விட்ணுபுரம் விருது 2017

 2017 ஆம் ஆண்டுக்கான விட்ணுபுரம் விருது மலேசிய எழுத்தாளரான சீ.முத்துசாமிக்கு வழங்கப்படுகிறது.
கோவையில் மார்கழி 01, 02  / திசம்பர் 16,17 ஆம் நாள்களில் விட்ணுபுரம் விருது வழங்கும் விழாவும் வாசகர்கூடலும் நிகழவிருக்கிறது.
16  அன்று காலை ஒன்பது மணிக்குச் சந்திப்புகள் தொடங்கும். இரவு பதினொரு மணிவரை எழுத்தாளர்களுடன் உரையாடல்கள் நிகழும். 17 அன்று காலை 9 மணிக்கு மீண்டும் தொடங்கி மாலை நான்குமணிக்கு முடிவடையும். மாலை ஆறுமணிக்குப் பொது நிகழ்ச்சியில் விருது வழங்கப்படும்.
சீ.முத்துசாமி மலேசியாவின் மூத்தப்படைப்பாளிகளில் தனித்துவமானவர். தொடர்ந்து தோட்டத்தைக் களமாக வைத்து புனைவுகளில் இயங்கிவருபவர். இவரது ‘மண்புழுக்கள்’ பரவலான வாசகர் கவனத்தைப் பெற்ற புதினம். சீ.முத்துசாமிக்குக் கிடைக்கும் இவ்விருது மலேசிய இலக்கியத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய  அறிந்தேற்பாக்க் கருதப்படும் சூழலில் இவ்விழாவில் மலேசியாவில் இருந்து மா.சண்முகசிவா, சுவாமி பிரம்மானந்த சரசுவதி, ம.நவீன், விசயலட்சுமி, தயாசி, தமிழ்மாறன், குமாரசாமி எனச் சிலர் கலந்துகொள்கின்றனர்.
இந்த விருது விழாவுக்கென சீ.முத்துசாமியின் ஆவணப்படம் உருவாகியுள்ளதும.நவீன் இயக்கிய இப்படத்தைச் செல்வன்ஒளிப்பதிவு செய்துள்ளார். 50 நிமிடங்கள் தயாராகியுள்ள இந்த ஆவணப்படத்தின் சாரம் 15 நிமிடங்கள் விழாவில் ஒளிபரப்பப்படும்.
ஆ,மாதவன், தேவதேவன், பூமணி, தெளிவத்தை சோசப்பு, ஞானக்கூத்தன், தேவதச்சன், வண்ணதாசன் என இக்காலத் தமிழ் இலக்கியத்தின் முதன்மையான  ஆளுமைகள் வரிசையில் விட்ணுபுரம் விருதுபெற்று  மலேசிய எழுத்தாளர் ஒருவர் அவ்வரிசையில் வருவதும் அவரது படைப்புகள் குறித்த திறனாய்வு நூல் இவ்விழாவில் வெளியீடு காண்பதும் உலகத் தமிழ் வாசகர்கள் மத்தியில் மலேசிய இலக்கியத்தின் மேல் கவனம் குவியவைக்கும் ஓர் அரிய நிகழ்வு. இவ்வேளையில்  வாய்ப்புள்ள மலேசிய எழுத்தாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என வல்லினம் கேட்டுக்கொள்கிறது.
– விட்ணுபுரம் இலக்கிய வட்டம்