வாடிக்கையாளர்களின் புகைப்படத்துடன்கூடிய அஞ்சல்
தலைகளை அறிமுகப்படுத்தும் புதிய திட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 3)
தொடங்கப்பட உள்ளது.
"எனது அஞ்சல் தலை' எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம், சென்னை, அண்ணா
சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து அஞ்சல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களின் புகைப்படங்களுடன் கூடிய
அஞ்சல் தலைகளை வெளியிட அஞ்சல்துறை முடிவு செய்துள்ளது.
இந்தத் திட்டத்தில் அஞ்சல் தலைகளின் இடதுபுறத்தில் வாடிக்கையாளர்களின்
புகைப்படம் இடம் பெற்றிருக்கும். ரூ.5 மதிப்பு கொண்ட இந்த அஞ்சல் தலைகளை
இந்தியா முழுக்க தபால்களை அனுப்பப் பயன்படுத்தலாம். "எனது அஞ்சல்தலை'
தேவைப்படும் வாடிக்கையாளர்கள், வெள்ளை நிற பின்னணியில் எடுக்கப்பட்ட
பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து
அண்ணா சாலையில் உள்ள அஞ்சல்தலை சேகரிப்பு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
புகைப்படத்துடன் கூடிய 12 அஞ்சல் தலைகளைப் பெற கட்டணமாக ரூ.300 செலுத்த
வேண்டும். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 044-28543199 என்ற
தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
தற்போது
வயது பன்னிரண்டு(பிறந்த தேதி:23.05.2000). பதினொரு வயதிலேயே IQ லெவல் 225.
நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக
சாதனை.கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான
210 என்பதைவிட, இது இன்னும் அதிகம்.
இந்தியா அதுவும் தமிழகம்
என்பதால் தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லை. இன்னொரு நாடென்றால், இவளை
இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள்.
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தும்
“எழுச்சி நாள்” பொதுக்கூட்டங்கள் மே-15 அன்று தமிழகமெங்கும் நடைபெறும்
என்று திமுக அறிவித்துள்ளது.
1860ஆம் ஆண்டு தொடங்கி பல்வேறு காலகட்டங்களில் திட்டமிடப்பட்டு,
நிறைவேற்றப்படாமல் இருந்த தமிழக மக்களின் 150 ஆண்டுகால கனவுத் திட்டமான
‘சேது சமுத்திரம் திட்டம்’ 2007 ஜூன் 2ஆம் நாள் மத்திய அரசால்
தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று திமுக அரை
நூற்றாண்டு காலம் வலியுறுத்தி வந்தது.
23-7-1967 அன்று சேது சமுத்திரம் திட்டம், அதன் ஒரு பிரிவாக
தூத்துக்குடி துறைமுகத் திட்டம் மற்றும் சேலம் இரும்பாலைத் திட்டம் கிய
திட்டங்களை நிறைவேற்றிடக் கோரி, திமுக சார்பில் “எழுச்சி நாள்” அறிவித்து,
மத்திய அரசினை வலியுறுத்தியது.
ஆனால், ஏறத்தாழ 2400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட சேது
சமுத்திரத் திட்டம், சில பிற்போக்கு சக்திகளின் தூண்டுதல் காரணமாக,
நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு இடைக்காலத் தடையின் காரணமாக நிறுத்தி
வைக்கப்பட்டிருக்கிறது. சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்
என்ற கோரிக்கையை தங்களுடைய 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான
‘தேர்தல் அறிக்கை’யில் மட்டுமன்றி, 2006 ஆண்டு சட்டமன்றத் தேர்தல்
அறிக்கையிலும் வலியுறுத்திய அ.தி.மு.க. தற்போது அந்தக் கோரிக்கைக்கு எதிராக
மாறி, சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட்டு வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தை
ஆளும் ஜெயலலிதா அரசு இத்திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று உச்ச
நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறது.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் - வேலைவாய்ப்புக்கும் பெரிதும்
துணை செய்யும் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், தமிழகம் மேலும் வளம் பெறும்
என்பதை உணராமல், தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு இத்திட்டத்தை நிறைவேற்ற
வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. இச்சூழ்நிலையில் ஏறத்தாழ 50
சதவீதத்திற்கும் மேல் பணிகள் முடிவடைந்த நிலையில் உள்ள ‘சேது சமுத்திரத்
திட்டத்தை’ விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்திட
திமுக சார்பில் தமிழகம் முழுவதும் “எழுச்சி நாள்” பொதுக் கூட்டங்கள்
நடத்திட வேண்டுமென திமுக முடிவு செய்துள்ளது. இதன்படி, மாவட்டத்
தலைநகரங்களிலும் - மாவட்டத்தின் முக்கிய நகரங்களிலும் “எழுச்சி நாள்
பொதுக்கூட்டங்கள்” 2013 மே 15ஆம் நாளன்று நடைபெறும் என்று திமுக
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரநாத் தாஸ் என்பவருக்கு கவுகாத்தி
நீதிமன்றம் 1997-ம் ஆண்டு இரட்டை கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதித்தது.
1990-ல் ரஞ்சன்தாஸ் என்பவரை கொலை செய்த அவர் ஜாமீனில் வந்த போது 6 ஆண்டு
கழித்து ஹரகந்ததாஸ் என்பவரை கொன்றார். அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு
தண்டனையை அசாம் ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் 1999-ல் உறுதி செய்தன.
இதையடுத்து மகேந்திர நாத்தாஸ் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். 12
ஆண்டுகள் கழித்து கடந்த 2011-ம் ஆண்டு கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார்.
கருணை மனு மீது தாமதமாக முடிவு எடுத்ததால் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு
தண்டனையை குறைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மகேந்திரநாத் தாஸ்
மனு தாக்கல் செய்தார்.
மனுவை நீதிபதி ஜி.எஸ். சிங்வி தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் விசாரித்து
மகேந்திரநாத்தாசுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக
குறைத்து உத்தரவிட்டது. இந்த உத்தரவின் மூலம் 16 ஆண்டுகளாக தூக்கு கயிறை
எதிர்நோக்கி இருந்த அவரது தலை தப்பியது.
ஏற்கனவே இது போல் கருணை மனு மீது ஜனாதிபதி தாமதமாக முடிவு எடுத்ததால்
பஞ்சாபை சேர்ந்த காலிஸ்தான் தீவிரவாதி புல்லர் தண்டனையை குறைக்க கோரி
சுப்ரீம் கோட்டில் மனு செய்தான். அவன் தீவிரவாதி என்பதாலும் குண்டு
வெடிப்பில் தொடர்புடையவன் என்பதாலும் அவனது கோரிக்கையை ஏற்க சுப்ரீம்
கோர்ட்டு மறுத்து தூக்கு தண்டனையை உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.
சேதுக்கால்வாய் த் திட்டம்: அரசின் காழ்ப்புணர்வு: கருணாநிதி
சென்னை: சேது சமுத்திர திட்டத்திற்கு, மூடுவிழா நடத்த, அ.தி.மு.க., அரசு
காழ்ப்புணர்வோடு, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது' என,
தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். தி.மு.க., தலைவர்
கருணாநிதி அறிக்கை:சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படுமானால், அதன்
மூலம் தமிழகத்தில், தொழில், வர்த்தகம் பெருகும். நாட்டின் அன்னியச் செலவாணி
வருவாய் அதிகரிக்கும். கப்பல்களின் பயண தூரம், நேரம் பெருமளவு குறையும்.
தமிழகம் மற்றும் அண்டை மாநிலத் துறைமுகங்களில் சரக்குகள் கையாளும் திறன்
அதிகரிக்கும். ராமநாதபுரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி மாவட்டங்களில்,
கட்டமைப்பு வளர்ச்சி பெருகும்.சேதுசமுத்திரத் திட்டம், வேகமாக முன்னேற்றம்
அடைந்து கொண்டிருந்த நேரத்தில், இந்தத் திட்டம் பூர்த்தியடைந்து விட்டால்,
தி.மு.க., வுக்கு பெரும் பெயர் வந்து விடும் என்ற காரணத்தால், இந்தத்
திட்டத்திற்காக, 829 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு
மூடு விழா நடத்த, அ.தி.மு.க., அரசு காழ்ப்புணர்வோடு, சுப்ரீம் கோர்ட்டில்
மனு தாக்கல் செய்துள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார். வரவேற்கிறோம்: தமிழக
பா.ஜ., தலைலவர் பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "முதல்வர் ஜெயலலிதாவின்
முடிவை, மனப்பூர்வமாக, தமிழக பா.ஜ., வரவேற்கிறது. எங்களைப் பொருத்தவரை,
ராமார் பாலத்துக்கு எந்தவித இடையூறும் இல்லாமல், சேது சமுத்திர திட்டத்தை
நிறைவேற்ற வேண்டும்' என்றார்.
அன்று தையல் ஆசிரியை: இன்று மண் சுமக்கிறார்"வயிற்றை க் கழுவ' மதிப்பு பார்க்காத எலிசபெத்
குசிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகே, அரசு மேல்நிலை பள்ளியில், தையல்
ஆசிரியையாக பணிபுரிந்து, ஓய்வு பெற்ற ஆசிரியை எலிசபெத், பென்ஷன்
கிடைக்காததால், நூறு நாள் வேலைக்கு சென்று வருகிறார். திண்டுக்கல்,
சாமிமுத்தன்பட்டியை சேர்ந்தவர், எலிசபெத், 60; திருமணமாகதவர். 10ம் வகுப்பு
வரை படித்த இவர், தையல் தொழில் பயிற்சி முடித்துள்ளார். 1982, ஜூலை, 1ல்,
குஜிலியம்பாறை ஒன்றியம், சின்னழகு நாயக்கனூரில், அங்கன்வாடி பணியாளராக
சேர்ந்தார்.கடந்த, 2004ல், நத்தம் சிறுகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில்,
தையல் ஆசிரியராகவும், 2007 முதல், கே.ராமநாதபுரம் அரசு மேல்நிலை
பள்ளியிலும் பணிபுரிந்த இவர், 2011 பிப்., 28ல், ஓய்வு பெற்றார்.புதிய
பென்ஷன் திட்டத்திற்காக, இவரது சம்பளத்தில் மாதந்தோறும், பணம் பிடித்தம்
செய்யப்பட்டது. பணி ஓய்வு பெற்ற இவருக்கு, இரு ஆண்டுகளாகியும், இதுவரை
பென்ஷன் வரவில்லை.பென்ஷன் தாமதம் மற்றும் தன்னிடம் பிடித்த தொகையையும்
திருப்பி வழங்காததால், பணமின்றி சிரமப்பட்ட எலிசபெத், நூறு நாள் வேலை
திட்டத்தில் மண் சுமக்கும் வேலை செய்கிறார்.எலிசபெத் கூறியதாவது:
பென்ஷன் கேட்டு, மாநில முதன்மை கணக்காயருக்கு தபால் அனுப்பப்பட்டது. புதிய
பங்கேற்பு ஓய்வு ஊதிய திட்டத்தில், அரசு முடிவு எடுக்காததால், தபால்
திருப்பி அனுப்பப்பட்டது. மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு
தொடுத்துள்ளேன்.தீர்ப்பு வரும் வரை, சாப்பிடாமல் இருக்க முடியாது அல்லவா?
இதனால் மாரம்பாடி ஊராட்சியில், நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை
செய்கிறேன். இதில் கிடைக்கும் கூலியால், சாப்பாட்டு பிரச்னை தீர்ந்துள்ளது.
பென்ஷன் கிடைத்தாலும், இப்பணிக்கு செல்ல முடிவு செய்துள்ளேன்.ஆசிரியராக
இருந்த நான், கூலி வேலைக்கு செல்வதால் எந்த சங்கடமும் இல்லை. மன
திருப்தியுடன் ஆத்மார்த்தமாக பணி செய்கிறேன். இருந்த போதும், என்னிடம்
பிடித்தம் செய்த தொகையை அரசு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
களைப்பு இல்லாத உழைப்பு : -இன்று உலக த் தொழிலாளர் நாள்-
தொழிலாளர் இல்லையெனில் உலகம் இயங்காது. எத்தனையோ வித தொழிலாளர்கள் உலகளவில்
உள்ளனர். அவர்களுக்கு உரிய உரிமைகள் தொடர்ந்து வழங்க வேண்டும் என்பதே
இத்தினத்தின் நோக்கம். சமூக, பொருளாதார உலகில் தொழிலாளர்களின்
பங்களிப்பை பாரட்டும் விதமாகவும், அவர்களை கவுரவிக்கும் விதமாகவும் மே 1ம்
தேதி, உலக தொழிலாளர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கு "8 மணி
நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர தூக்கம்' என்ற வகையில் இருக்க
வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது. இந்தியா உள்ளிட்ட 80க்கும்
மேற்பட்ட நாடுகளில் இத்தினத்துக்காக விடுமுறை விடப்படுகிறது. எப்படி வந்தது முன்பெல்லாம்,
தற்போது உள்ள நடைமுறைகள் தொழிலாளர்களுக்கு கிடைத்ததில்லை. 18ம்
நூற்றாண்டின் இறுதி மற்றும் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா
உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் கட்டாயம்,
வேலை செய்ய வேண்டும் என்ற நிலை இருந்தது. தகுதியான ஊதியமும்
வழங்கப்படுவதில்லை. இதை எதிர்த்து, தொழிலாளர்கள் சார்பில் போராட்டங்கள்
நடத்தப்பட்டன. அதன் மூலம் அவர்களது கோரிக்கைகள் ஏற்கப்பட்டன.
இப்போராட்டங்கள் தான், தொழிலாளர் தினம் உருவாக காரணமாக அமைந்தன.
தமிழக ப் படகுகள், இலங்கை கடல் பகுதிக்குள் நுழைவதை தடுக்கும் கருவியை
கண்டுபிடித்த, ராஜேந்திர பிரசாத்: நான், சிவகாசி பி.எஸ்.ஆர்., பாலிடெக்னிக்
கல்லூரியில், எலெக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் பிரிவில், மூன்றாம்
ஆண்டு படிக்கிறேன். இந்திய எல்லையில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும்
போது, எல்லை தாண்டியதாக மீனவர்களை கைது செய்வது, துப்பாக்கியால் சுடுவது
என, இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்கிறது.இதற்கு தீர்வு காண, தமிழக
மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டும் போது, எச்சரிக்கை செய்யும் கருவியை
கண்டுபிடிக்க, சக கல்லூரி நண்பர்களின் உதவியுடன், முயற்சியை துவக்கினேன்.
"ஆர்.எப்., டிரான்ஸ்மீட்டர்' எனும், ரேடியோ சிக்னல்களை அனுப்பும்
டிரான்ஸ்மீட்டரை, கடற்கரையில் பொருத்தி, அதன் சிக்னல்களை உள் வாங்கும்,
"ரிசீவர்' கருவியை, மீனவர்கள் கடலுக்கு செல்ல பயன்படுத்தும் படகுகளில்
பொருத்த வேண்டும். ரிசீவரை படகில் பொருத்தும் போது, இலங்கை கடல் எல்லை
ஆரம்பமாகும், 100 மீட்டருக்கு முன்பே, டிரான்ஸ்மீட்டரில் இருந்து
ரிசீவருக்கு சிக்னல் கிடைக்காது. சிக்னல் துண்டிக்கப்பட்டதால், மைக்ரோ
கன்ட்ரோலர் மூலம், எச்சரிக்கை மணி ஒலிக்க துவங்கும். இதனால், இலங்கை கடல்
எல்லை ஆரம்பமாவதை அறியும் மீனவர்கள், எல்லை தாண்டாமல் உஷாராக திரும்பி
விடலாம். எச்சரிக்கை மணியின் ஒலி கேட்காமலோ அல்லது எல்லை மீறி சென்றாலோ,
கப்பலின் என்ஜினை, தானாகவே, "ஆப்' செய்து, இரண்டு நிமிடத்திற்கு பின்னரே,
கப்பல் இயங்கத் துவங்கும். இரண்டு விதமான எச்சரிக்கை செய்வதால், மீனவர்கள்
கடலுக்கு பாதுகாப்பாக செல்லலாம்.இரவிலும், பகலிலும் இயங்கும் இக்கருவியை
தயாரிக்க, 6,000 ரூபாய் செலவானது. பல மீனவர்களும் இக்கருவிக்கு ஆதரவு
தருகின்றனர். சமீபத்தில், முதல்வர் ஜெயலலிதா அவர்களும், மீனவர்களின்
பாதுகாப்பை உறுதி செய்ய, ரேடியோ சிக்னல் தரும் கருவிகள் வாங்க, 75 சதவீத
மானியம் தருவதாக அறிவித்துள்ளார். தொடர்புக்கு: 81222 20603.
வெளிநாடு வாழ் இந்தியர் அட்டை (ஓசிஐ) வைத்திருப்போருக்கு புதிய விதிமுறைகளை வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அட்டை (ஓசிஐ) வைத்திருப்போர்,
இந்தியாவுக்கு பயணிக்கும் போது ஓ.சி.ஐ. அட்டை, யு விசா ஸ்டிக்கர்
ஒட்டப்பட்ட பாஸ்போர்ட், போன்றவற்றை கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும்.
ஓசிஐ அட்டை வைத்திருப்போர் எத்தனை முறை வேண்டுமானா லும் இந்தியாவுக்குள்
வந்து செல்லலாம். மேலும் வாழ்நாளுக்குரிய விசாவும் அவர்களுக்கு
வழங்கப்படுகிறது. 50 வயதுக்கு மேற்பட்டோர் புதிய பாஸ்போர்ட் பெற்றவுடன்
ஓசிஐ அட்டை ஆவணங்களை மீண்டும் பெற வேண்டும்.
அவசர பணியின் நிமித்தம் செல்லும் போது ஓசிஐ அட்டைதாரர் பழைய
பாஸ்போர்ட்டையும், யு விசா ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஓசிஐ அட்டையையும் கொண்டு
செல்லலாம்.
ஓசிஐ அட்டைதாரர்களின் மைனர் குழந்தைகள் ஓசிஐ அட்டை பெற இயலாது.
அவர்களுக்கு இந்திய வம்சாவளியினர் என்ற அட்டை மட்டுமே வழங்கப்படும். ஓசிஐ
அட்டை வைத்திருப்போர் இந்தியாவில் உள்ள உள்ளுர் காவல் நிலையத்தில் ஆஜராகத்
தேவையில்லை.
பான்கார்ட் பெறவும், வங்கியில் புதிய கணக்கு தொடங்கவும் ஓசிஐ அட்டையை
அடையாளச் சான்றாக பயன்படுத்தலாம். ஆனால் ஓசிஐ அட்டைதாரர்கள் தேர்தலில்
வாக்களிக்க முடியாது. இந்திய அரசு வேலைவாய்ப்பையும் பெற இயலாது. ஓசிஐ
அட்டைதாரர் வாழ்நாள் முழுவதும் விசா இல்லாமல் இந்தியாவில் பயணிக்கலாம் என
இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
Leaked US draft on Maldives should open eyes of Tamils
[TamilNet, Tuesday, 30 April 2013, 21:12 GMT] A draft of US defence pact proposed to the Maldives, but leaked to
media a few days ago, should open the eyes of Tamils in the island of
Sri Lanka, in Tamil Nadu and in the diaspora, on the game played by the
USA along with the Establishments in the region, either by exploiting or
by treading on the struggles of peoples in the region, commented
alternative political activists in the Sinhala military occupied country
of Eezham Tamils. Maldivians had made a mistake in not checking their
governments supporting the genocide of Eezham Tamils abetted by the USA,
India and China. It reflects on them now. Meanwhile, Global Tamils
should know where the struggle of Eezham Tamils should ultimately be
addressed to in unison, and what ideological stand they should
independently take with people’s strength, the activists said.
The
US defence draft was in fact seeking to convert the entire Maldivian
archipelago into an unquestioned US base: Free movement of US defence
personnel in the land, air and sea of the Maldives, use of the Maldivian
territory for US installations and technological deployment built by
its own contractors, no boarding and inspection on US aircraft and
vessels, border control of the facilities vested with the USA,
diplomatic status to the US military personnel and there by no action by
Maldives against any criminal activities of them, no claim by
Maldivians on any death or destruction to property, and above all not
taking any disputes to any national or international court, tribunal or
similar body or any third party.
The current US draft aims at a
worse infringement into the sovereignty of the nation of Maldivians than
what the protectorate treaty of British colonialism did in 1885,
Maldivian sources said.
A full perusal of the draft would show what the USA is aiming at in the region.
Meanwhile,
Maldivian media Minivan on Wednesday, related the defence draft
initiation to the challenges anticipated by the USA on its lease of
Diego Garcia of the Chagos archipelago from Britain, where the USA is
currently having a base of nuclear facilities.
The inhabitants of
Chagos were evacuated to Mauritius in 1965, and the UK paid money to
Mauritius to hand over Chagos to the USA in return for some defence
benefits, Minivan said. The Indian origin Mauritius Prime Minister was
later Knighted for his ‘services’.
‘Environmental’ protection
issues are now manipulated by the West to retain the base to the USA and
to deny rights of the original inhabitants.
But, Diego Garcia is
not the issue; it is capturing the Maldives and the island of Sri Lanka
in the given context of challenges from the East, political observers
said.
A section of Maldivians from the ruling faction had a meeting recently
in a US aircraft carrier that was passing through the Maldives.
Failure
of New Delhi’s foreign policy in the southern part of South Asia with
its exposed involvement in the genocide of Eezham Tamils and its
unsophisticated advances towards Maldives became gains for the USA,
political observers said.
Similar to ultimately architecting the
genocidal war and not resolving the national question of Eezham Tamils
for eternal benefits in the island of Sri Lanka, the democracy issue and
the fundamentalism issue were nurtured ultimately for the USA to demand
the defence treaty from the Maldives, political observers opined.
Meanwhile,
speaking to foreign media earlier this month, the ambassador of the
Washington administration in Colombo was explicit in telling the main
role played by her Establishment in eliminating the LTTE.
The
ambassador, taking pride on the effect of the US mobilisation that took
place just a few years before the genocide, said that the accountability
and reconciliation process would take several years to come. There was
nothing in her talk on righteous solutions aspired by the affected
nation of Eezham Tamils.
Pre-emptive support is now given to the
‘counting-the-trees’ struggle of Eezham Tamils against the permanent
Sinhala militarisation of the Valikaamam HSZ, just to silence the
agitators from turning against the ultimate culprits. But no one who is
aware of the military ambitions of the powers in the region would
believe in the support, without seeing concrete policy perspectives,
Tamil alternative political activists in the island commented.
Cautioning
against powers-simulated mobilisations pre-empting people’s uprisings
addressing the ultimate culprits, the activists said that the former
would only lead to serve the interests of the powers, bringing in only
deceit on the struggling the people. Eezham Tamils have a long
experience in such deceptions, enough for the edification of the entire
world, the activists said.
The strategy of targeting the struggle
at agents and subordinates, that too at the advice of the very masters,
without addressing the ultimate culprits face to face, is fundamentally
ineffective, as the ultimate culprits will be left free to manipulate
the situation with mirages as such as ‘regime changes’, the activists
said.
Our so-called lobbying should not detract people’s
uprisings addressed at the ultimate culprits. That is our only strength
today and it should go side by side with political negotiation. If the
lobbyists are in the service of our adversaries to do the work vice
versa, then they are not our lobbyists, the activists in the island
further said.