திங்கள், 14 நவம்பர், 2016

அ.தி.மு.க. மூத்தத் தலைவர் விசாலாட்சி நெடுஞ்செழியன் காலமானார்அ.தி.மு.க. மூத்த தலைவர் விசாலாட்சி நெடுஞ்செழியன் காலமானார் 

அ.தி.மு.க.வின் மூத்தத் தலைவரும், கட்சியின் அமைப்புச் செயலாளருமான விசாலாட்சி நெடுஞ்செழியன் (93)சென்னையில் இன்று காலமானார். உடல்நலக் குறைவு ஏற்பட்டு, கடந்த சில  நாள்களாகப் பண்டுவம் பெற்று வந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது.

முன்னாள் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியனின் துணைவியாரான விசாலாட்சி நெடுஞ்செழியன், கட்சி வளர்ச்சிக்காக பல்வேறு நிலைகளில் பாடுபட்டவர். தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

 

 

 

செய்தி: மாலைமலர்

படங்கள்; : செண்பகபாண்டியன், நக்கீரன்