திங்கள், 2 டிசம்பர், 2013

அகரமுதல இணைய இதழ் மூன்றின் படைப்புகள் - akaramuthala issue 3 articles


அன்புடையீர் வணக்கம்.
அகரமுதல இணைய இதழ் மூன்றில்  பின்வரும் படைப்புகள் இடம் பெற்றுள்ளன.  
     < http://www.akaramuthala.in/ தளத்திற்குச் செ ன்று காண வேண்டுகின்றேன்.
தங்கள் படைப்புகளையும் அயல் எழுத்து, அயற் சொல் கலப்பு இன்றிச் சீருருவில்
  madal@akaramuthala.in மின்வரிக்கு அனுப்பி வைக்க  வேண்டுகின்றேன். நன்றி.

 (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 3. மன்பதை வாழ்க்கை தொல்காப்பியம் தமிழ் மக்களின் முன்னேறிய மன்பதையைப் பெரிதும் வெளிப்படுத்துகிறது. வாழ்க்கையின் இலக்கு இப்பொழுதும், இனி எப்பொழுதும் மதிப்பு மிக்கதாக மிகவும் முன்னேறிய நிலையினதாகக் காணப்படுகிறது. தொல்காப்பியர் வாழ்க்கையின் இலக்காகப் பின்வருமாறு கூறுகிறார். காமம் சான்ற கடைக்கோட் காலை, ஏமம் சான்ற மக்களொடு துவன்றி, அறம் புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே. (தொல்காப்பியம்: பொருள்.192) எனவே அனைவரும் பிறருக்கும், தமக்கும் பயன்தரக்கூடிய பெரும் செயல்களை அடைவதை இலக்காக கொண்டு அறவாழ்க்கை நடத்துவதையே
-          பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழின் தொடர்ச்சி)   எழுத்துப் படலம் நூன்மரபு எழுத்துப்படலத்தில் உள்ள ஒன்பது இயல்களில் முதல் இயல் நூன்மரபாகும். நூல் எழுதுவதற்கு வேண்டப்படும் எழுத்துகளைப் பற்றிக் கூறுவதனால் இவ்வியல் நூன்மரபு எனும் பெயரைப் பெற்றுள்ளது. இதில் கூறப்படுகின்ற இலக்கணம் சொற்களிடையே நிற்கும் எழுத்திற்கு அன்றித் தனியாக நிற்கும் எழுத்திற்குஆகும் என அறிதல் வேண்டும். க.       எழுத்து எனப்படுப அகரம் முதல் னகர இறுவாய் என்ப சார்ந்துவரல் மரபின் மூன்று அலங்கடையே.     இந்நூற்பா தமிழ் எழுத்துகள் …

 – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 3..        பெரும்பொருளால் பெட்டக்கது ஆகி  அருங்கேட்டால்  ஆற்ற விளைவது நாடு. (குறள் 732)  பெரும் பொருளால் மிகுந்த பொருள்களால்; பெட்டக்கது ஆகி யாவராலும் விரும்பத்தக்கது ஆகி; அருங்கேட்டால் கேடுகளின்மையால்; ஆற்றவிளைவதே மிகுதியாக விளைவதே; நாடு-நாடு ஆகும்.  நாட்டில் மிகுந்த பொருள்கள் இருந்தால்தான் குறைவற்ற வாழ்க்கை நடத்த முடியும். இல்லையேல் முட்டுப்பட்ட வாழ்க்கை நடத்துவதனால் துன்புற்றுப் பொருள் நிறைந்துள்ள வெளிநாடுகட்குச் செல்லத் தலைப்படுவர். நமது நாடு மிகுந்த பொருள்கள்
-          இனஎழுச்சிக் கவிஞர் நெல்லை. இராமச்சந்திரன்   (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 13 அறிக்கைவிட்டு  அறிக்கைவிட்டே நமை ஏமாற்றி    ஆண்டுவந்தார் இந்தியாவை! தில்லி ஆட்சி விரித்தவலை வீழ்ந்திருக்கும் இறக்கும்  புறாக்களாகி    விசையற்றுப் பதவிசுகம் தமிழர் கண்டார்! அவித்தமுட்டை போலாகிக் கருவும் செத்து    அருந்தமிழன் தில்லிக்குத்  தீனி  ஆனான்! புவியாண்ட தமிழினத்தான் புள்கூட்  டம்போல்   பூமியெலாம் பறந்தோடி அகதி ஆனான் 14 ஊரிழந்தான் உணர்வழிந்தான் தேடித்  தேடி   ஒவ்வொன்றாய்த் தமிழுயிரை  அவன்அ  ழித்தான் தேரழித்தான் தெய்வீகப் பண்ப ழித்தான்

முனைவர் இலக்குவனார் மறைமலை (சென்ற இதழின் தொடர்ச்சி) இக்கட்டுரையில் பயிலும் கலைச்சொற்கள்: குறுக்கம்-Depression;  நெருக்கம்-Compression;  தோள்துடுப்பு-Pelvic Fin;  கால்துடுப்பு- Pectoral Fin;  புறத்துடுப்பு-Dorsal Fin; அகத்துடுப்பு-Ventral Fin;  வால்துடுப்பு-Caudal Fin; இளகி-Plastic Fin; குறுக்கு வெட்டு-Transverse Section; உள்நுழைக்கோணங்கள்- Entering Angels;  வளைவும் இடப்பெயர்வும்-Curves and Displacement; துள்ளல்–Runs;  புதையிர்த்தடம்-Fossil


வரலாற்றைத் திருத்தும் வேலை வழக்கமாய்ப் பார்ப்பான் வேலை பெரியாரைத் தலைகீ ழாகப் பிழைபடக்காட்டும் வேலை சரியாய்அவ் வேலை தன்னைத் தமிழ்த்தேசம் பேசு வோர்கள் விரிவாகச் செய்கின் றார்கள் விதைநெல்லை அவிக்கின் றார்கள் புராணங்கள் பொய்கள் தம்மைப் பூணூலார் சதிகள் தம்மை இராப்பகல் எடுத்துச் சொல்லி இனமானம் காத்து நின்றார் திராவிடர் தமிழர் என்றார் திருக்குறள் மேன்மை சொன்னார் பொறாமையால் இவரை மாற்றான் போலன்றோ பழிக்கின் றார்கள்! ஒருபக்கம் சாதிக் கேடோ உழைப்பாளர் தமைப்பி ளக்கும் மறுபக்கம் மதத்தின் ஆட்டம் மாத்தமிழ் நாட்டு மாண்பின் திறத்தையே
- திருக்குறள் பாவலர் தமிழ்மகிழ்நன் 92802 53329   எல்லாளன் இருக்கின்றார் எல்லாரும் ஈழத்தின் இடர்நீக்க  ஈங்கெழுந்தார் தெளிக!இல்லையினி எல்லாளன்என்று சொல்லு மெதிரி இடந்தேடி ஓடும்நாள் இனிவிரைவில் வருமே!
இளையவன்  செயா (கந்தையா)  பூத்துக்  குலுங்கும்   பூஞ்சோலை பறிக்கக்      காத்திருக்கும்   ரோசாமலர்   கவின்தென்ற   லிலாடும் பார்த்திருக்கும்   பாவையவள்   பக்குவமாய்ப்  பூக்கொய்ய      சேர்த்திருந்தாள்    மகிழ்வைத்தன்    செம்முகத்தில் !
பறிப்பவர்   இலக்கணம்   பாவைக்குத்   தெரியும்       ஓரிதழ்     உதிர்ந்தாலும்  
 ஓர்குறையே அவளுக்கு இதழ்உதிராப்   பூவேபூவைக்கு   இதயம்நிறை   மகிழ்ச்சி        இதழ்   
நடத்துவதும்   இதற்கொப்பானதே !
இணையஇதழ்   கண்டேன்   இணையில்லாத்  தமிழ்காக்கும்        கணையாக   விளங்கிய   கால்வழி   நடத்தும்
இணையஇதழ்   என்றும்  அணையாமல்   துலங்க        திணையளவாய்     வாழ்த்துகிறோம்    தீந்தமிழில் !  

- புலவர் சா இராமாநுசம் மாண்டார் இல்லை மாவீரர்-வீணில் மகிழும் பக்சே பாவீநீர் மீண்டு(ம்) வருவார் அறிவீரே-ஈழம் மீள ஆட்சி புரிவாரே

(முந்தைய இதழின் தொடர்ச்சி) எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள். அயலக ஆதிக்க விலங்குளால் கட்டுண்டுக் கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற  விடுதலைத் தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.

- தொகுநர்: சிவ அன்பு & இ.பு.ஞானப்பிரகாசன் (முந்தைய இதழின் தொடர்ச்சி) ஆங்கில வரி வடிவத்தில், எழுத்துரு இல்லாத மலாய் மொழி போலத் தமிழை மாற்றி விடலாம் என்று குறுகிய சின்னப்புத்திக்குச் சொந்தக்காரராக ஏன் இப்படி எழுத்தாளர் மாறிப்போனார் என்று தெரியவில்லை. பொதுவாக, ஆங்கிலத்தில்தமிழ்99’ வகைத் தட்டச்சு முறையில் அடிப்பதை அப்படியே தமிழ் எழுத்துருவை விட்டுவிட்டு எழுதப் படிக்கப் பழகிக்கொள்ளாலம் என்று சொன்னால், அதைவிடப் பைத்தியக்காரத்தனம் எதுவும் இருக்க முடியாது. -          அழகு   ஒரு மொழியின்  மரபே தொன்மையான அதன் எழுத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக