செவ்வாய், 21 ஜனவரி, 2014

வீரப்பன் கூட்டாளிகளின் தூக்கு: வாணாள்தண்டனையாகக் குறைப்பு

வீரப்பன் கூட்டாளிகளின் தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைப்பு : உச்ச நீதிமன்றம்

First Published : 21 January 2014 11:05 AM IST



வீரப்பன் கூட்டாளிகளான 4 பேரின் தூக்கு தண்டனையும், ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
சந்தன மரங்களை கடத்திய வீரப்பனின் கூட்டாளிகளாக இருந்த மீசை மாதையன், சைமன், பிலவேந்திரன், ஞானப்பிரசாகத்துக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை  விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது. மேலும், இந்த நால்வருடன் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 11 பேரின் தூக்கு தண்டனையும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது.
1993ஆம் ஆண்டு, வனப்பகுதியில் சந்தன மரக் கடத்தல் தலைவன் வீரப்பன் கும்பல் நடத்திய தாக்குதலில் போலீசார் உட்பட 22 பேர் பலியாகினர். இந்த வழக்கில் வீரப்பனிக் கூட்டாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
தங்களது தூக்கு தண்டனையை குறைக்கக் கோரி நால்வர் சார்பிலும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்கள் அனுப்பப்பட்டன. ஆனால், கருணை மனுக்களை பரிசீலிக்க அதிக கால அவகாசகம் எடுத்துக் கொண்டதை அடுத்து, உச்ச நீதிமன்றத்தில் தூக்கு தண்டனையை குறைக்கக் கூறி மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பளித்தது. மேலும், மரண தண்டனை கைதிகளை தனி அறையில் அடைக்கக் கூடாது என்றும் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக