வெள்ளி, 5 மார்ச், 2010

பேரவைத் தேர்தல் "கை'யோடுதான்: முதல்வர் மு. கருணாநிதி



திருச்சியில் நிருபர்களுக்கு புதன்கிழமை பேட்டி அளிக்கிறார் முதல்வர் கருணாநிதி. உடன் துணை முதல்வர் ஸ்டாலின்.
திருச்சி, மார்ச் 3: சட்டப்பேரவைத் தேர்தல் "கை'யோடுதான் நடைபெறும் என்றார் தமிழக முதல்வர் மு. கருணாநிதி.திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், "கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு முடிந்த கையோடு, தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறப் போவதாகச் சொல்லப்படுகிறதே?' எனக் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த கருணாநிதி, "தேர்தல் கையோடுதான் நடைபெறும்' என சூசகமாகத் தெரிவித்தார்.மேலும் அவர் கூறியது:"உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. அதற்காக அமைக்கப்பட்ட பல்வேறு குழுவினர் ஓய்வில்லாமல் பணியாற்றி வருகின்றனர்.இந்த மாநாட்டில் பல்வேறு பொருள்கள் பற்றி ஆய்வுக் கட்டுரைகள் படிக்கப்படவுள்ளன. இதில், ஆய்வுக் கட்டுரை படிப்பது பற்றி குழுத் தலைவரிடம் கலந்து ஆலோசித்து, ஆய்வரங்கில் ஒரு நாள் நான் உரையாற்றவுள்ளேன்."அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தில் ஆகமம் என்ற சிக்கல் நுழைக்கப்படுகிறது. அதையும் தாண்டி நாங்கள் வெளியே வரவேண்டியுள்ளது.மடாதிபதிகளால் ஆசிரமங்களில் அத்துமீறல்கள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளன. இதுதொடர்பாக, எத்தகைய முடிவு மேற்கொள்ளலாம் என்பது பற்றி முடிவு எடுக்க அரசு, அறநிலையத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுக்களைக் கூட்ட உள்ளோம்.கலைஞர் வீட்டு வசதித் திட்டத்துக்கு நிதி ஆதாரம் இருக்கிறது. முதல் கட்டமாக ரூ. 1,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 3 லட்சம் வீடுகள் கட்டப்படவுள்ளன. எனவே, நிதியைப் பற்றிக் கவலையில்லை.அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் விபத்தில் உயிரிழந்தார். அவர் அடிபட்ட உடனே அங்குள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனைக்குக் கொண்டு சென்றவுடன் இறந்துவிட்டார். இறப்புக்கு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் என சக மாணவர்கள் குற்றம்சாட்டி பெரிய அளவில் கலவரத்தில் ஈடுபட்டனர்.கலவரத்தைத் தடுக்க போலீஸôர் அங்கு சென்றனர். போலீஸôர் வருவதைக் கண்டு மாணவர்கள் சிதறி ஓடினர். அவ்வாறு சிதறி ஓடியபோது, அங்குள்ள குளத்தில் சிலர் இறங்கினர். அதில் சிலர் இறந்தனர்.அண்மைக் காலமாக பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு மருத்துவம், பொறியியல் கல்வி கற்க ஏராளமானோர் வருகின்றனர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தவர்களில் பெரும்பாலும் பிகாரைச் சேர்ந்தவர்கள்தான்.எனவே, இந்தச் சம்பவம் தொடர்பாக பிகார் முதல்வர் நிதீஷ்குமார் செவ்வாய்க்கிழமை என்னிடம் தொலைபேசியில் விசாரித்தார். விவரங்களைச் சேகரித்து அவருக்குக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்று நிலைமையைக் கேட்டறியவும், குளத்தில் இறந்த மாணவர்களின் சடலங்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கவும், அமைச்சர் பன்னீர்செல்வத்தை அனுப்பி வைத்தேன்.தற்போது தொடரும் நிலையிலேயே கோடை காலத்திலும் மின் பற்றாக்குறை சமாளிக்கப்படும்' என்றார் கருணாநிதி.பென்னாகரம் இடைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளிடம் சுறுசுறுப்பு இல்லையே எனக் கேட்டதற்கு, "கட்சிகளின் வலிமையும், அந்தக் கட்சிக்கு மக்களிடம் உள்ள பொலிவையும் பொருத்தே உள்ளது' என்றார்.அடுத்த சாதனை!தமிழக பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் ஏதேனும் உண்டா? எனக் கேட்டதற்கு "19}ம் தேதி மாலை அல்லது 20}ம் தேதி காலையில் தெரிந்துவிடும்' என்றார். கருணை இல்லம், கண்ணொளி வழங்கும் திட்டம், கை ரிக்ஷா ஒழிப்புத் திட்டம் எனத் தொடங்கி கான்கிரீட் வீடு வரை நிறைவேற்றியிருக்கிறீர்கள். ஒவ்வொரு சாதனையையும் நீங்களே முறியடித்து வரும் நிலையில், அடுத்த சாதனை என்னவாக இருக்கும் எனக் கேட்டதற்கு, "பத்திரிகையாளர்களை எங்கள் பக்கம் இழுப்பதுதான் அடுத்த சாதனையாக இருக்கும்' என்றார்.
கருத்துக்கள்

குருதிக் கறை படிந்த கையோடு கழகக்கை சேர்வதை மக்கள் விரும்பாவிட்டாலும் இனமான உணர்வை அடகு வைத்து விட்டுத் தொடர எண்ணுவது கட்சியாளர் விருப்பம். ஆனால், கையோடுதான் உறவா அல்லது கை ஓடுமா , கை ஓடியபின்தான் உறவு முடிவாகுமா என்பதெல்லாம் கைக்கு உரியவர் எடுக்க வேண்டிய முடிவு. முன் பதிவு செய்து பயன்இல்லை.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/5/2010 3:28:00 AM

tharthal KAI + ODU thaan.

By sbala
3/4/2010 5:25:00 PM

adutha therdhal kaiyootu udan dhaan. Adhu dhaan...currency for votes !

By karthik
3/4/2010 4:30:00 PM

The hand does not mean the election symbol of party Congress. He was mentioning the hands which give bribe and hands which take it. All the recent elections were won with these golden hands. K.L.Narasimhan

By K.L.Narasimhan
3/4/2010 4:22:00 PM

முதல்வர் சொல் தமிழ் மக்களுக்கு பிடித்த நடை

By ரவி
3/4/2010 12:38:00 PM

ஹெச் எம் டி. அன்சாரி DUBAI, INDIA.00971508406322 ansareee@yahoo.com, என் அன்புள்ள, தொழில் செய்ய விரும்பும் தமிழ் தொழில்அதிபர்களே. நான், ஹெச்.எம் .டி.அன்சாரி. துபாயி லிருந்து, என்னிடம்.20க்கும்,மேற்ப்ப ட்ட சின்ன சின்ன தொழில்களும், பெரிய பெரிய பல கோடிகள் முதலீ டு செய்யும் தொழில்களும், இன்னும் நடை முறையில் உள்ள புத்தம் புதிய , பழைய தொழில்களும் இன்னும்,யாரும் நம்மை பார்த்துக் காப்பி, அடித்து செய்ய முடியாத தொழில்களும், என்னிடம் இருக்கி ன்றது. இன்னும் விசயங்களையும், விபரங்களையும்,விளக்கங்களையும் இலவசமாக அறிய, ஹெச் எம் டி. அன்சாரி. INDIA DUBAI, ansareee@yahoo.com, 00971508406322

By HMT.ANSARI.
3/4/2010 12:19:00 PM

I saw his interview in Sun news. on an average he takes 2-3 mintues to say a word. for a sentence he takes 10 mins. Why should he still continue in CM droubling himself and people? pasathalaivan eppodhu oivukku velai kodupaar?!!

By jujubi
3/4/2010 11:34:00 AM

Respected Chief Minister Tamil Nadu I request fearer request from you sir. Being visited in Tamil Nadu many places after when I was young I saw many places with good forming. No I saw the former getting the rat for there daily food which they could get every day also. As I think you also come from village. Please think they are you? How they can serve for food and living house. The actor are rich enough get the house for there workers. But as a CM you gave the house. Think about former. As good of India I am not so wealthy to give house all the former. Like an actor request you. I will also request you sir. Please constitute house for all the former. Reason if there is no former. We are later son are grand son need get rich from other country. As I am engineer just I have idea. Please make big some dictate up River . In which future there will be rain water. I saw this process in some country like Malaysia, Singapore, Australia and Newland. This country made Dictate up rive

By Barath
3/4/2010 11:03:00 AM

kai "odu" entry sonnar...how is it ?

By bala
3/4/2010 9:45:00 AM

தேர்தல் கையோடு. மக்களுக்கோ திருவோடு.

By அம்மாடியோ
3/4/2010 6:59:00 AM

nee yennavendumalum pesalaam.yennavendumanalum saiyalaam.ketka oruththarum ellai.nee seththatthan tamil naattukku vdiu.

By thuran
3/4/2010 6:52:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக