இந்தியத் தூதரக அதிகாரிகள் உதவி
செய்யாததால், வெளியேற்றப்பட்டதாகச் சிங்கப்பூரிலிருந்து
சொந்த ஊர் திரும்பிய ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த முருகானந்தம்
21.12.13 சனிக்கிழமை யன்று தெரிவித்தார். சிங்கப்பூரில் சிற்றிந்தியா
பகுதியில் 08.12.13 அன்று நேரிட்ட சாலைநேர்ச்சியில், புதுக்கோட்டை
மாவட்டம் ஓணாங்குடியைச் சேர்ந்த ச. குமாரவேல்
உயிரிழந்தார். அதையடுத்து அந்தப் பகுதியில் கலவரம் ஏற்பட்டது. இதில் தொடர்புடையதாக கூறப்படும் ...
ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை
குறித்து, செருமனியில் பிரமென் நகரில் நிலையான மக்கள் தீர்ப்பாயம் திசம்பர் 7 முதல் 10 வரை உசாவல்
நடத்தியது. ஐக்கிய நாடுகள் சபையின்
முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் தென்னிசு ஏலிடே தலைமையிலான
அத் தீர்ப்பாயத்தில் பன்னாட்டுச் சட்ட சட்ட வல்லுநர்கள், இனப் படுகொலை
வழக்குகள் தொடர்பான வழக்குரைஞர்கள், ...
கவனகக் கலையைத் தானும் கற்றுப்
பிறருக்கும் கற்பித்து வரும் தமிழ்ஆர்வ இளைஞர் திருக்குறள் திலீபன். இவரது
நூறாவது நிகழ்வு காரைக்குடியில் 08.12.13 ஞாயிறு காலை நடத்தப் பெற்றது. தமிழக
மக்களின் பழங்கலைகளில், கவனகக் கலை நுண்ணாற்றலை
வெளிப்படுத்தும் சிறந்த கலையாகும். ஒரே நேரத்தில் தன்னைச் சுற்றி
நடக்கக் கூடிய பல்வேறு நிகழ்வுகளை, நினைவில்
நிறுத்தித் தொகுத்து ...
பாவேந்தர்
பள்ளியின் மாணவர் அணியின் சார்பில் பாவேந்தர் தமிழ்ப்பள்ளி
மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடந்தது. இயற்கையைப்
போற்றும் வகையில், குளிர்காலத்தை
வரவேற்கும் நோக்கில் ‘சிற்றூர்’ எனும்
தலைப்பில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. 4, 5ஆம் நிலை
மாணவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
மாணவர்
அணியைச் சார்ந்த த. நவீன், ந. கோபி, தருண், ஆ.பாபு
போட்டியை .
தமிழகத்திற்குப் போதிய நிதி அளிக்காமல், தமிழகத்தின் முறையீடுகளைத் தொடர்ந்து மறுக்கும் மத்திய அரசுக்குக் கண்டனம்
தெரிவித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக
பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம், சென்னையை
அடுத்த வானகரத்தில், அ.இ.அ.தி.மு.க. அவைத் தலைவர்
இ.மதுசூதனன் தலைமையில், கட்சியின் பொதுச் செயலாளர் செயலலிதா
முன்னிலையில் (திசம்பர் 19, 2013 அன்று) நடைபெற்றது. செங்கோட்டையே இலக்கு! பொதுக்குழுவில்
பேசிய பொதுச் ...
திரிகோணமலையில் கொலைகாரச்
சிங்களத்தின் கடற்படைக் கூட்டுப்பயிற்சி நடைபெறுகிறது. இப்பயிற்சியில் இந்தியக்கடற்படை
பங்கேற்கிறது. இதற்கு முதலமைச்சர் செயலலிதா கண்டனம்
தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையுடன் இந்தியக் கடற்படைக் கூட்டுப் பயிற்சியில்
ஈடுபட்டிருப்பது தமிழக மக்களின் உணர்வுகளை
ஊறுபடுத்தும் வகையில் உள்ளது. இலங்கையுடனான கடல்சார் ஒத்துழைப்பு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை ஊறுபடுத்தவே
உதவும். எனவே, உடனடியாக
இலங்கைக்குக் கூட்டு பயிற்சியில் ஈடுபடச் ...
இலங்கைக்கு ஒரு நீதி, அமெரிக்காவுக்கு ஒரு நீதியா? இராமதாசு கண்டனம்!
தமிழர்களை
மதிக்காதவர்களுக்குத் தேர்தலில் அடி கிடைக்கும் வெளியுறவுக்
கொள்கையில் இலங்கைக்கு ஒரு நீதி, அமெரிக்காவுக்கு ஒரு நீதியா என்று பாமக நிறுவனர் இராமதாசு கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு : - ''அமெரிக்காவுக்கான
இந்திய துணைத் தூதர் தேவயானி கேப்ரகடே தளையிடப்பட்டதற்காக அந்நாட்டு அரசுக்கு
இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அமெரிக்க நடவடிக்கைக்கு ...
உலகின் மிக நீளமான காவியத்தின் சிறப்புப் பதிப்பு திபெத் மொழியில் வெளியீடு
உலகில் மிக நீளமான காவியமான கசார் மன்னரின்
திபெத் மொழி சிறப்புப் பதிப்பு,
சீனாவின் சில தலைமுறை அறிஞர்களின் 30 ஆண்டுக்கால
முயற்சிகளுடன், தொகுக்கப் பட்டு, வெளியிடப்பட்டுள்ளது.
சீனத் திபெத் தன்னாட்சிப் பகுதியின் குமுகாய அறிவியல் கழகத்தினர் இதனை
அறிவித்துள்ளனர். மன்னர் கசார் என்னும் திபெத் இனத்தின் வீரக்
காவியம், உலகளவில் மிக ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக