வெள்ளி, 3 டிசம்பர், 2010

பிகார் தேர்தல் தோல்வியால் துவண்டுவிடவில்லை:இராகுல் காந்தி

பீகாரில் காங். தோல்வி முழுக்க முழுக்க இராகுலின் அணுகுமுறையாலும் மக்களையும் காங்.ஒரு கழிசடைக்கட்சி  என்பதையும் புரிந்து கொள்ளாத மனமுதிர்ச்சியற்ற தன்மையாலும் மூத்தவர்களை மதிக்காத போக்காலும்  ஏற்பட்டது என்பது உண்மைதான். என்றாலும் வெற்றி மேடையில் ஏறிய எல்லாருமே தோல்விப் படிகளைக் கடந்தவர்கள்தாம். எனவே, செய்தியாளரிடம் கீழே விழுந்தும்  மீசையில் மண் ஒட்டவில்லை எனச் சமாளிப்பது போல் அல்லாமல் அவர் தன் செயல்பாடுகளையும் தேசிய இனங்களுக்கு எதிராகச் செயல்படும் ஊழலின் ஒட்டு மொத்த உருவம் காங்.கின் செயல்பாடுகளையும் ஆராய்ந்து தோல்வியை எதிர் கொள்ளும் துணிவு  பெற வேண்டும். வெற்றியும் தோல்வியும் முயற்சியுடையோருக்கு அழகே. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
பிகார் தேர்தல் தோல்வியால் துவண்டுவிடவில்லை: ராகுல் காந்தி

புது தில்லி, டிச. 2: பிகார் தேர்தலில் காங்கிரஸýக்கு ஏற்பட்ட படுதோல்வியால் துவண்டுவிடவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி கூறியுள்ளார்.நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு வியாழக்கிழமை பதிலளித்த அவர் மிகச் சுருக்கமாக இந்த ஒரு வரியை மட்டுமே கூறினார். பிகாரில் 243 தொகுதிகளில் 4 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸôல் வெற்றி பெற முடிந்தது. இது அக்கட்சிக்கும் ராகுல் காந்திக்கும் ஏற்பட்ட பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. ஏனெனில் பிகார் தேர்தல் தொடர்பான அனைத்து முடிவுகளையும் நேரடியாக ராகுல் காந்தியே எடுத்தார். ராஷ்ட்ரீய ஜனதா தளம், லோக் ஜன சக்தி போன்ற கட்சிகள் காங்கிரஸýடன் கூட்டணி ஏற்படுத்திக் கொள்ள முன்வந்த போதும் அவற்றை உதாசீனப்படுத்திவிட்டு தனித்து போட்டியிடுவது என்ற முடிவை எடுத்தார் ராகுல்.மேலும் 22 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு சென்று தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டார் அவர். ராகுல் காந்தி பிரசாரம் செய்த தொகுதி ஒன்றில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. இதையடுத்து ராகுல் காந்தியின் அணுகுமுறைகள் குறித்து கட்சிக்குள்ளேயே விமர்சனங்கள் எழுந்தன. கட்சித் தலைவர் சோனியா காந்தி பிகார் தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவிக்கையில், "பிகாரில் கட்சியை மறு கட்டமைப்புக்கு உள்படுத்த வேண்டும் என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன' என்றார்.  எனினும் முடிவுகள் வெளியாகி ஒரு வார காலத்துக்கு மேலாகியும் ராகுல் எந்த கருத்தும் வெளியிடாமல் இருந்தார். இந்நிலையில் இது குறித்து ஊடகங்களுக்கு முதல் முறையாக வியாழக்கிழமை கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக