disabled persons லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
disabled persons லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 22 ஆகஸ்ட், 2012

SL military grabs disabled people's land in Ki'linochchi

SL military grabs disabled people's land in Ki'linochchi

[TamilNet, Saturday, 18 August 2012, 17:29 GMT]
The occupying Sri Lanka Army (SLA) in Ki'linochchi district has instructed the Sri Lankan Government Agent (SLGA) of the district to permanently hand over 6 acres of lands already encroached by the 65-2 division of the SLA at Aanaivizhunthaan-ku'lam GS area of Karaichchi division. The land, which is owned by a rehabilitation organisation for disabled persons, is located 10 km southwest of Ki'linochchi town.

The facility was functioning before the war with a technical training centre for disabled people and a secretariat of the organisation in the land, which has been grabbed by the SLA.

The SLA has been refusing to hand over the lands to the disabled people's rehabilitation organisation, despite the repeated appeals made by the organisation.

Now, the SLGA of the Ki'linochchi district has been instructed by the top brass of the SLA to hand over the lands permanently to the SLA, informed sources at the District Secretariat of Ki'linochchi told TamilNet.

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

மாற்றுத்திறனாளி மாணாக்கருக்கும் ஊக்கத் தொகை : தமிழக அரசு

மாற்றுத்திறனாளி மாணாக்கருக்கும் ஊக்கத் தொகை : தமிழக அரசு

First Published : 09 Aug 2012 11:04:08 AM IST தினமணி


சென்னை, ஆக., 09 : மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் இயங்கும் அரசு சிறப்புப் பள்ளிகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்புப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கும் ஊக்கத் தொகை வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் ஒவ்வொருக்கும் ஊக்கத் தொகையாக 1,500 ரூபாயும், 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் ஊக்கத் தொகையாக 2,000 ரூபாயும் வழங்கப்படும். இந்த ஊக்கத் தொகையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பீடு செய்யும் வகையில் 22 லட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இதன் மூலம் 1,359 மாணவ, மாணவியர் பயன் பெறுவர்.மேலும், தற்போது 32 மாவட்டங்களில் உள்ள ஆரம்ப பயிற்சி மையங்கள் மற்றும் முன்பருவ பள்ளிகளுக்கு செல்லும் 2,390 மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்ய அளிக்கப்பட்டு வரும் பயண சலுகையை, அவர்களுடன் செல்லும் ஒரு துணையாளருக்கும் விரிவுப்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.பார்வையற்ற மாற்றுத் திறனாளிக்கு, நடப்பதற்கு உதவிகரமாக தற்பொழுது வழங்கப்பட்டு வரும் மேல் பகுதியில் வெள்ளை வர்ணமும், கீழ் பகுதியில் சிவப்பு வர்ணமும் பூசப்பட்ட மடக்கு குச்சிகளுக்கு பதிலாக ஒளிரும் மடக்கு குச்சிகள் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த ஒளிரும் மடக்கு குச்சிகள் 10 லட்சம் ரூபாய் செலவில் 5,000 நபர்களுக்கு வழங்கப்படும்.தற்போது, தங்களை தாங்களே பராமரித்துக் கொள்ள இயலாத 60 விழுக்காடு மற்றும் அதற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய 77,112 நபர்களுக்கு பராமரிப்பு தொகையாக மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பராமரிப்புத் தொகை இன்னும் அதிகமான நபர்களுக்கு கிடைப்பதற்கு ஏதுவாக, பராமரிப்பு தொகை பெறுவதற்கான குறைபாட்டின் விழுக்காட்டினை 60 லிருந்து 45 ஆக குறைத்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வியாழன், 12 ஜூலை, 2012

உள்ளத்தில் ஊனமின்மையால் உயர்ந்தவர்



இடுப்பிற்கு கீழ் செயல் இழந்தாலும், தன்னம்பிக்கையுடன் சாதித்து வரும் ஜெயன்: திருச்சி மாவட்டம் துறையூர் சோபனபுரம் தான் சொந்த ஊர். இரண்டு வயதிலேயே, பெற்றோரை இழந்து விட்டேன். பாட்டி தான் படிக்க வைத்தார். இப்போது நான், பி.ஏ., பி.எட்., பட்டதாரி.
வயல் மற்றும் தோட்ட வேலைக்கு பல நாள் பட்டினியுடன் சென்றிருக்கிறேன். அவ்வளவு கஷ்டத்திலும், படிப்பின் மேல் இருந்த ஆர்வம் குறையவில்லை. பிளஸ் 2வில், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல், குழப்பமாக இருந்தது.

தென்காசி ஆயக்குடி அமர் சேவா சங்கத்தில் சேர்ந்தேன். அங்கு என்னைப் போல் வாழ்பவர்களின் இன்னொரு உலகத்தைப் பார்த்து, திகைத்துப் போனேன். அங்கு தான் டைப்பிங், புக் பைண்டிங், கம்ப்யூட்டர் எல்லாம் கற்றுக் கொண்டேன்.
ஆயக்குடி சங்கத்தில் தான், என் மனைவி பேபியைப் பார்த்தேன்; திறமையான பெண். அவரும் இடுப்பிற்கு கீழ் செயல் இழந்த மாற்றுத் திறனாளி தான். ஒன்பதாம் வகுப்பு வரை படித்திருந்தார். அந்த சங்கத்தில் கைவேலை ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
நாங்கள் இருவரும் காதலித்தோம். இரு வீட்டார் எதிர்ப்பை மீறி, திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்குப் பின், பல இடங்களில் வேலை தேடி அலைந்தேன்; எல்லா இடங்களிலும், அவமானம் மட்டுமே மிஞ்சியது.

இனி படிப்பைத் தவிர வேறு யாராலும், நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியாது என, முடிவெடுத்தேன். வைராக்கியத்துடன் படித்தேன். கட்டணக் கழிப்பறையில் இரவு வேலைக்கு சென்று கொண்டே, காலையில் கல்லூரிக்கு சென்று, பி.ஏ., தமிழில் தேர்ச்சி பெற்றேன்.
பி.எட்., படிப்பில் சேர, கையில் பணம் இல்லை. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் எனக்கு உதவினர். இப்போது, எம்.ஏ.,வும் முடிக்கப் போகிறேன்.
மனைவி, குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டியிருப்பதால், இப்போது, வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை. வீட்டிலேயே மொபைல் போன் சர்வீஸ் செய்கிறேன். மாதம், 4,000 ரூபாய் வருமானம் கிடைக் கிறது. ஆசிரியர் வேலை கிடைத்தால், எங்கள் பாரம் தீர்ந்து விடும்.

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

Disabled voters requested priority :வாக்களிக்க முன்னுரிமை: மாற்றுத் திறனாளிகள் வேண்டுகோள்

சரியான வேண்டுதல்கள். இந்தத் தேர்தலிலேயே இவை நிறைவேற்றப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

வாக்களிக்க முன்னுரிமை: மாற்றுத் திறனாளிகள் வேண்டுகோள்



சென்னை, மார்ச் 31: தேர்தலில் வாக்களிக்கும்போது உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கத்தின் சார்பாக, "தேர்தலில் மாற்றுத் திறனாளிகளின் சிரமங்கள்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.இதில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகள் பேசியதாவது:தமிழகத்தில் சுமார் 20 லட்சம் மாற்றுத் திறனாளிகள் இருக்கிறார்கள். எனவே எங்களது உணர்வுகளுக்கும் மதிப்பளித்து தேர்தல் ஆணையம் சில உரிமைகளையும், வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும்.குறிப்பாக, நடக்க இயலாதவர்களுக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சக்கர நாற்காலி வசதியை செய்து தர வேண்டும்.பார்வையற்றோரை பொறுத்தவரையில், மற்றவர்களின் உதவியில்லாமல் வாக்களிக்க இயலாது. அவ்வாறு உதவி செய்பவர்கள் அவர்களுக்கு விருப்பமான கட்சிக்கு வாக்களித்து விடும் சூழ்நிலை உள்ளது. எனவே பார்வையற்றோரின் வாக்குரிமை மறைமுகமாகப் பறிக்கப்படுகிறது.இதனைத் தவிர்க்க, மற்றவர்களின் உதவியில்லாமல் வாக்களிக்கும் வகையில் பேசும் மென்பொருள் (டாக்கிங் சாஃப்ட்வேர்) வசதியை வாக்குச்சாவடிகளில் கொண்டு வர வேண்டும்.உயரம் குறையுள்ளவர்களுக்கு வாக்கு இயந்திரம் எட்டும் அளவுக்கு சாய்வு தளப் பலகை வசதியை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதே போல, செவித்திறன் குறைபாடுள்ளோருக்கு தகவல் பரிமாறும் வசதி மிகவும் குறைவாக இருக்கும். எனவே, அவர்களுக்கு சமூக நலத்துறை சார்பாக வழங்கப்படும் அடையாள அட்டையையே போதுமானதாக கருதி வாக்காளர் அடையாள அட்டையைத் தவிர்க்க வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகள் சங்கத்தின் மாநில அமைப்பாளர் நம்புராஜன், உயர வளர்ச்சி தடை பெற்றோர் சங்கத் தலைவர் ஆர்.கோபிநாத், மாற்றுத் திறனாளிகள் நல ஆணைய உதவி இயக்குநர் ஜெயலட்சுமி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 16 அக்டோபர், 2009

ஊனமுற்ற மாணவர்களுக்கு மத்திய அரசு பள்ளிகளில் இனி கட்டணம் கிடையாது



புது தில்லி, அக். 15: மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் படிக்கும் ஊனமுற்ற மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை கூறியுள்ளது: நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தி வரும் 981 கேந்திர வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இவற்றில் சுமார் 2,500 ஊனமுற்ற மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த ஆண்டு முதல் இவர்களிடமிருந்து கட்டணம் ஏதும் வசூலிக்கப்படமாட்டாது என்று அமைச்சகம் கூறியுள்ளது. சில நாள்களுக்கு முன்புதான் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் கல்விக் கட்டணம் சுமார் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் ஊனமுற்ற மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது என்ற புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

இதனை எலலா மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். இலவசக்கல்வி அளிக்கும் மாநிலங்களில் அவர்களுக்கு உதவித் தொகைகள் வழங்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/16/2009 3:29:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *