திங்கள், 7 டிசம்பர், 2015

50 ஆயிரம் கோடிக்கு மேல் தேவை! – திருமாவளவன்

thiruma02vellam_koatturpuram-dinamalar

சீரமைப்பதற்கு ஏறத்தாழ

உரூ. 50 ஆயிரம் கோடிக்கு மேல் தேவை!

– திருமாவளவன்

  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கவும், சேதமடைந்துள்ள சாலைகள், பாலங்கள் போன்ற கட்டமைப்புகளைச் சீரமைப்பதற்கும் ஏறத்தாழ உரூ. 50 ஆயிரம் கோடிக்கு மேல் தேவை என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
  இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கடந்த ஒரு மாத காலமாக மழை, வெள்ளத்தால். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர்முதலான கடலோர மாவட்டங்கள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாகச், சென்னை மாநகரம் வரலாறு காணாத வகையில் முற்றிலும் நிலைகுலைந்துபோய் கிடக்கிறது. சென்னை மாநகரம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏறத்தாழ 50 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள்  ஏதிலியராக வாழும் அவலத்திற்கு ஆளாகி உள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கையை மதிப்பிட இயலவில்லை. மாற்று உடைகள் இல்லாமலும் உணவு மற்றும் குடிநீருக்கே அல்லாடும் நிலையிலும் மக்கள் படும் இன்னல்கள் விவரிக்க இயலாத அளவுக்கு மிகவும் கொடுமையாக உள்ளன.
 சில தொண்டு நிறுவனங்களும், சமூக அமைப்புகளும், தன்னார்வ, சமூகப் பணியாளர்களும் ஆங்காங்கே சில உதவிகளைச் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள் என்றாலும் அந்த உதவிகள் பாதிக்கப்பட்டோரில் இருபது விழுக்காட்டுப் பேரைக் கூட எட்டவில்லை என்பதுதான் உண்மை நிலையாக உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு இன்னும் சில மாதங்கள் பிடிக்கும் என்கிற அளவுக்கு உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து மீட்பு, துயர்துடைப்புப் பணிகளில் அதிதீவிரமாக ஈடுபட வேண்டும்.
  மத்திய அரசு இரு தவணைகளாக ஒதுக்கியுள்ள உரூ.1,940 கோடி சென்னையில் ஏதேனும் ஒரு பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஈடு செய்வதற்கே போதுமானதாக இருக்காது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கவும் சேதமடைந்துள்ள சாலைகள், பாலங்கள் போன்ற கட்டமைப்புகளைச் சீரமைப்பதற்கும் ஏறத்தாழ ஆயிரம் கோடிக்கு மேல் தேவைப்படுமெனத் தெரிய வருகிறது.
எனவே, மத்திய, மாநில அரசுகள் முழுமையாகப் பொறுப்பேற்று போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய முன்வரவேண்டும். அதாவது மத்திய அரசு மூன்றில் இரு மடங்கும், மாநில அரசு ஒரு மடங்கும் என நிதி ஒதுக்கீடு செய்து துயர்துடைப்பு, மீள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.
  சென்னையில் அடையாறு, கூவம் ஆறு, கொற்றலையாறு(கொசத்தலை ஆறு) ஆகிய ஆறுகளின் ஓரங்களில் வசிக்கும் இலட்சகணக்கான மக்களுக்கு மாற்று குடியிருப்புகளை வழங்க ஆவன செய்யவேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், சமூகக் கூடங்களில் தஞ்சம் புகுந்துள்ள மக்கள் போதிய கழிப்பறை வசதிகள் இன்றிக் கடும் இன்னல்களுக்குள்ளாகி வருகின்றனர். ஆகவே, நடமாடும் கழிவுக் கூடங்களை ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் மக்கள் தஞ்சம் புகுந்துள்ள பகுதிகளிலும் கூடுதலான அளவில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.
  பால், குடிநீர் ஆகியவற்றைச் சில மாதங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்; பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான சான்றிதழ்கள், குடும்ப அட்டைகள் ஊர்திகளுக்குரிய இசைவு, ஒட்டுநர் உரிமச் சான்றிதழ்கள் போன்ற முதன்மை ஆவணங்களை இழந்த அனைவருக்கும் கட்டணம் இல்லாமலும் எளிதில் கிடைக்கும் வகையிலும் தீவிர நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

வெளியூர்ப் பேருந்துகளையும் கட்டணமின்றி இயக்க வேண்டும் – இராமதாசு

chennai-maanakara-perunthuRamadoss05

வெளியூர்ப் பேருந்துகளையும்

கட்டணமின்றி இயக்க வேண்டும்!

மதுக்கடைகளை மூட வேண்டும்!

 பாமக நிறுவனர் இராமதாசு வலியுறுத்தல்!

சனிக்கிழமை, இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:-
  பாதிக்கப்பட்டோருக்கு அரசு சார்பில் உணவு முதலான உதவிகளை வழங்குவதுடன், மற்றவர்களையும் உதவி செய்ய அனுமதிக்க வேண்டும். வெள்ளம் தேங்கிய பகுதிகளில் நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் உள்ளூர்ப் பேருந்துகள் மட்டும் இலவசமாக இயக்கப்படும் நிலையில், பாதிக்கப்பட்டோர் சொந்த ஊர் செல்ல வசதியாக வெளியூர் செல்லும் பேருந்துகளையும் இலவசமாக இயக்க வேண்டும்.
வெள்ளத் துயர் தணிப்புப் பணிகளுக்கும், மக்களும் இடையூறாக இருக்கும் மதுக்கடைகளை குறைந்தது அடுத்த இரு வாரங்களுக்காவது மூடுமாறு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 
இன்றியமையா உணவுப் பொருள்களை இலவசமாக வழங்குக! – கு.இராமக்கிருட்டிணன்

arici_riceku.ramakrittinan_g-ramakrishnan

இன்றியமையா உணவுப் பொருள்களை

இலவசமாக வழங்குக!

– கு.இராமக்கிருட்டிணன் 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் இன்றியமையா உணவுப் பொருள்களை நியாய விலைக் கடைகளில் இலவசமாக வழங்க வேண்டும் என்று மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயலர் இராமக்கிருட்டிணன் வலியுறுத்தியுள்ளார்.
  இது தொடர்பாகச் சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
  வெள்ளத்தின் காரணமாக ஏராளமானோர் தங்கள் உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி இன்றியமையாப் பொருள்களின் விலை மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
  இந்த நிலையில், இலவசப் பேருந்து பயண வசதி செய்துள்ளதுபோல இன்றியமையாப் பொருள்களை நியாயவிலைக் கடைகள் மூலம் இலவசமாக அளிக்க அரசு முன் வரவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 
அதிமுகவினர் இடையூறு செய்தால் புகார் அளிக்கலாம் – அஇஅதிமுக

அதிமுகவினர் இடையூறு செய்தால் புகார் அளிக்கலாம் – அஇஅதிமுக

the hindu muthiraifloodrelief
  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துயரீட்டுப் பொருட்களை வழங்கி வரும் தன்னார்வலர்களுக்கு அதிமுகவைச் சேர்ந்தவர் யாரேனும் இடையூறு செய்தால் உடனடியாகக்கட்சி மேலிடத்துக்குப் புகார் அளிக்கலாம் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
  இது தொடர்பாகத் தமிழ் இந்து நாளிதழுக்கு அதிமுக நிருவாகி ஒருவர் அளித்த பேட்டியில், “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துயரீட்டுப் பொருட்களை வழங்கி வரும் தன்னார்வலர்களுக்கு அதிமுகவைச் சேர்ந்தவர் யாரேனும் இடையூறு செய்தால் உடனடியாகக் கட்சி மேலிடத்துக்குப் புகார் அளிக்கலாம். 044-28130787, 044-28132266, 044-28133510 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
  இதுதவிர info@aiadmk.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் புகார் தெரிவிக்கலாம். அல்லது @aiadmkofficial என்ற சுட்டுரை (துவிட்டர்) பக்கத்தின் வாயிலாகவும் புகார்களைத் தெரிவிக்கலாம்” என்றார்.
  தன்னார்வலர்கள் கொண்டு வரும் துயரீட்டுப் பொருட்களை அதிமுகவினரும், பாமகவினரும் பெற்றுக் கொண்டு அதை அவர்கள் அளிக்கும் துயரீட்டுப் பொருட்களாக வழங்குவதாகச் சமூக வலைத்தளங்களில் பரவலாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
  இதனையடுத்துத் துயரீட்டுப் பொருட்களை வழங்கி வரும் தன்னார்வலர்களுக்கு அதிமுகவைச் சேர்ந்தவர் யாரேனும் இடையூறு செய்தால் உடனடியாக கட்சி மேலிடத்துக்கு புகார் அளிக்கலாம் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
  மேலும், “அதிமுகவினர் இடையூறு செய்யும் கேட்பொலி, காணொளி பதிவு இருந்தால் அவற்றையும் கட்சி மேலிடத்துக்கு அனுப்பலாம்; தொடர்பானவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என அதிமுக நிருவாகிகள் தெரிவித்துள்ளனர்.
  கடலூரில் துயரீட்டுப் பொருட்களை வழங்கச் சென்ற தன்னார்வலர் ஒருவரிடம் தமிழ் இந்து சார்பில் பேசினோம், அவர் கூறும்போது, “உணவு, அடிப்படை மருந்துப் பொருட்களை நாங்கள் எடுத்துச் சென்றோம். எங்கள் வாகனத்தை அதிமுகவினர் வழிமறித்தனர். பொருட்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு கூறினார்கள். ஆனால், நாங்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் விட்டுச்சென்றனர். ஆனால், எங்களுடன் வந்த வேறு சில ஊர்திகளில் இருந்த துயரீட்டுப் பொருட்களில் வலுக்கட்டாயமாக முதல்வர் செயலலிதா படத்தை ஒட்டினர்” என்றார்.