சனி, 19 நவம்பர், 2016

செல்லாப்பணத்தாள் மாற்றம் – மாணிக்கவாசகம் பள்ளியில் மாணவர்களுக்கு வழிகாட்டினர்




மாணிக்கவாசகம் பள்ளி, பணமாற்ற விளக்கம்02 ; manickavasakam_palli_panamatram02

செல்லாப்பணத்தாள் மாற்றம்

– மாணிக்கவாசகம் பள்ளியில்

மாணவர்களுக்கு  வழிகாட்டினர்

  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி, தேவகோட்டையில் இருந்தாலும் தலைநகரில் உள்ள வசதியான பள்ளி போன்று மாணவர்களை  இற்றைநாள்(up to date) விவரம் அறிந்தவர்களாக ஆக்குவதிலும் கல்வியுடன்  பிற துறை நடவடிக்கையில் ஈடுபடச் செய்வதிலும் முன்னணியில் உள்ளது.  எனவே, இன்றைய தலையாயச் சிக்கலான செல்லாததாக அறிவிக்கப்பட்ட  500 உரூபா, 1000 உரூபாய் பணத்தாள்களை மாற்றுவது எப்படி என்று விளக்கி உள்ளனர்.
 இக்கூட்டத்தில் பள்ளி மாணவர் விசய் அனைவரையும் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
 தலைமையுரையாகப் புதிய  உரூபாய் 500 பணத்தாள்,  உரூபாய் 1000 பணத்தாள் ஆகியவற்றை .எப்படிப் பெறுவது என்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.
 இது தொடர்பான தகவல்கள்   அடங்கிய  துண்டறிக்கைகளும் மாணவர்கள்,ஆசிரியர்கள் அனைவருக்கும் பள்ளியின் சார்பாக வழங்கப்பட்டன. .பணம் மாற்றும் படிவம் வேண்டுவோர் பள்ளியில் வந்து பெற்று கொள்ளலாம் எனவும் எடுத்துச் சொல்லப்பட்டது.
 பழைய 500,1000  உரூபாய்த் தாள்கள் அனைத்தும் வங்கியில் செல்லும் என்றும்,  ஆனால், அவற்றை வங்கியில் தான் கொண்டு சென்று மாற்ற இயலும் என்றும் தெளிவாகப்  பெற்றோர்களிடம் சொல்ல வேண்டும்; வீட்டைச் சுற்றி உள்ள அனைவரிடமும் இது தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்  என்பன போன்ற தகவல்களை ஆசிரியர்  சிரீதர் எடுத்துச் சொன்னார்.
நிறைவாக மாணவி அல்நிசுமாபேகம் நன்றி கூறினார்.

(படங்களைப் பெரிய அளவில் காண அழுத்திப் பார்க்க வேண்டுகிறோம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக