வெள்ளி, 17 ஜூலை, 2015

சாதிமுறையைத் தூக்கிப் பிடித்தவர்களால் ஏற்பட்ட இடைச்செருகல்கள்



தொல்காப்பிய மொழிபெயர்ப்பு - முன்அட்டை
சாதிமுறையைத் தூக்கிப் பிடித்தவர்களால் ஏற்பட்ட இடைச்செருகல்கள்
  மிகப்பழங்கால நூல்களில் இடைச்செருகல்கள் ஏற்படுவது மிக இயல்பான ஒன்றாகும். கி.மு.7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்காப்பியத்திலும் இவ்வாறே ஏற்பட்டுள்ளது. குறும்புக்காரர்களின் கைகள் இதனைத் தொடாமல் விட்டு வைக்கவில்லை. எழுத்து அதிகாரமும் சொல் அதிகாரமும் தொகுப்பாக அமைந்து ஒவ்வொரு இயலின் பொருண்மையும் நிரல் பட அமைந்து நூற்பாக்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்து விளங்குகிறது. இவ்விரண்டும் மொழி குறித்த ஆய்வாகும். இடைச்செருகல் ஏற்பட்ட இடைக்காலத்தில் மொழிக் கல்வியில் யாருக்கும் நாட்டம் இல்லை என்பது தோன்றுகிறது.
  ஆனால் பொருள் குறித்த 3ஆவது அதிகாரம் இலக்கியத்தையும் மன்பதை இயலையும் பற்றியது. இடைக்காலங்களில் சமசுகிருதத்தின் செல்வாக்கு மிகுதியாக இருந்திருக்கிறது. சமசுகிருதம் சமயம், முறை மன்றம், பண்பாட்டு மொழியாக இருந்திருக்கின்றது. மக்கள் மொழியான தமிழ் பின் இடத்திற்கு தள்ளப்பட்டு இதன் படிப்பு புறக்கணிக்கப்பட்டு இருந்திருக்கிறது. அறிஞர்கள் சமசுகிருத இலக்கண விதிமுறைகளைத் தமிழ் மொழியின் மீது திணிக்க முயன்று இருக்கின்றனர். அரசர்கள் சமசுகிருத மக்களின் பழக்க வழக்கங்களைப் பின்பற்றி சமசுகிருத விதிமுறைகளைத் தமிழ்மக்களின் விதிமுறைகள்போல் உருவாக்கி இருந்து இருக்கின்றனர். பழந்தமிழ் மக்களால் சாதி முறை அன்றாட ஒழுங்காய் மாறி இருந்திருக்கின்றது. எனவே சாதிமுறையைத் தூக்கி பிடித்த சில அறிஞர்கள் சாதியினம் பற்றிய சில நூற்பாக்களைப்பற்றி தொல்காப்பிய மூலத்தில் இடையே செருகி இருந்திருக்கின்றனர். ஆனால் இடைச்செருகல் வெற்றிகரமாக முடிக்கப்படவில்லை. இவ்வாறு இடைச்செருகலான நூற்பாக்கள் மூலத்தோடு தொடர்புடையன அல்ல. அவ்விடங்களில் அவை தேவையின்றியும், தொடர்புமின்றியும் உள்ளன. மிக இயல்பான வாசிப்புங்கூட அவற்றின் அயல்தன்மையை வெளிப்படுத்திவிடும். இத்தகைய இடைச்செருகல்கள் பொருளதிகாரத்தில் மட்டுமே காணப்படுகின்றன.
– பேராசிரியர் சி.இலக்குவனார் தொல்காப்பிய ஆங்கிலமொழிபெயர்ப்பும் திறனாய்வும்
(Tholkāppiyam in English with critical studies)
ilakkuvanar+12தமிழாக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக