புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பாக உலகத் தாய்மொழிநாள் – பாவாணர் பிறந்தநாள் விழா
மாசி 16, 2046 / 28-02-2015 சனிக்கிழமை மாலை 6-00 மணியளவில் புதுவைத்
தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.
புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் மு.பாலசுப்பிரமணியன் விழாவுக்கு வருகை தந்தவர்களை வரவேற்றார்
புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து அவர்கள் தலைமை வகித்தார்
புதுவைத் தமிழ்ச் சங்கத் துணைத்
தலைவர்கள் கலைமாமணி கோ.பாரதி, செந்தமிழ்ச் செம்மல் சீனு.வேணுகோபால்,
பொருளர் தி.கோவிந்தராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்
“மாண்புகள் நீயே என்தமிழ்த் தாயே”
எனும் தலைப்பில் பாட்டரங்கம் நடைபெற்றது. பாட்டரங்கில் கவிஞர்கள்
செ.செல்வகுமாரி, மேகலாசெழியன், இரா.பிரபா, சுசாதா சரவணன், கி.சக்திபிரியா,
செ.சாந்தகுமாரி, இரா.பாரதிராசா, பு.சந்திரமோகன்
சிவ. அசோக்ராசு, இரா. இராசசேகர் ஆகியோர் கவிதைகள் வாசித்தனர்
பாவாணர் குறித்து முனைவர் க.தமிழமல்லன் அவர்கள் சிறப்புரையாற்றினார்
புதுவைத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் அ.கனகராசு அவர்கள் நன்றியுரை வழங்கினார்
விழாவில் தமிழ்மாமணி மன்னர் மன்னன்,
கலைமாமணி இ.பட்டாபி இராமன், கலைமாமணி கோனேரி இராமசாமி, அய்யன்காளி மனோகரன்,
புலவர் சிவ.இளங்கோவன் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தியாகி மு.அப்துல் மசீத்
ஆகியோரும் திரளான தமிழறிஞர்களும் கலந்து கொண்டனர்
மு.பாலசுப்பிரமணியன்
செயலர்
புதுவைத் தமிழ்ச் சங்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக