கனடாவில் உள்ள தமிழ் இலக்கியத் தோட்டம்
என்ற அமைப்பு 2013ஆம் ஆண்டிற்கான சுந்தரராமசுவாமி தமிழ்க் கணிமை விருது மணி
மு. மணிவண்ணனனுக்கு வழங்கியுள்ளது. இதற்கான விழா கனடாவில் அன்று
நடைபெற்றது.
முத்து நெடுமாறன், கல்யாணசுந்தரம்,
முகுந்து சுப்பிரமணியன், வாசுஅரங்கநாதன் ஆகியோர் வரிசையில் கடந்த
ஆண்டிற்கான விருதினை மணி மு. மணிவண்ணன் பெற்றுள்ளார்.
புழைக்கடைப் பக்கம்
சொல்வளம் – உங்கள் தமிழ்ச் சொல் திறனறிதல்
தமிழ் எழுத்துச் சீர்மை
முதலான இவரின் வலைத்தளங்களும் இவரின் முகநூல் பக்கங்களும் இவரது கருத்தாழத்தையும் சொல்லாய்வு ஆர்வத்தையும் நமக்கு உணர்த்தும்.
புலம் பெயர்ந்த அமெரிக்கத் தமிழரான இவர். கணிஞர் என்ற முறையில் கணித்தமிழ் ஆர்வம் கொண்டு

சான் ஃபிரான்சிசுகோ வளைகுடாப் பகுதியின்
தமிழ் மன்ற உறுப்பினர் என்ற வகையில் தமிழ்மணம் பரப்பி வருகிறார். வட
அமெரிக்கத்தமிழ்ச்சங்கப் பேரவை மூலமும் தொண்டாற்றிய இவர், அமெரிக்கத்
தமிழர்களின் திங்களிதழான தமிழ்த்தென்றலின் ஆசிரியராகப் பணியாற்றி
இதழாளராகவும்
திறம்பட விளங்கி உள்ளார். பாரதியின் “பாஞ்சாலி சபதம்” – கவிதை நாடகம்,
இந்திரா பார்த்தசாரதியின் “இராமானுசன்”, “அக்கினிக்குஞ்சு – பாரதி வரலாறு”
ஆகிய நாடகங்களை தமிழ்மன்ற மேடையில் அரங்கேற்றி நாடக வளர்ச்சிக்கும்
உறுதுணையாக இருந்துள்ளார்.

தனக்குக் கிடைத்த இவ்விருதை, இவர் தன் தனி ஒருவரின்
பணிக்குக் கிடைத்த விருதாகக் கருதாமல், நூற்றுக்கணக்கான தமிழார்வலர்களின் பணிகளால் தனக்குக் கிடைத்ததாக மகிழ்கிறார்.

[விருது விழா காணொளி காண :
சுந்தரராமசுவாமி தமிழ்க் கணிமை விருதாளர் மணி மு. மணிவண்ணன்
மேலும் பல விருதுகள் பெற்று மேன்மேல் சிறக்கவும்
தமிழ்த்தொண்டுகளைத் தொடரவும்
அகரமுதல இதழ் அகங்கனிந்து வாழ்த்துகிறது!
மங்காப்புகழுடன் மணி மு. மணிவண்ணன் வாழ்க! வாழ்கவே!
இதழுரை
ஆடி 4, 2045 / சூலை20, 2014

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக