training லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
training லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 6 அக்டோபர், 2012

வேளாண் பல்கலை. சார்பில் வடிசாறு, கனிக்கலவை, உருவாக்கப் பயிற்சி

வேளாண் பல்கலை. சார்பில் வடிசாறு, கனிக்கலவை,  உருவாக்கப்  பயிற்சி

First Published : 05 October 2012 05:34 PM IST
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் சூப், சாலட் தயாரிப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி வரும் அக்டோபர் 9 நடைபெறவுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் தக்காளி சூப், கிளியர் வெஜ் சூப், கிரீமி மஷ்ரூம் சூப், ஸ்வீட் கார்ன் சூப், ஃபிரஞ்ச் ஆனியன் சூப், கிரீன் சாலட், வெள்ளரி பச்சடி, தக்காளி குடமிளகாய் சாலட், முளை கட்டிய பயிறு சாலட் ஆகியவை செய்ய பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம், 30-யு, 10-வது தெரு, அண்ணா நகர் என்ற முகவரியில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்துக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 2626 3484 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

வியாழன், 4 அக்டோபர், 2012

தமிழக அரசியல்வாதிகளுக்கு ச் சிங்கள த் தளபதி அறை கூவல்: திசம்பர் மாதம் 45 பேரை ப் பயிற்சிக்கு அனுப்புகிறோம்- முடிந்தால் தடுத்து ப் பாருங்கள்

தமிழக அரசியல்வாதிகளுக்கு ச் சிங்கள த் தளபதி அறை கூவல்: திசம்பர் மாதம் 45 பேரை ப் பயிற்சிக்கு அனுப்புகிறோம்- முடிந்தால் தடுத்து ப் பாருங்கள்
தமிழக அரசியல்வாதிகளுக்கு சிங்கள ராணுவ தளபதி சவால்: டிசம்பர் மாதம் 45 பேரை பயிற்சிக்கு அனுப்புகிறோம்- முடிந்தால் தடுத்து பாருங்கள்
சென்னை, அக். 4-

ஈழத்தில் நடந்த போரின் போது சுமார் 1 1/2  லட்சம் தமிழர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர். லட்சக் கணக்கான தமிழர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டதால், இலங்கையில் வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள ஈழத் தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இடம் பெயர்ந்த தமிழர்களின் மறுவாழ்வு பற்றி கண்டு கொள்ளாத சிங்கள அரசு, தன் ராணுவ அதிகாரிகளை இந்தியாவுக்கு அனுப்பி நவீன பயிற்சிகளை பெற்று வருகிறது.

இதற்கு தமிழக அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ்நாட்டுக்கு பயிற்சிக்கு வந்த ராணுவ வீரர்களை திருப்பி அனுப்ப வைத்தனர். என்றாலும் எதிர்வரும் மாதங்களில் தமிழகத்தில் சிங்கள ராணுவத்துக்கு பயிற்சி கொடுக்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி இந்த பயிற்சி கொடுக்கப்படும் என்று இந்தியாவும் இலங்கையும் கூறி வருகின்றன.

அதை உறுதிபடுத்தும் வகையில் சிங்கள ராணுவ தளபதி ஜகத் ஜெயசூரியாவும் ஆணவமாக பேசி உள்ளார். இலங்கை ராணுவத்தின் 63-வது ஆண்டு நிறைவையொட்டி நேற்று அனுராத புரத்தில் இடம் பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் கூறியதாவது:-

யுத்தத்தின் பின் தீவிர வாதத்தை எமது நாட்டில் இருந்து முழுமையாக அகற்றியுள்ளோம். இந்த யுத்தத்தில் நாம் பெற்றுக் கொண்ட அனுபவங்களை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதிலும் ஆர்வமாகவே உள்ளோம். இதன் அடிப்படையிலேயே இந்திய ராணுவத்தினருடன் இணைந்து கூட்டுப்பயிற்சிகளை இலங்கை ராணுவம் அண்மையில் நடத்தியது. இந்தியாவில் சுமார் 800 இலங்கை ராணுவ வீரர்கள் தற்போது பயிற்சி பெற்று வருகின்றனர்.

அதே போன்று இந்திய ராணுவ வீரர்களும் இலங்கையில் குறிப்பிட்ட சில தீவிரவாத எதிர்ப்பு பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர். எமக்கும் இந்தியாவுக்கும் இடையில் மிக நெருங்கிய புரிந்துணர்வு உள்ளது. ஆனால் தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான சில குரல்கள் ஒலிக்கின்றன. இது குறித்து நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

ஏனெனில் இந்தியாவின் ஒரு சிறிய பகுதிதான் தமிழகம். இரு நாடுகளுக்கு இடையிலான ராணுவ ஒத்துழைப்புகளுக்கு இந்த சிறிய பிரதேசம் சவாலாக அமையாது. தமிழக அரசியல் வாதிகளுக்கு நாமே தகவல் தருகிறோம். எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் இலங்கை சிறப்பு படை அணியை சார்ந்த 45 உயர் அதிகாரிகள் பயிற்சிக்காக இந்தியா செல்ல உள்ளனர். முடிந்தால் தடுத்துக் கொள்ளட்டும்.

இவ்வாறு இலங்கை ராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியா தெரிவித்தார்.

வியாழன், 6 செப்டம்பர், 2012

450 SL military personnel undergo training in India

450 SL military personnel undergo training in India

[TamilNet, Thursday, 06 September 2012, 01:08 GMT]
In a written reply to the upper house of the Indian Parliament, Indian Defence Minister A K Antony on Wednesday admittedly confirmed the training provided to Sri Lankan military personnel in different states of India, including Tamil Nadu where there has been strong opposition from political parties of different hues against the same. “More than 450 personnel from Sri Lankan armed forces are undergoing training at the defence establishments in India including in Bangalore, Kannur and Belgaum,” a PTI report said, citing Defence Ministry sources. In the meantime, representatives from Tamil Nadu political parties in both the houses of the Indian parliament demanded the Indian government to scrap all training given to Sri Lankan military personnel, accusing the latter of war crimes and genocide.

While the DMK MPs protested in the Rajya Sabha sessions, the AIADMK and the VCK MPs protested in Lok Sabha sessions.

The Indian Tamil parliamentarians also protested against the forthcoming visit by the SL president Mahinda Rajapaksa to Madhya Pradesh.

On 03 September, DMK Rajya Sabha MP Tiruchy Siva had raised questions on such training being given, urging the Indian government to stop it.

After his questions were not addressed, it was reported that he had shown banners and that the Speaker had called it “indiscipline”. Mr. Siva apparently retorted by asking “Is training of Sri Lankan Army discipline?”

In the meantime, public information made available on the Indian Defence Ministry website describing the ‘military-to-military relationship’ says that India's military-level exchanges have been noteworthy with US, China, France, South Africa and Sri Lanka.

“With the US and France they took the form of joint exercises and training exchanges, with South Africa and Sri Lanka, mainly training and exchange of experiences, and with China they formed an important confidence-building measure,” according to the website.

The website gives only a few details such as Sri Lankan military personnel have received training at the Counter Insurgency & Jungle Warfare (CIJW) School at Veirangte, the most elite Indian counterinsurgency operations training institute located in the state of Mizoram, and at Army School Of Physical Training (ASPT) at Pune.

In Tamil Nadu, two Sri Lankan armed forces officers are being trained at the Defence Services Staff College (DSSC) at Wellington. Earlier, in July 2012, a group of nine SL military personnel were relocated from Tambaram in Tamil Nadu to Bangalore.

The Indian government provides assistance to the developing and under developed nations under programme of Ministry of External Affairs.

The Indian Technical and Economic Cooperation (ITEC) programme, which comes under the Ministry of External Affairs, enables Sri Lankan military personnel to get training free of cost or at subsidized rates.

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

இலங்கை க் கால்பந்து வீரர்களுக்கு ச் சென்னையில் பயிற்சி: திருப்பியனுப்ப முதல்வர் உத்தரவு

இலங்கை க் கால்பந்து வீரர்களுக்கு ச் சென்னையில் பயிற்சி: திருப்பியனுப்ப முதல்வர் உத்தரவு

First Published : 02 Sep 2012 06:06:48 PM IST
தினமணி
Last Updated : 02 Sep 2012 06:44:24 PM IST

சென்னை, செப். 2: இலங்கை கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கு சென்னையில் பயிற்சி அளித்துள்ளதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, அவர்களை திருப்பி அனுப்ப உத்தரவிட்டுள்ளார். மேலும், நேரு விளையாட்டு அரங்கில் பயிற்சி அளி்க்க அனுமதி அளித்த பொறுப்பு அதிகாரியை தாற்காலிக பணிநீக்கம் செய்யவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இலங்கைத் தமிழர்கள் சிங்களர்களுக்கு சமமான உரிமைகளைப் பெறும் வரை அந்நாடு மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல், தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில், இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாட்டில் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது.  மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து கடும் கண்டனத்தை நான் வெளியிட்டவுடன், இலங்கை ராணுவ வீரர்களை இந்தியாவில் உள்ள வேறு மாநிலத்திற்கு அனுப்பி வைத்து மத்திய அரசு தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறது. அண்மையில், இரண்டு இலங்கை ராணுவ வீரர்களுக்கு வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதை அறிந்தவுடன், அவர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். ஒட்டுமொத்த தமிழகமும் இதே கோரிக்கையை விடுத்தது. ஆனால், மத்திய அரசு அதற்கு சிறிதும் மதிப்பளிக்கவில்லை. மாறாக, இது போன்ற பயிற்சிகள் அளிப்பது நிறுத்தப்பட மாட்டாது என மத்திய அமைச்சர் தெரிவித்து, தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார்.  இந்தச் சூழ்நிலையில், இலங்கையைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள்,  தங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையில், நட்பு ரீதியிலான போட்டிகளில் கலந்து கொள்ள தமிழகம் வர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசின் இந்தச் செயல் தமிழக மக்களை அவமானப்படுத்தும் செயல் ஆகும். மத்திய அரசின் இந்தச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இலங்கை நாட்டைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறும் வகையில், சென்னையில் உள்ள பாரத ரிசர்வ் வங்கியில் பணிபுரியும் அலுவலர் ஒருவரை ராயல் காலேஜ் ஆப் கொழும்பு நிர்வாகம் தொடர்பு கொண்டு, இங்குள்ள கால்பந்து அணிகளுடன் நட்பு ரீதியிலான விளையாட்டுப் போட்டிகளில் விளையாட ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டதாகவும், அதன்பேரில், அந்த அலுவலர் அதற்கான ஏற்பாட்டை செய்ததாகவும், கடந்த ஆகஸ்ட் 30-ல் தமிழகம் வந்த இலங்கை கால்பந்து விளையாட்டு வீரர்கள் மறுநாள் சென்னை சுங்க இலாகா அணியுடன் நேரு விளையாட்டரங்கில் விளையாடியுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. இது குறித்து  நடத்தப்பட்ட விசாரணையில், பாரத ரிசர்வ் வங்கி அலுவலர் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியை நடத்துவதற்கு வாய்மொழியாக நேரு விளையாட்டரங்கத்தின் பொறுப்பு அதிகாரியை அணுகியதாகவும், அந்த பொறுப்பு அதிகாரி விளையாட்டுப் போட்டிகளுக்கு நேரு விளையாட்டரங்கத்தை பயன்படுத்த வாய்மொழியாக அனுமதி வழங்கியதாகவும் தெரிய வந்தது.  நேரு விளையாட்டரங்கில் விளையாட்டுப் போட்டிகளை அனுமதிக்க நேரு விளையாட்டரங்க பொறுப்பு அதிகாரிக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு தான் அந்த அதிகாரம் உள்ளது. தனக்கு இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி இலங்கை விளையாட்டு வீரர்களை நேரு விளையாட்டரங்கில் கால்பந்து விளையாட அனுமதி அளித்ததன் மூலம் தமிழக மக்களின் உணர்வுகளை நேரு விளையாட்டரங்க பொறுப்பு அதிகாரி கொச்சைப் படுத்தியுள்ளார்.  எனவே, அந்த அதிகாரியை தற்காலிக பணிநீக்கம் செய்து துறைரீதியான நடவடிக்கை எடுக்கும்படி தலைமைச் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இலங்கை கால்பந்து வீரர்களுக்காக எந்த போட்டிகளும் தமிழகத்தில் நடத்தக் கூடாது என்றும், அவர்களை இலங்கைக்கு உடனடியாக திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.  இதே போன்று வேலம்மாள் மேல்நிலைப் பள்ளியுடன் கால்பந்து போட்டி விளையாட சென்னை வந்துள்ள இலங்கை, ரத்தினபுராவைச் சேர்ந்த ஹில்பர்ன் இன்டர்நேஷனல் பள்ளியின் 8 மாணவர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளரையும் திருப்பி அனுப்ப உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
கருத்துகள்

சரியான நடவடிக்கை. தம் மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள வெறுப்புக்கு என்ன காரணம் என்பதை திரும்பியவர்கள் சிந்திக்கட்டும். முதல்வரின் நடவடிக்கை பாராட்டுதலுக்குரியது என்றே நான் கருதுகிறேன்.
By sivasubramanian
9/2/2012 8:19:00 PM
சபாஷ்.... எல்லாம் இந்த எட்டப்பன் கருணாநிதியின் கையாகாததனம். ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடித்த கதையாக, மத்திய அரசு இப்படி நடந்துகொள்வதை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச முடியாத எட்டப்பன் கருணாநிதி ஐ. நா சபையில் தனது தீர்மானத்தை கொடுக்கிறாராம். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம். வெட்க கேடு.
By இராசாராமன் வெ இராமன்
9/2/2012 7:31:00 PM

புதன், 29 ஆகஸ்ட், 2012

மத்திய அமைச்சர் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது: இலங்கை வீரர்களுக்கு தொடர் பயிற்சி

மத்திய அமைச்சர் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது: இலங்கை வீரர்களுக்கு தொடர் பயிற்சி


Last Updated : 29 Aug 2012 01:26:32 AM IST

 சென்னை, ஆக. 28: இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி தொடரும் என்று மத்திய அரசு கருத்து தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.  தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, இலங்கை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பதை நிறுத்திக்கொண்டு அவர்களை மத்திய அரசு உடனடியாகத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.  இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் அளிக்கப்பட்டு வரும் பயிற்சி தொடரும் என்று மத்திய அரசு சார்பில், மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பல்லம் ராஜு தில்லியில் திங்கள்கிழமை கருத்துத் தெரிவித்திருந்தார்.  தமிழக அரசு மற்றும் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி இலங்கை கடற்படை வீரர்களுக்கு உதகையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "இலங்கை நமது நட்பு நாடு, எனவே இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது தொடரும்' என்று அவர் பதில் கூறியிருந்தார்.  இந்த நிலையில் மத்திய அரசின் சார்பில், மத்திய இணை அமைச்சர் பல்லம் ராஜு கூறியுள்ள கருத்து அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.  தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், நீலகிரியில் பயிற்சி பெற்று வரும் இலங்கை ராணுவ வீரர்களைத் திருப்பி அனுப்ப வேண்டுமென்று என்று வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 28) மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.  அதன் விவரம்: நீலகிரி மாவட்டம், வெலிங்டனில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்தில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்து கடந்த 25-ம் தேதி தங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். வீரர்கள் இருவரையும் திருப்பி அனுப்ப வேண்டுமென கடிதத்தில் வலியுறுத்தியிருந்தேன்.  இந்தக் கோரிக்கையை ஏற்பதற்குப் பதிலாக, இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு வெளிப்படையாகக் கருத்து தெரிவித்துள்ளதாக அறிகிறேன். இந்தக் கருத்து எனக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.  அதாவது, இலங்கை நட்பு நாடாகத் தொடரும் வரையிலும் அந்த நாட்டு வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளதாகத் தெரிகிறது.  எனது அரசின் நோக்கங்களையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் மத்திய அரசு முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத நிலையையே இது காட்டுகிறது.  எனவே, இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது போன்ற கண்டனத்துக்குரிய செயல்களை மத்திய அரசு மேற்கொள்ளாமல் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் பயிற்சி பெற்று வரும் வீரர்களை உடனடியாகத் திருப்பி அனுப்ப வேண்டும் என தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.  கருணாநிதி:மத்திய அமைச்சரின் பதில் தமிழகத்தையும், தமிழர்களின் உணர்வையும் காயப்படுத்துவதுபோல் உள்ளது.இந்தியாவைவிட ஆறு மடங்கு அதிகமான பல்வேறு உதவிகளை இலங்கைக்கு சீனா செய்துள்ள நிலையில், இந்தியா எதை நம்பி இன்னமும் இலங்கையை நட்பு நாடு என்று சொல்கிறது. இதை ஒருதலைபட்சமான நட்பு என்றுதான் சொல்லமுடியுமே தவிர, இருநாடுகளுக்கிடையே சுமுகமான நட்பு என்று எப்படிச் சொல்ல முடியும்?  விஜயகாந்த்:தமிழகத்தையும், தமிழர்களையும் பணயம் வைத்து இலங்கையுடன் ஒருதலைபட்ச நட்புகொள்ள மத்திய அரசு துடிப்பது ஏன் என்பது புரியவில்லை. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இதுதான் நட்பின் லட்சணமா?  தா.பாண்டியன்:இலங்கை வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதன் மூலம் தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு கொச்சைப்படுத்தி வருகிறது. பயிற்சி பெறும் இலங்கை வீரர்களை வெளியேற்ற வலியுறுத்தி செப்டம்பர் 1-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.  ராமதாஸ்:இலங்கை வீரர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளிப்போம் என மத்திய இணையமைச்சர் பல்லம் ராஜு கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்கவில்லை என்பதையே அமைச்சரின் பேச்சு காட்டுகிறது. 

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

தமிழ் இனப் படுகொலைப்பணியை எளிமையாக்கப் பயிற்சி தொடரும்





புது தில்லி: இலங்கைப் படையினருக்குப் பயிற்சி அளிக்கப்படுவது தொடரும் என்று நடுவண் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் பல்லம் இராசு கூறியுள்ளார்.

கடந்த சூலைத் திங்கள், தாம்பரத்தில், இலங்கைப் படையினருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இது பற்றி அறிந்ததும் தமிழ்நாட்டில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்தது. இலங்கைப் படையினரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்று முதல்வர் செயலலிதா தலைமையமைச்சர் மன்மோகன் சிங்கிற்கு மடல் எழுதினார்.

சென்னை, தாம்பரம் விமானப்படை நிலையத்தில் தொழில்நுட்பப் பயிற்சி பெற்ற இலங்கை வானூர்திப்படையினர் 9 பேர் அங்கிருந்து பெங்களூரில் உள்ள எலகங்கா வானூர்திப்படை நிலையத்துக்கு மாற்றப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கைப் படையினருக்குக் குன்னூரில் பயிற்சி அளிக்கப்படுவதாகத் தகவல் வெளியானது. இதனையடுத்து முதல்வர், தலைமையமைச்சருக்கு மீண்டும் மடல் எழுதினார்.

அவர் தனது மடலில், “தொடர் எதிர்ப்புக்குப் பின்னும் இலங்கையைச் சேர்ந்த படை அலுவலர்கள் திசநாயகா மொகட்டலாலகே வெங்கிரா, ஏவ வாசம் கண்டாடகே ஆகியோர் நீலகிரி வெலிங்டன் படைப் பயிற்சிக் கல்லூரியில், 11 திங்கள் பயிற்சி எடுக்கவிடப்பட்டனர். அவர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால், அவர்கள் இருவரும், கடந்த மே 19ஆம் நாள் முதல் தொடர்ந்து பயிற்சி எடுத்து வருகின்றனர். அதாவது மே மாதம் முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி குறித்த உண்மைகள், என் தலைமையிலான அரசுக்குத் தெரிவிக்கப்படாமலேயே மறைக்கப்பட்டுள்ளன. இச்செயல், நடுவண் அரசு அற்பத்தனமாகச் செயல்பட்டு வருவதையே காட்டுகிறது என்று கூறியிருந்தார்.

இது குறித்து, நடுவண் வெளியுறவுத்துறைச் செயலாளர் இரஞ்சன் மாத்தாயிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், “இது கவலைக்குரியது! இது பாதுகாப்புத்துறை தொடர்பானது என்பதால் அவர்களுடன் உரையாடி வருகிறோம் என்று கூறினார்.

தமிழ்நாட்டு முதல்வரின் மடல் குறித்து நடுவண் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் பல்லம் இராசுவிடம் கேட்கப்பட்டது. இது குறித்து அவர் கூறுகையில்,

“இலங்கை, இந்தியாவுக்கு நட்பு நாடு. அவர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பது தொடரும். இதற்கு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்கும். இது பற்றிப் பரிசீலனை செய்யப்படும் என்று கூறினார்.

மேலும் அவர், வானூர்திப்படைக் கட்டுப்பாட்டில் உள்ள விசாகப்பட்டினம் வானூர்தி நிலையத்தில் பன்னாட்டு வானூர்திகள் இயக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

New Delhi plays mischief with Tamil Nadu: Jayalalithaa

New Delhi plays mischief with Tamil Nadu: Jayalalithaa

[TamilNet, Saturday, 25 August 2012, 22:34 GMT]
In a strongly worded letter to Indian Prime Minister Manmohan Singh, Chief Minister of Tamil Nadu State J. Jayalalithaa on Saturday sought the Indian PM to give instructions to the Indian Ministry of Defence to immediately halt the training being given to the Sri Lankan defence personnel at the Defence Services Staff College, Wellington, and arrange to send them back to Sri Lanka immediately. “It is very clear that this fact of ongoing training since May, 2012, has been mischievously concealed from my Government, showing scant regard for the views of my Government as well as for the sentiments of the people of Tamil Nadu,” Ms. Jayalalithaa has written to the Indian PM.

Full text of the statement issued by Tamil Nadu Government's Director of Information & Public Relations in Chennai on Saturday follows:

P.R. No. 500
Date:25.08.2012


PRESS RELEASE

Text of the D.O. letter dated 25.8.2012 addressed by Selvi J Jayalalithaa, Hon’ble Chief Minister of Tamil Nadu to Dr.Manmohan Singh, Hon’ble Prime Minister of India is reproduced below:-

Ms. J. Jayalalithaa
Ms. J. Jayalalithaa
“I would like to draw your attention to my D.O. letter dated 16.7.2012 wherein I have expressed in no unclear terms the strong views of my Government on imparting training to defence personnel belonging to Sri Lanka. Because of my vehement opposition nine personnel belonging to the Sri Lankan Air Force who were undergoing technical training at the Air Force Station, Tambaram, Tamil Nadu, were relocated to the Yelahanka Air Force Station, Bengaluru. This action itself was not proper because instead of sending these personnel back to Sri Lanka, the Government of India exhibited excessive enthusiasm and concern for these personnel by relocating them to Yelahanka Air Force Station, Bengaluru, in order to enable them to complete their training.

Such a reprehensible attitude on the part of the Government of India is even now reflected in permitting two defence personnel of the Sri Lanka namely (1) Major Dissanayaka Mohottalalage Vengra, of the Sri Lankan Army and (2) Captain Hewawasam Kandaudage, of the Sri Lankan Navy to undergo 11 months training at Defence Services Staff College, Wellington, from 19.5.2012 onwards. It is very clear that this fact of ongoing training since May, 2012, has been mischievously concealed from my Government, showing scant regard for the views of my Government as well as for the sentiments of the people of Tamil Nadu.

I, therefore, request you to give suitable instructions to the Ministry of Defence to immediately halt the training being given to the Sri Lankan defence personnel at the Defence Services Staff College, Wellington, and arrange to send them back to Sri Lanka immediately.”

Related Articles:
10.08.12   Unholy agenda of New Delhi, Colombo, continues unchecked
09.07.12   New Delhi grooming Sinhala military needs careful perusal in..

இலங்கை வீரர்களுக்கு கமுக்கப் பயிற்சி : செயலலிதா கண்டனம்

இலங்கை வீரர்களுக்கு இரகசியப் பயிற்சி: பிரதமருக்கு முதல்வர் செயலலிதா கண்டனம்


Last Updated : 26 Aug 2012 01:17:59 AM IST

 சென்னை, ஆக. 25: தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் நீலகிரியில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார்.  இலங்கை ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.  இலங்கை விமானப்படை, கப்பற்படை அதிகாரிகளுக்கு நீலகிரி மாவட்டம் வெலிங்டன் மற்றும் தாம்பரத்தில் பயிற்சி அளிப்பதற்கு முதல்வர் ஏற்கெனவே கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு தமிழகத்தில் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருவதற்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் சனிக்கிழமை (ஆகஸ்ட் 25)  எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:  ""இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த ஜூலை 16-ம் தேதியன்று தங்களுக்கு கடிதம் எழுதினேன். இதை தங்களின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.  என்னுடைய கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து, சென்னை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் தொழில்நுட்ப பயிற்சி பெற்ற இலங்கை விமானப் படை வீரர்கள் 9 பேர் அங்கிருந்து பெங்களூரில் உள்ள எலஹங்கா விமானப்படை நிலையத்துக்கு மாற்றப்பட்டனர்.  அவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்புவதற்கு பதில் இடமாற்றம் செய்த நடவடிக்கையானது, அந்த நாட்டு வீரர்கள் பயிற்சியை நிறைவு செய்வதில் இந்தியாவுக்கு இருந்த அதீத ஆர்வத்தையும், அக்கறையையும் வெளிப்படுத்தும் வகையில் இருந்தது.  தமிழக அரசுக்குத் தெரியாமல்...இந்திய அரசின் கண்டிக்கத்தக்க அந்தப் போக்கானது, இலங்கையைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகளுக்கு வெலிங்டனில் பயிற்சி அளிப்பதன் மூலம் தொடர்கிறது.  இலங்கை ராணுவ அதிகாரிகளான தெசநாயகா மொஹட்ட லாலக வெங்க்ரா, ஹேவ வாஸம் கண்டாடக ஆகியோர் நீலகிரி வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் 11 மாத பயிற்சி எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்கள் இருவரும் கடந்த மே 19-ம் தேதி முதல் தொடர்ந்து பயிற்சி எடுத்து வருகின்றனர். இந்தப் பயிற்சி குறித்த உண்மைகள் எனது தலைமையிலான அரசுக்கு தெரிவிக்காமலேயே மறைக்கப்பட்டுள்ளது.  மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பில்லை: இந்தச் செயல் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு கொஞ்சம்கூட மதிப்பளிக்கப்படவில்லை என்பதையே காட்டுகிறது. தமிழக அரசின் கருத்தை கேட்காமலேயே மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை அதிருப்தி அளிக்கிறது.  எனவே, வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ராணுவ அதிகாரிகளுக்கு தாங்கள் உத்தரவிடவேண்டும். மேலும் இலங்கை ராணுவ வீரர்களை அவர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்ப உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். 
  
முதல்வரின் கோரிக்கையே  எங்களது கோரிக்கை: தி.மு.க. 
 இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்காமல் அவர்களைத் திருப்பி அனுப்ப வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளதே திமுகவின் முடிவு என்று அக் கட்சியின் அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.  சென்னை அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:  வெலிங்டன் ராணுவ முகாமில் இலங்கை ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கக்கூடாது, அவர்களைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.  இந்தக் கருத்துத்தான் திமுகவினுடையதும்.  டெசோ மாநாட்டில் இலங்கை வீரர்களுக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக்கூடாது என்று தீர்மானமே நிறைவேற்றியுள்ளோம். அந்தக் கருத்தை இப்போதும் வலியுறுத்துகிறோம்.  நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்பதே திமுகவின் கருத்து. விவாதம் நடத்தப்படாமல் நடாளுமன்றம் முடக்கப்படுவதால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்றார் அவர்.

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

மேரி கோம் : வென்றது வெண்கலம், மனமோ தங்கம்

தற்போதைய செய்திகள்
மேரி கோம் : வென்றது வெண்கலம், 
மனமோ தங்கம்

தினமணி : First Published : 09 Aug 2012 05:59:39 PM IST


இம்பால், ஆக., 09 : குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள இந்திய வீராங்கனை மேரி கோம், தான் ஒலிம்பிக்கில் வெள்ளி அல்லது தங்கப் பதக்கம் வெல்லாதது குறித்து நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார்.ஆனால் அவர் மன்னிப்புக் கோர எந்த அவசியமும் இருக்கவில்லை என்பது அவரைப் பற்றி அறிந்தவர்களுக்குத்தான் தெரியும்.தனது வீட்டில் சுமார் 40 மாணவ, மாணவிகளுக்கு குத்துச்சண்டை பயிற்சியை இலவசமாக அளித்து வருகிறார் மேரி கோம். உணவு, தங்கும் இடம் என அனைத்தும் இலவசம். குத்துச் சண்டையில் ஆர்வமுள்ள மேரி கோம், ஒலிம்பிக் என்ற உச்சத்தை அடைய அதிக சிரமப்பட்டார். ஆனால், தன்னைப் போல குத்துச்சண்டையில் ஆர்வமுள்ள ஏழைக் குழந்தைகள் அவ்வளவு சிரமப்படக் கூடாது என்பதால் ஒரு அகாடமியை உருவாக்கி இலவசமாக குத்துச்சண்டை பயிற்சி அளித்து வருகிறார். மாணவிகளை தனது வீட்டிலேயே தங்க வைத்துள்ள மேரி கோம், மாணவர்களை அருகில் வாடகை வீட்டில் தங்க வைத்து பயிற்சி அளித்து வருகிறார்.இவர் வென்றது வெண்கலமாக இருந்தாலும், இவரது மாணவர்கள் நிச்சயம் தங்கம் வெல்வார்கள் என்று நம்புவோம்.
கருத்துகள்

மக்கள் தொகையில் பெருக்கம் கொண்ட பலம் வாய்ந்த நமது இந்தியாவில் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பதக்கம் வாங்கியவர்கள் அனைவருக்கும் நாம் அனைவரும் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம். உலக அளவில் போட்டியிட்டு வெற்றி பெறுவது ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை. உண்மையில் இவர்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி, உலக அரங்கில் இந்தியாவுக்கு கிடைத்த கெளரவம். நேர்மை, உழைப்பு, நம்பிக்கை, போராட்டம், இவை தான் இவர்களது வெற்றிக்கு காரணம். ஜெயப்ரகாஷ். சிவகாசி.
By ஜெயப்ரகாஷ்.
8/9/2012 9:45:00 PM
மக்கள் தொகையில் பெருக்கம் கொண்ட பலம் வாய்ந்த நமது இந்தியாவில் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பதக்கம் வாங்கியவர்கள் அனைவருக்கும் நாம் அனைவரும் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம். உலக அளவில் போட்டியிட்டு வெற்றி பெறுவது ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை. உண்மையில் இவர்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி, உலக அரங்கில் இந்தியாவுக்கு கிடைத்த கெளரவம். நேர்மை, உழைப்பு, நம்பிக்கை, போராட்டம், இவை தான் இவர்களது வெற்றிக்கு காரணம். ஜெயப்ரகாஷ். சிவகாசி.
By ஜெயப்ரகாஷ்.
8/9/2012 9:45:00 PM
கிரேட்
By Saravanan
8/9/2012 6:54:00 PM


புதன், 1 ஆகஸ்ட், 2012

இலங்கை இராணுவ வீரர்களுக்கு ப் பயிற்சி அளிக்கும் இந்திய அரசை க் கண்டித்து ப் போராட்டம்: சிரீராமசேனை

இலங்கை இராணுவ வீரர்களுக்கு ப் பயிற்சி அளிக்கும் இந்திய அரசை க் கண்டித்து ப் போராட்டம்: சிரீராமசேனை




பெங்களூர், ஆக. 1: இலங்கை ராணுவ வீரர்களுக்கு பெங்களூரில் பயிற்சி அளிக்கும் இந்திய அரசை கண்டித்து போராட்டம் விரைவில் நடத்தப்படும் என்று ஸ்ரீராமசேனை தலைவர் பிரமோத் முத்தாலிக் தெரிவித்தார்.இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கையில் தமிழ் இந்துக்கள் போர் என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டனர். அந்நாட்டின் ராணுவ வீரர்களுக்கு பெங்களூர் எலஹங்காவில் இந்திய அரசு பயிற்சி அளித்து வருகிறது. அவர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடாது என்று ஏற்கெனவே ஆளுநரிடம் மனு அளித்தோம். இருந்தாலும் அவர்களுக்கு பெங்களூரில் பயிற்சி அளிப்பது தொடர்ந்து வருகிறது. எனவே இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்திய அரசை கண்டித்து எலஹங்காவில் ஸ்ரீராமசேனை உள்ளிட்ட இந்து அமைப்புகளின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

செவ்வாய், 17 ஜூலை, 2012

தமிழர்களின் உணர்வுகளை அவமதிக்கிறது மத்திய அரசு: முதல்வர்

தமிழர்களின் உணர்வுகளை அவமதிக்கிறது மத்திய அரசு: முதல்வர் 
தினமலர்

சென்னை:""இலங்கை அதிகாரிகளுக்கு குன்னூரில் பயிற்சியளிப்பது, தமிழர்களின் உணர்வுகளை அவமதிப்பதாகும்; உடனடியாக, அவர்களை நாட்டிற்கு திருப்பியனுப்ப வேண்டும் என்று, முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடித விவரம்:இலங்கையில், போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களை, போர்க் குற்றவாளிகளாக அறிவித்து, ஐ.நா., சபைக்கு, இப்பிரச்னையை இந்தியா கொண்டு செல்ல வேண்டும்.அத்துடன், இலங்கை முள்வேலி முகாம்களில் வாடி வரும் தமிழர்கள், தங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவது, சிங்களர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அரசியல் சாசன உரிமைகளை, தமிழர்களுக்கும் அளிப்பது என்பது போன்ற கவுரவமான வாழ்க்கை, அவர்களுக்கு கிடைக்கும் வரை, மற்ற நாடுகளுடன் சேர்ந்து, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிப்பதற்கான நடவடிக்கைகளை, மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று, தமிழக சட்டசபையில், கடந்த ஜூன் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை, தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

ஆனால், தமிழர்களின் உணர்வுகளை மிதித்து நசுக்கும் வகையிலும், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலையிலும், மத்திய அரசு இருப்பதுடன், தொடர்ந்து இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு, இங்கு பயிற்சியளிப்பதில் முக்கியத்துவம் வழங்கி வருவதாக, உலகத் தமிழர்கள் கருதுகின்றனர்.இலங்கை விமானப் படையைச் சேர்ந்த ஒன்பது விரர்களுக்கு, சென்னை தாம்பரம் விமான பயிற்சி நிலையத்தில் பயிற்சியளிக்கப்பட்ட போது, அதை கண்டித்ததுடன், அந்த வீரர்களை உடனடியாக சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்ப, கோரிக்கை விடுத்திருந்தேன்.ஆனால், அவர்களை திருப்பியனுப்பாமல், பெங்களூருவில் உள்ள எலஹெங்கா விமான பயிற்சி மையத்தில், மத்திய அரசு பயிற்சியளித்து வருகிறது. தொடர்ந்து, டில்லியில் உள்ள தேசிய ராணுவ அகடமியில் பயிற்சி பெற்று வரும், இலங்கை விமானப் படை அதிகாரி ஜெகத் ஜுலங்கா டயாஸ் மற்றும் கடற்படை அதிகாரி ரணசிங்கே மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் 25 பேர், நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டனில், ராணுவ பயிற்சிக்காக வந்துள்ளதாக அறிந்தேன். டில்லியில் வழங்கப்படும் பயிற்சின் ஒரு பகுதியாக, இங்கு பயிற்சியளிக்கப்படுவதாக தெரிகிறது.

இலங்கை படையினருக்கு இங்கு பயிற்சியளிப்பதும், தமிழகத்தில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் நடக்கும் பயிற்சிகளை பார்வையிடுவதற்கு அனுமதி அளித்திருப்பதும், தமிழக மக்களின் உணர்வுகளை அவமதிப்பதாகும். மத்திய அரசின் இந்த பிடிவாதப் போக்கு, தமிழக மக்களிடம், பெரும் கொந்தளிப்பையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.எனவே, இந்தியாவில் எங்கும், இலங்கை வீரர்களுக்கு பயிற்சியளிக்கக் கூடாது என்று, பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அறிவுறுத்த வேண்டும். மேலும், பயிற்சி பெற வந்துள்ள அவர்களை, உடனடியாக அவர்கள் சொந்த நாட்டிற்கு திருப்பியனுப்ப வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

திங்கள், 16 ஜூலை, 2012

குன்னூரில் இலங்கைப்படையினர் :சிங்கள ஆதரவும் நிற்காது! எதிர் போராட்டமும் ஓயாது!


தற்போதைய செய்திகள்
குன்னூரில் இலங்கை இராணுவத்தினர்: நாளை கருத்தரங்கில் கலந்து கொள்வதால் பரபரப்பு
தினமணி
First Published : 15 Jul 2012 02:59:29 PM IST

Last Updated : 15 Jul 2012 05:48:53 PM IST

குன்னூர், ஜூலை 15: இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் உள்பட எதிர்க்கட்சிகள் பலவும் எதிர்ப்புக் குரல் எழுப்பின. இந்நிலையில், தமிழகத்தில் அவர்கள் பயிற்சி பெற இருந்தது, பெங்களூருக்கு என்று மாற்றி அமைக்கப்பட்டது. இதற்கும் எதிர்ப்புக் குரல் எழுந்தது. இந்தியாவில் எங்குமே இலங்கை ராணுவத்தினர் பயிற்சி பெறக்கூடாது என்று கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றனர்.குன்னூருக்கு அருகே கொடநாடு பகுதியில் தமிழக முதல்வர் தங்கியுள்ளார். அவரைக் காண அமைச்சர்கள் பலரும் வந்து சென்றுள்ளனர். இந்நிலையில், குன்னூரில் தாஜ் ஹோட்டலில் இலங்கை ராணுவ அதிகாரிகள் 4 பேர் வந்து தங்கியுள்ளனர். இவர்களுக்கு குன்னூரில் எம்.ஆர்.சி எனப்படும் மெட்ராஜ் ரெஜிமெண்ட் செண்டரில் பயிற்சி வகுப்பு இருப்பதாகவும், அவர்கள் இன்று குன்னூரில் சுற்றுப் பயணம் செய்துவிட்டு, நாளை நடக்கும் வகுப்பு மற்றும் கருத்தரங்கில் கலந்து கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டது.இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இலங்கை ராணுவத்துக்கு எதிராக, தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்பு என அரசியல் சூழ்நிலை நிலவும்போது, இந்தச் செய்தி குன்னூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரும் அந்தப் பகுதியில் தங்கியிருப்பதால், இது பெரும் பிரச்னையை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்புக் குரல் எழுந்ததை அடுத்து, போலீஸார் தாஜ்-கேட் வே விடுதிக்கு முன்னர் குவிக்கப்பட்டுள்ளனர்.  பாதுகாப்பு அந்தப் பகுதியில் பலப்படுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள்

கருணாநிதியின் சொல்லை மதிக்காமல் மத்திய அரசு சிங்களவனை அழைத்து மாநாடு கொண்டாட்டம் விருந்து வைப்பதை கண்டித்து முத்தமிழ் காவலர் , தண்டவாளத்தில் தலை வைத்து நிலையத்தில் தரித்து நின்ற ரயிலை நிற்கவைத்த மாவீரன் .ரெண்டரை மணிநேர உண்ணாவிரத்தில் ஓர் இனத்தையே மண்ணோடு மண்ணாக்கிய மாவீரன் . ஆளும் கூட்டணியில் இருந்து வாபஸ் என்று அறிக்கை விட்டு மீண்டும் ரெண்டுமணி நேரத்தில் வாபஸ் பெறுவார் . தமிழ் இனமே கலங்காதே
By vasan
7/15/2012 3:46:00 PM
துரத்த வேண்டும்.
By ஆனந்த்
7/15/2012 3:43:00 PM 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சாலை மறியல்: மதிமுகவினர் 52 பேர் கைது
தினமணி
First Published : 15 Jul 2012 08:46:05 PM IST


குன்னூர், ஜூலை.15: குன்னூரில் உள்ள ராணுவ முகாமில் பயிற்ச்சியில பங்கேற்க வந்திருந்த இலங்கை ராணுவ வீரர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மதிமுக வினர் சாலைமறியலில் ஈடுப்பட்டதால் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு எற்பட்டது.குன்னூரில் உள்ள ராணுவ முகாமில்  பயிற்ச்சிப் பெறுவதற்காக ஞாயிற்றுக் கிழமை 10 நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் குன்னூர் கேட்வே தங்கும் விடுதிக்கு வந்திருந்தனர். இவர்களில் இரண்டு இலங்கை ராணுவ அதிகாரிகளும் இடம் பெற்றிருந்தனர். இவர்களுக்கு திங்கள் கிழமை காலை குன்னூர் டிஎஸ்எஸ்சி எனப்படும் டிபன்ஸ் சர்வீஸ் ஸ்டாப் காலேஜில் ராணுவ பயிற்ச்சி அளிக்க உள்ளதாக தகவல்கள் பரவின இதனைத் தொடர்ந்து. மதிமுகவைச் சேர்ந்த கோவை மாவட்ட செயலர் ஆர்.எஸ்.மோகன குமார், கோவை புறநகர் மாவட்ட செயலர் ஈஸ்வரன் உள்ளிட்ட  20 ற்கும் மேற்பட்ட மதிமுகவினர்  நீலகிரி மாவட்ட செயலர் அட்டாரி நஞ்சன் தலைமையில் குன்னூர் கேட்வே தங்கும் விடுதியினுள் நுழைய முயன்றனர் இவர்களை காவல் துறையினர் குன்னூர் லெவல் கிராசிங் பகுதியில் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல் துறையினருக்கும் மதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து  இவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கோவை வழித் தடத்தில் அரை மணி நேரத்திற்கும மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதேப் போன்று உதகை தாஜ்  ஓட்டலை முற்றுகையிட முயன்ற 30ற்கும் மேற்பட்ட மதிமுகவினரை காவல்  துறையினர் கைது செய்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தில் உதகை நகர செயலர் மணிவண்ணன்,மாவட்ட துணை செயலர் விஜயகுமார்,குன்னூர் நகரசெயலர் கிங்ஸ் ராஜன், பொதுக் குழு உறுப்பினர் பி.சி சேகர், கோத்தகிரி ஒன்றிய செயலர் ராமகிருஷ்ணன், முன்னாள் நகர செயலர் தமிழகம் சபி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
  ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++




இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு குன்னூரில் பயிற்சி தர எதிர்ப்பு: பெரியார் திராவிட கழகம்
இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு குன்னூரில் பயிற்சி தர எதிர்ப்பு: பெரியார் திராவிட கழகம்
சென்னை, ஜூலை 15-

தமிழ்நாட்டில் நடைபெறும் ராணுவ முகாமிற்கு இலங்கை அதிகாரிகளை அனுமதித்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான பயிற்சி முகாம் குன்னூரில் நாளை நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக இலங்கை, வங்கதேசம், சீனாவைச் சேர்ந்த் 40 ராணுவ அதிகாரிகள் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவக் கல்லூரிக்கு வந்துள்ளனர்.

இதில் இலங்கை சார்பில் 4 அதிகாரிகள் வந்துள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் உள்ள தாம்பரம் முகாமில் இலங்கை விமானப்படை வீரர்கள், பயிற்சி பெற்றபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அந்த வீரர்களை மத்திய அரசு வாபஸ் பெற்றது.

இந்நிலையில் இலங்கை அதிகாரிகள் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு வந்திருப்பது, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அங்கிருந்து இலங்கை அதிகாரிகளை உடனே வெளியேற்ற வேண்டும் என்று பெரியார் திராவிடர் கழகம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளன.

இலங்கை அதிகாரிகளை வெளியேற்றாவிட்டால் வெலிங்டன் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றும் பெரியார் தி.க. எச்சரித்துள்ளது.