அகரமுதல 191, ஆனி 04, 2048 / சூன் 18, 2017
இசைத்துறைக் கலைச்சொற்கள்
மதுரைக்காஞ்சி, மலைபடுகடாம்,
சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை முதலிய பழந்தமிழ்ச்
சிற்றிலக்கியங்களில் மருதம், குறிஞ்சி, நைவளம், காமரம், மருவின்பாலை முதலிய
பண்களின் பெயர்கள் காணப்படுகின்றன.
திருப்புகழில் அருணகிரிநாதர் இந்தளம்,
சாதாரி, தேசி, குறிஞ்சி, நாதநாமக்கிரியா, கௌள, சீராகம் முதலிய பெயர்களைக்
குறிப்பிடுகிறார். இவற்றில் பழைய பண்களின் பெயர்களும் இக்காலத்து
இராகங்களின் பெயர்களும் கலந்து காணப்படுகின்றன.
தோடி, முரளி, வராளி, பைரவி முதலிய
இராகத்தின் பெயர்களைத் திருக்குற்றாலக் குறவஞ்சி குறிப்பிடுகிறது. மோகனம்,
முகாரி இராகங்களை அண்ணாமலையாரின் காவடிச் சிந்து குறிப்பிடுகிறது.
முனைவர் இரா.திருமுருகன்: ஏழிசை எண்ணங்கள்: பக்கம் 53
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக