திங்கள், 29 மார்ச், 2010

ஈழத்தில் நிலத்தையும்,​​ தமிழகத்தில் மொழியையும் இழந்து கொண்டிருக்கிறோம்: கவிஞர் காசி ஆனந்தன்



சென்னையில் சனிக்கிழமை எழுகதிர்}தமிழ் நிலம் இணைந்து நடத்திய விழாவில் "தமிழர் இந்தியர் இல்லையா?' என்ற நூலை மாலைமுரசு நிர்வாக ஆசிரியர் பா.ராமச்சந்திர ஆதித்தனார் வெளியிட தொழிலதிபர் சந்திரேசனார் பெறுகிறார்.​ உடன் ​(இடமிருந்து)​ லண்டனில் திருக்குறள் தமிழ்ப்பள்ளியை நடத்தும் தேவதாசு,​​ நூலாசிரியர் அறுகோபாலன்,​​ தில்லி தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் இந்திரா மணியன்,​​ பாவலர் மு.ராமச்சந்திரன்.
சென்னை,​​ ​ மார்ச் ​ 28:​ ​ ஈழத்தில் நிலத்தையும்,​​ தமிழகத்தில் மொழியையும் இழந்து கொண்டிருக்கிறோம் என்று கவிஞர் காசி ஆனந்தன் கூறினார்.சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற "தமிழர் இந்தியர் இல்லையா?',​ "தமிழர் மிகுதியாக இழந்தவற்றை மீட்க என்ன வழி?',​ "வாழ்வியற் சொல் அகரமுதலி' ஆகிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் அவர் பேசியது:5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா முழுவதும் வாழ்ந்த தமிழர்கள் இன்று தமிழகத்தில் மட்டுமே வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.உலகில் முதன்முதலில் தோன்றிய மொழி தமிழ்.​ இது அறிஞர்கள் பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.​ தமிழ்நாட்டிலும் தமிழ் ஈழத்திலும் வாழ்பவர்கள் மண்ணின் மைந்தர்கள்.​ மொரிஷியஸ்,​​ பிஜி நாடுகளுக்குச் சென்றவர்கள் பிழைக்கச் சென்றவர்கள்.இன்றைக்கு தமிழ் ஈழமும்,​​ தமிழ் இனமும் அழியும் நிலையில் உள்ளது.​ இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று ராஜபட்ச கூறிவிட்டார்.​ இலங்கை நீதிமன்றமும் அதை உறுதி செய்து விட்டது.26,500 சதுர கிலோமீட்டர் பரப்பில் இருந்த தமிழ் ஈழம் படிப்படியாக குறைந்து இன்றைக்கு 11,500 சதுர கிலோ மீட்டர் என்ற அளவுக்கு வந்துவிட்டது.தமிழ் ஈழ விடுதலைப் போர் தோற்றுவிட்டதாக யாரும் கருதி விடக்கூடாது.​ போரில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.​ மீண்டும் 2 ஆண்டில் தமிழ் ஈழம் நிமிர்ந்து நிற்க்கும்.இப்போது தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றம் நடந்துக் கொண்டிருக்கிறது.​ ஒவ்வொரு அரச மரத்தின் கீழும் புத்தர் கோயிலை கட்டத்தொடங்கியுள்ளனர்.​ தமிழர் நகரங்களில் சிங்கள கடைகளும்,​​ ராணுவ குடியேற்றங்களையும் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.​ தாய் தமிழகம் இந்த தருணத்தில் தன் கடமையை செய்ய வேண்டும்.​ இந்திய அரசை இப்போதும் நாங்கள் நம்புகிறோம்.​ தமிழ் ஈழத்தை அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்ற வேண்டும்.தமிழ் ஈழம் நிலத்தை இழந்து கொண்டிருக்கிறது.​ தமிழ்நாடு மொழியை இழந்து கொண்டிருக்கிறது.​ இவற்றை உடனடியாக தடுத்து நிறுத்தும் கடமை தமிழர் அனைவருக்கும் உண்டு என்றார் கவிஞர் காசி ஆனந்தன்.
கருத்துக்கள்

உண்மைதான்.இந்நிலை மாறி இன்னிலை தோன்ற திமுக எதிர்க்கட்சியாக வேண்டும். காங்கிரசுக் கட்சி என்பது இருந்த இடம் தெரியாமல் மறைய வேண்டும். தமிழுணர்வாளர்கள் இந்தியக் கண்டத்தின் பிற பகுதிகளிலும் தஙக்ள் பரப்புரைகளை மேற் கொள்ள வேண்டும். உரிமையை விற்கும் பரத்தமை அரசியல் மாற வேண்டும். தமிழர்கள் தமிழர்களாக வாழ வேண்டும். தமிழுக்குத் தலைமையும் தமிழர்க்கு முதன்மையும தராத கட்சிகளைத் தூக்கி எறிய வேண்டும். கட்சித் தலைமைக்குக் கொத்தடிமைகளாக விளங்கும் நிலை உடைக்கப்பட வேண்டும். சிறுபான்மைச் சாதிகளிடம் அடிமையாக உள்ள தமிழ்நாடு மீள வேண்டும். இவை இயலும் எனில் எல்லாம் இயலும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/29/2010 2:45:00 AM

TN CM is busy in spending his SPECTRUM Earning of Rs 50,000 CRORES in PENNAGARAM. He has time only to write scripts and attend film functions. SONIA used SPECTRUM to blackmail KARUNA and ensured EELAM TAMILS are KILLED IN EELAM. NOT ONLY TRANSNATIONAL EELAM Govt, TRANSNATIONAL TAMIL GOVT is the only solution

By BOODHI DHARMA
3/29/2010 1:32:00 AM

இந்தியத் தமிழர்களின் மனதில் தன்னம்பிக்கை வளரவேண்டும்.தன்னால் எந்தத் தடையையயும் உடைக்கமுடியும் என்ற எஃகு மனம் வேண்டும்.எனது வாழ்வு என் கையில் என்ற உறுதி வேண்டும்.அனால் இவர்கள் உஞ்சவிருத்திகளின் வழிகாட்டுதலுக்கு ஆளாகி, மத நம்பிக்கையால் தன்னம்பிக்கை,தன்மானம் (மதம் என்பது சார்புத்தன்மையும்,கையாலாகாத் தன்மையும் ஏற்படுத்தும்)இழந்து, சாதிய உனர்வுகளுக்கு ஆளாகி இருக்கும் இந்த நிலையில் இது சாத்தியக்கூறுதானா.கடவுள் நம்பிக்கை என்பதே ஒரு விதப் பயத்தின் விளைவுதான்.பூஜை புனஸ்காரங்களால் ஒன்றும் ஆகப் போவதில்லை என்பதை எப்படித் தமிழனுக்கு உணர வைப்பது.தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று அடி வயிற்றினில் இருந்து உணர்வுப் பூர்வமாக முழங்குவான், அடுத்த நிமிடம் பார்ப்பனர் மூலம் பரிகாரம் தேடுவான் மறத்தமிழன்.கலர் துண்டுகளுக்கு, அதிலும் மஞ்சள் துண்ட்டுக்கு தமிழகத்தில் இராசி அதிகம்.தன் அடிமைகளை (நடிகர்,நடிகயரை)தன் எஜமானர்கள் ஆக்குவதில் இந்தியத் தமிழர்களை தோற்கடிக்க யாராலும் முடியாது. பஜனை செய்வோம் கண நாமம், அடிமையாய் இருந்து கொண்டு பஜனை செய்வோம் கண நாமம்.

By அன்பன்
3/29/2010 1:29:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
யாருக்கு இரண்டாவது இடம்?



சென்னை, ​​ மார்ச் 28:​ பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதி வாக்குப் பதிவு முடிந்துவிட்ட நிலையில்,​​ இரண்டாவது இடத்தைப் பிடிக்கப் போவது யார் என்கிற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.முந்தைய இடைத்தேர்தல்களைப் புறக்கணித்து வந்த பா.ம.க.,​​ பென்னாகரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கும் சூழ்நிலை உருவான உடனேயே தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டது.​ அக் கட்சியின் தலைவர் ஜி.கே.​ மணி இதே தொகுதியில் பா.ம.க.​ சார்பில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பதால் தங்களுக்கு அங்கு செல்வாக்கு உள்ளது என்ற நம்பிக்கை பா.ம.க.​ தலைமைக்கு இருக்கிறது.மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பா.ம.க.​ 7 தொகுதிகளில் போட்டியிட்டு எல்லா இடங்களிலும் தோல்வி அடைந்தது.​ அதன் பிறகு அதிமுக கூட்டணியில் இருந்தும் பாமக வெளியேறிவிட்டது.2011-ல் சட்டப் பேரவைக்குப் பொதுத் தேர்தல் வரவுள்ள சூழ்நிலையில் ஏதாவது ஒரு கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்ற கட்டாயம் பா.ம.க.வுக்கு ஏற்பட்டுள்ளது.​ தொகுதிகளில் தங்களுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபித்தால்தான்,​​ கூட்டணியில் கூடுதல் தொகுதிகளைக் கேட்பதற்கு வசதியாக இருக்கும் என்று அக் கட்சி கருதுகிறது.​ அந்த வகையில் தங்கள் செல்வாக்கை காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பா.ம.க.​ பென்னாகரத்தில் களம் இறங்கியுள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.ஜி.கே.​ மணியின் மகன் தமிழ்க்குமரனை வேட்பாளராக அறிவித்தது முதல்,​​ பா.ம.க.வினர் தொகுதி முழுக்க தீவிரமாக தேர்தல் பணியைத் தொடங்கினர்.​ எல்லா வீடுகளுக்கும் பா.ம.க.வினர் சென்று ஆதரவு திரட்டினர்.திருமங்கலத்தில் திமுக வெற்றி பெற்ற போது "திருமங்கலம் பார்முலா' என்று பேசப்பட்டதை சுட்டிக் காட்டிய பா.ம.க.​ நிறுவனர் ராமதாஸ்,​​ தாங்கள் "பென்னாகரம் பார்முலா" வைத்திருப்பதாகவும் அதன் மூலம் வெற்றி கிடைக்கும் என்றும் கூறினார்.திமுக தரப்பில் பி.என்.பி.​ இன்பசேகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் ​ அமைச்சர் எ.வ.​ வேலு தலைமையில் பெரிய குழுவினர் தேர்தல் பணிகளைக் கவனித்தனர்.​ எந்தக் காரணத்தைக் கொண்டும் வெற்றியை நழுவ விட்டுவிடக் கூடாது என்பதில் திமுகவினர் தீவிரம் காட்டினர்.ஒரு கட்டத்தில்,​​ "நாங்கள் வெற்றி பெற முடியாமல் போனாலும் அதிமுகதான் வெற்றி பெற வேண்டுமே தவிர பா.ம.க.வுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துவிடக் கூடாது என்ற திட்டத்தில் பணியாற்றுகிறோம்' என்றுகூட மூத்த அமைச்சர் ஒருவர் பொதுக் கூட்டத்திலேயே பேசினார்.கணிசமான வாக்குகளை பா.ம.க.​ பெற்றுவிட்டால் அடுத்த தேர்தலுக்கு கூட்டணி பேரத்தில் அக் கட்சியின் கை ஓங்கிவிடும் என்பது திமுக மட்டுமன்றி,​​ அதிமுகவின் கணிப்பாகவும் உள்ளது என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.எனவே இரண்டாவது இடம் பா.ம.க.வுக்கு கிடைக்கக் கூடாது என்பதற்காகவே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அத் தொகுதியில் 2 நாள் பிரசாரம் மேற்கொண்டார் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.ஏற்கெனவே அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்காக விழும் வாக்குகள்,​​ ஜெயலலிதா வருகையால் ஏற்படும் மாற்றம் என சேர்ந்தால் அதிமுக வேட்பாளர் டி.ஆர்.​ அன்பழகன் வெற்றி வாய்ப்பை இழந்தாலும்கூட நிச்சயமாக இரண்டாவது இடத்தைப் பிடித்துவிடுவார் என்று அங்கு தேர்தல் பணியாற்றிய அதிமுக தலைவர்கள் நம்புகிறார்கள்.பல இடங்களில் ஜெயலலிதா பிரசாரம் செய்துவிட்டு நகர்ந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் பேனர்கள்,​​ தோரணங்கள் போன்றவை அகற்றப்பட்டு,​​ நிர்வாகிகள் தங்களது ஊர்களுக்குக் கிளம்பிச் சென்ற சம்பவங்கள் ஏராளம்.ஜெயலலிதாவின் பயணம் முடிவானதில் இருந்தே தொகுதியில் பா.ம.க.வின் பிரசாரத்தில் அதிகம் தொய்வு ஏற்பட்டுவிட்டது.​ அதனால் அதிமுகவுக்கும் -​ பாமகவுக்கும் இடையில் ரகசிய கூட்டு என்றுகூட பேச்சு எழுந்தது.​ ஆனால் இதை ராமதாஸ் மறுத்துவிட்டார்.தொகுதியில் வாக்காளர்களைக் கவர்வதற்கு செலவு செய்வதைப் பொருத்தவரையில் எல்லா முன்னணி வேட்பாளர்களுமே ஓரளவுக்கு செலவு செய்துள்ளனர்.​ ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டினாலும் வாக்காளர்களுக்கு மட்டும் வரிசையாக "வரவுகள்' இருந்து கொண்டேதான் இருந்தன.வெற்றியே இலக்கு என்று பா.ம.க.​ கூறினாலும்,​​ 10,000 முதல் 15,000 வாக்குகள் வரை பெற்றால் தங்கள் எண்ணம் ஈடேறிவிட்டதாக அர்த்தம் என்பது பா.ம.க.வின் எதிர்பார்ப்பாக இருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.​ எல்லா தொகுதியிலும் திமுக,​​ அதிமுக அணிகளுக்கு சம பலம் இருந்தாலும் வெற்றியை நிர்ணயிக்கப் போவது இந்த 10,000 முதல் 15,000 வாக்குகள்தான் என்பதால்,​​ தங்களின் வாக்குகள்தான் முடிவை நிர்ணயிப்பதாக இருக்கும் என்று பா.ம.க.​ தலைமை கருதுவதாகத் தெரிகிறது.அந்த வகையில் தங்களுக்கென ஒரு வாக்கு வங்கி இருப்பதை நிரூபிக்கும் முயற்சியில் பா.ம.க.​ ஈடுபட்டுள்ளது.​ அது நடந்துவிடக் கூடாது என்பதில் திமுக,​​ அதிமுக தலைவர்கள் தீவிரம் காட்டினர் என்பது அரசியல் வட்டாரத்தில் கூறப்படும் கருத்து.திமுக,​​ அதிமுக,​​ பாமக ஆகிய மூன்று கட்சிகளுக்கு உள்ளது போலவே தேமுதிக-வுக்கும் இந்த இடைத்தேர்தல் ஒரு அக்னி பரீட்சையாக இருக்கும்.​ கடந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் பெற்ற வாக்கு வங்கியைத் தேமுதிக தக்கவைத்துக் கொள்ளுமா என்பதில்தான் அந்தக் கட்சியின் எதிர்காலமே அடங்கி இருக்கிறது.​ தேமுதிக.வின் வாக்குகள் குறைந்தால்,​​ அதுவே அந்தக் கட்சியின் செல்வாக்குச் சரிவுக்கான அடையாளமாகக் கருதப்படும்.திமுக தரப்பில் செய்துள்ள தீவிர பிரசாரம்,​​ செலவு ஆகியவற்றைப் பார்த்தால்,​​ வெற்றி யாருக்கு என்பதில் யாருக்கும் மாற்று கருத்துக்கு இடமிருக்காது.​ ஆளும்கட்சிக்குஅதிர்ச்சியை தரும் வகையில் வேறு யாரும் வெற்றி பெறுவார்களா என்பது சந்தேகமே.​ இரண்டாவது இடத்தை யார் பிடிப்பது?​ இதுவே பென்னாகரம் இடைத்தேர்தல் முடிவில் எதிர்பார்க்கப்படும் விஷயமாக இருக்கிறது.திமுக,​​ அதிமுகவைவிட பென்னாகரம் இடைத்தேர்தல் பாமக மற்றும் தேமுதிகவின் எதிர்காலத்தைத்தான் அதிகமாக பாதிக்கும் என்று தோன்றுகிறது.
கருத்துக்கள்

பாமக எத்தனாவது இடத்தில் இருந்தாலும் அதற்குக் கிடைக்கும் வாக்குகள் எதன் எதிர்காலப் பேரததிற்கு உதவும்? ஆனால்,இன்னும் இரு நாள் பொறுக்காமல் மிகுதியான ஊழலில் மக்களைக் கவர்ந்த கட்சிதான் முதலிடம் பெறும் என எவ்வாறு அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறீர்கள்? அதிகவாக்குப் பதிவு ஒரு வேளை அதிர்ச்சி முடிவையும் தரலாம் அல்லவா? அவ்வாறு தந்தால் ஓரளவேனும் ஊழல்முறையில் வாக்குகள் பெறுவதற்கு முற்றுப்புள்ளி வைத்ததாக இருக்கும். ஆளும் கட்சியின் இதழ் போன்று இத்தகைய செய்தியைத் தினமணி வெளியிட்டுத் தன் பற்றைக் காட்டத் தேவையில்லையே! வெல்வது யாராயினும் தோற்பது மக்கள்நாயகமே! என்றாலும் மிகுதியான ஊழலிலேயே தேர்தலைச் சந்திக்கும் கட்சி தோற்றால் அதனைச் சாதிப்பற்றின் வெற்றி எனச் சொலலாமல் மாறுபட்ட சிந்தனை அரும்பியள்ளதாகக் கருதி மகிழலாம் அல்லவா?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/29/2010 2:33:00 AM

Why to count the votes? I do not see a need. Hopefully the voters are counting the currency!

By Suresh
3/29/2010 2:10:00 AM

Apology to Dinamani. Sorry. Now I see my comment.

By Suresh
3/29/2010 2:05:00 AM

Where did my comment go? did Dinamani remove that? All I said was "DMK is also a PVT LTD company, just like PMK" I had very high opinion about Dinamani. Guess I am wrong!

By Suresh
3/29/2010 2:03:00 AM

When are they counting the votes of Pennagaram ?

By Vignesh
3/29/2010 1:49:00 AM

"சொக்கனுக்கு(தமிழனுக்கு) சோத்து சட்டி"

By அன்பன்
3/29/2010 1:45:00 AM

I agree 100% PMK is a PVT LTD company/party. If we apply the similar parameters to DMK, that is also a PVT LTD company. That party is looking after the welfare of MK's family (not the people)

By Suresh
3/29/2010 1:44:00 AM

THIS IS THE BEGINNING OF END OF DR.RAMADOSS & HIS PRIVATE LTD COMPANY - PMK.

By BOODHI DHARMA
3/29/2010 1:24:00 AM

பொன்னாகரம் இடைத்தேர்தல் முடிவுகள் நீங்கள் சொன்ன படி அந்த வருசையில்தான் கட்சிகள் ஒட்டுக்கள்வாங்கும் அதிமுக வுக்கு ஆதரவு என்ற கம் யூ னிஸ்டுக்களின் ஓட்டுக்கள் விழுந்தால் நிச்சயம் அ தீ முக இரண்டாம் இடம் வந்துவிடும் .ஒரு கட்டத்தில் தி மு க வின் வெற்றி உறுதி செய்யப்படாத நிலையில் தான் முதல்வர் அங்கு வந்தார் என்று கூருகின்றர்கள் .எனினும் டி எம் கே வென்றுவிடும் .ஆனால் அ தி மு க நிச்சயம் இரண்டாம் இடம் வந்து விடும் ராமாதாஸ் கட்சி பி எம் கே மூன்றாம் இடம்வரும் ஒட்டு வித்தியாசத்தில் அ தி மு க வை நெருக்கி பிடித்து விடும் பிரச்சாரம் அப்படி இந்த தொகுதியில் பி எம் கே வுக்கு கவுரவுமான ஓட்டுக்கள் கிடைத்துவிடும் ஆனால் .தேமு தேக வோ எப்படியாவது ராமதாசைவிட ஒரு ஒட்டு முந்தினால் போதும் என்று நினைக்கிறது .ஆனால் நிலைமைமிஸ்டர் விஜயகாந்த் தே மு தே கா இப்போதைக்கு பி எம் கே வை முந்த முடியாது என்பது உண்மை .ஆக சூரியன் உதி த்து ,இரட்டை இலை விறித்து,மாங்கனி காய்த்து முரசொலிக்கசெயும்ஒட்டு எண்ணிக்கை .

By தேசநேசன்
3/29/2010 12:39:00 AM

ஒன்றுபட்டு நிற்கவேண்டிய தமிழினம் ஒருவரை ஒருவர் வசைபாடி சேறுபூசி உண்மைக்கு புறம்பாக குற்றம் சாட்டி தம்மைதாமே இழிவுபடுத்தி வருகிறது. போதாக்குறைக்கு கைதாகி சிறையில் இருப்பவனையும், களத்தில் போராடி மடிந்தவனையும் வசைபாடி காலத்தைக்களிக்கிறது.

By Mahintha
3/29/2010 12:13:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

ஞாயிறு, 28 மார்ச், 2010

Latest indian and world political news information

பார்லிமென்ட்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் ஆகிய இரண்டிலும் கேள்வி கேட்பதற்காக அதிகமாக நோட்டீஸ் அளித்த தமிழக எம்.பி.,க்கள் பட்டியலில் நெல்லை எம்.பி., ராமசுப்புவும், ஒரு கேள்விகூட கேட்காத தமிழக எம்.பி.,க்களின் பட்டியலில் இளங்கோவன், விஜயன், ரித்தீஷ், ஆதிசங்கர், திருவண்ணாமலை வேணுகோபால், மாணிக் தாக்கூர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


பார்லிமென்ட்டில் ஒவ்வொரு நாளும் காலை ஆரம்பித்தவுடன் கேள்வி பதில் நேரம் நடைபெறுவதுண்டு. அமைச்சர்களிடம் இருந்து நேரடியாக பதிலைப் பெறும் வாய்ப்பு இதில் கிடைப்பதால் எம்.பி.,க்கள் உட்பட அனைவருமே ஆர்வம் காட்டுவதுண்டு. ஒவ்வொரு பிரச்னை குறித்தும் சந்தேகங்கள் மற்றும் லேட்டஸ்ட் நிலவரங்கள் என அனைத் தையும் அரசு தரப்பு அவையில் விளக்க வேண்டும் என்பதால் கேள்வி பதில் நேரம் மட்டும் மற்ற நேரங்களைக் காட்டிலும் அதிகமாக கவனத்தை ஈர்ப்பதுண்டு.ஆனால், ஒவ்வொரு எம்.பி.,யும் கேள்வி கேட்க வேண்டுமானால் அவர்களது கேள்விகளை கேட்க முன்கூட்டியே நோட்டீஸ் கொடுத் தாக வேண்டும். இவைகள் அனைத்தும் குலுக் கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ் வொரு நாளும் 15 கேள்விகள் மட்டுமே அவையில் பதிலளிக்க எடுத்துக் கொள்ளப்படும்.குலுக்கல் முறை என்பதால் நிறைய கேள்விகளுக்கு நோட்டீஸ் கொடுத்தால்தான் ஓரிரு கேள்விகளாவது தேர்வாகும். ஆனால், தமிழக எம்.பி.,க்கள் பலரும் கேள்விகளை கேட்டு அமைச்சர்களிடம் பதில் பெறுவதில் ஓரிரு எம்.பி.,க்களைத் தவிர பெரும்பாலானோர் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை.அதுமட்டுமல்லாது பிரதான கேள்வியை கேட்க முடியாவிட்டாலும்கூட அமைச்சர் பதில் அளித்துக் கொண்டிருக்கும்போதே துணைக்கேள்விகள் கேட்லாம். அதையும் கூட பயன்படுத்தி அமைச்சர்களை துணைக்கேள்வி கேட்டு தமிழக எம்.பி.,க்கள் கிராஸ் செய்து வளைப்பதில்லை.


நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடர் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகிய இரண்டிலும் கேள்வி கேட்டு அதிக அளவில் நோட்டீஸ் அளித்தவர்களில் நெல்லை எம்.பி., ராமசுப்பு முதலிடம் பெற்றுள்ளார். மொத்தம் 224 கேள்விகளுக்கு அவர் நோட்டீஸ் அளித்துள்ளார்.அடுத்து திருப்பூர் எம்.பி.,சிவசாமி 97 கேள்விகளுக்கு நோட்டீஸ் அளித்துள்ளார். சேலம் செம்மலை 92 கேள்விகளுக்கு நோட்டீஸ் அளித்துள்ளார் ஜெயதுரை 88, சித்தன் 84, அழகிரி 66, நடராஜன் 54, குமார் 50, கணேசமூர்த்தி 49, டி.ஆர்.பாலு 47, லிங்கம் 46 என நோட்டீஸ் அளித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.ஒரு கேள்விகூட கேட்கவேண்டுமென நினைக்காமல் ஒரு நோட்டீஸ் கூட அளிக்காமல் உள்ளோர் பட்டியலில் ஆறு தமிழக எம்.பி.,க்கள் உள்னர். அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் வடசென்னை எம்.பி., இளங்கோவன்தான். காரணம் இவர் அவை நடைபெற்ற 36 நாட்களும் தவறாமல் அவைக்கு வந்து ஆஜரானவர்.ஆனால் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை.


இது தவிர நாகப்பட்டினம் விஜயன், ராமநாதபுரம் ரித்தீஷ், கள்ளக்குறிச்சி ஆதிசங்கர், திருவண்ணாமலை வேணுகோபால், விருதுநகர் மாணிக் தாக்கூர் ஆகியோரும் ஒரு கேள்விகூட கேட்கவில்லை.கேள்வி கேட்பதில் பெரிய ஆர்வம் இல்லாத வகையில் மிகவும் சொற்ப எண்ணிக்கையில் நோட்டீஸ் அளித்துள்ள தமிழக எம்.பி.,க்களும் சிலர் உள்ளனர். அந்த வகையில் மயிலாடுதுறை மணியன் 2 கேள்விகளுக்கான நோட்டீஸ்கள் மட்டுமே இதுவரை அளித்துள்ளார். திருவள்ளூர் வேணுகோபாலும் 2 கேள்விகளுக்கு மட்டுமே நோட்டீஸ் அளித்துள்ளார். வந்தவாசி கிருஷ்ணசாமியோ இதுவரை மூன்றே மூன்று நோட்டீஸ்கள்தான் அளித்துள்ளார். சிதம்பரம் திருமாவளவனும் மூன்று கேள்விகள் கேட்டுமட்டும் தான் நோட்டீஸ்கள் அளித்துள்ளார். வேலூர் அப்துல்காதர் 18 கேள்விகள் கேட்பதற்கு நோட்டீஸ் அளித்துள்ளார்.


இவை எல்லாமே கேள்விகளை கேட்பதற்கு அளித்த நோட்டீஸ்களின் எண்ணிக்கை பற்றிய விவரங்கள் மட்டுமே. இவற்றில் எத்தனை கேள்விகள் குலுக்கல் முறையில் தேர்வாகி அவைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அமைச்சரால் பதிலளிக்கப்பட்டன என்பதும், எழுத்து மூலமாக பதில் பெறப்பட்டன என்பதும் வேறு விஷயம். மேலும் பிரதான கேள்விகளை கேட்பதற்காக அளிக்கப்பட்ட நோட்டீஸ்கள்தான் இவை. ஆனாலும் தமிழக எம்.பி.,க்களில் கேள்வி நேரத்தின் போது துணைக்கேள்விகளை எழுப்பி கேள்வி கேட்டு பதில் பெற்றனர் என்பது பற்றிய விபரம் எல்லாம் வேறு என்பது குறிப்பிடத்தக்கது.யார் யார் எத்தனை முறை பேசினார்கள்


பார்லிமெண்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் எம்.பி.,க்கள் அவையின் நடவடிக்கைகளில் எந்த அளவு ஆர்வம் காட்டுகின்றனர் என்பதை அவைக்கு வந்து இவர்கள் கையொப்பமிடும் வருகை பதிவேட்டிலிருந்து தெரிந்து கொள்ள முடியும்.அவைக்கு வந்து அமர்ந்து அவை நடவடிக்கைகளை கவனிப்பது ஒருகட்டம் என்றால், அவை நடவடிக்கைகளில் பங்கேற்பது அடுத்த கட்டம் . ஏற்கனவே குளிர்கால கூட்டத்தொடர் மொத்தம் 21 நாட்கள் நடைபெற்றன. தவிர பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்பகுதியாக 15 நாட்கள் நடந்து முடிந்துள்ளன. ஆக மொத்தம் 36 நாட்கள் பார்லிமென்ட்டில் அவை நடந்துள்ள நிலையில், நிறைய விவாதங்கள் நடைபெற்று முடிந்துள்ளன.இந்த வாய்ப்புகளை தமிழக எம்.பி.,க் கள் எவ்வாறு பயன்படுத்தியுள்ளனர் என்பது குறித்து ஆராய்ந்தபோது, இருப்பதிலேயே அதிகபட்சமாக 20 விவாதங்களில் நெல்லை எம்.பி., ராமசுப்பு பங்கேற்றுள்ளார். அதற்கு அடுத்து சித்தன் 18 முறையும், லிங்கம் 16 முறையும் பேசியுள்ளனர். எட்டு நாட்கள் மட்டுமே அவைக்கு வந்துள்ள அ.தி.மு.க., பார்லிமெண்ட் கட்சி தலைவர் தம்பித்துரை 14 முறை விவாதங்களில் பங்கேற்று பேசியுள்ளார். செம்மலை 13 முறையும், டி.ஆர்.பாலு, இளங்கோவன், சிவசாமி ஆகியோர் 11 தடவையும், கணேசமூர்த்தி 9 முறையும், திருமாவளவன்,குமார்,திருவண்ணாமலை வேணுகோபால் ஆகியோர் 8 முறையும் பங்கேற்றுள்ளனர்.


மிகவும் குறைவான எண்ணிக்கையில் விவாதங்களில் பங்கேற்றவர்களில் ஆனந்தன் மற்றும் மாணிக் தாக்கூர் ஆகியோர் உள்ளனர். இருவரும் ஒரே ஒரு முறைதான் பேசியுள்ளனர்.ஜெயதுரை, சிட்லபாக்கம் ராஜேந்திரன் 2 முறையும், விஸ்வநாதன், ஹெலன்டேவிட்சன், சுகவனம், சுகுமார்,ஆதிசங்கர் ஆகியோர் மூன்றே மூன்றுமுறையும் பங்கேற்றுப் பேசியுள்ளனர். நடராஜன், அழகிரி, ரித்திஷ், திருவள்ளூர் வேணுகோபால், அப்துல் ரகுமான் ஆகியோர் நான்குமுறையும், தாமரைச் செல்வன், மணியன், விஜயன் ஏழு முறையும் பங்கேற்றுப் பேசியுள்ளனர்.


சாதிக்கின்றனர் மற்ற மாநில எம்.பி.,க்கள்:அவை நடவடிக்கைகளில் பங்கேற்கும் இந்த வாய்ப்புகளை பிற மாநில எம்.பி.,க்கள் முடிந்த வரை நிறைய பயன்படுத்திக் கொள்கின்றனர். மேலும் அவரவர் மாநில பிரச்னைகளை அவையில் கிளப்பி வருகின்றனர். குறிப்பாக பீகார் மற்றும் உ.பி., மாநில லாபி என்பது மிகவும் வலுவாக உள்ளது. இம்மாநிலங்களில் ஏதாவது சிறு சம்பவம் நடைபெற்றால் கூட அடுத்த நாள் அது பார்லிமென்ட்டில் எதிரொலிக்கும். இம்மாநில எம்.பி.,க்கள் எழுந்து அந்த பிரச்னையை கிளப்பி அவையையே கிடுகிடுக்க வைத்துவிடுகின்றனர். ஆனால், தமிழகம் தரப்பில் தலைபோகிற எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும், அது குறித்து பெரிய அளவில் அவையில் எழும்புவதில்லை. அதுமட்டுமல்லாது தமிழகத்திலிருந்து விவாதங்களில் பங்கேற்று சிறப்புடன் பேசி செயலாற்றியவர்களில் நாஞ்சில் மனோகரன், இரா.செழியன், வைகோ, சுவாமிநாதன் என ஒரு சிலர் இருந்தனர். ஆனால் பார்லிமென்ட் நடவடிக்கைகளில் கலக்கிய இவர்கள், மாநிலத்தில் செல்வாக்கு பெற முடியவில்லை. சிறந்த பார்லிமென்ட்டேரியன்களுக்கு மக்கள் ஆதரவே ஊக்கம்.


தமிழகத்தில் அது தலைகீழ். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இரண்டாம் முறையாக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் இருந்து தேர்வாகி வந்திருப்பவர்களில் நிறையபேர் புதுமுகங்கள். இவர்களுக்கு அவை நடவடிக்கைகள் புதிது. மொழிப்பிரச்னை உள்ளிட்ட காரணங்களும் சற்று சிரமத்தை அளிக்கும். பேசுவதற்கு கட்சி கொறடாவின் அனுமதியும் வேண்டும். இத்தனை பிரச்னைகள் இவர்களுக்கு உள்ளன என்பதையும் கவனிக்க வேண்டும். இவற்றையெல்லாம் சமாளித்து, மக்களின் பிரச்னைகளை அவையில் எழுப்ப வேண்டுமென்ற வேட்கை வந்துவிட்டாலே, புதுமுகங்களும் எதிர்காலத்தில் அவையில் ஜொலிக்கத் துவங்குவர் என்பதில் சந்தேகம் இல்லை. - நமது டில்லி நிருபர் -



எல்லா நாட்களும் நாடாளுமன்றத்தில் பஙகேற்றவராகவும் சிறப்பான உரையாற்றியவர்களாகவும் உள்ள சிலருள் திரு டி.கே எசு இளங்கோவனும் ஒருவர்.மேலும். ஈழத் தமிழர் படுகொலை குறித்து அவர் பேசிய பேச்சு மாற்றுக் கட்சியினராலும் அயலகத்தவர்களாலும் பெரிதும பாராட்டப்பட்ட தை மறக்கக் கூடாது. எனவே, கேள்வி கேட்காததைக் குற்றமாகக் கருத வேண்டா. செயல்படாதிருப்பவர்களைப் பற்றி மட்டும் குறிப்பிட்டுச் செயல்படச் செய்யு்ங்கள். எனினும் இது போன்ற புள்ளி விவரங்களை வெளியிட்டு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் தின மலருக்குப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

விருத்தாசலம் அருகே 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருமால் சிலை கண்டெடுப்பு



பண்ருட்டி, மார்ச் 27: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வடக்கே 11 கி.மீ. தொலைவிலுள்ள முகாசாபரூரில் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால திருமால் சிலையும், கச்சிராயர்கள் கால கல்வெட்டுகள் இரண்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.÷இப்பகுதியை சேர்ந்த வீரசேகர பொன்னம்பல வேலுசாமி கச்சிராயர், ரமேஷ் கச்சிராயர் முன்னிலையில் பாழடைந்த பெருமாள் கோயிலில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது முட்புதர்களுக்குள் மறைந்து கிடந்த 15-க்கும் மேற்பட்ட கருங்கற் சிற்பங்களும், கோயில் மண்டபத் தூண்களும் கண்டெடுக்கப்பட்டன.÷இவற்றை ஆய்வு செய்த கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன் நிருபர்களிடம் கூறியது: முகாசாபரூரில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் ஆய்வில் கண்டறியப்பட்டன. சங்க காலத் தொடர்புடைய இவ்வூரில் திருமால், சிவன் கோயில்கள் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ளன. இக்கோயிலில் இருந்த பெருமாள் தாயார், கருடாழ்வார், பாய்கலைப்பாவை எனப்படும் கொற்றவை சிற்பங்கள் அனைத்தும் வேற்று மத அரசர்களின் படையெடுப்பின் போது சிதைக்கப்பட்டுள்ளன.÷இதில் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரேவொரு திருமால் சிலை மட்டும் மறைத்து பாதுகாத்து தற்போது எடுத்து வைக்கப்பட்டுள்ளது. 199 செ.மீ உயரமும், 82 செ.மீ. அகலமும் கொண்ட திருமால் சிற்பம் காண்பதற்கரிய கலை நுட்பம் மிகுந்த பல்லவர் கால படைப்பாகும். கோயில் திருச்சுற்றில் கிடந்த மண்டபத் தூண்களில் கச்சிராயர் சிற்பங்களும், கல்வெட்டுகளும் கண்டறியப்பட்டன.÷மேற்கண்ட கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டு மற்றும் தேதிக்கு சரியான ஆங்கில ஆண்டு 1750 நவம்பர் முதல் வாரம் ஆகும். கச்சிராயர்கள் காஞ்சிபுரம் மற்றும் மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு அரசாண்ட பல்லவ மன்னர்களின் வழிவந்தவர்களாகும்.÷இக்கோயில் கச்சிராயர்கள் கட்டியுள்ளனர் என்பதும், இவ்வூரின் பழமையான பெயர் பருவூர் என்றும் ஆய்வின் மூலம் தெரியவருகிறது என பண்ருட்டி தமிழரசன் கூறினார்.(1) குறுநில மன்னர் பொன்னம்பல முத்து கிருஷ்ணப்பக் கச்சிராயர் சிற்பம். (2) பல்லவர் கால திருமால் சிற்பம். (3) கச்சிராயர் கல்வெட்டு.
கருத்துக்கள்

1300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றால் கல்வெட்டு ஆண்டு 1750 என்பது தவறல்லவா? இதுதான் சரி யென்றால் 1300 என்பது தவறல்லவா?அலலது சிற்பக்காலம் வேறு ; கல்வெட்டு காலம் வேறு என்றால் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். கோவில் உருவாக்கத்திற்கு முன்பே சிற்பம் எப்படி வந்தது? சரியாகத் திருத்திக் குறிப்பிட வேண்டுகின்றேன்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/28/2010 5:20:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
காரைக்குடி என்று சொன்னால் கம்பனும் எழுந்து வருவான்



காரைக்குடி, மார்ச் 27: சங்க இலக்கியங்கள் ஒரு பக்கம் தமிழின் புகழ் பரப்பிக் கொண்டிருந்தாலும், தமிழை இன்றையநாள் வரை வாழும் மொழியாக வைத்திருப்பது பக்தி இலக்கியங்கள்தான். இவற்றில் தேவாரப் பாடல்களும், நாலாயிரத் திவ்ய பிரபந்தமும், கம்பராமாயணமும் மிக முக்கியமானவை.கவித்துவம், தத்துவம், கருத்துகள், வர்ணனைகள், சொல்லாடல் அனைத்தையும் கொண்ட இராமகாவியம், ஏதோ கடினமானது என்பதுபோன்ற கருத்தாக்கம் ஏற்பட்டபோது, கம்பராமாயணக் கவிதைகள் எவ்வளவு எளிமையானவை என்று எடுத்துக்காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இராவணன் திராவிடன் என்றும், இராமன் ஆரியன் என்றும் பேசப்பட்ட நாளில், இராமன்தான் தென்னிந்திய பழங்குடிகளின் நண்பன் என்றும், குகனையும் சுக்ரீவனையும் தனது சகோதரனாக ஏற்றுக்கொண்டவன் என்றும் மக்களிடம் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கம்பராமாயணம் வெறும் காமரசம் அல்ல, "இந்த இப் பிறவிக்கு இரு மாதரை சிந்தையாலும் தொடேன்' என்று ஆணுக்கும் கற்பு நெறி சொன்ன காவியம் என்று சொல்லவேண்டிய அவசியம் நேர்ந்தது.1939-ஆம் ஆண்டு கம்பன் திருவிழாவைத் தொடங்கி வைத்து கம்பனையும் கம்ப ராமாயணத்தையும் புகழ்ந்து மக்களிடம் அதைக் கொண்டு சேர்க்கும் பணியைத் தொடங்கினார், கம்பன் அடிப்பொடி என்றே தன் பெயரை மாற்றிக் கொண்ட தமிழறிஞர் சா. கணேசன். ரசிகமணி டி.கே.சி. தலைமை ஏற்ற முதல் திருநாளில் அறிஞர் பலர் பங்கேற்றனர். அன்று தொடங்கி, கடந்த 71 ஆண்டுகளாக இவ்விழாவில் பங்கேற்காத தமிழ் அறிஞர்களே இல்லை. தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், வெ. சாமிநாத சர்மா, விஞ்ஞானி கே.எஸ். கிருஷ்ணன், பி.ஸ்ரீ. ஆச்சார்யா, க.கு. கோதண்டராமக் கவுண்டர், நீதிபதி மு.மு. இஸ்மாயில், நீதிபதி எஸ். மகராஜன், தனிநாயக அடிகள், கா. நயினார் முகமது, அ.ச.ஞா., கி.வா.ஜ., தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான், சே.ச., ஏ.சி. பால் நாடார், ஆல்பர்ட் பிராங்க்ளின், மு.வ., கண்ணதாசன், மு. ராகவ அய்யங்கார், கிருபானந்த வாரியார், குன்றக்குடி அடிகளார், ஏ.என். சிவராமன், வே.மி. சம்மனசு, சாரணபாஸ்கரன், வ.சுப.மா., வள்ளல் அழகப்பர், எஸ். வையாபுரிப்பிள்ளை, ராய.சொ., அ.சீ.ரா., சொ. முருகப்பா, வாலி, மு. கருணாநிதி என்று பெரும் அறிஞர் பட்டாளமே கம்பன் புகழ் பாடியிருக்கிறார்கள். கம்பன் பிறந்த நாள் நமக்குத் தெரியாது. ஆனால், அவர் கவிச்சக்கரவர்த்தி யாகப் பூவுலகில் அரங்கேறிய நாளான பங்குனி அத்தத்தை தனிப் பாடல் ஒன்றின் துணையால் நிறுவி, அத்திருநாளில் நாட்டரசன்கோட்டையில் விழா எடுத்து, அதற்கு முந்தைய மூன்று நாள்களும் காரைக்குடியில் விழா எடுத்து வருகிறது கம்பன் கழகம்.1939 முதல் 1982 வரை 43 ஆண்டுகள் கம்பன் திருநாளைக் கொண்டாடிய பெருமைக்குரியவர் கம்பன் அடிப்பொடி ஒருவரே. அவருக்குப் பிறகும் தொடர்ந்து இவ்விழா நடைபெற்று வருகிறது. மேலும் அவர்களது சேவை விரிந்துள்ளது.தமிழ்நாட்டில் எங்கே எந்த ஊரில் கம்பன் கழகம் தொடங்கப்பட்டாலும், தாய்வீட்டுச் சீராட்டுகளாக கம்பன், தமிழ்த்தாய் படங்களுடன் கம்பராமாயணப் புத்தகமும் அடையாள அன்பளிப்பாக ரூ.101 பணமும் தருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் உள்ள கம்பன் கழக நிர்வாகிகளும் உலகெங்கிலும் உள்ள கம்பனின் ரசிகர்களும் தாய்க் கழகமாம் காரைக்குடி கம்பன் விழாவுக்கு ஆண்டுதோறும் தவறாமல் வந்து விடுகிறார்கள்.காரைக்குடி கம்பன் விழாவுக்கு வரும் அன்பர்களையும் பிற கம்பன் கழக நிர்வாகிகளை உறவுகளை அழைத்துவருவதைப் போல, ரயில்நிலையம் பஸ் நிலையங்களிலிருந்து தனி வாகனத்தில் அழைத்து வந்து, இங்கே நான்கு நாள்களும் இலவசமாக தங்குதற்கும் உணவுக்கும் ஏற்பாடு செய்கிறார்கள். கம்பனின் புகழோடு, செட்டிநாட்டு விருந்தோம்பல் என்றால் என்ன என்பதையும் புரிய வைத்துவிடுகிறார்கள். மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்படுகின்றன. கம்பன் விழாவில் நிகழ்ச்சிகளின் இடையே ஓய்வு கிடைக்கும்போது பிள்ளையார்பட்டி, குன்றக்குடி ஆகிய இடங்களுக்கும் அன்பர்களை அழைத்துச் செல்கிறார்கள்.மொத்தச் செலவுகளில் ஒரு பகுதியை ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் நினைவு அறக்கட்டளை ஏற்கிறது. மீதிச் செலவுகளை கம்பன் அறநிலை ஏற்றுக்கொள்கிறது என்கிறார் கம்பன் கழகச் செயலாளர் பழ. பழனியப்பன்.இந்த நான்கு நாள் விழாவில் கம்பனின் முழு ஆளுமையையும் உணரச் செய்து விடுகிறார்கள். கம்பனின் கவியைப் பருக நினைப்பவர் அனைவரும் வரும் இடம் காரைக்குடி கம்பன் கழகம் என்பதை ஒவ்வொரு ஆண்டும் நிரூபித்து வருகின்றனர்.
கருத்துக்கள்

கம்பரைப் போற்றுபவர்கள் ஒற்றுமை இலக்கியம் படைத்த இளங்கோவடிகளையும் போற்ற வேண்டும். அப்பொழுதுதான் குறிப்பிட்ட வகுப்பாரும் ஆரியரும் போற்றும் கம்பரை அனைவரும் போற்றுவார்கள். கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்! இளங்கோ அடிகளார் புகழ் பாடித் தமிழ் மானம் காப்போம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/28/2010 5:07:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
கம்பன் ஏமாற்றப்படமாட்டார்: "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன்



காரைக்குடி, மார்ச் 27: கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கம்பனுக்கும் இடமிருக்கும் என்றும், கம்பன் ஏமாற்றப்படமாட்டார் என்றும் "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் கூறினார். காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் நடைபெறும் 72வது கம்பன் திருவிழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், "தினமணி' முன்வைக்கும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் கோரிக்கைகளையும் தமிழக அரசும் முதல்வரும் ஏற்றுக் கொள்ளத் தயங்கியதில்லை என்றார். ""பள்ளி மாணவனாகவும் கல்லூரி மாணவனாகவும் காரைக்குடி கம்பன் விழாவில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட அந்த நாள்களை இன்று கம்பன் கழக மண்டபத்தில் நுழையும் போது நான் நினைவுகூர்ந்தேன். அப்போதெல்லாம் கம்பன் விழாவில் அன்றைய "தினமணி' ஆசிரியர் பெரியவர் ஏ.என். சிவராமனை பிரமிப்புடன் பார்த்திருக்கிறேன். ஒருநாள் நான் "தினமணி' ஆசிரியராகப் பொறுப்பேற்பேன் என்றோ, காரைக்குடி கம்பன் விழா மேடையில் தொடக்க உரையாற்றுவேன் என்றோ அப்போது கனவிலும் எண்ணிப் பார்த்ததில்லை. "கம்பனுக்கு மேலோர் கவிஞன் இல்லை; கம்பனது கவியின்றி கனித்தமிழ்தான் வாழ்வதில்லை' என்பார் கவியரசர் கண்ணதாசன். கம்பன் ஏன் காந்தம் போல் நம்மை இழுக்கிறான்? அவனது ராம காவியம் வெறும் கவிதை தொகுப்பல்ல. கற்பனைச் சுரங்கம் உவமைகளின் சமுத்திரம். எல்லாவற்றுக்கும் மேலாக கதா பாத்திரங்களை நாடகத் தன்மையுடன் உலவவிடும் கவித்துவம் கம்பனது தனித்துவம்.÷நான் எழுதியதாலோ என்னவோ எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள் கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டில் கம்பனுக்கு இடமுண்டா இல்லையா என்று. நான் போகுமிடமெல்லாம் இந்தச் சர்ச்சை எழுப்பப்படுகிறது.÷தீண்டாமைக்கு எதிராகக் குரல் எழுப்பி மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்துக்குள் தாழ்த்தப்பட்ட சகோதரர்களை அழைத்துச் சென்ற மதுரை வைத்தியநாத அய்யர் சிலை பராமரிப்பில்லாமல் இருக்கிறது என்று "தினமணி' நாளிதழில் செய்தி வெளிவந்தது. காலையில் "தினமணி' வெளிவந்த சில நிமிடங்களில் மாவட்ட ஆட்சியர், மேயர் தொடங்கி அனைத்து அதிகாரிகளும் அந்தச் சிலை அருகில் குவிந்துவிட்டனர். அடுத்த சில மணித் துளிகளில் சிலை புதுப்பொலிவு பெற்றுவிட்டது. காரணம், முதல்வரிடமிருந்து வந்த தொலைபேசி ஆணை.÷போலி காலாவதியான மருந்துகளைப் பற்றிய "தினமணி' தலையங்கம் வந்தவுடன், முதல்வர் அதிகாரிகளைக் கூட்டி நடவடிக்கையை முடுக்கிவிட்டதை நாடறியும்.÷காரைக்குடி மாநகரில் தமிழ்த்தாய் கோயிலுக்கு அடிக்கல் நாட்டிய, அந்தத் தமிழ்த்தாய் கோயிலைத் திறந்து வைத்த, கம்பன் அடிப்பொடியின் மீது அளப்பரிய மரியாதையுள்ள, எல்லாவற்றுக்கும் மேலாக தமிழை நேசிக்கும் தமிழக முதல்வர், கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கு செம்மொழி மாநாட்டில் இடமளிக்காமல் இருக்கமாட்டார் என்று நிச்சயமாக நம்புகிறேன். அவர் சொன்னதைச் செய்வதுபோல சொல்லாமலும் செய்வார் என்பதற்கு செம்மொழி மாநாட்டில் கம்பனுக்கு அளிக்கப்படும் இடம் எடுத்துக்காட்டாக அமையும் என்று நான் கருதுகிறேன். வள்ளுவன், இளங்கோ, கம்பன் ஆகிய மூவரையும் தமிழையும் பிரித்துப் பார்ப்பது இயலாது என்பதை அறியாதவர் அல்லர் அவர். கம்பன் ஏமாறவும் மாட்டான். நாம் ஏமாற்றப்படவும் மாட்டோம். ஏனென்றால் கம்பனின் தமிழ் காலத்தையும் வரைமுறைகளையும் கடந்த தேன்பாகு என்பதில் சந்தேகம் என்ன? என்றார் அவர்.
கருத்துக்கள்

தினமணயில் வரும் செய்திகளுக்கு உடனே எதிரொலி கேட்பது உண்மைதான். உரிய பயன் விளைவதும் உண்மைதான். ஆனால், இதே தினமணி எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது முழக்கமாக இல்லாமல் உண்மையாக இருக்க வேண்டும் என்றும் எல்லா நிலைகளிலும் கல்வி மொழியாகத் தமிழ் இருக்க வேண்டும் என்றும் தமிழுக்காகக் குரல் கொடுப்பதற்கான எதிர்விளைவு ஏதும் இல்லையே! இவை தினமணியின் போலிக் குரல்கள் என எண்ணுகிறாரா? அல்லது கேட்பதிலும் பார்ப்பதிலும் பாதி மறைப்பு வந்து இவை அவருக்குத் தெரிவதில்லையா? கம்பரைப் பிற அமர்வுகள் மூலம் காணலாம். ஆனால், மொழிப்பாடமாக, பயிற்று மொழியாக, அலுவல் மொழியாக, நீதி மன்ற மொழியாக, வழிபாட்டு மொழியாக, அன்னைத் தமிழை அரியணையில் ஏற்ற இதுவே நல்ல வாய்ப்பான காலம். தினமணி அதற்குக் குரல் கொடுக்க வேண்டும். மொழிப்பற்றும் இனப்பற்றும் இலக்கியப் பற்றும் உள்ள ஆசிரியர் அதில் கருத்து செலுத்தி வெற்றி காண வேண்டும்.தமிழ்த்தாய ஏமாற்றப்படாமல் இருந்தால் கம்பன் ஏமாற்றம் அடையாமல் மகிழ்வார்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/28/2010 4:53:00 AM

I am not sure our CM will encourage hindu relegious Schalers rather he always criticise them. Without Kambar, Elango, Sambandar, Appar, Barathiyar how can on tamil conference can be conducted without them. We cannot think of Tamil without any Bakthi and relegious thougts from great schalers. Thanks to Periyar, he is not tamil schalar otherwise entire conference will be dedicated to Periyar only.

By Chandra
3/28/2010 4:41:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

'ஊனமுற்றோர்' சொல்லை மாற்றி முதல்வர் ஆணை



சென்னை, மார்ச் 27: அரசு அலுவலகங்களின் பெயர்களில் உள்ள "ஊனமுற்றோர்' எனும் சொல்லை "மாற்றுத் திறனாளிகள்' என்று மாற்றி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட முடிவின்படி, "ஊனமுற்றோர்' என்ற சொல்லால் அழைக்கப்படுபவர்கள் இனி "மாற்றுத் திறனாளிகள்' என அழைக்கப்படுவார்கள் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார்.மாற்றுத் திறனாளிகளுக்கான தனித் துறை உருவாக்கப்படும் என பட்ஜெட்டிலும் அறிவிக்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக, ஊனமுற்றோர் அலுவலகம் உள்ளிட்டவற்றின் பெயர்களை மாற்றி கருணாநிதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதன் விவரம்:"ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர் அலுவலகம்' இனி, ""மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகம்' என அழைக்கப்படும்."தமிழ்நாடு ஊனமுற்றோர் நல வாரியம்' இனி, "தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல வாரியம்' என அழைக்கப்படும்."ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர்' இனி, "மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர்' என அழைக்கப்படுவார்."மாவட்ட ஊனமுற்றோருக்கான மறுவாழ்வு அலுவலர்' இனி, "மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர்' எனவும் அழைக்கப்படுவார் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

பெயரை மாற்றிப் பயனில்லை. அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும். நிலைமைகளை மாற்றாத வரை எந்தப் பெயர் சூட்டினாலும் அந்தப் பெயருக்கே வழக்கமான பொருள் சேர்ந்து விடும். ஒடுக்கப்பட்டவர்களைக் கடவுளின் குழந்தைகள் என்று கூடப் பெயர் மாற்றம் செய்தனர். அவர்களின் வாழ்க்கை உயர்ந்ததா? எனவே, ஊடகங்களில் கேலியாகச் சித்தரிக்கப்படுவதைத் தடுத்தும் வாழ்க்கை நிலைகளை உயர்த்தியும் தன்னம்பிக்கை அளித்தும் ஊனத்தைப் போக்கி மாற்றுத்திறனைப் பெருக்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/28/2010 4:35:00 AM

ஒரு ஊர்ல ஒரு 80 வயது கிழவனுக்கு ஏகப்பட்ட பெண்டாட்டிங்க , எண்ணற்ற பிள்ளைங்க , கணக் கற்ற பேரப பிள்ளைங்க, ஏராளமான எடுபிடிகள் ..இப்படிப் பட்ட சூழலில் அந்த வீட்டுக்கு சமைக்க உப்பு தேவைப்பட்டது ! சின்னப் பயலுக்கிட்ட 10 காச கொடுத்து வாங்கியாடான்னா ஒரு நொடில வாங்கி வந்துடுவான்! அப்படி செய்யாம அந்த கிழவன் கையில 10 காச கொடுத்தாங்க...கிழவன தூக்கி ஒரு பல்லக்குல வச்சாங்க....ஒரு பத்து.. பன்னண்டு பேரு பல்லக்க தூக்குனாங்க..ரோட்டுல கார் சைக்கிள் என்ன ...எவனும் நடக்க அனுமதி இல்லை !!! இப்படியாக ஒரு பத்து பன்னண்டு மைல் பயணம் பண்ணி கிழவன் , உப்பு வாங்கி வந்த கதைய விவரிக்க நேரம் இல்லை ....அனுமதியும் இல்லை !!! அனால் மக்கள் மட்டும் வாயப் பொளந்துகிட்டு பாத்து ஆச்சரியப் பட்டுப் போனாங்க!...பாருடா இந்த வயசுல இந்தக் கெழவன் என்னமா குடும்பத்துக்கு உழைக்கிறான் என்று .... இப்படித் தான் தெரியுது எனக்கு.... இந்தக் கருணாநிதி டெல்லிக்கு பயணம் பண்ணுறது !!!...ஆட்சி அதிகாரத்துல உட்கார்ந்து இருப்பது !!!

By rajasji
3/28/2010 1:50:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


பென்னாகரம்: 84% வாக்குப் பதிவு



தருமபுரி, மார்ச் 27: பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு சனிக்கிழமை நடந்த இடைத்தேர்தலில் 84 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார்.தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. வாக்களிக்க வந்தவர்களை வெப் -கேமராவில் பதிவு செய்ததன் மூலம் போலி வாக்காளர்கள் இல்லாத நிலை இத்தேர்தலில் ஏற்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு மார்ச் 3-ம் தேதி தொடங்கியது. மார்ச் 10-ம் தேதி மனு தாக்கல் நிறைவடைந்தது. பி.என்.பி.இன்பசேகரன் (திமுக), டி.ஆர்.அன்பழகன் (அதிமுக), ஜிகேஎம்.தமிழ்க்குமரன் (பாமக), கே.ஜி.காவேரிவர்மன் (தேமுதிக) உள்ளிட்ட 31 பேர் போட்டியிட்டனர். அனைத்து அரசியல் கட்சியினரும் கடந்த இரு வாரங்களாகத் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டனர். திமுக தரப்பில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும், அதிமுக தரப்பில் பொதுச் செயலர் ஜெயலலிதா மற்றும் கட்சியினர், பாமக சார்பில் நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக சார்பில் விஜயகாந்த் உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொண்டனர். வியாழக்கிழமை மாலை பிரசாரம் நிறைவடைந்தது. பென்னாகரம் தொகுதியில் 1,02,892 ஆண் வாக்காளர்கள், 98,116 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 2,01,008 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க, நல்லம்பள்ளி ஒன்றியத்தில் 63 வாக்குச் சாவடிகளும், பென்னாகரம் ஒன்றியத்தில் 187 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டன. மொத்தம் 31 வேட்பாளர்கள் என்பதால் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் இரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.வாக்குச் சாவடிகளில் கணினி உதவியுடன் வெப்-கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப் பதிவுகள் கண்காணிக்கப்பட்டன. இக் கருவிகள் மூலம் தேர்தல் நடவடிக்கைகளை தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலகத்திலிருந்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கண்காணித்தார். வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது. காலை 10 மணிக்கு 14 சதவீதமாக இருந்த வாக்குப் பதிவு, பகல் 11 மணிக்கு 24 சதவீதமாக இருந்தது.கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். பிற்பகல் 1 மணிக்கு வாக்குப் பதிவு 46 சதவீதத்தை எட்டியது. பிற்பகல் 2 மணி வரை 55.4 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. வரிசையில் காத்திருந்தோருக்கு டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு, சில வாக்குச் சாவடிகளில் மாலை 5 மணிக்குப் பிறகும் வாக்குப் பதிவு நடத்தப்பட்டது.திமுக-பாமக மோதல்பென்னாகரம் தொகுதியில் கே.குள்ளாத்திரம்பட்டி, ஏரியூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு திமுகவினர் பணம் கொடுக்க முயன்றதாகக் கூறி, பாமகவினர் தடுக்க முயன்றனராம். இதனால் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. ஏரியூரில் பணம் கொடுக்க முயன்றதாக திமுகவினர் 5 பேரை போலீஸôர் பிடித்தனர்.பலத்த பாதுகாப்புபென்னாகரம் தொகுதிக்குள் நுழையும் அனைத்து சாலைகளிலும், சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.பென்னாகரம் தொகுதியில் வசிப்பதற்கான அடையாள அட்டை இல்லாத எவரையும் போலீஸôர் உள்ளே அனுமதிக்கவில்லை.குறிப்பாக எந்த ஒரு காரையும் போலீஸôர் அனுமதிக்கவில்லை. அனுமதிச் சீட்டு பெற்ற பத்திரிகையாளர்களின் 4 சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.
கருத்துக்கள்

அமைதியான தேர்தலை நடத்தி முடித்ததற்கு மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கும் பென்னாகரம் தொகுதி மக்களுக்கும மாவட்ட நிருவாகத்திற்கும் பாராட்டுகள். ஆனால், மாநில அரசைப் பாராட்ட முடியவில்லை. ஏனெனில் தேர்தலுக்கு முன் நாள்தான் புது தில்லி சென்று வன்முறை வெடிக்கும் என ஆளும்கட்சி முறையீடு அளித்துள்ளது. ஒன்று உளவுத்துறை சரியில்லை. அல்லது பிற கட்சி மீது பழி போட ஆளும்கட்சி ஏதும் சதி வலை தீட்டியிருக்க வேண்டும். அல்லது பொய்யான முறையீட்டை எதற்கும் கொடுத்து வைப்போம் எனத் தந்திருக்க வேண்டும். தன் கட்சி ஆட்சியை நம்பாத தன்னுரிமையை இழந்த ஆளும்கட்சியின் நிலைப்பாடு நாணப்பட வேண்டிய ஒன்றே. வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/28/2010 4:24:00 AM

Bribes and illegal votes brought the King of Bribes Kollayinar Karuna neesan to power. Less than 50% of Tamils have toilet facilities in Tamil Nadu.

By Ram chetty
3/28/2010 3:58:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *