வியாழன், 1 மார்ச், 2012

acclaimed for photography

சொல்கிறார்கள்                                                                                                                                

"பாராட்டு பெற்றுள்ளேன்!' பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஆஸ்தான புகைப்படக்காரர் தர்மசந்துரு: கிரிக்கெட் போட்டி முடிந்த பின், வீரர்கள், பெரிய அல்லது சின்னத் திரையில், தாங்கள் விளையாடியபோது செய்த சாகசங்களை மீண்டும் பார்க்க விரும்புவதுண்டு. ஆனால், அதற்கு சற்று பொறுமை தேவை. போட்டோவாக இருந்தால், உடனே பார்த்து விட முடியும். அதற்காகத் தான், "மல்டிபிள் பிரேம் போட்டோகிராபி' (எம்.எப்.பி.,) என்ற முறையில், வீரர்களின் ஆட்டத்தை போட்டோவில் கொண்டு வந்தேன். பிலிம் ரோல்களை விட, "டிஜிட்டல்' கேமராவில் இதற்கான வசதிகள் அமோகம். வெட்டி ஒட்ட வேண்டாம், செலவு குறைவு. பொதுவாக ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும், பவுலர்களுக்கும் ஒரு தனி பாணி உண்டு. உதாரணமாக, இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி, வேகமாக பந்தை அடிக்கும் ஸ்டைலை, "ஹெலிகாப்டர் ஷாட்' என்பர். டிராவிட் அடிப்பதை, "டெக்ஸ்ட் புக் ஷாட்' என்று கூறுவர். ஆஸ்திரேலியாவின் பாண்டிங் பந்தை அடிக்கும் போது, மட்டையை இழுப்பது போல் இருக்கும். அதனால், அதை, "புல் ஷாட்' என்பர். கிரிக்கெட் விமர்சனம் செய்பவர்கள் சொல்லும் இந்த சங்கேத வார்த்தைகள் ரசிகர்களுக்குத் தெரியாது. ஆனால், எனக்குத் தெரியும். அதைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப போட் டோ எடுக்க வேண்டும். இல்லையெனில், வீரர்களின் முகபாவம் மாறிப் போய்விடும். போட்டிகள் நடக்கும் போது, மைதானத்தில் மட்டுமல்ல, அவர்களின் ஓய்வு நேரங்களில் இருப்பதையும் படம் பிடித்து அவர்களிடமே காண்பித்து, பாராட்டுக்களைப் பெற்றுள்ளேன். அதில், அடுத்த கட்டமாக வன விலங்குகளையும், பறவைகளையும் அவற்றின் வாழ்விடங்களுக்கே சென்று "எம்.எப்.பி.,' முறையில் புகைப்படம் எடுக்கப் போகிறேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக