thiruvalluvar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
thiruvalluvar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

திருவள்ளுவரைப் போற்றிய பாரதியார்

பாரதியால் போற்றப்பட்டவர் வள்ளுவர்: "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன்




 
 திருநெல்வேலி, ஆக. 25: மகாகவி பாரதியால் போற்றப்பட்டவர் வள்ளுவ பேராசான் எனக் குறிப்பிட்டார் "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன்.  கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப் பள்ளியின் தெ.கு. சண்முகசுந்தரம் கலையரங்கில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற கடையம் திருவள்ளுவர் கழகத்தின் 17-ம் ஆண்டு விழாவில் அவர் பேசியதாவது:  பாரதி அன்பர்களாக இருந்துகொண்டு பாரதியின் பாதங்கள் பட்ட இடத்திற்கும் மூச்சுக்காற்று உலவிய பகுதிகளுக்கும் வருவது மெக்காவுக்கு முஸ்லிம்கள் செல்வதையும், காசிக்கும் ராமேசுவரத்துக்கும் ஹிந்துக்கள் செல்வதையும், ஜெருசலேமிற்கு கிறிஸ்தவர்கள் செல்வதையும் போல பெருமை தரும் விஷயம்.  ""யாமறிந்த புலவர்களில் கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல்'' என்று பாரதி குறிப்பிடுவார். கம்பனையும் இளங்கோவனையும் குறிப்பிட்டது போல வள்ளுவன் என்றும் பாரதி குறிப்பிட்டிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. எந்த அளவுக்கு பாரதி வள்ளுவரை மதித்தான் என்பதை "வள்ளுவர்' என்று குறிப்பிடுவதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.  தமிழகத்தில் ஒவ்வொரு ஊரிலும் திருவள்ளுவர் கழகங்கள் தோன்ற வேண்டும், இளங்கோவுக்கும் கம்பனுக்கும் பாரதிக்கும் விழாக்கள் எடுக்கப்பட வேண்டும்; அங்கெல்லாம் தமிழ் ஒலிக்க வேண்டும் என்ற ஏக்கம்தான் இதுபோன்ற விழாக்களில் என்னைப் பங்கேற்கச் செய்கிறது.  இப்படிப்பட்ட விழாக்களில் நான் கலந்துகொள்வதைப் பார்த்து எல்லா ஊர்களிலும் இலக்கிய விழாக்கள் எடுக்கப்பட வேண்டும் என்பதால்தான் நான் மறுக்காமல் திருவள்ளுவர் கழகம், கம்பன் கழகம் போன்ற அமைப்புகளின் அழைப்பை தட்டாமல் ஏற்றுக்கொள்கிறேன். அதன் மூலமாவது இலக்கிய ஆர்வம் வளராதா, இளைஞர்களுக்கு மொழி உணர்வு ஏற்படாதா என்கிற எதிர்பார்ப்புதான் அதற்கு காரணம்.  ஊருக்கு ஊர் திருவள்ளுவருக்கு விழா எடுப்பது என்பது தமிழுக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கும். திருவள்ளுவர் கழகக் கூட்டங்களைப் பள்ளிகளில் நடத்தினால் அங்கு பயிலும் குழந்தைகளுக்குத் தமிழ் உணர்வு ஏற்படும். ஏதாவது இரண்டு குறள்களையாவது அவர்கள் கற்க வாய்ப்பு உருவாகும். எனது வேண்டுகோளாக இதை வைக்கிறேன்.  தமிழின் அடையாளம்: செவ்விலக்கியங்களை சராசரி மனிதர்களால் ரசித்து விட முடியாது. அகநானூறும் புறநானூறும் அற்புதமான இலக்கியங்கள்தாம். ஆனால் அதை புரிந்து ரசிப்பதற்கு தமிழில் புலமையும் தேவைப்படுகிறது. படித்தவனோ, பாமரனோ, அறிவுஜீவிகளோ, சாமானியர்களோ எல்லோரும் ரசிக்கக் கூடியது திருக்குறள்தான். தமிழின் அடையாளமாக வள்ளுவர், இளங்கோவடிகள், கம்பன், பாரதி ஆகிய நால்வரும் அமைந்துள்ளனர். இதில் ஆதாரசுருதியாக இருப்பது வள்ளுவம்.  பாரதிக்கு புதுவையும், கடையமும்தான் சிறப்பு சேர்த்தவை. கடையத்தில் பாரதி பாடிய இடங்களை தகவல் பலகைகளாக வைக்க வேண்டும். திருவள்ளுவர் கழகம் அதற்கு முன்னோடியாகச் செயல்பட வேண்டும். அதற்கு "தினமணி' ஒத்துழைக்கும்.  புதுவையில் பாரதி குயில் பாட்டு பாடிய தோப்பு இன்று அழிக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகளாக ஆகப் போகிறது. பாரதியின் நினைவு இல்லம் புதுப்பிக்கப்படாமல் இருக்கிறது. இதைக் கேள்வி கேட்க யாருமில்லை. பாரதி வாழ்ந்த கடையத்தில் பாரதிக்கு சிலை இல்லை. திருவள்ளுவர் கழகம் இதற்கான முயற்சியில் ஈடுபட்டால் தினமணி நிச்சயமாக ஒத்துழைக்கும். இதற்கு பாரதி அன்பர்கள் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார் அவர்.  விழாவுக்கு கடையம் திருவள்ளுவர் கழகத் தலைவர் ஆ. சேதுராமலிங்கம் தலைமை வகித்தார். செயலர் மு.செ. அறிவரசன் அறிமுக உரையாற்றினார். பள்ளியின் செயலர் க.சோ. சேதுராமன் வாழ்த்துரை வழங்கினார்.  விழா நிகழ்ச்சிகள் பாராட்டரங்கம், உரையரங்கம், ஆடல் அரங்கம் என்று 3 பகுதிகளாக நடத்தப்பட்டது.  பாராட்டரங்கம்: இந்நிகழ்வில், கடையம் ஒன்றிய அளவில் உள்ள பள்ளிகளில் 2011-2012-ம் கல்வியாண்டில் நடைபெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் முதலிடம் பெற்ற 17 மாணவ, மாணவியருக்கு தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் பரிசு வழங்கிப் பாராட்டினார்.  நிகழ்வின் 2-ம் பகுதியாக உரையரங்கம் இடம்பெற்றது. இதில், ஆலங்குளம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 7-ம் வகுப்பு மாணவர் சிவ. மணிமாறன் "நுணங்கிய கேள்வியர் அல்லார்' என்ற தலைப்பிலும், 11-ம் வகுப்பு மாணவி சிவ. இலக்குமி மணிபாலா "செருநரைக் காணின் சுமக்க' என்ற தலைப்பிலும் பேசினர்.  ஆடல் அரங்கம்: தொடர்ந்து ஆடல் அரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் யுவகலா பாரதி, கலைஇளமணி விருதுகளைப் பெற்ற திருநெல்வேலியைச் சேர்ந்த க. மோனிஷாராஜின் "பாரதிக்குப் பரதாஞ்சலி' என்ற பரதநாட்டிய நிகழ்ச்சியும், சி. காந்திமதி, இரா. கீர்த்தனா, அ.கா. அறிவரசி குழுவினரின் நாட்டியமும் இடம்பெற்றது.  விழாவில், அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி. மு. முத்துசங்கரலிங்கம், ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளி சிறப்பு அலுவலர் மு. சுந்தரம், ஆழ்வார்குறிச்சி திருவள்ளுவர் கழகத் தலைவர் கே.எம். சங்கரநாராயணன், கடையம் திருவள்ளுவர் கழக துணைத் தலைவர் மு.அ. சித்திக், இணைச் செயலர்கள் செ. சோமசுந்தரம், ந. சுப்பிரமணியன், இர. இலாபம் சிவசாமி, ம. ஆறுமுகம், மு. வேலு, பொருளாளர் நி. இந்திரசித்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  பள்ளித் தலைமை ஆசிரியர் முகைதீன் அப்துல்காதர் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதனுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.  நிகழ்ச்சியில் சிறப்பாகப் பேசிய மாணவர் சிவ. மணிமாறன், மாணவி சிவ. இலக்குமி மணிபாலா மற்றும் மேடையில் திருக்குறள் கூறிய கடையத்தைச் சேர்ந்த சிறுமி அபி ஆகியோருக்கு தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் பொன்னாடை அணிவித்து பரிசு வழங்கினார்.  முன்னதாக, கடையம் திருவள்ளுவர் கழக துணைத் தலைவர் க.சோ. கல்யாணி சிவகாமிநாதன் வரவேற்றார்.  ஏற்பாடுகளை திருவள்ளுவர் கழக நிர்வாகிகள் செய்திருந்தனர். 

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

thamizh new year - photoon: அடடே இதுக்குத்தான் தைப் புத்தாண்டா?

சில மாற்றுக்கருத்துகளை வெளியிட்டுத் தன்னை நடுநிலையாகக் காட்டிக் கொண்டாலும் தினமணி  தன மூலக் கருத்திற்க எதிரான மாற்றுக் கருத்துகளை வெளியிடு

வதில்லை. எனவேதான் பல நண்பர்கள் தினமணியில் கருத்துப் பதிவைத் தொடருமாறு வேண்டினாலும் பெரும்பாலும் எழுதுவதில்லை. இருந்தும் சொல்கிறேன். ஆண்டுப்பிறப்பு எது என்பதில்  கருத்து வேறுபாடு இருக்கலாம்.  அதற்காகக், ''கருணலொள்ளுவர் ''  என்றா சொல்வது.
தினமணியின் தமிழ்ப்பற்று உண்மை என்றால் தெய்வப்புலவர் திருவள்ளுவர் பெயரைச் சிதைக்க வேண்டா. திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /



ஃபோட்டூன்
அடடே இதுக்குத்தான் தைப் புத்தாண்டா?

First Published : 14 Jan 2012 10:30:16 AM IST


இவிங்களுக்கு மட்டும் பூத்தாண்டு பொறக்குதுங்கோஓஓஓஓ!கருணலொள்ளுவர் ஆண்டுசுடாலிங் மாதம் சென்றுகனிவலி மாதம் பிறக்கும் முதல்நாளில்தம்மில்லத்தாருக்கு பூத்தாண்டு பொறந்ததைதம்மில்லருக்கு பொறந்ததாய் துக்ளக் தர்பார் நடாத்தினீய்ங்களே!!நீவிர் வாழ்க வாழ்க!!ம்.....தன்னேரில்லாத் தமிழே!உனக்கும் கறுப்பு (கண்ணாடி) திரையிட்டு உன்புகழை மறைக்கக் கூடும் ஒரு நாள்...ஓர் நாள்!எச்சரிக்கை! எச்சரிக்கை!!
கருத்துகள்

வைரமுத்து என்ற 'பெருங்கவிதான்' கருத்து சொல்ல பொருத்தமானவர்.
By JANAKIRAMAN
1/14/2012 7:19:00 PM
வள்ளுவரை இப்படி வரைந்து அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.இது தான் தமிழ் பெயரில் உள்ள அன்பா! வக்கிர புத்தி உள்ளவர்கள் எதையும்/ எப்படியும் நியாயப் படுத்துவர்.தமிழ் மக்கள்/அறிஞர்கள் இதை கண்டுகொள்வார்களா? இதுவே அ தி மு க செய்து இருந்தால்...? தி.மு.க /தி.க போல் ஒரு வக்கிர எண்ணம் உள்ளவர்கள் கிட்டுவது அரிது.
By ராமச்சந்திரசேகரன்.
1/14/2012 5:28:00 PM
ஊரை அடிச்சு உலையில் போட்டது ஊழல் கொள்ளையில் முதலிடம் வகிப்பது. பொய் அறிக்கை தினமும் விடுப்பது. ஆட்களை குளப்புவது. தொண்ணூறு வயதாகியும் அரச இயந்திரத்தை இயக்க அனிஞாயம் பண்ணுவது,, இவை போக காலாகாலமாக இருந்துவந்த புது வருஷம் சித்திரையை மாற்றி தை என்று சமூகத்தையே ஏமாற்றுவது இதுக்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தை பாவித்து கழுவில் ஏற்ற பரிந்துரைக்கிறேன்.
By ஊர்க்குருவி.
1/14/2012 3:24:00 PM
அடடா அடடா அடடடா ங்கொப்பன் வள்ளுவன் குருடனா? லிப்ஸ்டிக் அடிச்சு செவந்ததா? அல்ல வெத்தல போட்டு செவந்ததா? கறுப்பு கண்ணாடி எதுக்குங்க? எல்லாம் பொங்கல் கொண்டாடறத மறைக்கவா? ஆண்டு பிறப்புக்கு இருக்குது இன்னும் மூணு மாசம் தாங்களே!!!! அதுக்குள்ள போஸ்டர் ஏனுங்க?
By நச்சினார்க்கினியன்
1/14/2012 2:15:00 PM
வள்ளுவ கருணாநிதியாரை , 'வழக்கு' மாற்றிய ஒளி விளக்கை, உள்ளத்தில் வைத்து நித்தம், உவகையாய் வாழ்த்தலாமே. தமிழ் ஆண்டை, மாற்றி வைத்து, தவிக்க விட்ட பெருமை தன்னை தமிழர் இனி மறக்க மாட்டார்.
By கம்பம் பி.டி.முருகன்,திருச்சி
1/14/2012 1:44:00 PM
அய்யோ பாவம் வள்ளுவர்....
By ஜெயகுமாரன்
1/14/2012 1:40:00 PM
படம் வேண்டுமானால் ஏற்று கொல்லாமல் இருக்கலாம். ஆனால், உண்மையான புத்தாண்டு தை தான். இதை 1921 -ம் ஆண்டு தமிழ் அறிஞர்கள் கூடி முடிவெடுத்தது. சித்திரை மாத பிறப்பில் கொண்டாடும் புத்தாண்டில் மரபு என்று சொல்லாமே தவிர அதன் விளக்கம் அசிங்ககமாக இருக்கிறது. சூரியனை மையமாக வைத்தே நாம் நாளின் பிறப்பையும்; வாரத்தின் (ஞாயறு) பிறப்பையும் குறிப்பிடுகிறோம். அதுபோலவே ஆண்டின் பிறப்பையும் சூரியன் ஒரு சுழற்சி முடித்து மிண்டும் தொடரும் நாளான தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்ட முடிவு செய்தார்கள் தமிழ் அறிஞர்கள். நாம் சூரியனை வழிப்பட்டவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இதை அரசியல் வேறுபாடு பார்க்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு பொங்கல் நல் வாழ்த்துகள்.
By S சுரேஷ்
1/14/2012 1:37:00 PM
உலக புகழ் பெற்ற ஒருவரின் உருவத்தில் உலக மகா அயோக்கியன் படம் உள்ளது வேதனையான விஷயம். இது போதாது என்று எந்த ஒரு மக்களும் ஏற்றுக்கொள்ளத விஷயத்துக்கு வீணான விளம்பரம் வேறு. நாடு எங்கே சென்ற கொண்டிருக்கிறது? கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.
By வெங்கடேஷ்.ம
1/14/2012 12:48:00 PM
உலக புகழ் பெற்ற ஒருவரின் உருவத்தில் உலக மகா அயோக்கியன் படம் உள்ளது வேதனையான விஷயம். இது போதாது என்று எந்த ஒரு மக்களும் ஏற்றுக்கொள்ளத விஷயத்துக்கு வீணான விளம்பரம் வேறு. நாடு எங்கே சென்ற கொண்டிருக்கிறது? கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.
By வெங்கடேஷ்.ம
1/14/2012 12:47:00 PM
தமிழ் புத்தாண்டை கேலி கூத்தாகிவர்கள், மக்கள் இவர்களை ஒதுக்கவேண்டும். நம் பண்டைய மரபு மாற்ற இவர்கள் யார்,??????.
By swaminathan
1/14/2012 12:00:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

புதன், 19 அக்டோபர், 2011

Multi personality of Dr.S.Ilakkuvanar - Thirukkural Studies: பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி

பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி

நன்றி “சென்னை வானொலி நிலையம்”
பதிவு செய்த நாள் : 18/10/2011


பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை – திருக்குறள் ஆராய்ச்சி

தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள் காலத்தால் அழியாத கருவூலம்; உள்ளுதொறும் உள்ளுதொறும் உயர் எண்ணங்களை விளைவிக்கும் உயர்நூல்; எழுதப்பட்டது ஈராயிரம் ஆண்டிற்கு முற்பட்ட அக்காலத்தில்தான் என்றாலும் எக்காலத்திலும் ஏற்றம் தரும் வாழ்வியல் இலக்கியம்; உலகிலே எண்ணற்ற நூல்கள் தோன்றிவரினும் உலக நூலாகக் கருதக்கூடிய ஒரே ஒப்புயர்வற்ற அறநூல். ஒப்புயர்வற்ற திருக்குறளில் முற்றும் துறைபோகிய புலனழுக்கற்ற புலவர் பெருமானாய்த் திகழ்ந்தவர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள்.

தொல்காப்பியம், சங்கஇலக்கியங்கள், திருக்குறள் ஆகியவற்றை  ஆய்ந்தாய்ந்து அகன்ற அறிவுசான்ற சான்றோராக ஒருபுறமும் அவற்றைப் பாரெங்கும் பரப்பும் அருந்தமிழ்த் தொண்டராக மறுபுறமும் பேராசிரியர் சி.இலக்குவனார் திகழ்ந்தார். கடமையில் இருந்து வழுவாக் கல்வி ஆசானாகவும் தமிழ்நெறியைப் போற்றும் புலமையாளராகவும் உயர்தமிழுக்கு வரும் கேட்டினை உடைத்தெறியும் உரையாளராகவும் மக்களிடையே நல்ல தமிழைக் கொண்டு செல்லும் இதழாளராகவும் எங்கும் தமிழை ஏற்றம் பெறச்  செய்யும் போராளியாகவும் பன்முகப்பாங்குடன் திகழ்ந்த பேராசிரியர் அவர்களின் திருக்குறள் ஆராய்ச்சியைப்பற்றி மட்டும் ஈண்டுப் பார்ப்போம்.

தொடர்ச்சிக்கு :
 


சனி, 15 ஜனவரி, 2011

Pongal festival: பொங்கல் பண்டிகை: ஏன்? எதற்கு?

குறள்நெறி     ஓங்கி         குடியர              சுயர்ந்து
பசியும்           பிணியும்        பகையும்   நீங்கி
வசியும்      வளனும்             சுரந்து            வாழியர்
வையகம்      வாழ்க;        வான்தமிழ்     வெல்க
உழைப்பே   உயிரென      உலகுக்    குணர்த்தும்
பொங்கற்   புதுநாள்        பொலிவுடன்     சிறக்க
எங்கும்           இன்பம்      இனிதே      பொலிகவே.

                                செம்மொழிச்சுடர் பேராசிரியர்     முனைவர் சி.இலக்குவனார்
       (குறள் நெறி பொங்கல் ஆண்டு மலர் 15-01-1965)
உலகில் அமைதி திகழ்ந்து இன்பம் பொங்கவும்
அனைவர் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கவும்
தமிழ்ஈழத் தனியரசு அமைந்து உரிமை பொங்கவும்
                 புத்தாண்டு வாழ்த்துகள்!
                 பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!
                திருவள்ளுவர் திருநாள் வாழ்த்துகள்!

தோழமையுடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
01.01.2042 (15.01.2011)


"பொங்கல் பண்டிகை' என்றதுமே தமிழர்களின் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும். அந்த அளவுக்கு அனைத்துத் தரப்பினராலும் ஆனந்தத்தோடு கொண்டாடப்படுவது பொங்கல் திருநாள். இது தொடர்ச்சியாக நான்கு நாட்கள், நகரம் முதல் கிராமங்கள் வரை பரவலாகக் கொண்டாடப்படுகின்றது. எனினும் கிராமங்களில்தான் இந்தப் பண்டிகையில் கொண்டாட்டங்கள் அதிகம்.போகி பண்டிகை"போகி'யோடு தொடங்குகிறது பொங்கல் திருநாள். இந்திரனுக்கு "போகி' என்றொரு பெயர் உண்டு. எனவே இந்நாள், "இந்திர விழா'வாகவும் இருந்திருக்கக்கூடும். மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவனுக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவன் இந்திரன். வேதத்தில் இந்திரனை பற்றிய துதிகள் பல இடம் பெற்றுள்ளன.மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை "போகி'யன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது. தற்போது, "பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற வகையில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள். அப்போது தேவையற்ற பழம் பொருட்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம். அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர். ஆனால் இப்போதெல்லாம் போகியன்று "டயர்'களைக் கொளுத்தும் மூடத்தனம், பரவலாக நடக்கின்றது. இதனால் வளி மண்டலம் மாசு படுவதோடு, மனிதர்களுக்கு நோயும் உண்டாகின்றன. ஏற்கெனவே சுவாசக் கோளாறு உள்ளவர்கள், டயர்கள் வெளியிடும் நச்சுப் புகையால் மேலும் பாதிப்புக்குள்ளாவார்கள். என்னதான் காவல் துறையினர் எச்சரித்தாலும், வீட்டுக்கு ஒரு காவலரையா நிறுத்த முடியும்? எனவே நாமே சமுதாயக் கட்டுப்பாடோடும், அறிவியல் விழிப்புணர்வோடும் இருந்து, நோய்கள் தரும் டயர் கொளுத்தும் வழக்கத்தினை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.பொங்கல் பண்டிகை ஆடிப் பட்டம் தேடி விதைப்பது தமிழர் மரபு. அவை தை மாதம் பிறப்பதற்கு முன் அறுவடையாகின்றது. அந்தப் புத்தரிசியை மண் பானையில் வைத்து (இதற்காகவே புதிய பானை வாங்கப்பட்டு, அதில் திருநீறும் குங்குமமும் இட்டு, அப்பானையை தெய்வீகமாகக் கருதுவது வழக்கம்) சர்க்கரைப் பொங்கல் செய்வது மரபு.பெரும்பாலும் கிராமப்புறங்களில், வாசலிலே வண்ணக் கோலமிட்டு, அதன் நடுவே பொங்கல் பானையை வைத்து, பானையின் கழுத்தில் மஞ்சள் கிழங்கை இலையோடு கட்டி, மணம் பரப்பும் பொங்கல் சோறு பொங்கியெழும்போது, "பொங்கலோ பொங்கல்' என்று கூறி மகிழ்வார்கள். இப்படித் திறந்த வெளியில் பொங்கல் வைப்பதால், சூரிய பகவான் அதை நிவேதனமாக ஏற்று மகிழ்கிறார். இதற்காக கூடவே கரும்பும் வைத்து, கடவுளுக்குப் படைப்பார்கள்.நகரங்களில் உள்ளோர், சமையலறையிலேயே பொங்கல் தயார் செய்துவிடுவார்கள். சந்து, பொந்துகளில்கூட வாகன நெரிசல் வளைத்துக் கட்டும்போது, சமையலறை பொங்கலே நகரங்களில் சாத்தியம். ஆயினும் "பால்கனி'யிலிருந்தோ, மொட்டை மாடியிலிருந்தோ அந்தப் பொங்கலை சூரியனுக்குப் படைத்து மகிழ்வார்கள்; தூபம், தீபம் காட்டி ஆதவனை ஆராதனம் செய்வார்கள். இங்கும் கட்டாயம் கரும்பு நிவேதனம், முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.கிராமங்களில் தீபாவளிக்கு புத்தாடை வாங்காது போயினும், பொங்கலுக்கு எப்படியும் புதிய ஆடைகளையே அணிவார்கள். நகரங்களில் ஏனோ தீபாவளியின் இடத்தை பொங்கல் பண்டிகை பிடிக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. அது சரி, "மாடுகளை மேய்க்க மந்தைவெளி இங்கு இல்லையே' என்ற பாடல் வரிகள் கூறுவதும் நியாயம்தானே?எது எப்படியோ... பொங்கல் பண்டிகை தரும் மகிழ்ச்சி, நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பொதுவானதே!மாட்டுப் பொங்கல் கால்நடைகளே நமது நாட்டில் செல்வத்தின் அடையாளமாக ஒரு காலத்தில் திகழ்ந்தன. "ஆயிரம் பசுவுடைய கோ நாயகர்' என்ற பட்டப் பெயர்களெல்லாம் புழக்கத்தில் இருந்தன. "ஏரின் பின்னால்தான் உலகமே சுழல்கின்றது' என்றார் திருவள்ளுவர். அந்த ஏர் முனையை முன்னேந்திச் செல்பவை மாடுகளே! இதன் மூலம் மாடுகளே உலகை உயிர்ப்போடு வைத்துள்ளன எனக் கூறின் மிகையில்லை. அந்த மாடுகளைக் கடவுளாகவே கருதி வழிபடுவதுதான் மாட்டுப் பொங்கலின் தத்துவம். பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் உறைவதாகப் பெரியோர்கள் கூறுகின்றனர். எனவே பசுவை வணங்குவதன் மூலம், அனைத்து தேவர்களின் ஆசிகளும் நமக்குக் கிடைக்கின்றன.மாட்டுப் பொங்கலன்று பசுக்களுக்கு மஞ்சள் பூசி, திருநீறிட்டு, குங்குமம் வைத்து, மாலை போட்டு வணங்குவர். அதன் பசிக்குத் தேவையான உணவையும் படைப்பர்.காளைகளுக்கு கொம்புகளில் வர்ணம் பூசி, காலில் சலங்கை கட்டி, "வீர நடை' நடக்க வைப்பர். பல வீடுகளில் அன்று காளை மாடுகளுக்கு "அங்க வஸ்திரம்' போர்த்தி, மரியாதை செய்வார்கள். ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டின் நாயகர்களும் காளைகளே! ஆனால் அக்காளைகளுக்கு செயற்கையான முறைகளில் வெறியூட்டுவது தவறு. தக்க மருத்துவர்களின் ஆலோசனைகளைக் கேட்டுப் பெற்று, அதன் வீரத்தை வளர்ப்பதே விவேகமான செயலாகும்.திருவள்ளுவர் தினம் மாட்டுப் பொங்கலன்று திருவள்ளுவர் தினமும் வருகின்றது. நாத்திகர்களாலும் மறுக்க முடியாத தெய்வப் புலவர் திருவள்ளுவர். கடவுள் வாழ்த்தோடு திருக்குறளைத் தொடங்கும் வள்ளுவப் பெருந்தகை, காதலுடன் அவ்வரிய நூலை நிறைவு செய்கின்றார். திருக்குறளில் சொல்லப்படாத விஷயமே இல்லை. "உண்டது செரித்ததை உணர்ந்து உண்போர்க்கு மருந்தே தேவையில்லை' என்று அன்றே சொன்ன மருத்துவ வல்லுநர் திருவள்ளுவர். நீதி, நேர்மை, உண்மை, துறவு, அரச நீதி, காதல் என்று அவர் பாடாத விஷயமே இல்லை. திருவள்ளுவர் தினத்தன்று வள்ளுவர் கூறிய அறநெறிப் பாடல்களை நாமும் ஓதி, இளைய சமுதாயத்தினருக்கும் அவற்றின் பொருட்களை உணர்வித்தலே உண்மையான "வள்ளுவ பூஜை'யாகும். இந்நன்னெறியை தமிழர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.காணும்பொங்கல்பெண்கள் தங்கள் சகோதரர்களின் நலனுக்காகச் செய்வது "கனு' பொங்கல். அன்று காலை நீராடி, வெறும் வயிற்றுடன், வெட்ட வெளியில் சூரியக் கோலமிட்டு, அதில் பொங்கல், கரும்பு போன்றவற்றை வைத்து, ஆதவனுக்கு அர்ப்பணிப்பார்கள்."காணும் பொங்கலும்' இந்த நன்னாளே! அன்று புத்தாடை அணிந்து சுற்றத்தாரையும், நண்பர்களையும் பார்த்து அளாவி மகிழ்வது வழக்கம். சிலர் இன்பச் சுற்றுலாவும் சென்று களிப்பர். ஒரு காலத்தில் எல்லாச் சந்தர்பங்களிலுமே சொந்தமும், நட்பும் அடிக்கடி சந்தித்து மகிழும் பண்பாடிருந்தது. இன்றைய "சீரியல்' உலகில், வீட்டுக்கு வரும் சிநேகங்களைப் பார்த்துச் சிரிப்பதுகூட அரிதாகிவிட்டது. இந்த அவல நிலையை மாற்ற இந்தக் காணும் பொங்கல் நாளில் சபதமேற்போம்!வாழ்கின்ற ஒவ்வொரு நாளுமே திருநாளாக மலரட்டும்! ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகள், "சூரியனை' கண்ட பனிபோல விலகட்டும்! அதற்கு அந்த ஆதவனே நல்வழி காட்டட்டும்! வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித் திருநாடு!
கருத்துகள்

பொங்கல் நல் வாழ்த்துக்கள்
By வாதிரியார் - பாட்னாவிலிருந்து
1/14/2011 10:18:00 PM
அனைவருக்கும் பொங்கல் நல வாழ்த்துக்கள்
By gkay
1/14/2011 9:07:00 PM
மிக்க நல்ல கருத்துக்கள்.நல்ல கட்டுரை. அனைவருக்கும் பொங்கல் நல வாழ்த்துக்கள்.
By S Raj
1/14/2011 5:01:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வெள்ளி, 11 ஜூன், 2010

புது​வை​யில் 13.3 அடி உயர திரு​வள்​ளு​வர்​ சிலை



புதுச் ​சேரி,​​ ஜூன் 10:​ புதுச்​சே​ரி​யில் ரூ.15 லட்​சம் செல​வில் திரு​வள்​ளு​வ​ரின் 13.3 அடி உயர வெண்​க​லச் சிலை நிறு​வப்​ப​டு​கி​றது.​ இது 2 டன் எடை​யுள்​ளது.​ ​÷பு​துச்​சேரி சுற்​றுலா மைய​மாக விளங்கி வரு​கி​றது.​ இங்கு சுற்​றிப் பார்க்க பல்​வேறு இடங்​கள் இருக்​கின்​றன.​ இப்​போது சுண்​ணாம்​பாறு படகு குழாம் அருகே புதி​ய​தாக திரு​வள்​ளு​வர் சிலை இன்​னும் ஒரு மாதத்​தில் நிறு​வப்​பட உள்​ளது.​ அங்கு ஒரு சிறிய பூங்​கா​வும் நிர்​மா​ணிக்​கப்​ப​டு​கி​றது.​ ​÷ஆந்​திர மாநி​லம் விஜ​ய​வா​டா​வைச் சேர்ந்த புகழ்​பெற்ற சிற்பி பிர ​சாத் ​(44) இந்​தச் சிலை​யின் மாதி​ரியை வடி​வ​மைத்​துள்​ளார்.​ இதை முதல்​வர் வைத்தி​லிங்​கம்,​​ சுற்​று​லாத்​துறை அமைச்​சர் மல்​லாடி கிருஷ்​ணா​ராவ்,​​ பொதுப்​ப​ணித்​துறை ​ அமைச்​சர் ஷாஜ​கான் ஆகி​யோர் பார்​வைக்​கா​க​வும்,​​ அவர்​க​ளின் ஒப்​பு​த​லுக்​கா​க​வும் இந்த மாதிரி திரு​வள்​ளு​வர் சிலை​யு​டன் விஜ​ய​வா​டா​வில் இருந்து புதுச்​சே​ரிக்கு வந்​துள்​ளார்.​ ​÷இந்த மாதிரி திரு​வள்​ளு​வர் சிலைக்கு ஒப்​பு​தல் கிடைத்​த​வு​டன் இதே வடி​வத்​தில் திரு​வள்​ளு​வர் வெண்​க​லச் சிலையை அவர் வடி​வ​மைக்க உள்​ளார்.​ ​÷அப்​துல்​க​லாம் குடி​ய​ர​சுத் தலை​வ​ராக இருந்​த​போது அவர் கையால் கதர் ஆணை​யத்​தின் தேசிய விரு​தைப் பெற்​ற​வர் இந்​தச் சிலையை வடி​வ​மைக்​கும் பிர​சாத்.​ ​÷தி​ரு​வள்​ளு​வர் சிலை வடி​வ​மைப்பு குறித்து சிற்பி பிர​சாத் கூறு​கை​யில்,​​ ​ திரு ​வள்​ளு​வர் சிலை எப்​படி இருக்க வேண்​டும் என்று புதுச்​சேரி அரசு சார்​பில் புகைப்​ப​டம் கொடுத்​த​னர்.​ மேலும் இன்​டர்​நெட்​டி​லும் திரு​வள்​ளு​வர் படத்தை எடுத்து ஒப்​பிட்டு இந்​தச் சிலையை உரு​வாக்​கி​யுள்​ளேன்.​ ​÷இந்​தச் சிலை​யில் திரு​வள்​ளு​வர் முகம் சிறப்​பாக இருக்​கும்.​ மிகப்​பெ​ரிய புல​வ​ரின் சிலையை என் கை வடி​வ​மைத்​துள்​ளது குறித்து பெரு​மைப்​ப​டு​கி​றேன்.​ அது எனக்கு மகிழ்ச்சி அளிப்​ப​தாக இருக்​கி​றது.​ பாரம்​ப​ரி​ய​மாக கலைக் குடும்​பத்​தைச் சேர்ந்​த​வன் நான்.​ 24 வய​தில் இருந்து இது போன்று சிலை​கள் வடி​வ​மைப்​ப​தில் ஈடு​பட்டு வரு​கி​றேன்.​ ​÷ம​காத்மா காந்தி,​​ ஜவ​ஹர்​லால் நேரு உள்​ளிட்ட தலை​வர்​க​ளின் சிலை​களை வடி​வ​மைத்​துள்​ளேன்.​ ஆந்​திர மாநில முதல்​வர் ராஜ​சே​க​ர​ரெட்டி ஹெலி​காப்​டர் விபத்​தில் இறந்​தார்.​ அந்த இடத்​தில் 20 அடி உயர ராஜ​சே​கர ரெட்​டி​யின் வெண்​க​லச் சிலை நிறு​வப்​பட உள்​ளது.​ அந்​தச் சிலை​யை​யும் தயா​ரித்து வரு​கி​றேன் என்​றார்.​ ​ ​ ​÷பு​துச்​சேரி யூனி​யன் பிர​தே​சம் யேனம் பிராந்​தி​யத்​தில் நாட்​டி​லேயே உய​ர​மான 24 அடி உயர பார​த​மாதா சிலையை வடி​வ​மைத்​த​வர் இந்​தச் சிற்​பி​தான்.​ இதைத் தவிர புதுச்​சேரி அர​சுக்​காக மேலும் சில சிலை​களை இவர் வடி​வ​மைத்து வரு​கி​றார்.​ ​÷கா ​ரைக்​கால் பகு​திக்​காக காம​ரா​ஜர் வெண்​க​லச் சிலை 10 அடி உய​ரத்​தில் தயா​ரித்து வரு​கி​றார்.​ காம​ரா​ஜ​ரின் இரண்டு கைக​ளி​லும் சிறு​வன்,​​ சிறுமி ஆகிய 2 பேர் இருப்​பர்.​ இது ரூ.13 லட்​சம் செல​வி​லான வெண்​க​லச் சிலை.​ மேலும் காரைக்​கால் பகு​திக்கு 7 அடி உய​ரத்​தில் உட்​கார்ந்த நிலை​யில் வெண்​கல காந்தி சிலை​யை​யும் இவர் தயா​ரித்து வரு​கி​றார்.​ இதற்கு செலவு ரூ.15 லட்​சம்.​ ​÷இப்​போது புதுச்​சேரி அரசு மக​ளிர் மற்​றும் குழந்​தை​கள் மருத்​து​வ​மனை கட்​டப்​பட்டு முடி​யும் நிலை​யில் இருக்​கி​றது.​ இந்த மருத்​து​வ​ம​னை​யின் முன்பு நான்​கரை அடி உய​ரத்​தில் தாய் குழந்​தைக்கு பாலூட்​டு​வது போன்ற வெண்​க​லச் சிலை​யை​யும் இந்​தச் சிற்பி வடி​வ​மைத்து வரு​கி​றார்.​ இதன் மதிப்பு ரூ.6.3 லட்​ச​மா​கும்.​

கருத்துக்கள்

குமரியில் பெண்மையின் சாயலில் திருவள்ளுவரை வடித்து விட்டு நொண்டிச் சாக்கு சொல்லி அதையே புதுமை எனக் கதையளந்ததுபோல் இல்லாமல் நன்கு வடிவமைத்துள்ள சிற்பி பிராசத்திற்குப் பாராட்டுகள். குமரியை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளாமல் இதற்கு உரியவர்கள் ஒப்புதல் தர வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/11/2010 7:29:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

பிரணாபின் பட்ஜெட் உரையில் இடம்பெற்ற கொடில்யர்



புதுதில்லி, பிப்.26: பாரத நாட்டின் பொருளாதாரவியல் முன்னோடியாகவும் பொருளாதாரவியல் சட்ட நடைமுறைகள் இடம்பெறும் அர்த்த சாஸ்திர நூலின் ஆசிரியருமான கொடில்யரை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெள்ளிக்கிழமை தனது உரையின்போது மேற்கோள் காட்டிப் பேசினார்.புதிய வரி விதிப்புகளை திட்டமிடும் முன் அர்த்த சாஸ்திரத்தில் இடம்பெற்றுள்ள வரி நிர்வாக கொள்கைகளை வழிகாட்டுதலாகக் கொண்டு முடிவு செய்தேன் என்று தெரிவித்தார் பிரணாப்.இதற்கு முன்னரும் பிரணாப் 2009 ஜூலை மற்றும் 1984-85ல் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிப்பேசிய போதும் அவரை மேற்கோளிட்டுப் பேசியுள்ளார். இந்திய பட்ஜெட் வரலாற்றில் இதுவரை 4 தடவை கெüடில்யரின் பெயர் மேற்கோள் காட்டி பேசப்பட்டுள்ளது. 1999-2000த்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் அப்போதைய நிதி அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹாவும் கெüடியல்யரை மேற்கோள் காட்டிப் பேசியுள்ளார். கிமு 4ம் நூற்றாண்டில் மாமன்னன் அலெக்சாண்டரின் சமகாலத்தவரான மன்னர் சந்திரகுப்த மெüரியரின் அரசவைத் தலைவராக இருந்தவர் கெüடில்யர்.
கருத்துக்கள்

தமிழகததைச் சேர்நதவர்தானே நிதித்துறையில் இணையமைச்சராக உள்ளார். அவர் திருக்குறளை இடம் பெறச் செய்திருக்கலாமே! 2.)விண்டர்னிட்சன், யாலி(ஜாலி),கீத் முதலான கல்வியாளர்கள் சந்திரகுப்தர் காலத்தில் சாணக்கியர் என்னும் ஒருவர் இருந்ததில்லை என்றும் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய யாக்ஞ்ய வல்கிய சிமிருதியைப் பின்பற்றிக் கௌடலீயம் எழுதப்பட்டுள்ளதால் அதற்கும் பிற்பட்டதே இந்நூல் என்றும் எழுதியுள்ளனர். திருக்குறளின் தாக்கத்திற்கும் கௌடலீயம் உட்பட்டுள்ளது என இந்திய அறிஞர்கள் எழுதியுள்ளனர். மனுநூல் போன்று வருண அடிப்படையிலும் பெண்களை இழிவுபடுத்தியும் எழுதப்பட்டதே இந்நூல் எனப் பலரும் தெளிவுபடுத்தியுள்ளனர். பேராசிரியர் ப.மருதநாயகம் தம்முடைய ஒப்பில் வள்ளுவம் என்னும் நூலில் 10 ஆம் இயலில் திருக்குறளையும் கௌடலீயத்தையும் ஒப்பிட்டு ஆய்வுரை வழங்கியள்ளதைக் காண்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/28/2010 4:33:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

புதன், 19 ஆகஸ்ட், 2009

ஏன் இந்த "நோய்ச் சிந்தனை'?



பதினெட்டு ஆண்டுகளாகப் பெங்களூரில் தூசி அடைந்து மூடிக்கிடந்த வள்ளுவன் சிலை கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா மனம் வைத்ததால் தூசி நீக்கப்பெற்று வெளிச்சத்தைப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது என்று பாராட்டிய தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி, வள்ளுவன் சிலையைத் திறந்துவிட்டதால் இனிக் கன்னடர்கள் திருக்குறள் படிப்பார்கள். இனிப் பெருவெள்ளம் வந்தால்தான் காவிரியில் தண்ணீர் வரும் என்னும் நிலை மாறி இயல்பாகவே வரும் என்ற உறுதியை மட்டும் அளிக்க முடியவில்லை. வள்ளுவன் சிலை திறக்கப்படும் வரை பெங்களூரில் எந்தப் பொதுநிகழ்ச்சியிலும் கலந்துகொள்வதில்லை என்று பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் கருணாநிதி செய்திருந்த சபதம் முடிவுக்கு வந்துவிட்டதாக அவர் கூறிய பிறகுதான் மங்கம்மா சபதம்போல் - பாஞ்சாலி சபதம்போல் கருணாநிதிக்கும் ஒரு சபதம் இருந்ததே உலகுக்குத் தெரியவந்தது. பாஞ்சாலியைத் "தொடைமீது வந்து இரு' என்றான் துரியோதனன். "அப்படிச் சொன்னவனின் தொடையைப் பிளந்து அவனுடைய உயிரை மாய்ப்பேன்' என்று சபதம் செய்தான் வீமன். "அவனுடைய ரத்தத்தை என்னுடைய முடியில் தடவிச் சீவிக் குழல் முடிப்பேன்; அதுவரை முடியேன்' என்று பதினான்கு ஆண்டுகள் விரித்த கூந்தலோடு வாழ்ந்து ஒருநாள் சபதம் முடித்தாள் பாஞ்சாலி. திருத்த முடியாக் கொடுமைக்குக் கணக்குத் தீர்ப்பதற்கு உரைக்கப்படுவதே சபதம்; அதைச் சூளுரை என்று இன்பத் தமிழ் கூறும். சபதங்களில் சமரசமில்லை. பரிவர்த்தனை கிடையாது. ஆனால் கருணாநிதியின் சபதம் பரிவர்த்தனைத் தன்மை கொண்டது. ஆகவே அது சபதத்தன்மை அற்றது. ஆனாலும் பாஞ்சாலி சபதத்துக்கு நிகராக "கருணாநிதி சபதமும்' புகழ்பெற வேண்டுமென்பது அவருடைய ஆசை. அவருக்கு எதில்தான் ஆசையில்லை? காற்றை நுழைய விடுவதில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டு வாயில்களை அடைத்துக் கொள்ளும் பேதையால் காற்றுக்கென்ன இழப்பு? அந்தப் பேதைதான் புழுங்கிச் சாவான்! செய்வன எவை, தவிர்ப்பன எவை என்னும் வேறுபாடு அறியாதவனே பேதை! "கேட்டினைக் கைக்கொண்டு ஊதியத்தைக் கைநழுவ விடுகிறவன்' (831) என்று பேதைக்கு விளக்கமளிப்பான் வள்ளுவன்! அறிவினில் தமிழ் அறிவு, கன்னட அறிவு, ஜெர்மானிய அறிவு, பிரெஞ்ச் அறிவு என்று பேதப்படுத்தி அதைப் புறக்கணிக்கும் மனப்பான்மையிலிருந்து கன்னடர்கள் விடுபடவில்லை என்றால் மீண்டும் காட்டுமிராண்டிக் காலத்துக்குள் நுழையவேண்டிய நிலைவரும் என்று சர்வக்ஞர் அறிவு கொளுத்தத் தவறிவிட்டார் போலும்! ஏசுவினுடைய அறிவை யூத அறிவென்றும், நபிகள் நாயகத்தின் அறிவை அரபு அறிவென்றும், புத்தனின் அறிவை நேபாள அறிவென்றும், இமானுவேல் காண்ட், எகல், காரல் மார்க்சின் அறிவை ஜெர்மானிய அறிவென்றும் வெறுக்கவும் புறக்கணிக்கவும் முடிகிற முட்டாள்களால்தான் வள்ளுவனின் அறிவைத் தமிழறிவு என்று புறக்கணிக்கவும் வெறுக்கவும் முடியும்! இது மனிதப் புலமை இல்லை; தெய்வப் புலமை என்று குறளில் ஒளிவீசும் முரணறுக்கும் அறிவைப் பார்த்துப் பிளந்த வாயை மூடாமலேயே செத்துப்போனான் பலதுறை அறிவுப் பரிமேலழகன். ஜி.யு. போப் திருக்குறளைப் படித்து உரை எழுதி வைத்துவிட்டுத் தன்னுடைய கல்லறையில் "தமிழ் மாணவன்' என்று எழுதும்படி சொல்லிவிட்டுப் போனான். கம்பனும் இளங்கோவும் திருக்குறளுக்கு எழுதிய விரிவுரைதான் அவர்களின் காப்பியங்கள். தமிழிலுள்ள புகழ்ச் சொற்கள் அத்தனையையும் பெய்து பாராட்டிய பிறகும் வள்ளுவனின் புகழ் இன்னும் எஞ்சி நிற்கும். வள்ளுவனைப் பாராட்டத் தமிழே போதாமை உடையது! வெறும் சிலைக்கு ஒரு சபதம் செய்ததற்குப் பதிலாக முதலமைச்சர் கருணாநிதி, இந்தப் பதினெட்டு ஆண்டுகளில் திருக்குறளின் கன்னட மொழிபெயர்ப்பை ஒவ்வொரு கன்னடனும் அடையுமாறு செய்து, அது அவர்களின் நோய்க்கு மருந்து என்பதை அவர்களே அறிந்துகொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்தியிருந்தால், அவர்களே தங்கள் முயற்சியால் வள்ளுவனின் சிலையை நிறுவ முயன்றிப்பார்கள்; அப்போது தன்னுடைய சபதம் நிறைவேறிவிட்டதாக முதல்வர் கருணாநிதி மகிழ்வதிலும், விழா எடுப்பதிலும் மிகப்பெரிய நியாயம் உண்டு. அரிசிக்கு உமியைச் சரிவிலையாகக் கொண்டு பரிவர்த்தனை செய்து கொண்டதற்குக் கருணாநிதிக்கு விழா என்ன வேண்டியிருக்கிறது? வள்ளுவருக்குச் சரிநிகராக சர்வக்ஞரை இறக்குமதி செய்துகொள்ளும் பரிவர்த்தனை உத்தியைக் கருணாநிதி கடைப்பிடிப்பதற்குப் பதினெட்டு ஆண்டுகள் காத்திருக்கத் தேவையில்லையே! இதைச் செய்வதற்கு ஓர் அர்த்தமில்லாத சபதம் வேறு! பெங்களூர்ப் பேச்சில் மட்டுமன்று; கருணாநிதியின் தேசியம் குறித்த அண்மைக்காலப் பேச்சுகள் அவருடைய தலைகீழ் மாறுதல்களைப் புலப்படுத்துகின்றன. "என்னையும் எடியூரப்பாவையும் இந்தியர்கள் என்னும் உணர்வு பிணைக்கிறது' என்னும் கருணாநிதியின் பெங்களூர்ப் பேச்சு டக்கர் பேச்சு! சட்டம் பாய்கிறதே என்று திராவிட இயக்கம் தன்னுடைய பிரிவினைக் கொள்கையைக் கைவிட்டது புரியக்கூடியதுதான்! ஆனால் அதற்காகத் தேசியத்தின் தலையாய ஊதுகுழலாகவே கருணாநிதி மாறிவிடுவார் என்பது நாம் புரிந்துகொள்ள முடியாதது! எடியூரப்பா "நாம் முதலில் இந்தியர்; பிறகுதான் கன்னடர்' என்று பேசியிருக்கிறார்! இந்த வண்டி வெகுகாலத்துக்கு ஓடாது. அவர் இன உணர்வுக் கொள்கையை ஷியாம் பிரசாத் முகர்ஜியிடம் கற்றுக்கொள்ளப் போயிருக்கக்கூடாது. அவருடைய ரத்தத் துடிப்பில் கற்றுக்கொண்டிருக்க வேண்டும். பாரதி நல்லறிஞன்; அவன் இனக் கொள்கையையும் தேசியக் கொள்கையையும் சிக்கலறுத்துப் போதித்தவன்! முதலில் தமிழைச் செந்தமிழ் என்றும் தமிழர்களை நற்றமிழர்கள் என்றும் அடைமொழி கொடுத்து வாழ்த்திவிட்டுக் கடைசியில் பாரத மணித்திருநாட்டை வாழ்த்துவான்! பாரதி கண்ட வரிசைதான் ஏற்புடைய வரிசை! ஆனால் நம்முடைய கருணாநிதி "எடியூரப்பாவும் நானும் இந்தியர்கள்' என்று ஒரே தாவாகத் தாவியதற்கு என்ன காரணம்? அதைவிட நெருக்கமான உறவு இயற்கையாகவே இருக்கிறபோது, அந்த உணர்வை மூடிமறைத்துக் கொண்டு, அவர் வீறு கொண்ட தேசியம் பேசியது வியப்பாக இல்லையா? "எடியூரப்பாவும் நானும் திராவிடர்கள்' என்றல்லவா கருணாநிதி பேசியிருக்க வேண்டும்? மொழிவழியில் தமிழர்கள்; இனவழியில் திராவிடர்கள் தானே நாம்! ஒரு தாய் வயிற்று மக்களுக்குள் ஏன் இந்தச் சண்டைகள் என்று கேட்பதற்கு இனவழித் தொடர்பு சுட்டப்படுவதுதானே இயற்கையாக இருக்கும்! இந்த மேடைக் கலப்பும் சிலை பரிவர்த்தனையும் காவிரிப் பிரச்னையில் தமிழர்கள் நியாயமாக அடையவேண்டிய நீர்ப்பங்கீட்டைப் பழைய வழமைப்படி பெற்றுத் தருமென்றால் அதைப் பெற்றபிறகு சர்வக்ஞர் என்ன சர்வக்ஞர்? எடியூரப்பாவுக்கே மேட்டூர் தொடங்கி பூம்புகார் சங்கமம் வரையிலும் சிலை வைக்கலாம்! "யேல்' பல்கலைக்கழகத்திற்குப் போன அண்ணா அங்கே உள்ள ஐரோப்பிய மாணவர்களுக்குத் திருக்குறள் கற்பித்தது போல, பெங்களூருக்குத் திருவள்ளுவர் சிலை திறக்கச் சென்ற கருணாநிதி, அங்கே உள்ள கன்னடர்களுக்குத் திருக்குறளின் ஆழ நீளத்தைக் கற்பித்து, 18 ஆண்டுகளாக இப்படி ஓர் ஒப்பற்ற நூலை எழுதிய ஒரு பெருமகனின் சிலையையா மூடிவைத்திருந்தோம் என்று அவர்கள் நாணப்பட்டு உணரும் வண்ணம் பேசிவிட்டு வருவார் என்றுதான் தமிழர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் கருணாநிதியின் மனத்தில் ஓங்கி நின்றது சர்வக்ஞர் பற்றிய அச்சம்; அவரை எப்படித் தமிழர்கள் தலையில் கட்டுவது என்னும் அச்சம்! "யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவர்போல், இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை' என்று காளிதாசனைக்கூட இந்த வரிசையில் சேர்க்க மறுத்து விட்டானே பாரதி; இத்தகைய உலகத் தர வரிசையினரைப் பெற்றுள்ள தமிழ்நாட்டில், சர்வக்ஞரை எந்த வரிசையில் கொண்டுபோய் வைப்பது என்னும் கவலை கருணாநிதியின் பேச்சைத் தடுமாற்றம் கொள்ளச் செய்திருக்க வேண்டும்! கன்னடர்களுக்கிடையே வள்ளுவனைப் பற்றிப் பேசுவதை விடுத்துச் சர்வக்ஞரைப் பற்றிப் பேசியிருக்கிறார் கருணாநிதி! சர்வக்ஞர் இவ்வளவு பெரிய ஆளா என்று கன்னடர்களே திகைத்துப் போயிருக்கிறார்கள் என்பதால், தமிழர்களை மட்டுமில்லை; கன்னடர்களையும் நெஞ்சை நீவிவிட்டு ஆசுவாசப்படுத்துவது கட்டாயத் தேவையாகிவிட்டது கருணாநிதிக்கு! ""சர்வக்ஞர் இன்று உலக அளவிலே அறியப்படாததற்குக் காரணம் அவர் முற்பட்ட சாதியைச் சேர்ந்தவரல்ல என்பதுதான்! அவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்!'' கருணாநிதியின் பேச்சு இது. பிற்பட்ட வகுப்பில் பிறந்தவர்களெல்லாம் உயர்குலத்தோரால் அழுத்தப்பட்டு விடுகின்றனர் என்பது அவருடைய பேச்சின் குறிப்புப் பொருள்! பார்ப்பனரல்லாதார் இயக்கம் பிறந்து 75 ஆண்டுகள் கழிந்த பிறகும், கருணாநிதி மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்து ஐந்து முறை முதலமைச்சாரன பின்பும், அவருடைய மகன் துணை முதலமைச்சரான பின்பும், மராட்டியர்கள், நாயக்கர்கள், மொகலாயர்கள், சோழர்கள் போல், "வம்சாவளி ஆட்சியை' வெற்றிகரமாக நிலைநாட்டிவிட்ட பிறகும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் முன்னுக்குவர அனுமதிக்கப்படுவதில்லை என்று எப்படிக் கருணாநிதியால் பேச முடிகிறது! கருணாநிதி சாதியால் உயர்சாதியுமில்லை; எண்ணிக்கையால் வலிமை பெற்ற சாதியுமில்லை. உயர்சாதி ஆளுமை இருந்திருந்தாலும், எண்ணிக்கை ஆளுமை இருந்திருந்தாலும் கருணாநிதியால் வம்சாவளி ஆட்சியை ஏற்படுத்தி இருக்க முடியுமா? அண்ணாவின் எழுத்துகளும் பேச்சுகளும் தமிழ்நாட்டின் போக்கை மாற்றின. அண்ணா முற்பட்ட சாதியா? பாரதியின் புகழுக்குக் காரணம் அவர் பார்ப்பனர் என்பது தான் என்பது கருணாநிதியின் எண்ணமானால், பாரதிதாசன் புகழுக்கு எது காரணம்? முடிவெட்டும் தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்த கர்ப்பூரி தாகூர் பீகாரின் முதலமைச்சாரகவில்லையா? இராமாயணத்தை எழுதிய வால்மீகி வேடன்தானே! இராமாயணம் பெற்ற புகழை வால்மீகி பிறந்த சாதியால் மறிக்க முடிந்ததா? உயர் சாதியான பார்ப்பனர்கள் இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் தொழுது வழிபட்டுப் பின்பற்ற அந்த இதிகாசங்களை எழுதியவர்களின் சாதிகள் எந்த விதத்தில் தடையாக இருந்தன? பிற்பட்ட வகுப்பில் பிறந்த வள்ளுவனை உயர்சாதி வைணவப் பிராமணன் பரிமேலழகன் "தெய்வப் புலவன்' என்று உச்சிமேல் வைத்துப் புகழ்கிறானே. சாதி எங்கே குறுக்கிட்டது? மேற்சாதியில் பிறந்தவனாயினும் கல்லாதவன் இழிவுறுவதும், கீழ்ப்பிறந்தானாயினும் கற்றவன் பெருமையுறுவதும் (குறள் 409) குறித்து வள்ளுவன் பேசுவது பிற்பட்ட வகுப்பில் பிறந்த சர்வக்ஞனுக்குப் பொருந்தாது என்று கருணாநிதி மறுக்கிறாரா? கீழ்மேல் என்று உயர்வு தாழ்வு கற்பிக்கப்படும் நால்வகைச் சாதிகளுள் "கீழ்ப்பாலொருவன் கற்பின், மேற்பால் ஒருவன் அவன்கட் படுமே' என்று புறநானூறு பேசுவது சர்வக்ஞருக்கு மட்டும் பொருந்தாமல் போய்விட்டதா? கருணாநிதி சொல்லட்டுமே! நம்முடைய சித்தர்கள்அனைவருமே ஒருவர் பாக்கி இல்லாமல் பிற்பட்ட வகுப்பினர்தானே! இடையர் வகுப்பைச் சேர்ந்த திருமூலர் வணங்கத்தக்க இடத்தை அடைவதற்கு அவருடைய சாதி தடையா? சர்வக்ஞருக்கு மட்டும் எப்படி அவர் பிறந்த சாதி தடையானது? மனுவின் செல்வாக்குத் தேய்ந்துவிட்ட பிறகும், கருணாநிதி சாதியைக் கட்டிக் கொண்டு மாரடிப்பதைவிட மாட்டாரா? திராவிட இயக்கத்தில் தகுதி அடிப்படையில் உயர்ந்திருந்த பல முற்பட்ட சாதியினரை அழுத்தி விட்டுக் கருணாநிதி ஆட்சி நாற்காலியில் அமர முடிந்த ஒன்றே போதாதா ஒருவரின் முன்னேற்றத்திற்குச் சாதி தடையாவதில்லை என்பதற்கு? கருணாநிதிக்குத் தடையாகாத சாதி சர்வக்ஞருக்கு எப்படித் தடையானது? இந்த "நோய்ச் சிந்தனை'யிலிருந்து விடுபடவே மாட்டாரா கருணாநிதி?

(

சர்வக்ஞர் எனப் புனை பெயர் வைத்துக் கொண்ட புட்பதத்தாவின் தந்தை பிராமணர். தாய் ஆதி திராவிடர்; கைம்பெண் - விதைவை- ஆன இவரை மணந்து கொண்ட பின் பிறந்தவரே புட்பதத்தா. இஃது உண்மை வரலாறா அல்லது திருவள்ளுவரின் பெற்றோர் குறித்துக் கதை கட்டியது போன்று சர்வக்ஞர் புகழ் பெற்ற பின் கட்டப்பட்ட கதையா எனத் தெரியவில்லை. எனினும் இவர் மிகவும் பிற்பட்ட சாதி எனப் பேசப்பட்டிருப்பின் அது தவறேயாகும். -- இலக்குவனார திருவள்ளுவன்)

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

பெங்களூரில் திருவள்ளுவர் சிலை: கருணாநிதி திறந்து வைத்தார்




பெங்களூர், ஆக.9: பெங்களூரில் 18 ஆண்டுகளாக மூடிக்கிடந்த தமிழ்ப்புலவர் திருவள்ளுவர் சிலையை பலத்த பாதுகாப்புக்கிடையே தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காலை திறந்து வைத்தார்.

ஆர்பிஏஎன்எம் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் திருவள்ளுவர் சிலையை கர்நாடக முதல்வர் எடியூரப்பா முன்னிலையில் தமிழக முதல்வர் கருணாநிதி ரிமோட் கண்ட்ரோல் மூலம் திறந்து வைத்து உரையாற்றினார்.

சிலை திறப்பு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கன்னட ரக்ஷணா வேதிகே அமைப்பைச் சேர்ந்தவர்கள் போலீசாரால் விழா நடைபெறும் இடத்திலிருந்து 10 கிலோமீட்டருக்கு அப்பால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் சிலை திறப்பு விழா அமைதியாக நடைபெற்றதாகப் போலீசார் தெரிவித்தனர். விழாவின்போது எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமலிருக்க 3000த்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பெங்களூர், ஆக.9-

பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அல்சூர் ஏரிக்கரையில் 18 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது.
கன்னட அமைப்புகள் எதிர்ப்பு காரணமாக திருவள்ளவர் சிலை திறக்கப்படாமல் மூடியே கிடந்தது. திருவள்ளுவர் சிலையை திறக்க தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியும், கர்நாடக முதல்- மந்திரி எடியூரப்பாவும் முயற்சி மேற்கொண்டனர்.
அதன்படி பெங்களூரில் 9-ந்தேதி (இன்று) திருவள்ளுவர் சிலையையும், சென்னையில் 13-ந்தேதி கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலையையும் இரு மாநில முதல்வர்கள் திறப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
என்றாலும் சில கன்னட அமைப்புகள் திருவள்ளுவர் சிலை திறக்க எதிர்ப்பு தெரிவித்தன. சிலை திறப்பு விழாவுக்கு தடை விதிக்க கோரி கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சிலை திறப்பு விழாவுக்கு தடைவிதிக்க மறுத்த கர்நாடக ஐகோர்ட்டு இரு மாநில உறவுகளை சீர்குலைக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது கர்நாடக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதனால் பெங்களூர் முழுவதும் வரலாறு காணாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. விழா நடைபெறும் அல்சூர் பள்ளித்திடலில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்த கன்னட அமைப்பினர் 500 பேரை முன்கூட்டியே கைது செய்தனர். வாட்டாள் நாகராஜ், நாராயண கவுடா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து திட்டமிட்டபடி இன்று காலை பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது.
கர்நாடக அரசு சார்பில் அல்சூரில் உள்ள ஆர்.பி.ஏ. என்.எம். பள்ளித்திடலில் இதற்கான விழா இன்று காலை 11.30 மணிக்கு பிரமாண்டமாக தொடங்கியது. விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் கருணாநிதி ஏற்கனவே பெங்களூர் சென்று தங்கியிருந்தார்.
விழா நடக்கும் இடத்துக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி வந்ததும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா, மாநில மந்திரிகள், பெங்களூர் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் வரவேற்றனர்.
அதன்பிறகு விழா தொடங்கியது. கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் கருணாநிதி விழா மேடையில் இருந்தவாறு பொத்தானை அழுத்தி திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். உடனே திருவள்ளுவர் சிலையை சுற்றி இருந்த திரைச்சீலை விலகியது. அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
விழாவில் பாரதீய ஜனதா தலைவர் வெங்கையா நாயுடு, தமிழ்நாடு பாரதீய ஜனதா தலைவர் இல.கணேசன், மத்திய மந்திரி ஆ.ராசா, முன்னாள் மத்திய மந்திரியும், மாநில பாரதீய ஜனதா தலைவருமான அனந்தகுமார், தமிழக அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், எ.வ.வேலு, வீரபாண்டி ஆறுமுகம், பரிதி இளம்வழுதி, முதல்-அமைச்சர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் செல்வி, அமிர்தம், சிவாஜிநகர் தொகுதி எம்.எல்.ஏ. ரோஷன்பெய்க், பெங்களூர் எம்.பி. மோகன், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மற்றும் கர்நாடக மந்திரிகள் கலந்து கொண்டனர்.
கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு முதல்- அமைச்சர் கருணாநிதி சார்பில் சால்வை அணிவித்து கண்ணாடி பேழையில் வைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
விழா நடந்த பள்ளித் திடலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இடம் இல்லாமல் காம்பவுண்டு சுவர்களிலும் மக்கள் ஏறி அமர்ந்து இருந்தனர். கூட்டத்தினர் ஆங்காங்கே தேசிய கொடி ஏற்றி நின்றனர்.
விழா மேடையில் “தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா” என்று கன்னடத்திலும், தமிழிலும் எழுதப்பட்டு இருந்தது.
விழா தொடக்கத்தில் கன்னட தாய் வாழ்த்துப்பாடல் பாடப்பட்டது.
திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டதன் மூலம் தமிழர்களின் 18 ஆண்டு கனவு நிறைவேறியது. முதல்- அமைச்சர் கருணாநிதி 2000-ம் ஆண்டு கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தபோது Òபெங்களூருக்கு ஒரு விழாவுக்கு நான் செல்வது என்றால் அது திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவாக இருந்தால்தான் செல்வேனே தவிர வேறு எந்த விழாவுக்கும் அடிஎடுத்து வைக்க மாட்டேன் என்றார். அவரது சபதமும் இன்று நிறைவேறியது.
அதன்பிறகு விழா தொடங்கியது. கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் கருணாநிதி விழா மேடையில் இருந்தவாறு பொத்தானை அழுத்தி திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். உடனே திருவள்ளுவர் சிலையை சுற்றி இருந்த திரைச்சீலை விலகியது. அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
விழாவில் பாரதீய ஜனதா தலைவர் வெங்கையா நாயுடு, தமிழ்நாடு பாரதீய ஜனதா தலைவர் இல.கணேசன், மத்திய மந்திரி ஆ.ராசா, முன்னாள் மத்திய மந்திரியும், மாநில பாரதீய ஜனதா தலைவருமான அனந்தகுமார், தமிழக அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், எ.வ.வேலு, வீரபாண்டி ஆறுமுகம், பரிதி இளம்வழுதி, முதல்-அமைச்சர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் செல்வி, அமிர்தம், சிவாஜிநகர் தொகுதி எம்.எல்.ஏ. ரோஷன்பெய்க், பெங்களூர் எம்.பி. மோகன், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மற்றும் கர்நாடக மந்திரிகள் கலந்து கொண்டனர்.

சென்னை, ஆக.9-

"பெங்களூரில் இன்று நடைபெறும் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா வாழ்விலோர் திருநாள்'' என்று முதல்-அமைச்சர் கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"இன்று வாழ்விலோர் திருநாள்'' என்பார்களே, அப்படிப்பட்ட திருநாள்தான் இன்று! ஆம், பெங்களூரு நகரத்தில் அய்யன் திருவள்ளுவருக்கு சிலை திறக்கப்படுகிறது. அய்யன் வள்ளுவருக்கு இங்கே பெங்களூரில் சிலை திறக்கின்ற விஷயமாகட்டும்- தமிழகத்தில் கன்னியாகுமரியில் 133 அடி உயரத்தில் எழுப்பப்பட்டுள்ள சிலை திறப்பு நிகழ்ச்சியாகட்டும்- சென்னை மாநகரத்தில் திருவள்ளுவருக்காக நான் முயற்சியெடுத்து எழுப்பிய வள்ளுவர் கோட்டத் திறப்பு விழா நிகழ்ச்சியாகட்டும்- சென்னையில் சட்டப்பேரவை மண்டபத்தில் வள்ளுவரின் திருவுருவப் படத்தினைத் திறந்து வைக்கின்ற நிகழ்ச்சியாக இருக்கட்டும்- அனைத்திலும் என் வாழ்க்கையும் இணைக்கப்பட்ட ஒன்று என்று சொன்னால் அது தவறாகாது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், வாழ்க்கை நெறி வகுத்துக்காட்டி வள்ளுவரால் வழங்கப்பெற்ற அறிவுக் கருவூலமே திருக்குறள். திருக்குறளும், அதனை யாத்து இவ்வுலகிற்கு வழங்கிய வாலறிவன் வள்ளுவரும், இளமையிலேயே எனக்கு அறிமுகமாகி, என் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் எனக்கு உயரத்தையும், தரத்தையும் தந்து வருகின்ற பாங்கினை என்னென்பேன்!

"திருவள்ளுவர் தமிழகத்திற்கு மட்டுமல்லாமல், வையகம் முழுமைக்கும் வாழ்க்கைக்கு உரிய நெறியைத் தந்திருக்கிறார். அதனை நாம் உலகத்தின் பொதுச் சொத்து என்று எண்ணத்தக்க விதத்தில் பொது கருத்தைப் பரப்ப வேண்டும்'' என்று அண்ணா கூறியுள்ளார். 1948-ல் தந்தை பெரியாரோ திருக்குறள் மாநாடு ஒன்றினையே கூட்டினார். 1953-ம் ஆண்டு மொழியுரிமை காக்க; கல்லக்குடி போராட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் நான் இருந்தபோது, கைதிகளாக இருந்த தோழர்களின் மத்தியில் அன்றாடம் பேசும்போது, திருக்குறள் பற்றி உரையாற்றியதும் என் நினைவிலே உள்ளது.

1963-ம் ஆண்டு சட்டப் பேரவையில் தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது, பேரவையில் திருவள்ளுவர் திருவுருவப் படம் ஒன்றினை வைக்க வேண்டுமென்ற கருத்தை வெளியிட்டேன். அப்போது பேரவைத் தலைவராக இருந்த யு.கிருஷ்ணாராவ், அந்தத் திருவள்ளுவர் படத்தினை நான் வாங்கித் தருவதாக இருந்தால், அதை மன்றத்திலே வைப்பதற்கு ஆட்சேபணை இல்லை என்று தெரிவித்தார். நான் அவ்வாறே வாங்கித் தர இசைவு தந்த பிறகு, அந்தப் படத்தினை தாழ்வாரத்தில் தான் வைக்க முடியும், மன்றத்திற்குள் வைத்தால் வேறு சிலர் கம்பர் படத்தினை வைக்க வேண்டுமென்றோ, காளமேகத்தின் படத்தினை வைக்க வேண்டுமென்றோ கோரிக்கை வைக்கக்கூடும் என்று சொல்லப்பட்டது. அதற்கு பதிலாக நான் கூறும்போது, மன்றத்திற்குள் காந்தி படம், ராஜாஜி படம் வைக்கப்பட்டுள்ளது, அதைப்போல படேலுக்கோ, வேறு ஒரு கட்சி தலைவருக்கோ படம் வைக்கப்பட வேண்டுமென்று எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை, எனவே மன்றத்திற்குள் தான் திருவள்ளுவருக்கு படம் வைக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். ஆனாலும் அந்த கோரிக்கை உடனடியாக ஏற்கப்படாவிட்டாலும், நான் அவையிலே எழுப்பிய அந்த கோரிக்கை 22.3.1964 அன்று பேரவை மன்றத்திற்குள் திருவள்ளுவரின் படத்தினை அன்றைய குடியரசு தலைவர் ஜாகீர் உசேன் திறந்து வைத்தார்.

அதைப் போலவே சட்டப் பேரவையில் நான் பேசும்போது வேறொரு கருத்தையும் தெரிவித்தேன். அதாவது, தமிழ்நாட்டில் உள்ள புலவர் பெருமக்கள் எல்லாம் கூடி, குறிப்பிட்டுச் சொல்லும் நாளை திருவள்ளுவர் தினம் என்ற பெயரால் ஆண்டுதோறும் கொண்டாட வேண்டுமென்றும் கூறினேன். அதன் பின்னர் 30.10.1969 அன்று எனது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவினைத் தொடர்ந்து - ஆண்டுதோறும் பொங்கல் விழா கொண்டாடப்படும் நாளுக்கு அடுத்த நாள் திருவள்ளுவர் நாள் என்றும், அன்று அரசு விடுமுறை என்றும் முடிவு செய்து அதற்கான அரசாணை 3.11.1969-ல் என்னுடைய ஆட்சி காலத்தில்தான் வெளியிடப்பட்டது.

அதுபோலவே, 1973-ல் திருமயிலை திருவள்ளுவர் நினைவாலயத் திருப்பணிக்கு அடிக்கல் நாட்டிய போது, திருவள்ளுவருக்கு தமிழகத் தலைநகரில் அழியாத நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்தேன். அது அறிவிப்பாகவே நின்றுவிடாமல், 18.9.1974 அன்று வள்ளுவர் கோட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நுங்கம்பாக்கத்தில் நடைபெற்று, பணிகள் தொடங்கப்பட்டு, திறப்பு விழாவுக்கான தேதியினைக் குறிக்கவும், விழாவினை எவ்வாறு நடத்துவது என்பதற்கான திட்டங்களைத் தீட்டவும் - 8.1.1976 அன்று அரசின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. பிப்ரவரி மாதம் 22, 23 ஆகிய நாட்களில் அந்தத் திறப்பு விழாவை கழக அரசு முன்னின்று நடத்துவதென்று நாளும் குறிக்கப்பட்டது. ஆனால் வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவினை தி.மு.க. அரசு நிறைவேற்றுவதற்கு முன்பாகவே ஜனவரி 31-ந் தேதியன்று மாலையிலேயே தி.மு.க. அரசு கலைக்கப்பட்டுவிட்டது.

தி.மு.க. அரசு கலைக்கப்பட்டு விட்டாலும், 1976-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15-ந் தேதி வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது. அதற்கான அழைப்பிதழ் கூட, அப்போது எனக்கு அனுப்பப்படவில்லை. அந்த கோட்டம் திறக்கப்பட்ட நாளன்று, "கோட்டம் திறக்கப்படுகிறது, குறளோவியம் தீட்டப்படுகிறது'' என்ற தலைப்பில் முரசொலியில் இரண்டரை பக்கத்திற்கு நான் உடன்பிறப்பு மடல் ஒன்றினைத் தீட்டியிருந்தேன். இன்று எப்படி "இன்று வாழ்விலோர் திருநாள்'' என்று தொடங்கி கடிதத்தை எழுதுகிறேனோ, அதுபோலவே அன்றும் "இன்று சென்னையில் ஒரு விழா! திருவிழா! திருமிகு விழா! திருவள்ளுவர்க்கு எடுக்கும் விழா'' என்று தொடங்கி எழுதியிருந்தேன். அந்த கடிதத்தின் ஒரு சில பத்திகளை மட்டும் இப்போதும் அது பொருந்தும் என்பதால் இங்கே சுட்டிக் காட்டுகிறேன்.

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளுங் களிப்பாய்- காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணாய்- வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமாய்- மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியாய்- நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவாய்- எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்ற ஏற்றமிகு குறளுக்கு ஓவியம் தீட்டப்படுகிறது. அந்தக் குறளோவியக் கோட்டம் திறக்கப்படுகிறது.

மாசறு பொன்னாக, வலம்புரி முத்தாக, காசறு விரையாக, கரும்பாக, தேனாகத் திகழ்கின்ற திருக்குறளுக்கு விழா என்றால், உலகப் பந்தின் மீது எந்த மூலையில் இருக்கிற தமிழனும் நெஞ்சு புடைத்து நிற்பான்- மகிழ்வான் -தகதகவெனக் குதிப்பான்- தண்மதி கண்ட ஆம்பலாகும் அவன் உள்ளம் -தாமரை, கதிர் கண்டது போன்ற துள்ளல் எழும் என்பதில் ஐயமுண்டோ?

ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிக்கின்ற உலகத் தமிழ்மறைக் கன்றோ பெருமை சேர் விழா, தாயகத்து மண்ணில் திகழ்கின்றது.

இந்த விழா நாள் என்று வரும்? இன்றே வராதா? என்று எத்தனை நாள் காத்திருந்தோம் நாம்! அந்த நாள் தானே இந்த நாள்!

"கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்'' என்று இடைக்காடர் கூற, "அல்ல, அல்ல, அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்'' என்று அவ்வையார் திருத்தம் கூறியதாகப் புகழப்படும் பொய்யா மொழிக்கல்லவா இன்று விழா! புத்தொளி பாய்ச்சிய புலவனுக்கல்லவா விழா!

சரித்திரத்தில் நமக்குக் கிடைக்கிற இடம், சலுகையால் பெறக்கூடியது அல்ல! எது நேர்ந்தாலும், என்ன நேர்ந்தாலும் மறைக்க முடியாத இடம்! அந்த நம்பிக்கையுடன் தான் இன்று நடக்கும் வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவை அகக் கண்ணால் காணுகிறேன்.

உயிர் வளர் மாதம் ஒன்பதும் ஒன்றும் நிறைந்து பிறந்த குழந்தையைச் சுமந்ததையும் இன்பமாகக் கருதி, பேற்றுக் கால வேதனையையும், இனிய வேதனையாகக் கொண்டு, பாலூட்டிச் சீராட்டிப் பழ முத்தம் சுளை சுளையாய்த் தந்து, பள்ளிக்கு அனுப்பி பின்னழகும், முன்னழகும் பார்த்துக் களித்து, பருவமடைந்த பின்னர் வாழ்க்கைத் துணை ஒன்றைத் தேர்ந்தெடுத்து அந்த ஆசைக் கிள்ளைக்கு இனிய திருமண விழா நடைபெறும்போது, தாலி கட்டும் காட்சியினைக் காண முடியாமல் மணப் பந்தலுக்கு வெளியே நிற்கின்ற தாயின் மனதில் ஒரு விதத் தவிப்பு இருந்தாலும், தன் அன்புச் செல்வத்துக்கு நடைபெறும் மணவிழா குறித்த மகிழ்ச்சி பொங்கிடத்தானே செய்யும்!

என் தங்க உடன்பிறப்பே! அந்த தாயின் மகிழ்ச்சியைத்தான் பெறுகிறேன் இன்று! ஆம் - என் வாழ்நாளின் குறிக்கோள்களில் ஒன்றான வள்ளுவர் கோட்டத்திறப்பு விழாவை அகக் கண்ணால் காணுகிறேன், ஆனந்தப் பள்ளு பாடுகிறேன்.

உடன்பிறப்பே, அன்றையதினம் நான் அடைந்த அதே மகிழ்ச்சியைத்தான் இன்றும் அடைகின்றேன். அடுத்து, 31.12.1975 அன்று கூடிய தி.மு.க. அமைச்சரவைக் கூட்டத்தில் குமரி முனையில் விவேகானந்தர் பாறைக்கு எதிரே உள்ள மற்றொரு பாறையில் 75 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு அடுத்த மாதமே தி.மு.க. அரசு கலைக்கப்பட்டு விட்டது. அதன் பின்னர் 1989-ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. அரசு ஏற்பட்டவுடன் 25.3.1989 அன்று நான் படித்த நிதி நிலை அறிக்கையில் குமரி முனையில் வள்ளுவர் சிலை அமைப்பது பற்றி மீண்டும் அறிவித்தேன். 6.9.1990 அன்று நானே நேரில் சென்று குமரி முனையில் வள்ளுவர் சிலை அமைப்புப் பணியைத் தொடங்கி வைத்தேன். 1991-ல் தி.மு.க. அரசு மாறியது. வள்ளுவர் சிலை அமைப்பு பணியும் சுணங்கியது.

நான்காவது முறையாக முதல்-அமைச்சராக நான் பொறுப்பேற்றதற்கு பிறகு 25.6.1997 அன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் முடிவெடுக்கப்பட்டு, போதிய நிதி ஒதுக்கப்பட்டு - சுமார் ஒன்பது கோடி ரூபாய் செலவில் 133 அடி உயரமுள்ள வள்ளுவரின் சிலை நிர்மாணிக்கப்பட்டு 1.1.2000 அன்று தி.மு.க. ஆட்சியிலே திறந்து வைக்கப்பட்டது. உலக அதிசயங்களில் ஒன்றாக அது கருதப்பட்டு, உலகத்திலிருந்து வருபவர்கள் எல்லாம் அதனை அன்றாடம் கண்டு களித்து வருகிறார்கள்.

"சுனாமி'' பேரலைக்கே ஈடு கொடுத்து அந்த சிலை தமிழனின் பெருமையை இன்று பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது. அந்த சிலையை அங்கே அமைத்திட எனக்கு பெரிதும் உதவியாக இருந்த சிற்பி கணபதி ஸ்தபதிக்கு நான் பலமுறை நன்றி தெரிவித்திருந்தாலுங் கூட, இந்த மடலிலும் அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

குமரி முனையில் நடைபெற்ற அந்த இரண்டு நாள் விழாவிலே நான் கலந்து கொண்டபோது - மறைந்த கோவை செழியன் அந்த விழாவில் பேசும்போது, பெங்களூரிலே பத்தாண்டு காலமாக திருவள்ளுவருடைய சிலை ஒன்று மூடிக் கிடக்கின்றதே, அது என்னவாயிற்று என்று கேட்டார். அடுத்துப் பேசிய வாழப்பாடி ராமமூர்த்தி, அதற்காக தான் கடிதம் எழுதியதாகவும், அதற்கு பதில் வரவில்லை என்றும் கூறினார். அதை ஏன் கவனிக்கக் கூடாது என்று என் பக்கத்திலே அமர்ந்திருந்த மக்கள் தலைவர் மூப்பனார் என்னைப் பார்த்துக் கேட்டார்.

இலக்கியச் செல்வர் குமரி அனந்தனோ, அதைப்பற்றி அந்த மேடையில் கோபாவேசமாகப் பேசினார். அதற்கெல்லாம் பிறகு நான் அந்த விழாவிலே முடிவுரை ஆற்றும்போது, "நான் ஒரு உறுதி எடுத்திருக்கிறேன். மூன்று மாதங்களுக்கு முன்பு கர்நாடகத்திலிருந்து ஒரு அமைச்சர் சென்னை மாநகரில் வந்து பேசியபோது, "தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி விரைவிலே எங்கள் ஊருக்கு வரவேண்டும், ஒரு விழாவிலே கலந்து கொள்ளவேண்டும்'' என்று ஒரு கோரிக்கை வைத்தார். நான் அதற்கு பதிலளித்துப் பேசும்போது, "பெங்களூருக்கு ஒரு விழாவிற்காக நான் வருவதென்றால், நான் அங்கே வந்து இனி கலந்துகொள்கின்ற முதல் விழா, அந்த திருவள்ளுவருடைய சிலை திறப்பு விழாவாக இருந்தால்தான் வருவேனே தவிர, வேறு எந்த விழாவிற்காகவும் நான் அடியெடுத்து வைக்கமாட்டேன்'' என்று சொல்லிவிட்டேன் என்று கூறியிருந்தேன்.

உடன்பிறப்பே, பெங்களூரு தமிழ்ச் சங்கம், பெங்களூருவில் ஏறத்தாழ 18 ஆண்டுகளுக்கு முன்பு அய்யன் திருவள்ளுவருக்கு சிலை நிர்மாணித்து -1.9.1991 அன்று அப்போது கர்நாடக மாநில முதல்-அமைச்சராக இருந்த பங்காரப்பா தலைமையில்- கர்நாடக மாநில அமைச்சராக இருந்த கே.ஜே.ஜார்ஜை கொண்டு திறந்திட ஏற்பாடுகளைச் செய்தது. ஆனால் 30.8.1991 அன்று பெங்களூரு நீதிமன்றம் விதித்த தடை காரணமாக அப்போது அங்கே திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெற முடியாத நிலை ஏற்பட்டது. சிலை அமைப்பதற்கு பெங்களூரு மாநகர் மன்றம் வழங்கியிருந்த அனுமதியை 21.9.1991 அன்று திரும்பப் பெற்றுக் கொண்டது. அதன் பிறகு பலமுறை அந்த சிலையைத் திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், அது நடைபெறவே இல்லை.

இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலே தான் கர்நாடக அரசும், அதன் முதல்-மந்திரி எடிïரப்பாவும் பெரு முயற்சியெடுத்து அடுத்தடுத்துள்ள மாநிலங்கள் நல்லுறவுடன் இருக்க வேண்டுமென்ற நல்ல நோக்கத்தோடு இந்த சிலையினை இன்று நிறுவியிருக்கிறார்கள். மணவிழா அழைப்புகளில் எல்லாம் உறவினர்களும், நண்பர்களும் முன்கூட்டியே வந்திருந்து வாழ்த்த வேண்டுமென்று அச்சிடுவார்கள். அதற்கேற்ப நானும், இந்த விழாவிலே உள்ள மகிழ்ச்சி காரணமாக ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே பெங்களூருக்கு வந்திருந்து திருவள்ளுவரின் சிலையினை திறந்து வைக்கவிருக்கிறேன். எனவே "இன்று வாழ்விலோர் திருநாள்'' என்று நான் தொடக்கத்தில் எழுதியது பொருத்தம் தானே?

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.