ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

அகரமுதல இணைய இதழ் 14 - பதிவுகள் சில


image-2249

நியூயார்க்குத் தமிழ்ச் சங்கத் தமிழர் திருநாள்

நியூயார்க்குத் தமிழ்ச் சங்கம் 2014 ஆண்டிற்கான தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைச் சனவரி 25 அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. விழாவிற்கு வந்திருந்தவர்களைச் சங்கச் செயலர் தேவராசு விசயகுமார் பொங்கல் பண்டிகையின் சிறப்புகளைக் கூறி வரவேற்றார். விழாவில் நான்கு  அகவைச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வகையான இசை, நடனம், ஆட்டம் பாட்டம்  முதலியவற்றைப் ...
image-2246

புது இங்கிலாந்து தமிழ்ச் சங்கத்தில் பொங்கல் விழா

  புது இங்கிலாந்து தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழா லிட்டில்டன், மச்சசுசீத்சுசில் பிப்ரவரி 09 ஆம் நாள் இனிதே கொண்டாடப்பட்டது. இயல், இசை, நாடகம் என சின்னஞ்சிறார் மட்டும் அன்றிப் பெரியவரும் பங்குபெற்று பார்வையாளர்களை மகிழ்வித்தனர். சிசுபாரதி மாணவர்கள் மூலம்,'கல்வியின் சிறப்பை' எடுத்துரைக்கும் வகையில் நாடகத்தை இயற்கையாகவும் நகைச்சுவையுடனும் நையாண்டி பாடல்களோடு எழுதி வடிவமைத்திருந்தார் உமா நெல்லையப்பன். இனியா,  ...
image-2238

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் திருவிழா

  அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் திருவிழா பிப்ரவரி  முதல் நாளன்று  மலைத் தோற்ற(மவுன்டைன் வியூ) உயர்நிலைப்பள்ளி அரங்கத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.  1100-க்கும்  மிகுதியான மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, பொங்கல் திருநாளை அட்லாண்டா மக்கள் வியக்கும் வண்ணம் வெகு சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழாவிற்கு, இவ்வளவு மக்கள் கலந்து கொள்வது இதுவே ...
image-2232

அமெரிக்காவில் ஆர்கன்சாசு பகுதியில் மண்வாசனைப் பொங்கல்

    அமெரிக்காவின் ஆர்கன்சா மாநிலத்தில் உள்ள பென்டன்வில்,இராசர்சு, பெயெட்வில், உலோவெல் பகுதிகளை உள்ளடக்கிய வடமேற்கு ஆர்கன்சாசு பகுதியில் ஆண்டுதோறும் பொங்கல் விழா 'மண்வாசனை' என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் மண்வாசனை 750 விருந்தினருடன் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சனவரி 18 அன்று  காலை 10.30 மணிக்கு, வேட்டி சட்டை அணிந்த தன்னார்வலர்கள் விருந்தினரை ...
image-2225

ஊசுடனில் தமிழர் திருவிழா

அமெரிக்காவின் டெக்சசு மாகாணத்தில் ஊசுடன் பெருநகரத் தமிழ்ப் பள்ளியின் சார்பில் பியர்லேண்டு, கேட்டி, உட்லண்ட்சு மன்றக் கிளைப் பள்ளிகளது மாணாக்கர்கள் பங்குபெற்ற திருக்குறள் திருவிழா,பொங்கல் திருவிழா, பட்டிமன்ற நிகழ்வுகள் அண்மையில் மிகச் சிறப்பாக நடைபெற்றன. பியர்லேண்ட் கிளையில் மேல்நிலை மாணாக்கர்கள் வாதம்புரிந்த “இயந்திரத்தினால் நமக்கு ஏற்படுவது நன்மையா? தீமையா?” எனும் தலைப்பிலான பட்டிமன்றம் மாணாக்கர்களின் அறிவுத்திறனை ...
image-2217

வாசிங்டன் சிறப்புத் தமிழ் இலக்கியக் கூட்டம்

பிப்பிரவரி 16-இல் வாசிங்டன் பகுதியில் நடந்த சிறப்புத் தமிழ் இலக்கியக் கூட்டமான 'தமிழ் இலக்கியத்தில் சமயம்' மிகவும் நன்றாக நடந்து முடிந்தது. பேராசிரியர் மறைமலை இலக்குவனார் ''இமயம் முதல் குமரி வரை முருகன் வழிபாடு'' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்தக் கூட்டத்தில் பேராசிரியர் வாசு அரங்கநாதன் சித்தம் பற்றித் ''திருமூலரும் எட்மண்ட் கூசெரியும்'' (Edmund Husseri) தலைப்பில் ...
image-2200

புளோரிடாவில் பொங்கல் விழா

புளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லாண்டோ நகரில் தைப்பொங்கல் பண்டிகை, மத்திய புளோரிடா முத்தமிழ்ச் சங்கம் சார்பில் வெகு  சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.      ஆர்லாண்டோ நகரில் வசிக்கும் தமிழர்கள் ஆலயத்தில் ஒன்று கூடிப் பொங்கலிட்டுச் சூரியனுக்குப் படையலிட்டனர்.     இதனைத் தொடர்ந்து, சிறுவர், சிறுமியர், பெரியவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், விளையாட்டுப் போட்டிகள் ...
image-2188

செய்திக்குறிப்புகள் சில

வேளாண்மைத் துறை சார்பில் உரூ.162.50 கோடி செலவில் திட்டங்கள்:முதல்வர் செயலலிதா தொடங்கி வைத்தார்உரூ.12.81 கோடி செலவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள்,  புதிய கட்டடங்களைமுதல்வர் செயலலிதா திறந்து வைத்தார். உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் 159 ஆவது பிறந்த நாளில் உலகத் தமிழ்ச்சங்கம் மதுரையின் சார்பில் அதன்  தனி அலுவலர்(பொ) முனைவர் க. பசும்பொன் அவர்கள் தல்லாகுளம் அருகில் உள்ள ...
image-2184

முனைவர் பட்டம் பெற்ற 80 அகவை இளைஞர் சித்தர் அ.பாண்டியன்

  18.02.2014 அன்று  நடைபெற்ற அழகப்பா கல்லூரியின் 26 ஆவது பட்டமளிப்பு விழாவில்  வேந்தர் ஆளுநர் உரோசையா அவர்கள் தலைமையில் நீதியரசர் இராமசுப்பிரமணியன் பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார். நேர்த்தியான அரங்கில் 157  முனைவர் பட்டதாரிகளும், 112 முதன்மை விருது பெற்ற பல்வேறு புலங்களைச் சேர்ந்த பட்டதாரிகளும் நேரில் பட்டம் பெற்றனர். இளைஞர் பட்டாளத்தையும் அவர்களுடைய பெற்றோரின் பெருமைமிகு ...
image-2181

‘மறுமலர்ச்சி’ இயக்குநர் பாரதிக்கு மறுமலர்ச்சி அளியுங்கள்!

காட்டுமன்னார்கோவில் அருகே வாழ்ந்து மறைந்த வள்ளல் இராசு(படையாட்சி). அவரது வரலாற்றை மையமாக வைத்து 'மறுமலர்ச்சி' என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ்நாட்டிற்கு அந்த வரலாற்றை அறியத்தந்தவர் இயக்குநர் பாரதி.. அதன்பிறகு சில திரைப்படங்களை அவர் இயக்கினாலும் கூட மறுமலர்ச்சி எட்டிய வெற்றியை அவற்றால் எட்ட முடியவில்லை.. தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ள முதல் திரைப்படம் 'தில்லானா மோகனாம்பாள்' அதற்கு ...
!
image-2160

பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட்டது.

சென்னை ஒமந்தூரார் அரசு தோட்டத்தில் கட்டப்பட்ட பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ மனையைப் பொது மக்கள் பயன்பாட்டிற்கு முதல்– அமைச்சர்  செயலலிதா, பிப்.21,2014 வெள்ளியன்று திறந்து வைத்தார். பன்னோக்கு மருத்துவமனையில் 400 படுக்கை வசதிகள் உள்ளன.   வேறு அரசு மருத்துவமனைகளில் இல்லாத புதிய மருத்துவக் கருவிகள் இங்கு உள்ளன.  தனியார்  உயர்நிலை மருத்துவமனைகளுக்கு  இணையாக அமைக்கப்பட்டுள்ளது.  மூளை, ...

- அகரமுதல

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக