ஞாயிறு, 27 மார்ச், 2011

Bride groom Friend of M.K.Azhagiri is contesting against the V.C.candidate: மு.க.அழகிரியின் மாப்பிள்ளை தோழன்வி.சி., வேட்பாளரை எதிர்த்து போட்டி

இந்தியப் பணக்குறியீட்டிற்கு இந்தி எழுத்தைப்  புகுத்தச் செய்தவரின் தநதை எனில் இவருக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராதது சரிதான்.  தேசிய இனங்களின் பகைவனின் தநதை தருமலிங்கம் தோற்கட்டும்! அறத்திற்கு - தருமத்திற்கு - அதுவே வெற்றி! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி வி.சி., வேட்பாளரை எதிர்த்து, தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., மரூர் தருமலிங்கம் மனு தாக்கல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., மரூர் தருமலிங்கம், கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட நேற்று மனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தி.மு.க., சார்பில் கடந்த 1971-76 வரை ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தேன். பின், அகில இந்திய மு.க. அழகிரி பேரவையை துவக்கி பல உறுப்பினர்களை சேர்த்தேன். கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு தி.மு.க., தலைமைக்கு மனு செய்தேன்.

இத்தொகுதி வி.சி.,க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சி துவங்கியவர்களுக்கு கூட "சீட்' வழங்கியுள்ளனர். தி.மு.க., வளர்ச்சிக்கு பல ஆண்டுகள் உழைத்த எனக்கு வாய்ப்பு வழங்கவில்லை.சேலத்தில் செம்மலைக்கு "சீட்' தராததால் பனமரத்துப்பட்டியில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரானார். இதேபோல், பி.எச்.பாண்டியன், தாமரைக்கனி, திருநாவுக்கரசு, பேராவூர் செல்லையா போன்றவர்கள் கட்சியில் "சீட்' கிடைக்காத போது தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதேபோல், இத்தொகுதியிலும் மக்களிடம் அதிக செல்வாக்கு பெற்றுள்ள நான் தனித்து போட்டியிட்டு அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.

இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு இல்லை என்று தெரிந்தும் வி.சி., வேட்பாளரை நிறுத்தியிருக்க தேவையில்லை.எனவே, இத்தொகுதியில் போட்டியிடும் எனக்கும், அ.தி.மு.க., வேட்பாளர் அழகுவேல் பாபுவிற்கும் தான் உண்மையான போட்டி ஏற்பட்டுள்ளது. நான் இத்தொகுதியின் மைந்தன். நான் வெற்றி பெறும் அளவிற்கு இத்தொகுதியில் மக்கள் செல்வாக்கு உள்ளது.எனது மகன் உதயகுமார், ரூபாய்க்கான குறியீட்டை கண்டு பிடித்து உலகளவில், இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ளார். காங்., தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் உட்பட பலரும் எனது மகனை பாராட்டி விழாக்கள் எடுத்துள்ளனர். ஆனால் நானும், எனது குடும்பமும் தி.மு.க.,விற்கு பல ஆண்டுகள் உழைத்தும் எனது மகன் உதயகுமாரை, முதல்வர் கருணாநிதி நேரில் அழைத்துக்கூட பாராட்டவில்லை.

அ.தி.மு.க.,விலிருந்து வந்த சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் போன்றவர்களுக்கு தி.மு.க.,வில் "சீட்' வழங்கப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது. ஆனால், கருணாநிதியின் குடும்பத்தில் நெருங்கிப் பழகி, அழகிரி திருமணத்தில் மாப்பிள்ளை தோழனாக இருந்த எனக்கு இக்கட்சியில் "சீட்' வழங்காதது வேதனையளிக்கிறது. எனவே, இத்தொகுதி மக்களின் ஆதரவோடு வெற்றி பெற்று மக்களுக்கு சேவை செய்வேன்.இவ்வாறு மரூர் தருமலிங்கம் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக