வெள்ளி, 20 ஜூலை, 2012

மூட்டு வலியை விரட்டலாம்!

 தினமலர்

மூட்டு வலியை க் "கூலாக' விரட்டலாம்!

இந்தியாவிலேயே முதன் முறையாக, நடுங்க வைக்கும் குளிர் மூலம், மூட்டு வலிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ரவி சுப்ரமணியம்: "க்ரையோ தெரபி' சிகிச்சையின் போது, நோயாளியை ஒரு அறையில் வைப்போம். அதற்கு, "க்ரையோ சேம்பர்' என பெயர். இந்த அறை இரு பகுதிகளாக இருக்கும். முதல் அறையின் உறைநிலை, மைனஸ் 52 டிகிரி செல்சியஸ்; இரண்டாவது அறையின் உறைநிலை, மைனஸ் 110 டிகிரி செல்சியஸ். குளிர்ப் பிரதேசமான, அன்டார்டிகாவின் உறைநிலை, மைனல் 30 டிகிரி. இதை விட, இந்த அறை, மூன்று மடங்கு குளிர்ந்த உறைநிலையில் இருக்கும். இந்த அறைக்குள் நோயாளியை, அதிபட்சம் மூன்று நிமிடங்கள் வைத்திருப்போம். சாதாரணமாக, 37 டிகிரி செல்சியசாக இருக்கும் உடலின் வெப்பநிலை, உடனே, 32 டிகிரி குறைந்து, பிளஸ் 5 டிகிரியாகி விடும். இந்த திடீர் குளிரால் தூண்டப்பட்ட குளிர் சென்சார்கள், வினாடிக்கு, 140 முதல் 150 முறை மூளைக்கு தகவல் அனுப்பும். அறை உறை நிலையில், மூன்று நிமிடங்கள் இருந்து, வெளியே வந்த பிறகும், அடுத்த அரை மணி நேரத்திற்கு, வலி இருக்கும் இடத்தில் உள்ள சென்சார்கள் மட்டுமல்லாமல், உடலின் மொத்தப் பகுதியில் உள்ள சென்சார்களும், தொடர்ந்து வலி உணர்வை மூளைக்குச் சொல்லும். அப்போது, மூளையின் கார்டெக்ஸ் பகுதி, வலி உண்டாக்கும் ரசாயனத்தை கட்டுப்படுத்தும் மூலக்கூறுகளை சுரக்கும்; இதனால், வலி போய்விடும். குறிப்பாக, இந்த சிகிச்சை எல்லாவிதமான மூட்டு நோய்களுக்கும், மிக நல்லத் தீர்வாக உள்ளது. இந்த சிகிச்சைக்குப் பின், மருந்தின் பயன்பாட்டு அளவு, 10 மடங்கு குறைந்து விடும்; மருந்தால் வரும் பக்க விளைவுகளும் இருக்காது. "சோரியாசிஸ்' உட்பட, தோல் வியாதிகளுக்கும், ஆஸ்துமா நோயாளிகளுக்கும் கூட, பயனுள்ளது இந்த சிகிச்சை. வலியின் தன்மையைப் பொறுத்து, ஒருவருக்கு எத்தனை நாட்கள் சிகிச்சை என்பதை முடிவு செய்வோம். குறைந்தது, 10 நாட்கள், அதிகபட்சம், 20 நாட்கள் சிகிச்சை தேவைப்படும். எத்தனை நாட்கள் தேவையோ, தொடர்ந்து அத்தனை நாட்களும் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக