சொல்கிறார்கள்
டேபிள் டென்னிஸ் விளையாட்டில் அசத்தும் ஐஸ்வர்யா, கிருத்திகா ஜோடி: மத்த விளையாட்டு மாதிரியில்ல இந்த டேபிள் டென்னிஸ்... ரொம்ப வேகமான விளையாட்டு. உலக அளவில் மிக முக்கியமான விளையாட்டுகளில் முதல் சில வரிசைக்குள் வரக்கூடிய விளையாட்டு இது. சில வருஷங்களுக்கு முன் வரை, இந்தியாவில் பெரிய அள வில் கவனம் பெறாத விளையாட்டாகவே இது இருந்தது."முதலில் பேட்டை பிடிக்கும்போது, தேசிய அள வுக்கு முன்னேறுவேன்னு தெரியாது; இந்தியா முழுக்க நடந்த போட்டிகளில் கலந்துகிட்டு ஜெயிச்சாச்சு.காஷ்மீர், கோல்கட்டா, லக்னோ என, நாட்டின் முக்கால்வாசி இடங்களில் நடந்த போட்டிகளில் தமிழ்நாட்டு ஜூனியர் ரேங்கில் கலந்துகிட்டது பெருமையா இருந்தது. டேபிள் டென்னிஸ் திறமையை வைத்து, எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லூரியில், ஒரு பெண்ணிற்கு இலவசமாக சீட் கொடுத்திருக்கின்றனர் என்றால், அது, என் ஜோடி கிருத்திக்கு தான். பள்ளி அளவில் தொடங்கி, தேசிய அளவில் பல போட்டிகளில் அவளும் கலந்துகிட்டு, இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் ஆடியிருக்கா; எஸ்.ஜி.எப்.ஐ., நடத்திய போட்டியில், இரண்டு தங்கம், வெள்ளி ஒரே சமயத்தில் வாங்கியிருக்கா; அதேபோல், நானும் இந்திய அளவில் தங்கம் வென்றுள்ளேன். நாங்க கலந்துகிட்ட போட்டிகளில் ஜெயிக்காமல் திரும்பியதே கிடையாது; மிக அதிக செலவு பிடிக்கும் இந்த டேபிள் டென்னிசில் பங்கேற்கிறதே பெரிய விஷயம். பெரிய நிறுவனங்களின் நிதியுதவி இல்லாம இந்த விளையாட்டில் எளிதாக நுழைவது கடினம்.ஓரளவுக்கு வசதி வாய்ப்புகளோடு வளர்ந்து வர, இந்த விளையாட்டுக்கு அரசு கொடுத்திருக்கும் ஆதரவும் ஒரு காரணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக