அகரமுதல
செங்கற்பட்டில் கவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா
செங்கற்பட்டு புதிய பேருந்து நிலையம் புது நிருமலா விழா அரங்கில் கவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்குத் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவர் சேம்சு தலைமை தாங்கினார். பெருமன்றத்தின் காஞ்சி மாவட்டத் தலைவர் ஓவியக்கவி நா.வீரமணி முன்னிலை வகித்தார். கவிஞர் சீனி.சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்றார்.
சா.கா.பாரதிராசா எழுதிய ‘சருகின் சத்தம்’ நூலை மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும், பட்டிமன்றப் பேச்சாளருமான கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் வெளியிட்டார். பாவரசு பாரதி சுகுமாரன் முதல் படியைப் பெற்றுக் கொண்டார்.
‘சிறகுகள் வரையும் வானம்’ ஐக்கூ கவிதைத் தொகுப்பு நூலைக் கவிஞரும் இதழாளருமான மு.முருகேசு வெளியிட்டார். பாவையர் மலர் ஆசிரியர் முனைவர் வான்மதி பெற்றுக்கொண்டார்.
நூல் குறித்துக் கவிஞர் அமுதகீதன், சமூக சேவகி பரஞ்சோதி, கவிசேகர், வழக்கறிஞர் அசோக்கு ஆகியோர் உரையாடினர்.
நிகழ்ச்சியைக் கவிஞர் யாழன் தொகுத்து வழங்கினார். சா.கா.பாரதி ராஜா ஏற்புரையாற்றினார். கவிஞர் ப.குணா நன்றியுரை வழங்கினார்.
நிகழ்வில் செங்கற்பட்டைச் சார்ந்த ஆசிரியப் பெருமக்கள், தமிழ் ஆர்வலர்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொணடனர். நிகழ்வில் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திலுள்ள 15 பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் ஏடுகளை மின்பொறியாளர் சங்கர் வழங்கினார்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக