செவ்வாய், 4 நவம்பர், 2014

மேற்குமலைத்தொடர்ச்சிப் பகுதியில் ஊற்றுகள்

மேற்குமலைத்தொடர்ச்சிப் பகுதியில் இயற்கையாக உருவான ஊற்றுகள்

51naturalspring

மேற்குமலைத்தொடர்ச்சிப் பகுதியில் ஆறாக மாறும் ஊற்றுகள்

தேனி அருகே உள்ள மலைப்பகுதியில் இயற்கையாக ஏராளமான ஊற்றுகள் உருவாகி ஆறுகளாகப் பாய்கின்றன.
தேவதானப்பட்டி அருகே உள்ள மேற்குமலைத்தொடர்ச்சியல் கடந்த சில வாரங்களாக மழை பொழிந்து வருகிறது. இதனால் தலையாறு அருவி, வறட்டாறு, மூலையாறு அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் மேற்குமலைத்தொடர்ச்சியில் அமைந்துள்ள டம்டம்பாறை செல்லுகின்ற வழியில் ஏராளமான ஊற்றுகள் உருவாகி ஆறுகளாக ஓடுகின்றன.
மலையில் வெள்ளிகளை உருக்கி வார்த்தாற்போல் இக்காட்சி அமைந்துள்ளது. அப்பகுதியில் செல்லுபவர்கள் இதனைக்கண்டும் களித்தும் ஒளிப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர்.
இந்த இயற்கையான ஆறுகளில் இருந்து வரும் தண்ணீரானது மஞ்சளாற்றில் கலக்கிறது. இதனால் தண்ணீர்ச்சிக்கல் தீர்க்கப்பட்டுக் கிணறுகளில் ஊற்றுகள் சுரக்கத் தொடங்கிவிட்டன.
 அதே வேளையில் இந்த இயற்கை ஊற்றுகளினால் அப்பகுதியில் உள்ள பாறைகள் பெயர்கின்றன; அங்குள்ள மரம் செடிகள் அடித்து இழுத்து வந்து சாலையில் விழுகின்றன. எனவே மழைக் காலம் முடியும் வரை உலாஊர்தி அமைத்து இயற்கை இடர்ப்பாடுகளைக் களையவேண்டும் எனவும் இரவு நேரங்களில் மலைப்பகுதிகளில் வாகனம் செல்லுவதைத் தடுத்து நிறுத்தினால் துயர்நேர்ச்சிகளை(விபத்துக்களை)த் தவிர்க்கலாம் எனவும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்
51_vaigaianeesu



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக