தமிழ் உரிமை காக்கப்
பெருநடைப் பயணம்
மேற்கொள்வது குறித்த
இலக்குவனார் வேண்டுகோள்!
கல்வித்துறையிலும் ஆட்சி, நீதி, கலைத்
துறைகளிலும் தமிழ்உரிமையை நிலைநாட்டும் நல்லநோக்கத்துடன், அண்மையில் தமிழ்
உரிமைப் பெருநடைச் செலவொன்றை மேற்கொள்ள இருக்கின்றோம்.
கல்லூரிகளில் உடனே தமிழைப் பாட மொழியாக
ஆக்கவேண்டியதின் இன்றியமை யாமையை மக்களிடையே விளக்க வேண்டும். பெற்றோர்கள்,
மாணவர்கள், ஆசிரியர்க ளிடையே தமிழ்மூலம் படிப்பதனால் ஏற்படும்
நன்மைகளையும் பிறமொழிகள்மூலம் படிப்ப தனால் ஏற்படும் தீமைகளையும்
எடுத்துச்சொல்ல வேண்டும். தமிழைப் பாடமொழியாகக் கொண்டு படிக்க வருவோர்
தொகையை மிகுதிப்படுத்த வேண்டும். உயர்நிலைப் பள்ளி களில் ஒரே காலத்தில்
தமிழைப் பாடமொழியாக ஆக்கியதுபோல் கல்லூரிகளிலும் ஒரேசமயத்தில் எல்லா
துறைகளிலும் எல்லா நிலைகளிலும் தமிழைப் பாடமொழியாக்க வேண்டுமென்று
அரசினரிடம் வற்புறுத்த வேண்டும். சென்னை யில் தமிழக முதலமைச்சரையும்,
சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரையும் கண்டு, தமிழைக் கல்லூரிப்
பாடமொழியாக உடனே ஆக்குமாறு வற்புறுத்தி, வேண்டுகோள் கொடுக்க வேண்டும்.
இந்நோக்கங்கள் அனைத்தும் ஒருசேர
நிறைவேறப்பாடுபடும் பெருமுயற்சியே இப்பெரு நடைச்செலவு. இச்செலவு கட்சிச்
சார்பற்றது; அரசியல் தொடர்பற்றது. (ழிஷீஸீ-ஜீணீக்ஷீtஹ் ணீஸீபீ
ழிஷீஸீ-ஜீஷீறீவீtவீநீணீறீ) கற்றறிந்த மக்களுக்கும், தமிழ்மக்கள்
அனைவருக்கும் உரியது இவ்வுரிமைப் பெரு நடைச் செலவு.
மதுரை தொடங்கிச் சென்னை வரை கால்நடையாகச்
செல்வது; கல்லூரிகள் உள்ள இடங்களை முதன்மையாகக் கருதிக்கொண்டு, மேலூர்,
திருப்பத்தூர், காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர்,
கும்பகோணம், மாயூரம், சிதம்பரம், கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம்,
செங்கற்பட்டு, காஞ்சிபுரம், முதலிய ஊர்களின்வழியாகநடந்து, இப்பெருநடை அணி
சென்னை சென்று அடையும். நாள்தோறும் காலை 5.00 மணிக்குப் புறப்பட்டு 11.00
மணி வரை நடத்தல்; மாலையில் சொற்பொழிவு, வில்லுப்பாட்டு, நாடகம் முதலிய
நிகழ்ச்சிகளால் தமிழைப் பாடமொழியாக்கு வதன் இன்றியமையாமையை விளக்குதல்;
முற்றிலும் தமிழ்ப்பணியே தலைப்பணியாகக் கொள்ளுதல் என்பவை நிகழ்ச்சி
முறைகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக