ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

இந்திய அமைதிப்படையின் படுகொலைகள் பற்றி ஏன் வாய் திறப்பதில்லை?

இந்திய அமைதிப்படையின் படுகொலைகள் பற்றி ஏன் வாய் திறப்பதில்லை? – கேள்வி எழுப்புகிறார் கோமின் தயாசிறி

போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறவேண்டும் என்று சிறிலங்கா மீது தாக்குதல் தொடுத்துள்ளவர்கள் இந்திய அமைதிப்படைகளால் இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து ஏன் வாய் திறப்பதில்லை என்று சிங்களத் தேசியவாதியும் சட்டநிபுணருமான கோமின் தயாசிறி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் பொதுமக்கள் இந்திய அமைதிப்படையாலும் சிறிலங்காப் படையிராலும் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகின்ற நிலையில், சிறிலங்காப் படையினரை பொறுப்புக் கூறுமாறு வலியுறுத்துபவர்கள் இந்திய அமைதிப்படை குறித்து பேசுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சிறிலங்காப் படைகள் பொறுப்புக்கூற வேண்டுமானால் இந்தியப் படைகளும் பொறுப்புக் கூற வேண்டும் என்று கூறியுள்ள கோமின் தயாசிறி, இந்தியா செய்யதது தவறில்லை என்றால், அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களை மீறியதாக சிறிலங்கா மட்டும் குற்றம்சாட்ட முடியுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 
எந்தவொரு நாடும் இந்தியாவுக்கு எதிராக விசாரணை நடத்தக் கோரவில்லை என்று குறிப்பிட்ட கோமின் தயாசிறி, வடக்கு கிழக்கு மனிதஉரிமைகள் செயலகத்தினால் வெளியிடப்பட்ட நூல் ஒன்றில் இந்தியப் படையினரால் நடத்தப்பட்ட 12 பாரிய படுகொலைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Short URL: http://meenakam.com/?p=33415

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக