சென்னையில் நடைபெறும் 46ஆவது புத்தகக் கண்காட்சியில் களம் – அரங்கு எண் 272 இல் என்னூல்கள் விற்பனைக்கு உள்ளன. தமிழார்வலர்களும் ஆய்வாளர்களும் சொல்லாகத்கதிலும் அறிவியல் தமிழிலும் ஈடுபாடு மிக்கவர்களும் தமிழன்பர்களும் வாங்கிப் பயனுற வேண்டுகிறோம். விவரம் வருமாறு:-
பழந்தமிழ்(விலை உரூ 100.00)
நான் பதிப்பித்துள்ள பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் நூல்.
பல ஆண்டுகள் தமிழ் மாணாக்கர்களுக்குப் பாடமாக இருந்த நூல்.
மொழியின் சிறப்பு, மொழிகளும் மொழிக்குடும்பங்களும், பழந்தமிழ், மொழி மாற்றங்கள், பழந்தமிழ்ப்புதல்விகள், பழந்தமிழ் இலக்கியம், பழந்தமிழ் நிலை, பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள், பழந்தமிழ்ச் சொல்லமைப்பு,பழந்தமிழும் தமிழரும், தமிழ் மறுமலர்ச்சி ஆகிய தலைப்புகளில் நம் தமிழ்மொழியின் சிறப்புகளை எடுத்துரைத்துள்ளார். தமிழ்மொழியின் ஏற்றத்தை நிலைநாட்ட ஆங்காங்கு மேலைநாட்டு மொழியறிஞர்களின் உரைகளை எடுத்தாண்டுள்ளார். “தமிழ் இந்நாட்டு மொழியே. இந்தியா முழுவதும் வழங்கிய மொழி பழந்தமிழே” என்று நிலைநாட்டியுள்ளார்.
பணித்தேர்வு எழுதுநருக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் செம்மொழித் தமிழின் சிறப்புகளை அறிவதற்கும் உணர்வதற்கும் உரிய நூல்.
இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் – சங்கக்காலம்(விலை உரூ 65.00)
நான் பதிப்பித்துள்ள பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் நூல்.
தமிழ் மாணாக்கர்களுக்குப் பாடமாக இருந்த நூல்.
சிங்கப்பூரிலும் கடந்த சில ஆண்டுகள் பாடமாக இருந்தது.
தமிழ்நாடு, தமிழ் நகரங்கள், மக்கள், அரசு, கல்வி,இல்லறம், கடவுட் கொள்கை,மெய்யுணர்வுக் கொள்கை, பண்பாடு, நாகரிகம், பொழுதுபோக்கு, பழக்க வழக்கங்கள்,வாணிகம், போர்கள், புலவர்கள் குறித்து விளக்கியுள்ள நூல். சங்கத்தமிழின் சிறப்புகளை விளக்க வந்த முதல் நூல்.
ஆய்வாளர்களும் பணித்தேர்வுகள் எழுதுநருக்கும் உற்றுழி உதவும் நூல்.
***
இலக்குவனார் திருவள்ளுவன் நூல்கள்
அன்றே சொன்ன அறிவியல் – சங்கக்காலம்
சங்கத்தமிழ் இலக்கியங்களில் இன்றைய அறிவியல் உண்மைகள் மண்டிக்கிடப்பதை எடுத்துரைக்கும் நூல்.
உயிரறிவியல், சேமக்குடுவை, சுற்றுப்புற அறிவியல், புவிச் சுழற்சி, மாற்றுச் சக்கரம், புவியில் இருந்து சூரியன் பிரிந்தது, மழையியல், முகிலறிவியல், காற்றின் வகைமை, காற்று வழங்காத விண், தாழிமரம், வழித்துணைப் பெயர்ப்பலகைகள், பதிவறிவியல், வால் நட்சத்திரம் என்பது நட்சத்திரம் அல்ல, நீச்சல் உடையியல், பொற்காசுகள், பாசன அறிவியல், புலம் பெயர் பறவைகள், பொருளறிவியல், எழுத்துக் காப்பு, மணிப்பாெறி, சூரியன், சந்திரன், புதன், வெள்ளி, சனி ஆகிய கோள்களின் தன்மைகள், யானையியல், காலணி, கட்டட வகைகள் முதலியவை பற்றிச் சங்க இலக்கியங்கள் உரைப்பதை விளக்கும் நூல்.
சங்கத்தமிழ் ஆர்வலர்களும் அறிவியல் தமிழ் ஆர்வலர்களும் பொது அறிவில் நாட்டம் கொண்டவர்களும் படிப்பதற்கேற்ற நூல்.
***
படைப்பாளர் பார்வையில் பேராசிரியர் இலக்குவனார் ( விலை உரூ 90.00)
தமிழ்ப்போராளி பேரா. முனைவர் சி.இலக்குவனார் குறித்துத் தமிழறிஞர்களும் தமிழ்ப்படைப்பாளர்களும் பாராட்டித் தெரிவித்த கருத்துகள். அவரின் நூல்கள் குறித்தும் தமிழ்ப்பணிகள் குறித்தும் இந்தி எதிர்ப்புப் போர் குறித்தும் கூறப்பட்டவை அக்கால வரலாற்றை அறியவும் உதவியாக உள்ளன.
தொல்காப்பியப்புலமையாளர், குறள்நெறி பரப்பிய சான்றோர், கவித்திறனில் சிறந்தவர், மொழி ஆராய்ச்சியாளர், பன்முகப்பாங்கினர், தமிழ்த்தாய், தமிழ்த்தாயின் தவப்புதல்வன், தமிழ்ப்புரட்சி ஏற்படுத்திய தமிழியக்கம், முத்தமிழ்ப் போர்வாள்,ஆற்றற் களஞ்சியம், புரட்சியாளர்,தமிழ் ஞாயிறு, இருபதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியர், கூண்டிலே அடைக்க முடியாத சிங்கம், தன்மானப் பெரும்புலவர், தமிழ்க்கென வாழ்ந்து தமிழாய்ச் சிறந்தவர், தமிழுக்கு இலக்கு, தமிழுக்காகத் தன் வாழ்வையே பணயம் வைத்த அஞ்சா நெஞ்சர், இந்தி எதிர்ப்புப் படைத்தளபதி, திராவிட இயக்க வெற்றிகளுக்கு வித்திட்டவர், தமிழுக்காகச் சிறை சென்ற செம்மல், முத்திரை பதித்த இதழாளர், தமிழியக்கத் தலைவர், புரட்சிப் பேராசிரியர், தமிழர்க்கான கருவூலம் முதலியவாறாகப் பல்வேறு வகைகளில் தமிழ்ப்போராளி சி.இலக்குவனார் குறித்து படைப்பிலக்கிய அறிஞர்கள் கூறுவதை எடுத்துரைக்கும் நூல்.
தமிழ்த்தென்றல் திரு.வி.க., தந்தை பெரியார், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ., மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், பேரறிஞர் அண்ணா, குத்தூசி குருசாமி, முத்தமழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., கவியோகி சுத்தானந்த பாரதியார், உவமைக் கவிஞர் சுரதா, அண்ணலார் பு.அ.சுப்பிரமணியம், புலவர் வி.பாெ.பழனிவேலனா், புலவர் மணி இரா.இளங்குமரன், முனைவர் கி.வேங்கடசுப்பிரமணியம், மயிலை சீனி.வேங்கடசாமி, தமிழ்ப்பெரும்புலவர் கி.வா.சகந்நாதன், முனைவர் மா.இராசமாணிக்கம் முதலிய அறிஞர்கள் பலரின் கருத்துரைகள் இடம் பெற்றுள்ளன.
***
வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம்(விலை உரூ 50.00)
திருக்குறள் கருத்துகளை மாணாக்கர்கள் உள்ளத்தில் பதியும் வகையில் கட்டளைகளாகத் தரும் நூல்.
***
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000(விலை உரூ 500.00)
அறிவியல் துறைகளின் அருந்தமிழ்ப்பெயர்கள், பயிர் அறிவயிலின் சொல் வளம், எத்தனை எத்தனை மலர்கள், இலை அறிவியல், இலை வகைகள், நிற வகைகள், மூமா(டயனோசர்), தனிமங்கள், நோக்கிகள், காலிகள், உண்ணிகள், நுண்ணோ்ககிகள் எனப் பன்னிரு வகைகளில் அறிவியல் சொற்களை வகுத்துத் தமிழில் தரப்பட்டுள்ள நூல்.
சொல்லாக்க ஆர்வலர்களுக்கும் அறிவயில் ஆய்வாளர்களுக்கும் வழிகாட்டியாகத் திகழும் நூல்.
+++
அறிவியல் சொற்கள் ஆயிரம் (விலை உரூ 250.00)
சொல்லாக்க ஆர்வலர்களும் அறிவியல் துறையினரும் பயன்படும் வகையில் அறிவியல் சொற்களைத் துறைவாரியாகப் பகுத்தும் ஒரு பொருளுக்கு ஒரு சொல் என வகைப்படுத்தியும் அறிவியற் களஞ்சியத்திற்கு இணையான அகராதி நூல்..
கொழுப்பும் நிணமும் (fat and cholesterol), பொரித்தலும் வறுத்தலும் (hatching and frying ), உணவும் சாப்பாடும் (food and meal), தோலும் அதளும் (skin and leather), உயரும் உம்பரும் (height and elevation), மூதாளர் ( senior citizen), மலையியல் கலைச்சொற்கள், கோளி(cryptogam), அதிரி(vibrio), வளரியம்(cambium), மரவியம்(xylem), கற்றை(fascicular), காழ நீர்(coffee), உலவி(moon. satellite), உழலி(wanderer), அந்தர ஊர்தி(hovercraft), ஏணறை(lift),மிகைப்பி முதலிய 90க்கு மேற்பட்ட அறிவியல் சாெற்களை விளக்கங்களுடன் எடுத்துரைக்கும் நூல்.
***
கட்டுரை மணிகள் (விலை உரூ 120.00)
சங்க இலக்கிய நூல்கள் குறிப்பிடும் நான்மறைகளும் நால் வேதங்களும் தமிழே, சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப்போரிலா?,சொன்ன சொல் தவறாதே, சங்க இலக்கியக் காலத் தொடக்கம் கி.மு.ஆயிரத்திற்கு முற்பட்டது, புறநானூறு கூறும் இழிசினன் இழிமகனல்லன், புறநானூறு சொல்லும் வரி நெறி முதலிய ஆராய்ச்சிக்கட்டுரைகள் அடங்கிய ஆய்வு நூல்.
சொல்லாக்கம்-நெறிமுறையும் வழிமுறையும் (விலை உரூ. 120.00)
கலைச்சொல் விளக்கம், சொல்லாக்க நெறிமுறைகள், சங்க இலக்கியக் கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும், ஒரு சொல் பல பொருள்- கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல், அருந்தமிழ்ச்சொற்கள் அனைத்தும் அறிவியலே, இன்றைய தேவை குறுஞ்சொற்களே, திருக்குறளில் கலைச்சொற்கள், செவ்வியல் இலக்கியங்களில் கலைச்சொல் மேலாண்மை, எல்லாச் சொல்லும் தமிழ் குறித்தனவே எனப் பல்வேறு தலைப்புகளில் கலைச்சொற்களைச் சுருக்கமாகவும் செறிவாகவும் தந்து விளக்கியுள்ள நூல்; கலைச்சொல் விளக்கக் கட்டுரைகளும் கலைச்சொல் நெறிமுறைகளும் அடங்கிய நூல்.
உலகக் கருத்தரங்கங்களிலும் உள்ளூர்க் கருத்தரங்கங்களிலும் வாசிக்கப்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு. தமிழால் சொல்ல இயலும ்தமிழில சொல்ல இயலும் என்னும் நம்பிக்கையை ஏற்படுத்தும் நூல்.
கணிணியியலில் தமிழ்ப்பயன்பாடும் கலைச்சொற்களும் (விலை உரூ. 150.00)
கணிணியியலில் தமிழ்ப்பயன்பாடு, இயல்பான கணிணி மொழிபெயர்ப்பிற்குச் செய்ய வேண்டுவன, கணிணியிலில் நேர் பெயர்ப்புச் சொற்களும் ஒலிபெயர்ப்புச் சொற்களும், இணையத் தமிழ் வளர்ச்சிக்கு இன்றியமையாத கலைச்சொல் பெருக்கம் முதலிய கணிணியியல் தொடர்பான கலைச்சொற்கள் குறித்த ஆய்வு நூல். கணிணியன்பர்களும் தமிழன்பர்களும் படிக்க வேண்டிய நூல்.
தமிழார்வலர்கள் கணிணியறிவையும் பெற்றுச் சிறப்பாகச் செயல்பட வேண்டும். கணிணி வல்லுநர்கள் தமிழறிஞர்களின் கருத்துகளுக்கு முதன்மை கொடுத்துச் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நூல்.
***
இலக்குவனார் இதழுரைகள்(விலை உரூ 600.00)
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் 1960-70 களில் தமிழ்நலம் தொடர்பாகவும் தமிழ்க்காப்பிற்காகவும் குரல் கொடுத்த தலையங்கங்கள் தொகுப்பு. அவர் கூறும் அறிவுரைகள் இன்றைக்கும் பொருத்தமாக உள்ளன. அன்றைய தமிழக நிலையையும் இன்றைக்கு நாம் தமிழுக்கு ஆற்றவேண்டிய பணிகள் குறித்தும் நாம் அறிவதற்கு உதவும் நூல்.
இலக்கு, தமிழ் வழிக்கல்வி, இந்தி முதன்மை எதிர்ப்பும் தமிழ்த்தேசியக் காப்பும், திருவள்ளுவரைப் போற்ற், அனைவருக்குமான கல்வி, நினைவுரைகளும் புகழுைகளும், உரிமை வாழ்வு, அரசியலும் மன்பதையும், பிற என்னும் தலைப்புகளின் கீழ் இலக்குவனாரின் இதழுரைகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.இணைப்பாகப் பேராசிரியர் சி்.இலக்குவனார் தமிழ்க்காப்புப்பணிகளுக்காக இந்தி எதிர்ப்புச் செயற்பாடுகளுக்காகக் கைது செய்யப்பட்ட பொழுது தலைவர்கள் கண்டித்து பேசிய,எழுதிய சில செய்திகளின் தொகுப்பு தரப்பட்டுள்ளது.
தமிழக அரசியலைப்பற்றி மட்டுமல்லாமல், பிற மாநில, ஒன்றிய அரசியல் குறித்தும் மக்கள் நல நோக்கில் எழுதப்பட்டவை அரசியல் மாணாக்கர்களும் தமிழ் மாணாக்கர்களும் ஆய்வாளர்களும் படிக்கப்பட வேண்டியவை.
***
வேண்டவே வேண்டா இந்தி (விலை உரூ 300.00)
இந்தியைத் திணிக்கவில்லை என எல்லாவகையிலும் இந்தியைப் புகுத்திக்கொண்டுதான் உள்ளனர். எனவே, இந்தி வேண்டவே வேண்டா என வலியுறுத்தும் நூல்.
பேராசிரியர் முனைவர் சி. இலக்குவனார் குறள்நெறி இதழில் எழுதி வந்த இந்தி எதிர்ப்புக் கட்டுரைகளும் அவ்விதழில் வெளிவந்த பிறரின் கட்டுரைகளும் அண்மையில் அகரமுதல மின்னிதழில் வெளிவந்த இந்தி எதிர்ப்புக் கட்டுரைகளும் இலக்குவனார் திருவள்ளுவன் இந்தி எதிர்ப்பு குறித்து அளித்த செவ்விகளும் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ள நூல்.
இந்தி மொழியைப் பெரும்பான்மையர் பேசுவதாகக் கூறுவது தவறு என்பதை விளக்கும் நூல்.
இந்தியைப் பிற தேசிய மொழியாளர்களின் பகுதிகளில் பிற தேசிய மொழியாளர்களின் பணத்தைக் கொண்டு விருப்பப் போர்வையில் திணிப்பதால் இந்தி வேண்டவே வேண்டா என வலியுறுத்தும் நூல். அரசியலாளர்கள் ஆழமாகவும் தொலைநோக்கிலும் சிந்திக்காமல் இந்தித் திணிப்பை எதிர்ப்பதாகக் கூறும் அறியாமையைப் புரிய வைக்கும் நூல்.
***
தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேரா.முனைவர் ப.மருதநாயகம்(விலை உரூ. 300.00)
பன்மொழிப்புலவராகவும் ஒப்பிலக்கிய அறிஞராகவும் திகழும் பேராசிரியர் முனைவர் ப.மருதநாயகம் அவர்களின் ஏறத்தாழ 50 நூல்களின் திறனாய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூல்.
பேராசிரியர் முனைவர் ப.மருதநாயகம் அவர்கள் தம் நூல்களில் தெரிவித்துள்ள 201 ஆய்வு முடிவுகளை நூலாசிரியர் இலக்குவனார் திருவள்ளுவன் இதில் தொகுத்து அளித்துள்ளார். கி.பி.முதல் நூற்றாண்டிலேயே மேனாட்டறிஞர்கள் திருக்குறளின் சிறப்பைக் கையாண்டுள்ளதை எடுத்துரைக்கிறார். சமற்கிருதத்திற்கு எனக் காட்டப்படும் பே்ாலியான சிறப்புகளையும் தமிழ் இலக்கியங்களில் இருந்து சமற்கிருத நூல்கள் எடுத்தாண்டுள்ள கருத்துகளையும் தமிழ்நூல்களைப் பிராமணர்கள் சிதைத்துக் கெடுத்த முறைகளையும் வள்ளுவத்தின் சிறப்புகளையும் தொல்காப்பியப் பார்வை, அறநெறி கூறும் தமிழ் நூல்கள், அறமற்ற நெறிகளைக் கூறும் சமற்கிருத நூல்கள், சங்கக்காலக் கவிதைகளிலிருந்து இக்காலக் கவிதைகள் வரையிலான கவிதைச்சிறப்புகள், ஒப்பிலக்கியக் கருத்துகள், திறனாய்வுக் கருத்துகள், சமற்கிருதத்திற்குச் செம்மொழித் தகுதியின்மை முதலிய பல சிறப்புகளையும் இந்நூலில் காணலாம்.
***
இலக்குவனார் நூறு (விலை உரூ 40.00)
செந்தமிழ்மாமணி இலக்குவனார் நூல்களில் இருந்து மேற்கோள்களும் அவர் குறித்து அறிஞர்களும் ஆன்றோர்களும் நூற்றுவர் கூறிய மேற்கோள் கருத்துகளும் அடங்கிய தொகுப்பு நூல்.
***
வெருளி அறிவியல் – தொகுப்பு(விலை உரூ 4000.00)
வெருளி(அச்சநோய்) குறித்து உலகிலேயே ஐந்து தொகுதிகள் வந்த சிறப்பான நூல் இது ஒன்றே. கலைச்சொற்களுக்கான விளக்கங்களும் நோய்வகைகள் குறித்த விளக்கங்களும் பொதுஅறிவு தொடர்பான செய்திகளும் அடங்கிய நூல். கலைச்சொற்களில் உள்ள மூலக் கிரேக்கச் சொற்களுக்கும் இலத்தீன்சொற்களுக்கும் ஏற்ற பொருத்தமான தமிழ்ச்சொற்கள் தரப்பட்டுள்ளன. பழந்தமிழ்ச் சொற்களும் மீளாக்கம் செய்யப்பட்டுள்ளன.
+++
கனவல்ல தமிழீழம் (விலை உரூ.260)
தமிழீழம் தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்க்கான இரட்டை அளவுகோலை நிறுத்துதல், எழுவர் விடுதலை தொடர்பான கட்டுரைத் தொகுப்புகள் அடங்கிய நூல்.
000
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக