வெள்ளி, 4 மார்ச், 2011

America refused to issue visa for karuna : இலங்கை அமைச்சருக்கு அமெரிக்கா விசா மறுப்பு

கருங்காலி கருணாவிற்கு மறுப்பு என்று எழுத வேண்டியதுதானே!  அமெரிக்கா அவ்வப்பொழுது நாடகம் ஆடும். மக்களாட்சியிலும் மனித நேயத்திலும் நம்பிக்கை உள்ள  அமெரிக்கர்கள் நாடகத்தை உண்மையாக்க வேண்டும். இனப் படுகொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். 
வேண்டுதலுடன் இலக்குவனார் திருவள்ளுவன் .  / தமிழே விழி!  தமிழா விழி /


இலங்கை அமைச்சருக்கு அமெரிக்கா விசா மறுப்பு


கொழும்பு, மார்ச்.3: இலங்கை அமைச்சர் விநாயகமூர்த்திக்கு அமெரிக்கப் பயணத்துக்கான விசா வழங்குவதற்கு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மறுப்புத் தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அந்த செய்திகளில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஆணழகன் போட்டியான ஆர்னோல்ட் கிளாசிக்ஸ் ஆணழகன் போட்டியில்  பங்குபற்றுமாறு இலங்கையின் முன்னணி ஆணழகன் பிரசன்ன பீரிஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.கடந்த 2010ம்  வருடம் நடைபெற்ற மிஸ்டர் வோ்ல்டு ஆணழகன் போட்டியில் பிரசன்ன பீரிஸ் வெற்றி பெற்றிருந்ததன் காரணமாகவே அவருக்கு போட்டி ஏற்பாட்டாளர்களிடமிருந்து அந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.இலங்கை ஆணழகன் பிரசன்ன பீரிஸ் உடன் இணைந்து அமெரிக்கா செல்வதற்கு அமைச்சர் முரளிதரனும் விண்ணப்பித்திருந்தார். அமைச்சரின் விசா விண்ணப்பம் காரணமாகவே விளையாட்டு வீரருக்கான விசாவும் மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அமைச்சர் தன் அந்தரங்கச் செயலாளரான தில்ருக்ஷி பெரேராவையும் தன்னுடன் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார்.ஆணழகன்  போட்டிகளில் அமைச்சர் மற்றும் அவரது அந்தரங்கச் செயலாளருக்கு சிறிதும் தொடர்புகள் இல்லாமை மற்றும் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் சம்பவங்களில்  அமைச்சர் முரளிதரனுக்கும் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுவதைக் காரணம் காட்டி அமெரிக்கத் தூதரகம் அவர் மற்றும் அவரது அந்தரங்கச் செயலாளரின்  விசா விண்ணப்பங்களை நிராகரித்துள்ளது.அவர்களது பயணத்துக்கு விசா அனுமதி வழங்குமாறு விளையாட்டு அமைச்சகத்தின் அங்கீகாரம் கொண்ட கடிதமும் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையிலும் விசா நிராகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்

இலங்கை அமைச்சர் உள்ளிட்ட அனைவரது அமெரிக்க விசா விண்ணப்பத்தையும் அமெரிக்கத் தூதரகம் நிராகரித்துள்ளதாக கிடைத்துள்ள செய்தியில் நோ்முகத் தோ்வின் போது என்ன சந்தேகம் ஏற்பட்டதன் காரணமாக விசா மறுக்கப்பட்டது என்ற தகவல்இல்லையே! மனித உரிமைகளை மறுக்கின்றவர்கள் என்ற காரணத்தினாலா! பாலியல் வன்கொடுமையாளர்கள் என்ற காரணத்தினாலா! இனத்துவேஷ மனநோய் பீடித்தவர்கள் என்ற காரணத்தாலா! நர மாமிசப் பட்சிணிகள் என்ற காரணத்தாலா! என்ன காரணத்தால் விசா மறுக்கப்பட்டது என்பது தெரிந்தால்தானே மற்ற நாடுகளும் இவ்விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க முடியும்!
By பொன்மலை ராஜா
3/3/2011 7:15:00 PM
சகோதரர் திரு அப்துல் ரஹ்மான் அவர்களே, தங்களின் நல்ல கருத்துக்களினிடையே சமீப காலமாக நகைச்சுவையும் தென்படுகிறதே!. தொடருங்கள் வாழ்த்துக்கள்.
By தஞ்சை ராஜு
3/3/2011 4:50:00 PM
ஆனாலும் இவ்வளவு அமெரிக்க மோகம் இருக்கக் கூடாது. அதனால்தான் உலகில் பெரும்பாலான விடுதலை இயக்கங்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை.
By அசோகன் முத்துசாமி
3/3/2011 3:18:00 PM
ஒரு தேசத்தின் நேர்மையும் கம்பீரமும் வெளிப்படையாக தெரிகிறது ... அதிலும் இலங்கையில் இருக்கும் தூதரகத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது மேலும் சிறப்பான விஷயம் ..
By santhosh
3/3/2011 2:18:00 PM
அட்ர்ரா சக்க!! அட்ர்ரா சக்க!! ஸ்டார்ட் மியூசிக்...
By Abdul Rahman - Dubai
3/3/2011 2:12:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக