சிங்கப்பூர் முசுதபா தமிழ் அறக்கட்டளை வழங்கும் உ.வே.சா. உலகத் தமிழர் விருதும், உரூ. ஓர் இலட்சம் பரிசுத் தொகையும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இம்முறை ‘சிலப்பதிகாரத்தில் அறக்கோட்பாடு‘ எனும் தலைப்பு வழங்கப்படுகிறது. இத்தலைப்பில் சிறந்த ஆய்வுரையை 150 பக்கங்களுக்கு மிகாமல் எழுதி பொதிக்கோப்பு(PDF) வடிவ ஆவணமாக suriyaudayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 31.8.2019 சிறந்த ஆய்வுரைக்கான தெரிவு அறிவிப்பு: 02.1.2020 கவிக்கோ மன்றத்தில் விருது வழங்கும் நாள்: 22.2.2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக