சென்னை, பிப்.27: தமிழகத்தின் மின்தேவையைச் சமாளிக்க ஆங்காங்கே 10 முதல் 20 நிமிடங்கள் மின் தடை செய்யப்படுவதாக மின்சார வாரியம் கூறியுள்ளது.இது தொடர்பாக தமிழக மின்சார வாரியம் கூறியிருப்பது:கடந்த சில நாள்களாக அதிகரித்துள்ள வெப்பம், தொழில் வளர்ச்சி ஆகியவற்றால் தமிழகத்தின் மின் தேவை ஜனவரி மாதத்தைவிட 5 சதவீதம் அதிகரித்துள்ளது. பிப்ரவரியில் அதிகபட்சமாக 10,160 மெகாவாட்டை எட்டியுள்ளது.தவிர, ஆந்திரம், கர்நாடக மாநிலங்களிலும் மின் தேவை அதிகரித்து மின் சந்தையில் மின்சார பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வடமாநிலங்களில் இருந்தும் கிடைக்கும் மின்சாரத்தைப் பெறுவதில் மின்கடத்திச் சிக்கல் உண்டாகியுள்ளது. காற்றாலை மூலம் 500 மெகாவாட் வரை கிடைத்து வந்த மின்சாரம் இப்போது முற்றிலும் இல்லை.எனவே, மின்கட்டமைப்பின் பாதுகாப்புக்காக தமிழகத்தில் ஆங்காங்கே 10 முதல் 20 நிமிடங்கள் வரை மின் தடை செய்யப்படுகிறது. இந்த மின் தடை தற்காலிகமானது தான்.தமிழகத்தின் மின் தேவையைச் சமாளிக்க (குறிப்பாக, பள்ளி மாணவர்கள் படிக்கவும், தேர்வு எழுதவும்) தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மின்சார வாரியம் எடுத்து வருகிறது.
கருத்துக்கள்
மின்வாரியத்தினருக்குக் கணக்கு தெரியவில்லை போலும். இப்பொழுதே சென்னை தவிர பிற நகரங்களில் முற்பகல 2 மணிநேரம் பிற்பகல் 2 மணிநேரம் என மின்வெட்டு நடைமுறையில் உள்ளது.ஆனால் 10 முதல் 20 நிமிடம் எனத் தவறாகத் தெரிவிக்கப்படுகின்றதே. ஒரு வேளை சென்னையில் நாள்தோறும் அவ்வப்பொழுது மின் இணப்புப் பழுது முறையில் மின் இணைப்பு நிறுத்தப்படுவதைத் தமிழ்நாடு முழுமைக்கும் எனபது போல் குறிக்கின்றனரோ! எவ்வாறிருப்பினும் போதிய மின்னிருப்பு இல்லையேல் வெளிப்படையாக ஒப்புக் கொண்டு பொதுமக்களிடம் சிக்கனத்தைக் கடைப் பிடிக்க அறிவுறுத்தி உரிய மின் வெட்டை அறிமுகப்படுத்த வேண்டும். நாடகத்தால் பயன் இல்லை. வெறுப்புதான் மிஞ்சும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
2/28/2010 3:43:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *2/28/2010 3:43:00 AM