தமிழ்ப்
பண்டிதர்களே! தமிழ்சனங்களே சாக்கிரதை! சாக்கிரதை! உங்களுடைய மொழியைக்
காப்பாற்றுங்கள். ஒரு சன சமூகத்திற்கு உயிர் அதன் மொழிதாள். தமிழ் மொழி
அழிந்துவிட்டால் தமிழர்களின் சிறப்பும், சீரும்
அழிந்துவிடும். தமிழ் மொழியில் தேவையான பதங்கள் இல்லையென்று வாய் கூசாமல்
கூறுகின்ற பாரத புத்திரர்களுக்கு அப்பதங்களை ஆராய்ந்து கண்டுபிடித்துக்
கொடுங்கள். சரியான பதங்கள் இல்லையேல் தமிழ் வாணியின் கிருபை கொண்டு இன்னும்
அநேக காரணப் பெயர்களையாக்கிக் கொள்ளுங்கள்.
உங்கள் நா தமிழே பேசுக! நீங்கள்
கையிலேந்தும் இறகு தமிழே எழுதுக! உங்களுடைய இருதயம் தமிழையே நாடுக!
உங்களையெல்லாம் தமிழ் மாது தயையுடன் இரட்சித்திடுக!
– சுப்பிரமணிய சிவா : ஞானபாநு, செப்டம்பர், 1915
அகரமுதல 83, வைகாசி 31, 2046 / சூன் 14, 2015
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக