46Bakrithprocession
தேனிப் பகுதியில் ஈகைத்திருநாள் கொண்டாடப்பட்டது.
தேவதானப்பட்டி பகுதியில் ஈகைத்திருநாளை முன்னிட்டுத் தத்தம் வசதிக்கேற்ப ஆடு, மாடு போன்ற கால்நடைகளை அறுத்துப் பண்டிகையைக் கொண்டாடினார்கள். பள்ளிவாசல்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.
தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரத்தில் குள்ளப்புரம் பள்ளிவாசலிலும், செயமங்கலத்தில் செயமங்கலம் பள்ளிவாசலிலும், பொம்மிநாயக்கன்பட்டி, கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி பகுதிகளில் உள்ள இசுலாமியர்கள் ஈகைத்திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடினார்கள்.
இவை தவிர தமிழ்நாடு தவுஃகித்து சமாத்து அமைப்பினர் 7.30 மணிக்கே ஈகைத்திருநாளைக் கொண்டாடினார்கள். மற்ற பள்ளிவாசல்களில் 9.00 மணிமுதல் 9.30 மணிவரை ஈகைத்திருநாள் கொண்டாடினார்கள்.
ஈகைத்திருநாளை முன்னிட்டு அறுக்கப்படும் கால்நடைகளை மூன்று பாகங்களாக பிரித்து ஒரு பங்கை அறுப்பவர்களும் மற்றொரு பங்கை உறவினர்களுக்கும், மூன்றாவது பங்கை ஏழைகளுக்கும் வழங்கினார்கள்.
ஈகைத்திருநாளை முன்னிட்டுச் சிறப்புவழிபாடு நடைபெற்றது. மழை பொழியவேண்டியும், நாடு செழிப்பாக விளங்கவேண்டும் என்றும் பல்வேறு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இவை தவிர மற்ற சமூக மக்களுக்கு ஈகைத்திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
vaigaianeesu_name02