தேனிப் பகுதியில் கடந்த சில நாளாகப் பெய்த மழையின் காரணமாகச் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
இருவழிச்சாலை அமைக்கும் பணியும்
புறவழிச்சாலை அமைக்கும் பணியும் நடைபெற்றது. இதனால் திண்டுக்கல்லில்
இருந்து தேவதானப்பட்டி வரை சாலைவேலைகள் நடைபெற்றன. அதன் பின்னர் அப்பணி
நிறுத்தப்பட்டது. அப்போது இருந்தே தேவதானப்பட்டிச் சாலைகள் பழுதடைந்தன.
இருவழிச்சாலை அமைக்கப்படும்போது அச்சாலை
செப்பனிடப்படும் என நெடுஞ்சாலைத்துறை அறிவித்தது. தற்பொழுது அந்தப்பணி
நிறுத்தப்பட்டது. இதனால் தேவதானப்பட்டியிலிருந்து பெரியகுளம் வரை செல்லும்
சாலையும், தேவதானப்பட்டியிலிருந்து வைகை அணை செல்லும் சாலையும்
பழுதடைந்துள்ளன. மேலும் இச்சாலை மிக முதன்மையான சாலையாகும். கொடைக்கானல்,
வைகை அணை, மூணாறு, தேக்கடி ஆகிய இடங்களுக்குச் செல்ல இந்தச்சாலையைத்தான்
சுற்றுலா பயணிகள் அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர்.
இதனால் பழுதடைந்த சாலையால் இருசக்கர
வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களின்
பட்டை(டயர்)களும் சேதமாகின்றன. மேலும் குண்டும், குழியுமாக இருப்பதால்
அடிக்கடி நேர்ச்சிகள் ஏற்படுகின்றன. எனவே சேதமடைந்த சாலையை
செப்பனிடவேண்டும் என இப்பகுதி மக்கள் மாவட்ட நிருவாகத்திற்குக் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக