செவ்வாய், 10 டிசம்பர், 2013

துண்டுத் தாளில் 140 அடி உயர வள்ளுவர் ஓவியம்: 1,147 மாணவர்கள் அருந்திறல்

துண்டுத் தாளில் 140 அடி உயர 
வள்ளுவர் ஓவியம்:
 1,147 மாணவர்கள் அருந்திறல்

காரைக்குடி: "லிம்கா' சாதனைக்காக, துண்டு வண்ண காகிதம் மூலம், 140 அடி உயர, திருவள்ளுவர் ஓவியத்தை, காரைக்குடி லீடர்சு பள்ளி மாணவர்கள் செய்துள்ளனர். காரைக்குடி, லீடர்சு பள்ளியைச் சேர்ந்த, 1,147 மாணவர்கள், 140 அடி உயரம், 50 அடி அகலம் கொண்ட, கன்னியாகுமரி ஆளுயரத் திருவள்ளுவர் சிலை ஓவியத்தை, துண்டுத்தாள்களைக் கொண்டு செய்தனர். இதற்காக,  200 கிராம் கொண்ட, 1,450 பெவிக்கால் குப்பிகள், 1,750 வரைபட அட்டை, 50 ஆயிரம்  மெருகுத்தாள் பயன்படுத்தப்பட்டன.
ஆறு மணி நேரத்தை இலக்காகக் கொண்டு, காலை, 9:30 மணிக்குத் தொடங்கி, மாலை, 3:00 மணிக்குள், ஓவியத்தை நிறைவு செய்தனர். 25 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என, மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. லிம்கா குழு ஒருங்கிணைப்பாளர் தலைமையில், குழுவினர் ஓவியத்தைப் பதிவு செய்தனர்.

பள்ளி இயக்குனர் ஞானகுரு கூறுகையில், ""மாணவர்களிடையே ஒற்றுமையையும், படைப்பாற்றலையும், தமிழ்ப் பற்றையும் வளர்க்கும் விதமாக, இந்நிகழ்வு நடத்தப்பட்டு உள்ளது,'' என்றார்.
Click Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக