மலேசியக் கல்விப் பரப்பில் மாணவர்களுக்கான பல்வேறு பயிற்சி நூல்களைப் பதிப்பித்து வருவதோடு அரசாங்கத்  தேர்வுகள் தொடர்பான பயிலரங்குகளையும் நடத்திவரும் ‘யாழ் பதிப்பகம்’ 2018 ஆண்டுக்கான சிறப்புத் திட்டமாக இந்நாட்டில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தமிழ்ச் சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்த உள்ளது.
இப்போட்டியில் மலேசியத் தமிழ்/தேசிய/இடைநிலைப்பள்ளிகளில்  தற்சமயம் பணிபுரியும் எல்லா ஆசிரியர்களும் கலந்து கொள்ளலாம். ஆசிரியர் பயிற்சிக் கழகங்களிலும் உயர்கல்விக் கூடங்களிலும் பயிலும் பயிற்சி ஆசிரியர்களும் கலந்து கொள்ளலாம். பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கலந்து கொள்ள முடியாது. அதேபோல இதுவரை தனித்த சிறுகதை தொகுப்பு வெளியிட்ட ஆசிரியர்கள் இப்போட்டியில் கலந்துகொள்ள முடியாது.

இப்போட்டியின் முடிவில் ஏறத்தாழ பத்து சிறந்த கதைகள் தேர்ந்தெடுக்கப்படுவதுடன் ஒவ்வொரு கதைக்கும்  1000  மலேசிய வெள்ளி(இரிங்கிட்) வழங்க யாழ் பதிப்பகம் முடிவெடுத்துள்ளது.

சமகாலப் பாடத்திட்டத்தில் உள்ள புனைவிலக்கியத்தைத் திறம்பட கையாளும் ஆற்றல் கொண்ட ஆசிரியர்களை அடையாளம் காண நடத்தப்படும் இந்தப் போட்டியில் பங்குபெற 20.8.2018க்குள் கீழ்க்கண்ட படிவத்தை ஆசிரியர்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

ஆவணி 04, 2049 / 20.8.2018  நாளுக்குள் படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து அனுப்பும் ஆசிரியர்களுக்கு மட்டுமே சிறுகதை எழுதும் போட்டியில் கலந்துகொள்ளும் விதிமுறைகளும் விளக்கங்களும் அனுப்பிவைக்கப்படும். படிவத்தை அனுப்பாத ஆசிரியர்கள் இப்போட்டியில் கலந்துகொள்ள இயலாது.

மேல் விவரங்களுக்கு 017-3121079  என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்

போட்டிக்கான பதிவுப்படிவத்தைக் கீழ்க்காணும் இணையத் தொடர்பில் பெறலாம்.

http://bit.ly/2NLNEd3


-வல்லினம்