திங்கள், 16 மே, 2011

20 Kilo rice to poor : ஏழைகளுக்கு 20 கிலோ இலவச அரிசி: கையெழுத்திட்டார் முதல்வர்செயலலிதா

பாராட்டுகள். இருப்பினும் இவற்றிற்குத்தேவையில்லா வளமான சூழலை உருவாக்க வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

ஏழைகளுக்கு 20 கிலோ இலவச அரிசி: கையெழுத்திட்டார் முதல்வர் ஜெயலலிதா

First Published : 16 May 2011 07:51:26 PM IST


சென்னை, மே 16- தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, இன்று மாலை புனித ஜார்ஜ் கோட்டைக்கு சென்று முதல்வர் பணிகளை கவனிக்கத் தொடங்கினார். ஏழைகளுக்கு 20 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டம் உட்பட 7 கோப்புகளில் அவர் இன்று கையெழுத்திட்டார்.ஏழைகளுக்கு 20 கிலோ இலவச அரிசி மற்றும் பரம ஏழைகளுக்கு 35 கிலோ இலவச அரிசி, அரசு ஊழியர்களின் பேறுகால விடுப்பு 6 மாதங்களாக அதிகரிப்பு, பெண்களுக்கான திருமண உதவித்தொகை ரூ. 50,000 ஆக உயர்வு, ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு 4 கிராம் இலவசத் தங்கம், மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கான நிவாரணத் தொகை ரூ. 2000 ஆக உயர்வு, முதியோர் உதவித்தொகை ரூ. 1000 ஆக உயர்வு ஆகிய 7 உத்தரவுகளில் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.தமிழகத்தை இந்தியாவின் முதன்மையான மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஜெயலலிதா தெரிவித்தார்.

1 கருத்து:

  1. இலவசங்கள் வேண்டா எனச் சொல்வது தவறா? பாராட்டுவது தவறா? இக்கருத்தை வெளியிட மறுப்பது ஏன்?

    பதிலளிநீக்கு