக இருந்தால், அவை இளையோர் நெஞ்சங்களில் மோசமான மாறுதல்களை ஏற்படுத்தும். இதை, எதிர்காலத் தலைமுறை மீது அக்கறை கொண்ட அனைவரும் எண்ணிப் பார்த்து நடந்து கொள்ள வேண்டும்.அண்மையில் வெளிவந்துள்ள செய்திகள், அதனைத் தொடர்ந்து வருகின்ற செய்திகள் எவையாயினும் அவற்றை விவரம் அறிந்தோர், அரசுக்கும், காவல் துறைக்கும் தெரிவிக்க வேண்டும். மாறாக, தாங்களே முன்னின்று அவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுவது தேவையற்றது. இது தீயவர்கள் தங்கள் செயலை நியாயப்படுத்த வலிமை சேர்ப்பதாக ஆகிவிடும்."அருவருக்கத் தக்க செய்திகள் மற்றும் படங்களை வெளியிடுவது முள்ளை முள்ளால் எடுக்கும் காரியம்தானே" என்று சில ஏடுகளும், தொலைக்காட்சி நிறுவனங்களும் வாதிடலாம்.போதையேற்றும் கள் அருந்தியவனை, மேலும் கள்ளை ஊற்றி திருத்த முடியுமா? அதுபோலவே, இந்தச் செய்திகளும், படங்களும் சமூகத்தை மேலும் சீரழித்து விடக் கூடாதே என்ற கவலையோடு அரசின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.பக்தி வேடம் பூண்டு, பாமர மக்களை படுகுழியில் தள்ளுகின்ற பகல் வேடக்காரர்களையும், அவர்களிடம் சிக்கி பலியாகி, சமுதாயத்தைச் சீரழிக்கின்ற சபல புத்தி உடையவர்களையும் இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. அரசு எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துக்கள்

(தொடர்ச்சி) அண்மையில்தான் முதல்வர் ஒரு கடித அறிக்கை மூலம் புனைகதை கூறுவது போலகடந்த ஆட்சியில் செயேந்திரன் மீது பொய் வழக்கு போட்டதாகக் குறிப்பிட்டார். ஆதரித்திருக்க வேண்டிய இவர் அமைதி காக்காமல் அதுவும் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது அவ்வாறு எழுதியது நீதிமன்ற அவமதிப்பு என்று தெரிந்தும் மறைமுக ஆதரவைத்தந்தார். செயேந்திரன் மீதான கொலைககுற்ற வழக்கில் சான்று சொல்ல வேண்டியவர்கள் குப்புற அடித்துப் பொய்ச சான்று அளித்துக் காப்பாற்றி வருவதற்கும் உதவியாக இப்போக்கு அமைந்துள்ளது. இப்பொழுது நித்யானந்தன் மீது வழக்கு தொடுத்தால் அது போல் எதிர்க்கட்சி அவர் பக்கம்தானே நிற்கும். எனவே கட்சி அடிப்படையில் இல்லாமல் உண்மையின் பக்கம் முதல்வராயினும் அரசாயினும் நிற்க வேண்டும். போலி அறிக்கைகளால் பயன் இல்லை. அனைத்துச் சாமியார்கள் குறித்தும் புலன் விசாரணை மேற்கொண்டு ஒழுக்கக் கேடர்களையும் குற்றத் தொழில் புரிந்து வாழ்பவர்களையும் தண்டிக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/5/2010 2:59:00 AM

1) சாமியார் என்று சொல்லப்படுபவர்களைத் தலைவர்கள் முதலான யார் சந்தித்தாலும் அதனைச் செய்தியாக வெளியிடக் கூடாது. அதன் மூலம் தங்களுக்குப் புகழ் முகத்தை உருவாக்கி அதனைக் கேடயமாகக் கொண்டு பரத்தமைத் (விபச்சாரத்) தொழிலும் கொள்ளையும் கொலையும் அடிக்கின்றனர். எனவே, ஊடகங்கள் பண்பாட்டுச்செய்திகளுக்கு முதன்மை தராமல் போலிகளை ஊக்குவிக்கும் செயலில் இருந்து மீள வேண்டும். 2)முதல்வரின் அறி்க்கை படிப்பதற்கு நன்றாக உள்ளது. ஆனால், நடைமுறையில் என்ன நடக்கிறது? குற்றம் செய்து பிடிபடுபவர்களை அரசியல், சாதி, அல்லது வேறு வகைபிரிவின் அடிப்படையில் ஒரு சாரார் காப்பாற்றுவதால் குற்றம் செய்பவர்கள் திருந்தாமல் தப்பித்து மீண்டும் தங்கள் ஒழுக்கக் கேட்டைத் தொடருகின்றனர். சான்றுக்கு ஒன்று: காஞ்சிபுரத்திலுள்ள செயேந்திரன் என்னும் போலிச் சாமியாரைக் கடந்த ஆட்சியில் பரத்தமைத் தொழில், கொலை போன்ற காரணங்களால் கடந்த ஆட்சி கைது செய்தது. அரசு வேடிக்கை பார்க்காமல் கைது செய்து நடவடிக்ககை எடுத்ததைப் பாராட்ட வேண்டிய திமுககொலைக குற்றவாளிக்கு ஆதரவு தந்து அவர் சார்ந்த சமூகத்தின் ஆதரவைப் பெற முயன்று அவருக்கு வாழ்வு தந்தது. (தொடர்ச்சி காண்க)அன்ப

By Ilakkuvanar Thiruvalluvan
3/5/2010 2:58:00 AM
பிற இதழ்கள் ஒரே பக்கத்திலேயே அல்லது தொடர் பக்கங்களில் பதிவாகும் கருத்துகளையும் வெளியிடுவதால் பதிந்த கருத்து மறைவதில்லை. ஆனால், தினமணி வெவ்வேறு அளவுகோல் கொண்டு ஒவ்வொரு செய்திக்கு ஒவ்வோர் எண்ணிக்கையில் பதிவுகளை அமைத்தப் பழையவற்றை நீக்குவதால் தொடக்கப் பதிவுகள் காணாமல் போகின்றன. அது போல் இப்பதிவிலும் கருத்துகளைக் காணவில்லை. தினமணி இப்போக்கை மாற்றிக் கொள்ள அன்புடன் வேண்டுகின்றேன்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
++++++++++++++++++++++++++++++++++++++

"பாமர மக்களின் வாழ்வையும், அறிவையும் பாழாக்கி வருகின்ற, பணக் கொள்ளை அடிக்கின்ற பகல் வேடக்காரர்களை, மக்களுக்கு அடையாளம் காட்ட, புறப்பாட்ட பகுத்தறிவு இயக்கம்" அதையேதான் செய்துகொண்டிருக்கிறது. ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி கண்ணே! என்பது மிகவும் பொருந்தும். அந்த நாட்களில் வீடியோ வசதி இருந்திருந்தால், விஜயகுமாரி, மனோரமா மற்றும் பலர் சின்ன திரையில் தோன்றி இருப்பர்!

By வாடா மன்னாரு
3/5/2010 2:44:00 AM

உலகமும் உலகத்தில் காணப்படுவனவும் தெய்வீகத் தன்மையால் ஏற்பட்டவை என்றால், இக்கணக்கற்ற தெய்வீகத் தன்மைகள் ஒவ்வொன்றாக சிறிது சிறிதுகாலமே இருந்து பின்னர் மறைந்து போவானேன்? தெய்வீகத்தன்மை என்பதுவே அநித்தியமா? சும்மா இருந்த கடவுள் திடீரென்று இவ்வுலகத்தை தோற்றுவிக்கும்படியான அவசியமோ, காரணமோ என்ன அவர் மூளை

By AlsoTamil
3/5/2010 2:26:00 AM

சன்டிவி மற்றும் நக்கீரன் போல தினமலர் ஒரு விடியோ காட்சி போட்டு இருக்கு அதை போகி பாருங்கள். தினமனியும் இந்த விடியோவ போடணும் . இந்த சங்கபரிவார் குரங்கு கூட்டம் போல் வக்கலாத்து வாங்க கூடாது. ராமகோபாலன் குரங்கும் சிவசேனை குரங்குகளும் சேர்ந்து சாமியார் விஷயத்தை மூடி மறைக்க பார்கிறார்கள். ஏதோ இந்த சாமியார்களும், இந்த சங்கபரிவார் குரங்குகளும் சேர்ந்துதான் ஹிந்து மதத்தை வாழ வைப்பது போல. இவர்களால் தான் ஹிந்து மதத்திற்கு இழிவு. இவர்கள் சாந்தியும் சமாதானமும் நிரம்பிய ஹிந்து மதத்தின் பெயாரால் தீவிரவாத வேலைகள் செய்து ஹிந்து மதத்தின் பெயரை கெடுக்கிறார்கள் ஹிந்து மதத்திற்கு களங்கம் உண்டாக்கு கிறார்கள். மத்தபடி ஹிந்து மதத்தை தூக்கி நிறுத்த இந்த சங்கபரிவார் குரங்குகளும் இந்த சாமியார் குரங்குகளும் ஒன்றும் தேவை இல்லை. ஹிந்து மதம் பூர்வாங்க மதம் அது இன்றும் நன்றாக தான் இருக்கிறது. இந்த காவாலி பய மக்களால்தான் கேட்ட பேரு மத்தபடி ஒன்னும் இல்லை. ஹிந்து மதத்தை பாதுகாக்கிறோம், பரப்புகிறோம் பேர்வழி என்று மதத்தை வைத்து அரசியல், பொருளாதாரம் தேடும் கயவர்கள் இவர்கள். சாமியார்களை ஒழிப்போம் கடவுளை கும்பிடுவோ

By ram ram
3/5/2010 2:22:00 AM

சன்டிவி மற்றும் நக்கீரன் போல தினமலர் ஒரு விடியோ காட்சி போட்டு இருக்கு அதை போகி பாருங்கள். தினமனியும் இந்த விடியோவ போடணும் . இந்த சங்கபரிவார் குரங்கு கூட்டம் போல் வக்கலாத்து வாங்க கூடாது. ராமகோபாலன் குரங்கும் சிவசேனை குரங்குகளும் சேர்ந்து சாமியார் விஷயத்தை மூடி மறைக்க பார்கிறார்கள். ஏதோ இந்த சாமியார்களும், இந்த சங்கபரிவார் குரங்குகளும் சேர்ந்துதான் ஹிந்து மதத்தை வாழ வைப்பது போல. இவர்களால் தான் ஹிந்து மதத்திற்கு இழிவு. இவர்கள் சாந்தியும் சமாதானமும் நிரம்பிய ஹிந்து மதத்தின் பெயாரால் தீவிரவாத வேலைகள் செய்து ஹிந்து மதத்தின் பெயரை கெடுக்கிறார்கள் ஹிந்து மதத்திற்கு களங்கம் உண்டாக்கு கிறார்கள். மத்தபடி ஹிந்து மதத்தை தூக்கி நிறுத்த இந்த சங்கபரிவார் குரங்குகளும் இந்த சாமியார் குரங்குகளும் ஒன்றும் தேவை இல்லை. ஹிந்து மதம் பூர்வாங்க மதம் அது இன்றும் நன்றாக தான் இருக்கிறது. இந்த காவாலி பய மக்களால்தான் கேட்ட பேரு மத்தபடி ஒன்னும் இல்லை. ஹிந்து மதத்தை பாதுகாக்கிறோம், பரப்புகிறோம் பேர்வழி என்று மதத்தை வைத்து அரசியல், பொருளாதாரம் தேடும் கயவர்கள் இவர்கள். சாமியார்களை ஒழிப்போம் கடவுளை கும்பிடுவோ

By ram ram
3/5/2010 2:19:00 AM

மை, 02 மார்ச் 2010, 11:17.28 AM GMT +05:30 ] டெல்லியில் 5 இடங்களில் விபசார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். அங்கிருந்த மாணவிகள், விமான பணிப் பெண்கள் போன்ற பலர் மீட்கப்பட்டுள்ளனர். டெல்லி கான்பூர் பகுதியில் வசித்து வருபவர் சிவ்முரத் திவேதி (39). சத்ய சாய்பாபாவின் சீடர் என்று தன்னை பிரபலப்படுத்திக் கொண்ட இவர் கான்பூரில் சாய்பாபா பெயரில் பெரிய கோவில் கட்டி உள்ளார். டெல்லியில் இவருக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர். கோவிலில் தினமும் பஜனைப் பாடல்களை பாடி இவர் சொற்பொழிவு நிகழ்த்துவது வழக்கம். மிக குறுகிய காலத்தில் இவருக்கு டெல்லியில் உள்ள அரசியல் வாதிகளிடமும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் டெல்லியில் புகழ் பெற்ற சாமியாராக வலம் வந்தார். இந்த நிலையில் சாமியார் சிவ்முரத் திவேதி உண்மையான சாமியார் அல்ல போலி சாமியாரான அவர் மதத்தை கேடயமாக வைத்துக் கொண்டு விபசாரம் செய்து வருவதாக புகார்கள் வந்தன. இதனால் சந்தேகம் அடைந்த டெல்லி போலீசார் சிவ்முரத் திவேதி யையும் அவரது கோவில், வீடுகளையும் கண்காணித்தனர்.

By AlsoTamil
3/5/2010 2:01:00 AM

போர்குற்றங்களின் சாட்சியங்களை அழிக்கும் முயற்சியில் இலங்கை இந்திய உளவுத்துறை! தமிழ்நாட்டு ஊடகங்கள்! இலங்கை போர் குற்றங்களை அறிந்தவர்கள் தமிழ்நாட்டில் இருப்பதாக கூறி அவர்களை அழிக்க ஒரு குழு தமிழகம் வந்துள்ளது. இலங்கை உள்நாட்டு போருக்கு பின்னர் தமிழ்நாட்டிற்கு வந்தடைந்த ஈழத் தமிழர் சிலர், அன்மையில் கடத்தப்பட்டது அவர்கள் நேரில் கண்ட போர் குற்றங்களை வெளியில் தெரிவிக்கக் கூடாது என்று அடக்கி வைப்பதற்காகத்தான் என்று சென்னை ஊடக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஒரு மாதத்தில் கொழும்பு வதை முகாமில் இருந்து ஒரு சிறப்புக்குழு தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சில குறிப்பிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட கூறியிருந்த இக்குழுவில் முன்னாளில் தமிழ் ஈழ நிர்வாகத்தில் பணியாற்றியவர்கள் மற்றும் காவல்துறையினர் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற தமிழர் சிலரைப் பற்றியும், தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழர்களுடன் தொடர்பு கொண்டும் மற்றும் இலங்கை ராணுவத்தினரின் போர்க்குற்றங்களை நேரில் கண்டறிந்த மருத்துவப் பணியாளர்களையும் சந்தித்து தகவல் பெறுவதற்காகவே என்று கூறப்படுகிறது.

By AlsoTamil
3/5/2010 1:36:00 AM

வீட்டைப்பூட்டிவிட்டு நடிகை ரஞ்சிதா தலைமறைவு [ வியாழக்கிழமை, 04 மார்ச் 2010, 09:51.44 AM GMT +05:30 ] சாமியார் நித்தியானந்தாவின் வீடியோ வெளியானதை தொடர்ந்து நடிகை ரஞ்சிதா தனது வீட்டைப்பூட்டிவிட்டு தலைமறைவாகியுள்ளார். அவரது செல்போனும் அணைக்கப்பட்டுள்ளது. அவர் வெளிவந்தால்தான் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என்று காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். சுவாமி நித்யானந்தாவுடன் படுக்கையறையில் ரஞ்சிதா இருப்பது போல் வெளியான வீடியோ படக்காட்சிகளால் தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரஞ்சிதா 1992-ல் பாரதி ராஜா இயக்கிய “நாடோடி தென்றல்” படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். விஜயகாந்துடன் “பெரிய மருது”, சத்யராஜுடன் “அமைதிப்படை”, அர்ஜுனுடன் “கர்ணா” உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றும் ராகேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து திடீரென்று சினிமாவுக்கு முழுக்கு போட்டார். கணவருடன் சந்தோஷமாக குடும்பம் நடத்திய அவர் சமீபத்தில் மீண்டும் சினிமாவுக்கு வந்தார். மணிரத்னம் இயக்கும் “ராவணன்” படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். “தெற்கத்தி பொண்ணு” டி.வி. தொடரிலும் நடித்த

By AlsoTamil
3/5/2010 1:33:00 AM

லவசமாக படம் பார்க்க கலையர் திரையரங்கம் [ செவ்வாய்க்கிழமை, 02 மார்ச் 2010, 10:57.23 AM GMT +05:30 ] சென்னையில் தமிழ், ஆங்கில திரைப்படங்களை இலவசமாக பார்க்கும் வகையில் கலைஞர் திரையரங்கத்தை கனிமொழி திறந்துவைக்கவுள்ளார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் அடையாறு கிரீன்வேஸ் சாலையில் இயங்கி வருகிறது. இங்கு ரூ.5 லட்சம் செலவில் மினி தியேட்டர் கட்டப்பட்டு உள்ளது. கலைஞர் திரையரங்கம் என்று அதற்கு பெயரிடப்பட்டு உள்ளது. கனிமொழி எம்.பி. வருகிற 20-ந்தேதி இந்த தியேட்டரை திறந்து வைக்கிறார்.

By AlsoTamil
3/5/2010 1:30:00 AM

சாமியார் விவகாரத்தில் பரபரப்பாக பேசப்படும் நடிகை ரஞ்சிதா கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றவர். இவரும், சாமியாரும் இருப்பது போன்ற காட்சிகளை பார்க்கும் போது, ரஞ்சிதா சினிமா காட்சி போல் சர்வ சாதாரணமாக போஸ் கொடுக்கிறார். எனவே ரஞ்சிதா பணத்துக்காக இந்த காட்சியில் நடித்து இருக்கலாம் என்றும் இதற்காக லட்சக்கணக்கில் பணம் கை மாறியதாகவும் கூறப்படுகிறது. மேலும் சாமியார் ஆசிரமத்தில் பழைய நடிகை ராகசுதா யோகா கற்று அங்கேயே தங்கி இருந்து பக்தி பிரசங்கம் செய்து வந்தார். சாமியாருடன் ஏற்பட்ட மோதலில் ராகசுதா இந்த சி.டி.யை தயாரித்து ஒரு பெண் மூலம் பத்திரிகை மற்றும் டெலிவிஷனுக்கு அனுப்பி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சி.டி.யை அனுப்பிய அந்த பெண் சிக்கினால்தான் இந்த சதி திட்டங்களில் ஈடுபட்டவர்கள் யார், யார் என்பது தெரிய வரும்.

By AlsoTamil
3/5/2010 1:27:00 AM

மீபத்தில் ஆந்திரா கவர்னராக இருந்த என்.டி. திவாரி ஒரு பெண்ணுடன் இருப்பது போன்ற காட்சி வெளியானது. இவை எல்லாமே பணத்துக்காக திட்டமிட்டு படம் பிடிக்கப்பட்டதாகும். அதே பாணியில் நித்யானந்தாவையும் படம் பிடித்து அவரது ஆன்மீக புகழை அழிக்க ஒரு கும்பல் திட்டமிட்டதும் அந்த கும்பல் நித்யானந்தா தியான பீட ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்றும் தெரிய வந்துள்ளது. ரஞ்சிதாவுடன் நித்யானந்தா இருக்கும் படுக்கை அறை காட்சிகளை ஒரு பெண் அதிநவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சி.டி.க்காக தயாரித்தார் என்றும் அந்த பெண்தான் சென்னையில் உள்ள எல்லா தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், சாமியாரது சி.டி.க்களை பதிவு தபாலில் அனுப்பி வைத்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது. அந்த சி.டி.யுடன் 10 பக்க விளக்கக் குறிப்புகளையும் அந்த பெண் அனுப்பியுள்ளார். அதில் அவர், சுவாமி நித்யானந்தா பல பெண்களுடன் இருக்கும் சி.டி.க்கள் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளாராம். அந்த மர்ம பெண் யார் என்பது தெரியவில்லை.

By AlsoTamil
3/5/2010 1:25:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

1 கருத்து:

  1. பிற இதழ்கள் ஒரே பக்கத்திலேயே அல்லது தொடர் பக்கங்களில் பதிவாகும் கருத்துகளையும் வெளியிடுவதால் பதிந்த கருத்து மறைவதில்லை. ஆனால், தினமணி வெவ்வேறு அளவுகோல் கொண்டு ஒவ்வொரு செய்திக்கு ஒவ்வோர் எண்ணிக்கையில் பதிவுகளை அமைத்தப் பழையவற்றை நீக்குவதால் தொடக்கப் பதிவுகள் காணாமல் போகின்றன. அது போல் இப்பதிவிலும் கருத்துகளைக் காணவில்லை. தினமணி இப்போக்கை மாற்றிக் கொள்ள அன்புடன் வேண்டுகின்றேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

    பதிலளிநீக்கு