நம் எண்களை நாமறிவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
உலகளாவிய அளவில் பயன்படுத்தப்பட்டு வரும்
1, 2, 3… என்னும் முறையிலான எண்கள் தமிழில் இருந்து அரபிக்குச் சென்று
பரவியதே இருப்பினும், நாம் மூலத்தமிழ் எண் வடிவங்களை அறிதல் வேண்டும்.
பிறமொழியினர் அவர்கள் மொழியின் எண்களைக் குறிப்பிடவும் பயன்படுத்தவும்
அறிந்திருக்கையில் நாம் அறியாதிருப்பது அழகன்று. ஆதலின் தமிழ் எண்கள்
தரப்படுகின்றன. பத்து முதலான தமிழ் எண்கள் எழுகையில் இரண்டு நூற்றாண்டுகளாக
உலக நடைமுறை பின்பற்றப்படுகிறது.
‘௰’ என்பதே ‘10’ ஆகும். ஆனால் பலர் ‘’10’
என்றே குறிக்கின்றன. ‘௰’ எனக் குறிப்போரும் 11 முதல் கக, உங, ச அ என்பன
போன்று பயன்படுத்துகின்றனர்.
இருபத்து மூன்று என்றாலும் (உ(இரு) ௰
(பத்து) 3(மூன்று) உ௰3 என்றும் இருநூற்று இருபத்து ஏழு என்பது உ௱உ௰எ எனவும்
முன்னர்க் குறிப்பிட்டனர்.
உரோமன் முறையும் இவ்வாறுதான் ஆனால்
உரோமன் முறையில் மாற்றம் செய்தால் எண்மதிப்பு மாறும். சான்றாக 15 என்பது I
என்பதையும் என்பதையும் V சேர்த்து IV எனக் குறிப்பிட்டால் ‘4’ என ஆகிறது. X
என்பதையும் என்பதையும் V சேர்த்து XV என எழுதினால்தான் எண் மதிப்பு சரியாக
அமையும் ஆனால் தமிழில் இடமதிப்பிற்கு ஏற்க ‘கரு’ என எழுதினால் மதிப்பு
மாறாது. எனவே இவ்வழக்க முறையையே நாம் பயன்படுத்தி வருகிறோம். பத்திரப்பதிவு
முதலான ஆவணங்களில் பழைய முறைபின்பற்றப்பட்டு வந்துள்ளதை உணர்ந்து
அவ்வெண்களை நாமும் அறிந்து பின்பற்ற வேண்டும்.
௦(0), ௧(1), ௨(2), ௩(3), ௪(4), ௫(5), ௬(6), ௭(7), ௮(8), ௯(9), ௰(10)
என்பனவே, சுன்னம் அல்லது சுழியம் முதல்
பத்து வரையிலான தமிழ் எண்கள். இவ்வெண்களிலிருந்தே இன்றைக்குப்
பயன்படுத்தும் அடைப்பிற்குள் குறிப்பிட்டுள்ள 0 முதல் 10 வரையிலான அடிப்படை எண்கள் உருவாயின. பத்திற்கு மேல்,
௰௧(11), ௰௯(19), ௨௰(20), ௨௰௧(21) …..௯௰௯(99), ௱௧ (101)… ௯௱ (900), ௲ (1000), ௲ ௱(1100), ௲௯௱(1900), ௨௲(2000), …. ௯௲(9,000), ௰௲(10,000), … ௯௱௲(90,000), ௱௲(100,000) ௱௱௲(100,00,000)
என்பனபோல் எழுத வேண்டும். அஃதாவது அறுபத்து
ஏழு என்றால் ஆறு பத்தும் ஏழும் என்பதுபோல் ஆறு பத்தைக்குறிப்பிட்டு ஏழைக்
குறிக்க வேண்டும். எண்பதாயிரத்து எட்டு என்றால் எட்டுபத்துஆயிரமும்
எட்டும்என்பதுபோல் குறிக்க வேண்டும். அறுபதில் ஆறு பத்துகள் உள்ளமையையும்
எண்பதாயிரத்தில் எட்டு பத்தாயிரம் உள்ளமையையும் குறிப்பதுபோல் எல்லா
எண்களையும் விரித்துக் கூற வேண்டும்.
கீழ் வாய் இலக்கம்
இவைபோன்ற பெருமதிப்பிலான எண்களும்
மிகவும் குறைந்த மதிப்பிலான பின்ன எண்களும் வேறு எம்மொழியிலும் நடைமுறையில்
இல்லை. இதன்மூலம் பழந்தமிழரின் கணக்கு அறிவியல் தலைசிறந்து இருப்பதை
உணரலாம்.
மேலும் சுழி என்றும் குறிக்கப்படும் ‘0’
‘சுன்னம்’ தமிழர்களின் கண்டுபிடிப்பே; பிற மொழிகளில் சுன்ன என்பது போன்று
மாறி அளிக்கப்படுகிறது.
பயன்பாட்டில் இல்லாத எதுவும்
மறைந்தொழியும், எனவே தமிழின் வடிவங்களைப் பிரிவு எண்கள், துணை எண்கள்,
உட்பிரிவு எண்கள் போன்ற முறைகளில் பயன்படுத்தலாம்.
அறிவியலுக்கு அடிப்படை கணக்கு என்பதால்
கணக்கறிவியலில் உயர்நிலையுற்றிருந்த பழந்தமிழர் பிற அறிவியல் துறைகளிலும்
சிறந்து விளங்கினர் என்பதில் ஐயமில்லை.
– இலக்குவனார் திருவள்ளுவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக