ஞாயிறு, 19 ஜனவரி, 2014

அகரமுதல இணைய இதழ் 09 சில தலைப்புகள் : akaramuthala e-magazine 09

14
image-1497

பொங்கல் வாழ்த்து

  பாரினில் எங்கும் மக்கள்   பலநலம் பெற்று வாழ சீரிய வழியில் எல்லாம்   சிறப்புகள் மேன்மே லோங்க மார்கழித் திங்கள் சென்று   மலர்ந்த தைத்திங்கள் நாளில் ஆர்வமோ டளித்தேன் இந்த   அணிமிகு பொங்கல் வாழ்த்தை! - புலவர் பு.சீ.கிருட்டிணமூர்த்தி புள்ளியியல் அலுவலர்(ஓய்வு) தலைவர், இந்திய அரசின் மக்கள் கல்விநிறுவனம் திருவொற்றியூர் பாரதிப்பாசறை துணைத்தலைவர், சோழர் கலாலயம், இணைச்செயலர், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
image-1502

திருவள்ளுவரும் கன்ஃபூசியசும் – விருதாளர் தைவான் யூசி உரை

ஒன்பான் விருதுகளை அறிவித்த தமிழக அரசு திருவள்ளுவர் நாளன்று விருதுகள் வழங்கப்பெறும் என்றும் அறிவித்தது. பின்னர் இவ்விருதுகள் குடியரசு நாளன்று வழங்கப்பெறும் என்று அறிவித்தது. எனினும் திருவள்ளுவர் விருது மட்டும் திருவள்ளுவர் நாளன்றே வழங்கப் பெறும் என அறிவித்தது. இதன்படி தை 2 ஆம் நாளான சனவரி 16 அன்று திருவள்ளுவர் விருது, திருக்குறளைச் சீன ...
image-1513

திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்கவலியுறுத்துவேன் – வாசன்

திருவள்ளுவர்  நாளை முன்னிட்டு, சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவர் புகழ்பாடும் தமிழ் இசை நிகழ்ச்சி புதன்கிழமை (தை 2, 2045/ சனவரி 15.2014) நடந்தது. இதில் 133 தமிழ் இசைவாணர்க்ள பங்கேற்று, இசை நிகழ்ச்சி நடத்தினர். நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் வாசன் பேசியதாவது: 'உலகப் பொதுமறையான திருக்குறள், உலகின் புனித நூல்களான குர் ஆன் ...
image-1483

வள்ளுவர் வகுத்த அரசியல் 2. நல் அரசு இயல்

   – –குறள்நெறிக் காவலர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (29 திசம்பர் 2013   இதழ்த் தொடர்ச்சி)  அ. செங்கோன்மை  நாடு, அதைக் காப்பதற்குரிய அரண், படை, பொருள் ஆயவைபற்றி அறிந்தோம். இனி நாட்டில் ஆட்சிமுறை எவ்வாறு  இருத்தல் வேண்டும் என்று ஆராய்வோம். மக்களுக்கு நன்மை பயக்கும் நல்ஆட்சி எப்படியிருக்கும், தீமை பயக்கும் ஆட்சி எது, ஆட்சி புரிவோர் எவ்வாறு இருத்தல் ...
image-1509

கச்சத்தீவை விட்டுக்கொடுப்பதா? மத்திய அமைச்சர் வாசன் கடுஞ்சினம்!

சென்னை, தண்டையார்பேட்டை, துறைமுகக் குடியிருப்பில், முன்னாள் துணைத் தலைமையாளர் பாபு செகசீவன்இராம் சிலை திறப்பு விழா  சனவரி 12,2014 அன்று   நடைபெற்றது. அதில் பங்கேற்ற மத்தியக் கப்பல் துறை அமைச்சர், வாசன், இந்தியச் சிறைகளில் உள்ள, இலங்கை மீனவர்களை விடுவிக்க வேண்டும்' என, இலங்கை அமைச்சர் கூறியிருப்பது  நல்லிணக்கப் பேச்சிற்கு  உகந்ததல்ல என்றும்   கச்சத்தீவை விட்டு கொடுக்கும் ...
image-1491

மூளையே மூலதனம் – அறிவுநிதி விருது

 - தன்னம்பிக்கைத் தொடர் நிகழ்ச்சி                 '2009 இல் 'இலக்கு ' என்னும் பல்கலைப் பயிலரங்கம் நிறுவி ஓவியம், கையெழுத்து எனக் குழந்தைகளுக்கான வழக்கமான பயிற்சிகளுடன் நினைவாற்றல், தன்னம்பிக்கை ஆளுமைத் திறன்,  குமுகாயச் சிந்தனை ஆகிய பிரிவுகளிலும் கோடைக்கால முகாம்களை நடத்தினோம், தற்போது இதன் விரிவாக்கமாக வறுமை, இயலாமை, வழிகாட்டுதல் இல்லாமை உள்ளிட்ட ...
image-1519

சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதி

 சீன வானொலி தொகுத்துள்ள 'சீனம்-அன்னிய மொழி கலைச்சொல் அகராதிகள்' எனத் தமிழ், இந்தி, நேபாளம் முதலான 18  மொழி கலைச்சொல் அகராதிகளை வெளியிட்டுள்ளது.  இதில்  குறிப்பிடத்தகுந்ததாகச் சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதி விளங்குகிறது.  வீட்டு வசதி, பொழுதுபோக்கு , பண்பாடு, கலை, பொது பாதுகாப்பு, சுற்றுச்சூழல், காப்புறுதி, நிதி, நாணயம், சந்தை ஆகிய துறைகளைச் சேர்ந்த 27ஆயிரம் சொற்கள், சீனம்-தமிழ் ...
image-1488

தமிழர் கண்ணோட்டம் பொங்கல் மலர் – 2045 (2014)

  கடந்த 25 ஆண்டுகளாகத், தமிழ் – தமிழர் உரிமைச் சிக்கல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் “தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்” மாதமிருமுறை இதழ் சார்பில் வழக்கம்போல் ‘பொங்கல் சிறப்பு மலர்’ வெளியிடப்பட்டுள்ளது. தமிழர்களுக்காகப் போராடும் பல்வேறு கட்சி, இயக்கத் தலைவர்களும், தமிழறிஞர்களும்,  குமுகாயச் செயற்பாட்டாளர்களும் இயற்றியப் படைப்புகள்  முந்தைய ஆண்டுகள்போல், இம்மலரிலும் வெளியிடப்பட்டுள்ளன.   சென்னையில் நடைபெற்று ...
image-1477

தொல்காப்பிய விளக்கம் – 9 (எழுத்ததிகாரம்)

தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) நன்னூலாசிரியர், நெட்டெழுத்தே வேண்டியளவு நீண்டி ஒலிக்கும் என்றும் அதன் அடையாளமாக நெட்டெழுத்தின் பின்னர் அதன் இனக்குற்றெழுத்துத் தோன்றி நிற்கும் என்றும் கூறியுள்ளார். இக்கருத்து, தொல்காப்பியத்திற்கு மாறுபட்டது.   தொல்காப்பியர் முன்பு, மூன்று மாத்திரையாக ஒலித்தல் ஓரெழுத்துக்குக் கிடையாது என்றும் (நூற்பா 5) மாத்திரையை நீ்ட்டிச் சொல்ல வேண்டிய இடங்களில் மாத்திரைக்கேற்ப எழுத்துகளைச் ...
image-1499

மாமூலனார் பாடல்கள் – 9

 –சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்   (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) “நோயிலராக நம் காதலர்” -தலைவி இங்கிலாந்தில் காதலர் இருவர் கருத்தொருமித்து கணவனும் மனைவியுமாக இல்லற வாழ்க்கை நடத்தி வந்தனர். உலகப் பெரும்போர் தொடங்கிற்று. காதலியை விட்டு விட்டுக் காதலன் போர் முனைக்குச் சென்றான். காதலி காதலனிடமிருந்து வரும் மடல்களால்  மனம் ஆறியிருந்தாள். சில திங்கள் சென்றன; மடல்களும் ...
image-1485

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 8

-    தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்  (29 திசம்பர் 2013 இதழ்த் தொடர்ச்சி) பேராசிரியர் எம்.எசு. பூரணலிங்கம்,  'பண்பாடு மிக்க தமிழர் தம் கடவுளை, மேனிலையில் உள்ள கொடிநிலை, பற்றற்றக் கந்தழி, அருள் வழங்கும் வள்ளி என மூவகையாகக் கண்டனர். சுருங்கக்கூறின், தம்மை உருவாக்கி ஆள்பவருக்கு, முதன்மைப் பண்புகளாக எங்கும் உளதாகும் தன்மை, பற்றின்மை, அருள் முதலியவற்றை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக