வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

'படிப்போம் நம் தாய்மொழியை' - பேராசிரியர் மறைமலை இலக்குவனார்

 
 
மிச்சிகன்வாழ்தமிழ்மக்களே! 'படிப்போம் நம் தாய்மொழியை' - பேராசிரியர் மறைமலை இலக்குவனார்
Welcome to Tamil Sangam!
The number one community resource for Tamil Speaking families in Michigan. Tamil Sangam, Michigan is a non-profit organization, with no religious or political alignment. The core objective is - "Preserve and Nurture the Tamil language, culture and arts in Michigan, in a unique social atmosphere".
அன்பார்ந்த மிச்சிகன்வாழ்தமிழ்மக்களே! MTS தமிழ்ப்பள்ளி பெற்றோர்களே!

“நான் ஏன் தமிழ்ப்பள்ளிக்கு செல்லவேண்டும்? தாய்மொழியை கற்கவேண்டும் ?”
என்ற உங்கள் குழந்தைககளின் கேள்விகளுக்கு விடை வேண்டுமா?

விடையளிக்க, தமிழ் பேராசிரியர், இலக்கியத் திறனாய்வாளர், கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் இதழாசிரியர் என்கிற பன்முகம்கொண்ட தமிழறிஞர் முனைவர்.மறைமலை இலக்குவனார் அவர்கள் நம் மிச்சிகன் தமிழ் மக்களுக்காகவும், தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காகவும் பேருரை ஆற்ற இருக்கிறார்.

தலைப்பு 1: ‘படிப்போம் நம் தாய்மொழியை’
( தமிழ் மொழியின் அவசியமும் சிறப்பும்- குழந்தைகளுக்கு புரியும் வடிவில் எளிய தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்த ஊக்கமூட்டும் உரை)
தலைப்பு 2: ‘வள்ளுவமும் வாழ்வியலும்’
( நம் வாழ்வோடு இணைந்த குறலமுதம் - பெரியவர்களுக்கான அனல்பறக்கும் உரை )

நாள் : மார்ச் 1, 2014
நேரம் : மாலை 3 மணி - 5 மணி
இடம் : ரூதர் நடுநிலை பள்ளி, சிற்றுண்டி வளாகம், ராசெஸ்டர் ஹில்ஸ், மிச்சிகன்
(Reuther Middle School,1430 E Auburn Rd, Rochester Hills, MI 48307)

அனைத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களும்,பெற்றோர்களும் மற்றும் தமிழ்ச்சங்க உறுப்பினர்களும் இந்நிகழ்ச்சியில் தவறாமல் வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இது அருமையான வாய்ப்பு! உங்கள் நேரத்தை பயனுள்ளதாய் மாற்றிக்கொள்ளுங்கள்.

MTS தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவு மிகவும் அவசியமானது. சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் பற்றிய சில வரிகள் ...
இவர் தமிழ் மொழியில் கலைமுதுவர் (Master of Arts) பட்டம் பெற்றவர். மொழியியலில் முனைவர் (PhD) பட்டம் பெற்றவர்.வடமொழியில் பட்டயமும் (Diploma in Sanskrit) பெற்றவர். சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்த் துறை விரிவுரையாளர், பேருரையாளர், பேராசிரியர் என பல்வேறு நிலைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் தெற்கு,தென்கிழக்காசியவியல் ஆய்வுத்துறையின் (Department of South and Southeast Asian Studies) தமிழ்ப்புலத்தில் சிறப்பு வருகைப் பேராசிரியராகப் பணியாற்றி உள்ளார்.
தமிழில் ஆழ்ந்த ஆர்வம் உடைய இவர் , பல கவிதைகளும் , நூல்களும் ,மொழிபெயர்ப்புகளும் எழுதி உள்ளார் . வலைத்தளத்தில் வலைபதிவும் செய்துகொண்டிருக்கிறார் .தற்பொழுது ‘செம்மொழிச் சுடர்’ என்னும் மின்னிதழின் ஆசிரியராகத் திகழ்கிறார்

அனைவரும் வாரீர்! சொற்பொழிவை கேளிர்!
இது நமது தமிழ் சங்கம் ! நமது தமிழ்ப்பள்ளி!

இப்படிக்கு,
தமிழ்ச்சங்கம் மிச்சிகன்
MTS தமிழ்ப்பள்ளிகள் (டிராய்,பர்மிங்க்டன் ஹில்ஸ் மற்றும் கேன்டன்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக