ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

இந்திரனுக்கு வேண்டுகோள்! - பிரணாப் முகர்ஜி



இந்தியாவில் வரும் காலத்தில் போதுமான அளவு மழை பெய்ய வேண்டுமென்று இந்திரனை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வேண்டிக் கொண்டார்.பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய பிரணாப், "கடந்த ஆண்டு நாட்டின் ஒருபகுதியில் வறட்சியால் வேளாண் உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு பயிர்களை நாசப்படுத்தியது.எனவே இந்த ஆண்டு நாட்டில் தேவையான அளவு மழை பெய்ய வேண்டுமென்று மழைக் கடவுளான இந்திரனை வேண்டிக் கொள்கிறேன். அப்போதுதான் இந்த ஆண்டில் சிறப்பான பொருளாதார வளர்ச்சி இருக்கும். மழையும் பொருளாதாரத்தை பாதிக்கும் காரணியாக உள்ளது' என்றார்.
கருத்துக்கள்

மாமழை போற்றுதும் என்னும் இளங்கோவடிகளின் சிலப்பதிகார வரிகளை மேற்கோளாகச் சேர்த்திருக்கலாமே! அவரிடம் இதனைத் தெரிவிக்காமை உடன் இருந்த தமிழர்களையே சாரும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/28/2010 4:40:00 AM

HONBLE FM SIR, NOW U GUYS WELL SETTLED SO PRAY INDIRAN.IF ELECTION ANNOUNCED YOU PRAY CHANDRAN FOR VOTE THATS INDIAN DEMO.

By DR.SANKAR.
2/27/2010 8:44:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக