பெண்களும், ஒடுக்கப்பட்டவர்களும் பூசை செய்யலாம்! உச்சநீதிமன்றத்தின் சிறந்த தீர்ப்பு
மகாராட்டிர மாநிலத்தில் சோலாப்பூரை அடுத்த பந்தர்பூரில் 900ஆண்டுகள் பழைமைவாய்ந்த வித்தோபா கோயில் உள்ளது. புனித நகராகக்கூறப்படும் இந்நகரில் உள்ள கோயிலின் வர லாற்றிலேயே முதன்முதலாக, பூசை செய்வதற்கு, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு அர்ச்சகராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன்மூலம் பழமையான ஆண்ஆதிக்கம் உடைத்து நொறுக்கப்பட்டு முடிவுக்கு வந்துள்ளது.
வித்தல் (உ)ருக்குமணி கோயில் அறக்கட்டளையின் தலைவர் அன்னா டாங்கே இது குறித்து கூறும்போது, நூற்றாண்டுகளாக, பிராமணர்களால் மட்டுமே கோயில் பூசை, சடங்குகள் செய்யப் பட்டு வந்ததை மாற்றி, நாட்டிலேயே முதல் முயற்சியாக கோயில் அறக் கட் டளை மூலமாகவே பழைய முறை உடைத்து நொறுக்கப்பட்டுள்ளது.
நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் கோயில் பூசைகள், சடங்குகள் ஆகியவற்றை அனைத்துச் சாதியினரும் -குறிப்பாக - பிராமணர் அல்லாதோர்- செய்ய வேண்டும் என்று விரும்பினோம். அதற்கேற்ப உச்சநீதிமன்றத் தீர்ப்பு கிடைத்துள்ளது என்றார்.
40ஆண்டுகாலமாக நிலுவையில் இருந்த இது தொடர்பான வழக்கில் பாத்துவே, உத்பத்து ஆகிய குடும்பங்களின் உரிமையை விலக்கும் வகையில் இவ்வாண்டின் தொடக்கமான சனவரியிலேயே தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இப்பொழுது தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டடவர்களும் பெய்ண்களும் அருச்சகராகலாம் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. .
சோலாப்பூர் - பந்தர்பூர் கோயில் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையின் வெளிச்சத்தில், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் தமிழக அரசின் அருச்சகர் சட்ட வழக்கின் மீதான தீர்ப்பை நாடே எதிர்ப்பார்க்கிறது என விடுதலை ஆசிரியர் வீரமணி தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக