பெட்ரோல் விலை உயர்வு: திமுகவின் எதிர்ப்பு குறைகிறது
புது தில்லி, மார்ச் 4: பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த திமுக, தற்போது எதிர்ப்பின் தீவிரத்தைக் குறைத்துள்ளது.பட்ஜெட் உரையின்போது பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் கருணாநிதி, பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது வியாழக்கிழமை ஆதரித்துப் பேசிய மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா, காங்கிரஸýடன் கூட்டணி வைத்துள்ளதால் திமுக இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஒரு மாட்டு வண்டியை நேரான பாதையில் இழுத்துச் செல்லும் இரு மாடுகளைப் போல மத்திய அரசு சரியான பாதையில் செல்வதற்கு காங்கிரஸ் மற்றும் திமுக.வின் செயல்பாடு ஒருங்கே அமையவேண்டும் என்றார்.அவர் மேலும் கூறியதாவது: 2010-11 பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உற்பத்தி மற்றும் இறக்குமதி வரிகளில் மாற்றம் செய்துள்ளதைத் தொடர்ந்து பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது என்றார்.குடியரசுத் தலைவர் உரை: பிரதமர் இன்று பதில்புது தில்லி, மார்ச் 4: குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெள்ளிக்கிழமை பதிலளிக்கிறார்.பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் கேள்வி நேரத்துக்குப் பிறகு பிரதமர் மன்மோகன் சிங் பதிலளிக்கிறார்.
ஏதோ தமிழ் நாட்டில் எதிர்ப்பது போல் போக்கு காட்டியதற்காக மத்தியிலும் எதிர்த்து பதவி நலன்களை இழக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? நாங்கள் எதிர்த்தாலும் காரணம் இருக்கும். பணிந்தாலும் காரணம் இருக்கும். இதனைப் புரிந்து கொள்ளாமல் ஊடகங்கள் ஏதேதோ எழுதக் கூடாது.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
3/5/2010 3:40:00 AM