உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம்
கல்வியியல், தொழில் நுட்பப் பிரிவு, மலேசியா
உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா
மாநாட்டிற்கான ஆய்வுக் கட்டுரைகள் கீழ்வரும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் அமையும் வகையில் படைத்து அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.- இயல்மொழிப் பகுப்பாய்வு – தமிழ்ச்சொல்லாளர் (சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, இலக்கணத்திருத்தி முதலியன)
- இயந்திர மொழிபெயர்ப்பு, தமிழ்ப் பேச்சுப் பகுப்பாய்வு, எழுத்துரை-பேச்சுரை மாற்றிகள்,தேடுபொறிகள், தமிழ்த் திறனாய்வு நிரல்கள், மின்னகராதி அமைத்தல் முதலியன.
- மொழித்தொகுப்பு ஆய்வு (Corpus linguistics)
- ஒளியெழுத்துணரி, கையெழுத்துணரி.
- கையடக்கக் கணிணிகளில் தமிழ்ப் பயன்பாடும் அவற்றின் செயலிகளைத் தரப்படுத்துதலும், இக்கருவிகளில் பயன்படுத்தத்தேவையான தமிழ்க்கணிணி குறுஞ்செயலிகள் (முதன்மையாக ஆப்பிள், ஆண்டிராய்டு, விண்டோசு)
- திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கம்.
- தமிழ் இணையம், தமிழ் வலைப்பூக்கள், விக்கிப்பீடியா, சமூக இணையதளங்கள், தமிழ் மின்நூலகங்கள், மின்பதிப்புகள், இணைய, கணினிவழி தமிழ்நூல்கள் ஆய்வு, கையடக்க மின்படிப்பான்களில் தமிழ் நூல்கள், தமிழ் மின்வணிகம் மற்றும் பிற தமிழ்ப் பயன்பாட்டு நோக்குடன் தயாரிக்கப்பட்ட கணினி மென்பொருள்கள்.
- எண்ணிம ஆவணப் பாதுகாப்பு, எண்ணிமத்திரட்டுகள்
- தொடர்புறு தரவுகள் (இணைப்புத் தரவு)- Linked Data, தமிழில் பொருளுணர் வலை(semantic web); தரவுக் காட்சிப்படுத்தல் – Data Visualization
- கற்றல் மேலாண்மை அமைப்புகள்(Learning Managements Systems),மெய்நிகர் கல்விச்சூழல்(Virtual Learning)
- எண்ணிமப் பாதுகாப்பு – Digital Preservation, எண்ணிம நூலகம் – Digital Library, எண்ணிம ஆவணகம் – Digital Archive, இணைப்புத் தரவு – Linked Data,மெய்ப்பொருளியம் –Ontology
நட்புடன்
தனேசு பாலகிருட்டிணன்
ஆய்வுக்குழுத் தலைவர், மலேசியா
ஆய்வுக்குழுத் தலைவர், மலேசியா
முனைவர் கா. இலட்சுமி
(முதுமனைவர் பட்ட ஆய்வாளர்)
(முதுமனைவர் பட்ட ஆய்வாளர்)
செயலர், தமிழ்நாடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக