ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

புதிய சட்டப்பேரவை திறப்பு விழா: ஜெயலலிதாவுக்கு அழைப்பிதழ்



சென்னை, பிப்.27: புதிய சட்டப்பேரவை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ் எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு சனிக்கிழமை வழங்கப்பட்டது.தமிழக அரசின் சார்பில் பொதுத் துறைச் செயலாளர் தேவஜோதி ஜெகராஜன் இந்த அழைப்பிதழை வழங்கினார்.புதிய சட்டப்பேரவை திறப்பு விழா மார்ச் 13-ம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஜெயலலிதாவுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

அழைப்பிதழ் கொடுத்திருக்கா விட்டால் தம்மை மதிக்க வில்லை என்று கூக்குரலிடுபவர் இப்பொழுது தன் கனவு நனவாவதாகக் கருதி விழாவில் கலந்து கொள்வதே பெருந்தன்மையாக இருக்கும். இப்படியெல்லாம் கனவு காணக் கூடாதுதான். என் செய்வது ஒரு நப்பாசை. எப்படியும் சட்ட மன்றத் தொடரின் பொழுது கையொப்பம் இடுவதற்காகவாவது காலடி எடுத்து வைப்பார். ஆனால், இப்பொழுது அழைப்பை ஏற்று விழாவில் பங்கு கொண்டால் அரசியலில் பண்பாட்டைப் புதுப்பித்ததாகப் பெருமைப்படுத்தப்படுவார் அல்லவா? எனவே. கட்சி வேறுபாட்டை மறந்து, பேரவைக்கட்டடத்தை வெளியே அமைக்க முயன்றதம் எண்ணத்தைக் குறுகிய காலத்தில் செயல்முறைப்படுத்திய கலைஞரையும் தமிழக அரசையும் பாராட்டி இவ்விழாவில் பங்கேற்க வேண்டும். அவ்வாறு ஒப்புக் கொண்டால் அழைப்பிதழிலும் பாராட்டுரையில் இவர் பெயர் இடம் பெற வேண்டும்.

அரசியல் பண்பாடு தழைக்க வி‌ழையும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/28/2010 4:16:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக