திங்கள், 19 டிசம்பர், 2016

திருச்சியில் மலேசியா எழுத்தாளருக்குப் பாராட்டு விழா

நந்தவனம், மலேசியா எழுத்தாளருக்குப் பாராட்டு02 ; malaysia_ezhuthaalar_paarattu_nandavanam02

திருச்சியில் மலேசியா எழுத்தாளருக்குப்

பாராட்டு விழா

  நந்தவனம்  நிறுவம், திருக்குறள் கல்வி மையம், கோவிந்தம்மாள் தமிழ் மன்றம் இணைந்து மலேசியா முத்தமிழ்ப் படிப்பகத் தலைவர் பெ.இராமன் அவர்களுக்கான பாராட்டு விழாவைத் திருச்சிராப்பள்ளியில் சிறப்பாக  நடத்தின.
  திருக்குறள் கல்வி மையத்தலைவர் சு.முருகானந்தம் தலைமையில் எழுத்தாளர் மழபாடி இராசாராம் முன்னிலையில்  இவ்விழா நடைபெற்றது.
  நந்தவனம் சந்திரசேகரன், கப்பல் கவிஞர் கிருட்டிணமூர்த்தி சூரியக்குமார்,  புலவர் தியாகசாந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர்.
   முன்னதாகக் கோவிந்தம்மாள் தமிழ் மன்றத்தலைவர் ப.நாகராசன் அனைவரையும் வரவேற்றார்.
   நிறைவில் கவிஞர் ஆங்கரைபைரவி நன்றி கூறினார்
  நிகழ்வில் எழுத்தாளர்களும் தமிழ் அறிஞர்களும் கலந்து கொண்டனர்.

நந்தவனம், மலேசியா எழுத்தாளருக்குப் பாராட்டு01 ; malaysia_ezhuthaalar_paarattu_nandavanam01

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக