thanga balu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
thanga balu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 19 ஜூலை, 2011

நீதிக்குத் தலை வணங்க வேண்டும்: அரசுக்குத் தங்கபாலு வலியுறுத்தல்

நீதிக்குத் தலை வணங்க வேண்டும்: அரசுக்குத் தங்கபாலு வலியுறுத்தல்

First Published : 19 Jul 2011 04:44:13 AM IST

Last Updated : 19 Jul 2011 05:33:32 AM IST

சென்னை, ஜூலை 18: சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்குத் தமிழக அரசு தலை வணங்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு வலியுறுத்தியுள்ளார்.  இதுதொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல் செய்ய வேண்டும், அதற்கான புத்தகங்களை இந்த மாதம் 22-ம் தேதிக்குள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற தீர்ப்பு மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மகிழ்ச்சி தருவதாக உள்ளது. சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்யவில்லை என்றும் குறைகளை நீக்கி அடுத்த ஆண்டு அமல் செய்வோம் என்றும்தான் உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசு கூறியுள்ளது.  எனவே உயர் நீதிமன்றத்தின் இத் தீர்ப்பு அரசுக்கு வெற்றியோ தோல்வியோ அல்ல. எனவே, கெüரவம் பார்க்காமல் சமச்சீர் கல்வித் திட்டத்தை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தங்கபாலு கூறியுள்ளார்.  மேல்முறையீடு கூடாது - ராமதாஸ்: சமச்சீர் கல்வி வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  அவரது அறிக்கை: சமச்சீர் கல்விக்குத் தடை விதிக்க முடியாது என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. மீண்டும் மேல்முறையீடு செய்வதால் எந்தப் பயனும் இல்லை.  அரசின் பிடிவாதப் போக்கால் கடந்த 2 மாதங்களாக மாணவர்கள் பள்ளிக்குச் சென்றும் பாடம் படிக்க முடியாமல் உள்ளனர். முதல் பருவத் தேர்வும் நடக்கவில்லை.  செப்டம்பரில் காலாண்டுத் தேர்வு நடத்த வேண்டுமானால் இனியும் தாமதமில்லாமல் பாடங்களைத் தொடங்கியாக வேண்டும்.  எனவே, உயர் நீதிமன்ற அறிவுரைப்படி சமச்சீர் கல்வித் திட்டத்தை உடனடியாக அரசு செயல்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.  திருமாவளவன்: சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் வலியுறுத்தியுள்ளார்.  மேல்முறையீடு செய்யத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்பது மாணவர்களின் கல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் செயல்படும் பிடிவாதப் போக்கை வெளிப்படுத்துகிறது.  மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பெருந்தன்மையோடு இப் பிரச்னையை அணுக வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வியாழன், 30 ஜூன், 2011

Rajapakshe is a world notorious lier: இராசபட்ச உலக மகாப் பொய்யர்: தங்கபாலு கண்டனம்

உலக மகாப் பொய்யர் பேச்சையும் வாக்குறுதிகளையும் நம்பி இந்தியா என்னதான் பேசினாலும் வலியுறுத்தினாலும் என்ன பயன் விளையப் போகிறது? உலக மகாப் பொய்யரின் பேச்சை நம்பி இந்தியா பறித்த ஈழத்தமிழர்களின் உயிர்களைத்திரும்பப் பெற இயலுமா? இப்பொழுதேனும் உலகமகாப் பொய்யரின் பேச்சை நம்பி மோசம் போனோம் என்பதை ஒப்புக் கொண்டு செய்த பெருங்குற்றங்களுக்குக் கழுவாயாகத் தமிழ் ஈழத்தை ஏற்கட்டும் இந்தியா! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


ராஜபட்ச உலக மகா பொய்யர்: தங்கபாலு கண்டனம்

First Published : 29 Jun 2011 02:42:08 PM IST

Last Updated : 29 Jun 2011 03:26:11 PM IST

சென்னை, ஜூன்.29: தமிழர்கள் பிரச்னை தொடர்பாக இந்திய அரசிடம் இருந்து நிர்பந்தம் ஏதும் வரவில்லை என்று இலங்கை அதிபர் ராஜபட்ச உலக மகா பொய்ச் செய்தியை தெரிவித்திருப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு கண்டனம் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை தொடர்பாக இந்திய அரசிடமிருந்து நிர்ப்பந்தம் ஏதும் வரவில்லை என்று இலங்கை  அதிபர் ராஜபட்ச உலகமகாப் பொய்ச் செய்தியை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.இலங்கையில் தமிழர்களின் வாழ்வுரிமைப் பிரச்னை மிகவும் உக்கிரம் அடைந்த 1983 ஆம் ஆண்டு முதல் இந்திய பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, நரசிம்மராவ் காலத்திலும், சோனியா வழிகாட்டுதலில் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான இன்றைய மத்திய அரசின் காலத்திலும் இலங்கைவாழ் தமிழர்களின் பிரச்சினைக்கு அந்த நாடு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தை பல்வேறு நடவடிக்கைகளால் இந்திய அரசு பிரயோகித்து வந்துள்ளது - வருகிறது என்ற விபரங்களை வரலாறு விரிவாகக் கூறும்.இலங்கைவாழ் தமிழர்களின் வாழ்வுரிமை குறித்து 1983 ஆம் ஆண்டே ஐ.நா. சபையில் இந்தியப் பிரதிநிதியை அனுப்பி பேச வைத்து உலகின் கவனத்திற்கு கொண்டு சென்றவர் இந்திராதான்.அன்றைய வெளியுறவுச் செயலாளர் ஜி. பார்த்தசாரதியை அந்நாட்டுக்கு அனுப்பி அன்றைய அதிபர்  ஜெயவர்த்தனேவிடம் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தச் செய்ததும் இந்திராவே.1985 ஜூலை 7-ந் தேதி திம்புவில் இலங்கை அரசையும், அந்நாட்டு விடுதலை முன்னணி தலைவர்களையும் இந்திய அரசு அதிகாரிகள் முன்னிலையில் பேச வைத்தவர் ராஜீவ்காந்தி.மேலும் ராஜீவ்காந்தி - இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு சிறந்த கடுமையான நிர்ப்பந்தமாக அமைந்தது. தமிழர்களுக்கு சுயஅதிகாரம் கொண்ட மாநிலம் உருவாகும் வகையில் சட்டத் திருத்தத்தை ஒப்பந்தம் வலியுறுத்தியது.இலங்கை தமிழர்களுக்கு உரிமை தரும் அந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தான் சிங்கள ராணுவ வீரர் ஒருவர் ராஜீவ்காந்தியை இலங்கையில் அந்நாட்டு ராணுவ மரியாதை ஏற்று வரும் நேரத்தில் துப்பாக்கியால் தாக்கினார் என்பதும், அக்கொள்கைக்கென்றே ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படுகொலைக்கு ஆளானார்என்பதும் வரலாற்றின் சோக அத்தியாயங்கள்.கடந்த 1984 - 89 ஆம் ஆண்டுகளில் நான் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றிய போது 'இலங்கை வாழ் தமிழர்களின் பிரச்சினைக்கு தமிழ் ஈழம் தான் நிரந்தர தீர்வு" என்று எனது உரையை பதிவு செய்திருக்கிறேன். அப்போது இந்திரா காந்தி பிரதமர்.இன்றைக்கு சோனியா காந்தி வழிகாட்டுதலில் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு சார்பில் பிரதமரும், முன்னாள் மற்றும் இன்னாள் வெளியுறவு அமைச்சர்களான பிரணாப் முகர்ஜி, எஸ்.எம். கிருஷ்ணா ஆகிய தலைவர்களும் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுத்துறை செயலாளர் உட்பட பல்வேறு உயர்மட்டஇந்திய அதிகாரிகளும் அதிபர் ராஜபட்சவை பலமுறை நேரில் சந்தித்து இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்த நிகழ்வுகளை ஊடகங்கள் மூலம் உலகமே அறிந்தவை தான்.ஒரு நாட்டின் உயர் பதவியிலுள்ள ராஜபட்ச தமிழர்கள் வாழ்வுரிமை குறித்து இந்திய அரசு எவ்வித நிர்ப்பந்தமும் செய்யவில்லை என்ற பொய் செய்தியை வெளியிட்டதன் மூலம் அவர் உலக மகாப் பொய்யர் என்ற பட்டத்திற்கு உரியவராகிறார். எனவே அவரது இச்செயலை உலகம் ஏற்காது. இதையும் மன்னிக்காது என்று தங்கபாலு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்

தங்கபாலுவின் செய்தியை யாரும் படிக்க கூட மாட்டார்கள்
By சக்தி
6/29/2011 10:22:00 PM
ஒரு காமெடி பீசு பிதட்டுகிறது, தேர்தல் ஏதும் வரவில்லையே பிறகு என் இந்த பித்தலாட்டம்
By ramesh
6/29/2011 10:04:00 PM
You are a liar, not Rajapakse. You are another Karuna. Under the guise of eliminating terrorism, your party with the connivance of DMK killed so many innocent Tamils. People gave a fitting reply in the assembly election. Soon, your party will be eliminated lock, stock and barrel from the Tamil Nation.
By Raja
6/29/2011 9:53:00 PM
மறைந்த மதிப்புமிகு எம்.ஜி.ஆர். அவர்களின் நிர்பந்தம் காரணமாக அவர் காலத்தில் மத்திய அரசு செய்த ஒரு சில அசைவுகளை தங்கபாலு அவர்கள் தனது அறிக்கையில் கோடிட்டு காட்டியுள்ளார். இதே போல சமீப கால மத்திய அரசு செயல்பாடுகளை அவரால் கூறவே முடியாது. ஏனெனில் இலங்கையில் கொல்லப்பட்டு இறந்த தமிழர்களைப் ஒத்து மத்திய அரசு ஒரு பிணத்தை போலவே இருக்கிறது. ராஜபக்ஷேவை உலக மகா பொய்யர் என்று தங்கபாலுக்கு பதில் குறைந்தபட்சம் உள்துறை அமைச்சர் சிதம்பரம் அவர்கள் கூறி இருந்தால் தமிழ்கூறும் நல்லுலகம் சற்று திரும்பிப் பார்த்திருக்கும். தமிழக மீனவர் பிரச்சனைகளைக் கூட தீர்க்க முடியாத மத்திய அரசு ஒரு உயிரில்லா அரசாகும். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்கார பாவலா செய்யும் தங்கபாலு அவர்கள் அறிக்கைகள் ஏதும் அளிக்காமல் தலைவர் பதவியை பிடுங்கும் வரை சும்மா இருத்தலே நலமாகும். வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் மத்திய அரசு நாடகம் நடத்தாமல் ராஜபக்ஷே கொலை கும்பலுக்கு வெளிப்படையாகவே தனது ஆதரவினை தெரிவித்து விடலாம்.
By அய்யன்பேட்டை தனசேகரன்
6/29/2011 8:46:00 PM
டேய் மடையா,நீ சொன்னதை சோனியாவோ,மண் மோகனோ,முகர்ஜியோ,கிருஷ்ணாவோ அல்லது அந்த மலையாள கூட்டமோ சொல்லட்டும், எந்த நிர்பந்தம் செய்தார்கள் என்று .நீ எல்லாம் தமிழின துரோகி.
By செந்தீ
6/29/2011 8:19:00 PM
'தமிழர்களுக்கு சுயஅதிகாரம் கொண்ட மாநிலம் உருவாகும் வகையில் சட்டத் திருத்தத்தை ஒப்பந்தம் வலியுறுத்தியது". பெயரளவிற்கு இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம். இருந்தும் ராஜீவ் அவர்கள் ஒப்பந்தம் 1987 - ல் கையொப்பமானப் பிறகு, ஏன் இந்தியப் படையை இலங்கைக்கு அனுப்பவேண்டும்?அனுப்பியப் படை அமைதிப் படையா அல்லது போர்ப் படையா? ஐ நா விற்கு மட்டுமே எங்கும் அமைதிப் படை அனுப்பும் அதிகாரம் உள்ளது. இதன் பின்பு ராஜீவ் அவர்கள் வெள்ளைமாளிகைக்கு ஏன் வரவழைக்கப் பட்டார்? அங்கு நடந்தது என்ன? இந்தியப்படை இலங்கையில் இருந்தக் காலத்தில், சுமார் 1400 இந்திய வீரர்களும் எண்ணிகையில் அடங்காத பல நூற்றுக்கணக்கான பொது மக்களும் கொல்லப் படார்களே? யாரால்? அப்படிஎன்றால் அங்குப் சென்றது உண்மையில் அமைதிப் படையா அல்லது ஆக்கிரமிப்புப் படையா? அமைதி ஒப்பந்தம் ஏற்ப்படவேண்டுமென்றால், புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் தானே ஏற்பட வேண்டும்? இந்தியாவிற்கும் இலங்கைக்கும் ஏற்படவேண்டிய அவசியம்?ஏன் புலிகள் புறக் கணிக்கப் பட்டார்கள்? டில்லியில் நடந்தது என்ன?
By பழனிசாமி T
6/29/2011 8:01:00 PM
நீங்கள் இந்தியாவை வெளிப்டையாக ஒரு அறிக்கை விடசொல்லுங்கள் பார்க்கலாம். முடியாது. ஈனெனில் காங்கிரஸ் என்றாலே பொய்யர்கள் என்பது நட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும்.
By இனியன்
6/29/2011 7:38:00 PM
ராஜபக்சே உலகத்தையே ஏமாற்ற நினைக்கும் போது காங்கிரஸ் கட்சியை ஏமாற்றுவது கடினம் கிடையாது. காங்கிரஸ் கட்சியும் ஸ்ரீ லங்கா அரசும் ஆடும் நாடகம் இது. தங்கபாலுக்கு இது நல்லா தெரியும். இவர்கள் தமிழர்களை என்னும் ஏமாற்ற எண்ணுகிறார்கள். தமிழர்கள் ஒன்றும் முட்டாள்கள் கிடையாது. தமிழ் நாட்டில் இனி காங்கிரஸ் கட்சி தலை தூக்க முடியாது.
By சுதாகர்
6/29/2011 7:27:00 PM
TANGABALU, THAT IS YOUR PARTY AND YOUR GOVT HELPED SINGALAVAN GOVT TO CARRY OUT TAMIL ETHNIC CLEANSING. NEARLY 150 000 PEOPLE WERE KILLED BY YOUR FRIENDLY SINGALAVA GOVT. ABOUT 300 000 PEOPLE HAVE MIGRATED. AFTER TWO YEARS, THE AGONY AND SUFFERINGS OF TAMIL PEOPLE WERE NOT SOLVED. HI GUY, SHUT UP AND STOP LYING
By Paris EJILAN
6/29/2011 7:19:00 PM
ராஜபக்சே வீடே நியும் மன்மோகன் சிங் தன மகபோயயர்கள் சிங்கவலனுக்கு ஆயுதத்தையும் கொடுத்து தமிழர்களை குண்டோடுகொல்வாதை பார்த்து கொண்டு இருந்து இப்பொழுது நாடகம் நடிக்கேற காங்கிரஸ் தமில்னட்டுலேருந்து சுத்தமா அல்லிகனும்
By sami
6/29/2011 6:45:00 PM
ஒரு நாட்டின் உயர் பதவியிலுள்ள ராஜபட்ச தமிழர்கள் வாழ்வுரிமை குறித்து இந்திய அரசு எவ்வித நிர்ப்பந்தமும் செய்யவில்லை என்ற பொய் செய்தியை வெளியிட்டதன் மூலம் அவர் உலக மகாப் பொய்யர் என்ற பட்டத்திற்கு உரியவராகிறார் என்று திருவாய்மலர்ந்திருக்கிறார் தமிழ்க காங்கிரஸ் கட்சியின் தலைவர் தங்கபாலு. இறைமையுள்ள ஒரு நாட்டினது தலைவர் ஒருவவர், தனது நாட்டு உள்விவகாரத்தில் வெளிநாடு ஒன்று தலையிடுகின்றது என்று பகிரங்கமாக கூறுவாரா? இந்த அடிமட்ட அறிவுகூட இல்லாத ஒருவர்தான் கட்சி ஒன்றின் தமிழகத் தலைவராக இருக்கிறார் என்றால் அந்தக் கட்சியின் அவலம் புரிகிறதா?
By Kuha
6/29/2011 5:59:00 PM
இப்படி எதாவது ஒளறி கொட்டி எப்படியாவது தன்னோட பதவியை தக்க வைக்க பார்க்கிறாரு இவர். கடந்த சட்டமன்ற தேர்தலில் என்ன நாடகமாடி தொகுதியை பெற்றாரோ அப்போதே இத்தாலி அம்மையார் அவர்கள் இவரை தூக்கி எறிந்திருக்க வேண்டும். அனால் அப்படி செய்யவில்லை. ஒருவேளை பணம் விளையாடிவிட்டதோ என்னவோ? இப்போது இவ்வாறு அறிக்கை விட்டு அம்மையார் ஜெயலலிதா அவர்களை குஷி படுததானோ? முட்டாள்தனமான அறிக்கையை விடுவது தவிர்த்து தமிழ் இன மக்களை காப்பாற்ற காங்கிரஸ் முனைந்தால் அடுத்த தடவை அக்கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு பாத்து சீட்டாவது பெரும். இல்லையேல் வரலாறு பாடத்தில் காண வேண்டியது வரும். இந்திய நாட்டை ஒரு இந்தியன் தான் ஆழ வேண்டும். ஜைஹிந்த்.
By m.sathyanarayanan
6/29/2011 5:11:00 PM
உன்னைவிட கம்மிதான் பொய் பேசுறாரு .....நீ பொய் உன் வேலைய பாரு .....
By KING
6/29/2011 5:07:00 PM
இந்திய அரசு சார்பில் கதைக்க நீங்கள் யார்?இலங்கை தமிழனுக்காக இந்தியா என்றுமே கதைக்கவில்லை. கதைக்க போவதும் இல்லை.எல்லாம் பிராந்திய ஆதிக்கத்துக்காகவே .போராளிகளுக்கு உதவியது ,அதே போர்ரளிகளின் வளர்சியை பார்த்து பயந்து போராளிகளை பிரித்து சண்டையிட வைத்தது ,.பிரபாகரனை வலுக்கட்டாயமாக டெல்கிக்கு அழைத்துப்போய் அடிபணியவைக்க மிரட்டியது,,தமிழர்களை ஈன இரக்கமின்றி கொள்ள உதவியது .....எல்லாம் செய்ததது யார்?சனல் நாலு தொலைக்காட்சியை பார்த்தவர்கள் எல்லோர் கண்ணிலும் நீர்வருகின்றது.பாரதமாதாவின் தலைவர்கள் இதுவரை வாய் திறக்கவில்லை.ஏன்? அவர்களுக்கும் பங்கு இருப்பதால் கோத்தபாயவிற்கு பயந்து வாய் திறக்கவில்லை.அதுமட்டுமல்ல ராஜபக்சா குடும்பத்தை காப்பாற்ற துடிக்கின்றார்கள்.சும்மா அறிகைவிடவேண்டும் என்று உளறவேண்டாம்.
By ப.kasippillai
6/29/2011 5:05:00 PM
ராஜபச்ச சொல்வது அவன் ஜனாதிபதி ஆனதற்கு அப்புறம் ஆகவே அவன் சொல்வது முற்றிலும் உண்மை.. உலகிலுள்ள அணைத்து நாடுகளும் ராஜபச்ச ஊர் போர்க்குற்றவாளி என்று சொல்லி வருகிறது அதற்கு உண்டான சாட்சியங்களும் சானல் 4 வெளியிட்டது ஆனால் இதுவரை இந்தியா அவனுக்கு ஆதரவாகத்தான் செயல்படுகிறது., அவனுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது.. தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் கூட அவனை போற்குற்றவாளியாக அறிவிக்கும்படி தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.... முதலில் நீங்கள் தமிழனாக இருங்கள் அப்புறம் காங்கிரசுக்காரனாக இருக்கலாம்.... இந்திய அரசே அவன் சொன்னதற்கு இன்னும் விளக்கம் கொடுக்கவில்லை, நீங்கள் ஏன் அதற்குள் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்கிறீர்கள்..
By P.T.சந்திரசேகர்
6/29/2011 4:57:00 PM
இவருக்கும் காங்கிரசுக்கும் காலம் கடந்த சிந்தனை எனக்கொள்ளலாமா ? ஆயிரக்கணக்கான தமிழர் இறந்த பின் , அவர்களை மீழபிறக்கவைக்க திரு தங்கபாலு அல்லது காங்கிரஸ் கட்சியால் முடியுமா என்ன .இவர் இப்போ சொல்வதைத்தானே இலங்கை தழிழர் கடந்த 50 வருடமாக சொல்லுகின்றனரே .இப்போதான் இவர்களுக்கு இலங்கை அரசு பற்றி புரிகின்றதோ ? Too late and Too little ! குட் லக் தங்கபாலு சார் !
By குப்புசாமி
6/29/2011 4:33:00 PM
apparum .. பருப்பு வேகாது ... ராஜபக்ச is enemy.. But Thangabalu is a traitor..
By purush
6/29/2011 4:25:00 PM
நீயும் , உன் காங்கிரஸ் கட்சியும் பித்தலாட்டம் செய்பவர்கள். உங்களால் தான் தமிழ் இனம் அழிந்தது என்று சொல்கிறார்கள். பின் எப்படி நீ ராஜபக்சவை பொய்யன் என்கிறாய்? நல்லாத்தான் நடிக்கிறீங்க! தினமணி ஆசிரியரே! ஏன்தான் இந்த மண்டையன் அறிக்கைய போட்டு எங்களின் ரத்த கொதிப்பை அதிகபடுதுகிறீர்களோ தெரியவில்லை?
By ஜெகன்

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

thangabalu action against the aggressors: தங்கபாலு திடீர் பாய்ச்சல்: தமிழக காங்கிரசில் துவங்கியது பரபரப்பு


தங்கபாலுவின் நடவடிக்கை சரிதான். மே.வங்கத்தில் போட்டியாளர்களை  உடனே நீக்குவதாக எச்சரிக்கும் சோனியா தமிழ்நாடு குறித்து ஒன்றும் எச்சரிப்பதில்லை. அந்த எச்சரிக்கை இங்கும் பொருந்தும்.  எப்பொழுதும் அடாவடித்தனம் செய்ததால் நீக்கப்பட்ட எவரும் சொல்வது நீக்கியவருக்கு அதிகாரம் இல்லை என்பதுதான். தங்கபாலு தலைவராக இல்லாத பொழுது தலைமைக்கு எதிராகத் தூண்டி விடுவது இல்லை. பாராமுகமாகத்தான் இருப்பார். ஆனால். தஙக்பாலு தலைவராக இருக்கும் பொழுது  கோவனும் பிறரும் எதிர்த்துக் கொண்டே இருப்பர். காங். அழிக்கப்பட வேண்டிய கட்சி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரம் தங்கபாலு செய்வது சரிதான். நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காகத் தி.மு.க. பக்கம் சாய்ந்து அதற்கான வாய்ப்பு இல்லை என்றதும் காங்.கில் ஒட்டிய சேகர், உடனே தனக்குப் பதவி வேண்டும் என்று கேட்டு அது இந்தியத் தலைமையால் மறுக்கப்பட்டதும் பழியைத் தங்கபாலு மீது போடுகிறார். தங்கபாலுவின் மனைவி தொலைக்காட்சி மூலம் காங்கிற்கு உதவும் பொழுது அவருக்கு வாய்ப்பு தந்ததும் தவறில்லை.. ஆனால், முடிவிற்குக் கட்டுப்படாமல் கிடைக்கும் ௧௦௦ வாக்குகளையும் கிடைக்கவிடாமல் செய்ய முயன்றவர்களை நீக்கியது முற்றிலும் சரியே! சரியே! சரியே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்!  இனத்தைக் காபபோம்!


சென்னை: சென்னை முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், நடிகர் எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ, தென்சென்னை மாவட்ட தலைவர் மங்கள்ராஜ் உட்பட 19 பேர், காங்கிரசிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அதிரடியாக வெளியிட்டுள்ளார். "யாரையும் கட்சியை விட்டு நீக்க தங்கபாலுவுக்கு அதிகாரம் கிடையாது' என, நீக்கப்பட்டவர்கள் ஆவேசமாக கூறியுள்ளனர். இதன் மூலம் தமிழக காங்கிரசில் மீண்டும் பரபரப்பு ஆரம்பமாகியுள்ளது.

முன்னாள் துணைமேயர் கராத்தே தியாகராஜன், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர். இவர், மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு சீட் கேட்டார். ஆனால், அவருக்கு பதிலாக, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, தன் மனைவி ஜெயந்திக்கு சீட் வாங்கினார். வேட்பு மனு பரிசீலனையில், ஜெயந்தி மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், அவருக்கு பதிலாக தங்கபாலு வேட்பாளரானார். தங்கபாலுவுக்கு எதிராக போட்டி வேட்பாளர் சிவகாமி நிறுத்தப்பட்டார். தங்கபாலுவின் உருவ பொம்மைகளை, இளைஞர் காங்கிரசார் தீ வைத்து கொளுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்தினர். கபாலீசுவரர் கோவிலில், மொட்டை அடித்தனர். சிவகாமிக்கு ஆதரவாக, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். அதேபோல், பெரம்பூர் தொகுதி வேட்பாளர் நடேசனுக்கு எதிராக, கவுன்சிலர் செங்கை செல்லப்பா தலைமையில், சத்தியமூர்த்தி பவனில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காஞ்சிபுரத்தில், லோக்சபா இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரஞ்சித்குமார் தலைமையில், தேர்தலுக்கு முதல் நாள், தங்கபாலு உருவப்பொம்மை எரிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், தேர்தல் முடிந்ததும், தியாகராஜன் உட்பட 19 பேரை நீக்கி, தங்கபாலு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தங்கபாலு வெளியிட்ட அறிக்கை: காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வமான வேட்பாளர்களுக்கு எதிராகவும், கட்சி தலைமைக்கு எதிராகவும், எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக நடந்து கொண்ட கராத்தே தியாகராஜன், மங்களராஜ், முத்துசாமி, செங்கை செல்லப்பன், சாந்தி சம்பந்தம், விஜயசேகர், ஜேம்ஸ் பிரகாஷ், ரஞ்சன்குமார், ரஞ்சித்குமார், கமல், பவன்குமார், கோவிந்தராஜன், திருஞானம், நாடிமுத்து, சாந்தகுமார், நடிகர் எஸ்.வி.சேகர், சுரேஷ், சக்திவேல், ஜவகர்பாபு ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

அதிகாரம் இல்லை: ""காங்கிரஸ் கட்சியிலிருந்து என்னை நீக்க, தங்கபாலுவுக்கு அதிகாரமில்லை,'' என, கராத்தே தியாகராஜன் தெரிவித்தார். சென்னை அடையாறில் உள்ள தியாகராஜன் வீட்டிற்கு வெளியே, போலீசார் திடீரென குவிக்கப்பட்டிருந்தனர். தியாகராஜனை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தகவலை அறிந்து காங்கிரஸ் தொண்டர்கள் பலர் அவரது வீட்டிற்கு வந்தனர். தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு எதிராக தொண்டர்கள் கோஷம் எழுப்பினர்.

நிருபர்களுக்கு தியாகராஜன் அளித்த பேட்டி: மயிலாப்பூர் தொகுதியில் தோல்வி உறுதி என்பதை, ஓட்டுப்பதிவின் முடிவில் உணர்ந்து கொண்ட தங்கபாலு, ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று, தன் ஆணிவேரை தானே அறுக்கும், அபாயகரமான செயலில் இறங்கியிருக்கிறார். சோனியாவின் ஒப்புதலுடன் கட்சி பணியாற்றி வரும் என்னை சமீபகாலங்களில் அதிகளவு கட்சி பணிகளில் பயன்படுத்திக் கொண்டவர் தங்கபாலு. இரவு, பகல் என் பாராமல் அவர் அழைத்த போதெல்லாம் ஓடிப்போய் கட்சி பணியாற்றிய என்னை கட்சியை விட்டு நீக்க எந்த அதிகாரமும் அவருக்கு இல்லை. அதற்கான தகுதியும் இல்லை. காங்கிரஸ் மேலிடம் ஒப்புதல் பெறாமல், தென்சென்னை மாவட்ட தலைவர் மங்கள்ராஜ், கவுன்சிலர் சாந்தி, மற்றொரு கவுன்சிலரும், மாநில எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு காங்கிரஸ் தலைவருமான செங்கை செல்லப்பா ஆகியோரையும் எவ்வித விளக்க நோட்டீசும் அளிக்காமல் தன்னிச்சையாக கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்திருக்கிறார் தங்கபாலு. ராகுலின் உத்தரவின்படி முறையாக தேர்தல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளான ஜேம்ஸ் பிரகாஷ், விஜயசேகர், ரஞ்சித்குமார், சுரேஷ், சக்திவேல், ஜவஹர்பாபு உட்பட பலரை கட்சியை விட்டு நீக்கியிருக்கிறார். இளைஞர் காங்கிரஸ் விவகாரங்களில் தலையிட காங்கிரஸ் கட்சியின் எந்த மாநில தலைவர்களுக்கும் உரிமையில்லை. இவ்வாறு கராத்தே தியாகராஜன் கூறினார்.

தங்கபாலு பதில்: சத்தியமூர்த்தி பவனில் தங்கபாலு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மத்திய, மாநில அரசு கொண்டு வந்த சாதனை திட்டங்களுக்காக மக்கள் எங்களுக்கு ஓட்டளித்து சிறப்பு செய்திருக்கின்றனர். எங்கள் கூட்டணி அறுதி பெரும்பான்மைøயுடன் வெற்றி பெறும். எங்களது கூட்டணி மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் ஓட்டுகள் பெற்று வெற்றி அடையும். தமிழகம் முழுவதும் கட்சிக்கு விரோதமாக யார், யார் செயல்பட்டார்களோ அவர்களது பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கட்சியை விட்டு நீக்கியுள்ளோம். அவர்களை நீக்குவதற்கான முழு அதிகாரம் எனக்கு உள்ளது. இது பற்றி டில்லிக்கு தெரிவித்து விட்டு தான் நீக்குகிறேன். என் மனைவியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததற்கு, சிலரின் சதிவேலை தான் காரணம். கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் சத்தியமூர்த்தி பவனில் நுழைய அனுமதிக்க மாட்டோம். தேர்தல் கமிஷன் தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என, காங்கிரஸ் கட்சி தான் அறிவுறுத்தியது. இவ்வாறு தங்கபாலு கூறினார்.

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

Un expected candidate - Thanga balu: எதிர்பாராத விதமாக நான் வேட்பாளராகி விட்டேன்: தங்கபாலு

தங்கபாலு உட்பட அனைத்துக் காங். வேட்பாளர்களும் மண்ணைக் கவ்வ வேண்டும். அதே நேரம் தங்கபாலுவிற்கு எதிராகக் கோவன் குழுவினர் தொடர்ந்து ஆர்பாட்டங்கள் செய்து வருகின்றனர்.  காலங்காலமாகக் காங்.கட்சி என்பதே இங்குள்ளோர் தனிப்பட்ட முடிவைச் செயல்படுத்த முடியாது என்பதுதான். அவ்வாறிருக்க அவர்மீது வேண்டும் என்றே பழி சுமத்தப்படுகிறது. தி.மு.க.கூட்டணியை விரும்பாதக் காங். தலைவர்களாலும் எதிர்ப்புப் போராட்டம் தூண்டப்படுகிறது.  மாநிலக் கட்சியின் தலைவர் என்ற முறையில் நேரடியாகவே தொகுதியைப் பெற வாய்ப்பு உள்ளபொழுது அவர் ஏன் குறுக்குவழியைப் பின்பற்ற வேண்டும். தங்கபாலு தலைவராக இருக்கும் பொழுது எதிரப்பு ஆர்ப்பாட்டங்கள் மிகுதியாக இருக்கின்றன வென்னால் அதன் காரணம், அவரது எதிர் அணியினர் தலைமைக்குக்கட்டுப்படாததுதான். எனவே, காங். அத்தகையோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு வேளை காங்.. கணிசமான அளவில் வெற்றி பெற்றால் அணிமாறி ஆட்சிப்பீடத்தில் அமரத் துடிப்பவர்களால் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தை அக்கட்சித் தலைமை புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடாமல் சத்தியமூர்த்தி நிலையத்தைத் தங்கள் அணிக்குச் சார்பான போ்ராட்டக் களமாக மாற்றும் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ் வேண்டுகோள்  காங்.தலைமைக்க நடுவு நிலையுடன் விடுக்கப்படுவது! அதே நேரம்  வாக்காளர்களுக்கான மனித நேய வேண்டுகோள், காங்.கிற்கு எக்காரணம் கொண்டும் வாக்களிக்காதீர்கள் என்பது! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

சென்னை: ""எதிர்பாராத விதமாக நான் வேட்பாளராகி விட்டேன்,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறினார்.

சத்தியமூர்த்தி பவனில் தங்கபாலு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காங்கிரஸ் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருப்பது கட்சி விரோத செயல். தேர்தல் நேரத்தில் தொண்டர்களை குழப்புவது நல்லதல்ல. தேர்தல் முடியும் வரை தொண்டர்கள் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும். தேர்தல் முடிந்த பின் தங்களது கருத்துக்களை கட்சி மேலிடத்தில் தெரிவிக்கலாம். உண்ணாவிரதம் இருந்தவர்களை, உள்ளே வருமாறு அழைத்தேன். இது என் பண்பாடு. கட்சி கட்டுப்பாட்டை நான் மதிக்கிறேன். கட்சியில் எனக்கென்று தனி சிறப்பு உண்டு. இரண்டு முறை தலைவர் பதவியும், பல பொறுப்புகளையும் வகித்துள்ளேன். கூட்டணியின் வெற்றிக்காக காங்கிரஸ் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

நான் எந்த வேட்பாளரையும் மாற்றவில்லை. வேட்பாளர்கள் தேர்வு மேலிடம் எடுத்த முடிவு. மேலிடம் அறிவித்த வேட்பாளர்கள் அனைவரையும் காங்கிரசார் ஆதரிக்க வேண்டும். ஒரு அசாதாரண சூழ்நிலையில் எதிர்பாராத விதமாக நான் வேட்பாளராகியுள்ளேன். இது விரும்பி ஏற்றுக் கொண்டதல்ல. எனக்கு கட்சி தான் முக்கியம். அதற்காக எந்த தியாகத்தையும் நான் செய்வேன். தனிப்பட்ட முறையில் விருப்பு, வெறுப்புக்கு இடமில்லை. நான் விரும்பியிருந்தால் சோனியாவிடம் ஏதாவது ஒரு தொகுதியை கொடுங்கள் என கேட்டிருப்பேன். 40 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து வருகிறேன். தலைமைக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும். தேர்தல் அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது; விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு தங்கபாலு கூறினார்.

Senthil - San Franciso,யூ.எஸ்.ஏ
2011-04-01 01:57:56 IST Report Abuse
வருங்கால பிரதமர் நொங்குபாலு வாழ்க.
  • Rate it:
  • 1
  •  
  • 0
Share this comment
Yuvraj - Chennai,இந்தியா
2011-04-01 02:45:55 IST Report Abuse
வருங்கால அமெரிக்க ஜனாதிபதி தங்கபாலு வாழ்க!!...
  • Rate it:
  • 0
  •  
  • 0
Share this comment
srideesha - Atlanta,யூ.எஸ்.ஏ
2011-04-01 01:52:51 IST Report Abuse
எங்களுக்கு தெரியும் உங்களின் எதிர்பார்ப்பு என்னவென்று. திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் காங்ரஸ் கட்சியுடன் கூட்டணி ஆட்சி அமைத்தால் துணை முதல்வர் பதவி கிடைக்கும் என்ற நப்பாசை தானே? அதெப்படி உங்களின் வேட்புமனுவோடு எல்லா ஆவணங்களும் சரியாக இருக்கும் போது மனைவியின் வேட்பு மனுவில் இரண்டு ஆவணங்களை மறந்தீர்கள்? நல்ல வேலை இந்த குறுக்கு புத்தி வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பே வந்ததே. நான் மேலே சொன்னது போல் தப்பித்தவறி கூட்டணி ஆட்சி அமைந்து அப்போது உங்களுக்கு துணை முதல்வர் பதவி ஆசை இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப குசும்பு தான். பேட்டிய பாரு "எதிர்பாராத விதமாக நான் வேட்பாளராகி விட்டேன்".
  • Rate it:
  • 0
  •  
  • 0
Share this comment
sathish - melbourne,ஆஸ்திரேலியா
2011-04-01 01:38:10 IST Report Abuse
அது எப்படி அய்யா தங்க பாலு, மனைவியின் வேட்பாளர் படிவத்தில் கையெழுத்து போட மறந்து,, உங்க படிவத்தில் மாத்திரம் எல்லாம் சரியாக செய்தது, என்ன இருந்தாலும் இந்த தமிழ் மக்களை இவ்வளவு கேனைகளாக செய்ய கூடாது. தமிழ் மக்கள் முட்டாள்கள் தான். கேனைகள் தான். இந்த இலவசத்தை கொடுத்து கொடுத்து, சொரணை கெட்ட ஜன்மங்களாக செய்து விட்ட இந்த கலைனர் உங்களுக்கும் நல்ல உதவி இருக்கிறார். என்ன தெரு கூத்து நடந்தாலும் உங்க பின்னே தான் கொஞ்சம் சூடு, சொரணை, வெட்கம், மானம் இல்லா நீங்க அப்ப அப்ப போடும் பிச்சைக்கு கை தூக்கும் தொண்டர்கள் கொஞ்சம் இருக்கும் வரை உங்களுக்கு கவலை எது,. உங்க கலைனரும் கோஷ்டி தலைவர்களும் வாரிசு பதவி வைக்கும் போது உங்களுக்கு மட்டும் என்ன இருக்காதா? என்ன ஒரு கேவல பிழைப்பு அய்யா ? இதில் காமராஜரையும் என்னையா இழுக்கிறீர்கள்.
  • Rate it:
  • 0
  •  
  • 0
Share this comment
maazmai - Chennai,இந்தியா
2011-04-01 00:49:46 IST Report Abuse
ஆனால் எல்லோரும் எதிர்பார்க்கிறபடி உங்கள் தோல்வி உறுதி..
  • Rate it:
  • 2
  •  
  • 0
Share this comment
k.kaipulla - nj,இந்தியா
2011-04-01 00:46:24 IST Report Abuse
பொதுவா பாத்தீங்கன்னா, எதிர்பாராத விதமா அந்த சம்பவம் நடந்திடிச்சுன்னு ஒரு கெட்ட காரியத்த பத்தி சொல்லுவாங்க. அதுமாறியே இவரும் சொல்லுறாரு.
  • Rate it:
  • 4
  •  
  • 0
Share this comment
Baskaran Subramanian - chennai,இந்தியா
2011-04-01 00:44:54 IST Report Abuse
நீயெல்லாம் தமிழ் நாட்டுக்கு ஒரு சாப கேடு... அது என்ன எப்ப பாத்தாலும்... "அன்னை சோனியா", "அன்னை சோனியா" ன்னு ஜால்ராவ தட்டோ தட்டுன்னு தட்ற வெக்கமே இல்லாம.... சோனியாவுக்கு ..... மாதிரி இருக்கிற நீ.... பேச்சை பாரு...
  • Rate it:
  • 3
  •  
  • 0
Share this comment
Rameshbabu R - Salem,இந்தியா
2011-04-01 00:44:10 IST Report Abuse
எதிர்பாராத விதமாய் நி மனிதனாக கூடத்தான் பிறந்து விட்டாய்.. இதெல்லாம் சகஜமப்பா..
  • Rate it:
  • 4
  •  
  • 0
Share this comment
Vaigai Selvan - Chennai,இந்தியா
2011-04-01 00:31:12 IST Report Abuse
நீங்கள் வேட்பாளர் ஆனது எதிர்பாராதது தான்.. ஆனால்நீங்கள் டிபாசிட் இழக்கப்போவது நாங்கள் எதிர்பார்த்தது..
  • Rate it:
  • 4
  •  
  • 0
Share this comment


புதன், 2 மார்ச், 2011

alliance share-meetting with soniya: தொகுதிப் பங்கீடு: சோனியாவுடன் தமிழக காங்கிரசுக் குழு ஆலோசனை

வெட்டி வீராப்பு வேண்டா எனச் சோனியா சொல்லியிருப்பாரோ? மண்ணைக் கவ்வப் போவது உறுதி. குறைந்த தொகுதிகளிலேயே மண்ணைக் கவ்வலாம் என அறிவு வந்தததோ! எப்படியோ தி.மு.க.வைப் பிடித்த பீடை  இன்னும் ஒழியவில்லை. உன்னாலே நான் கெட்டேன்! என்னாலே நீ கெட்டாய்! எனச் சித்திரையில் ஒப்பாரி வைக்கப் போவதும் உறுதி. வாக்கு எண்ணிக்கைக்கான கால வாய்ப்பில் சிதம்பர வெற்றிகளைக் கருதிப் பார்த்து மூக்கு உடையப் போவதும் உறுதி. வீழ்ச்சிக்கான வாழ்த்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/தமிழே விழி! தமிழா விழி/


தொகுதிப் பங்கீடு: சோனியாவுடன் தமிழக காங்கிரஸ் குழு ஆலோசனை


சென்னை, மார்ச் 1: தொகுதிப் பங்கீட்டில் திமுக உறுதியுடன் இருக்கும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியுடன் அந்தக் கட்சியின் தொகுதிப் பங்கீட்டு குழு தில்லியில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தியது.  திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்துவதற்காக மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், ஜி.கே. வாசன், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு, காங்கிரஸ் அகில இந்தியச் செயலாளர் ஜெயக்குமார் ஆகியோரைக் கொண்ட ஐவர் குழுவை கட்சி மேலிடம் அமைத்தது.  துணை முதல்வர் க. ஸ்டாலின், திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி. ஆர். பாலு, அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி ஆகியோரைக் கொண்ட திமுக குழுவினருடன் பிப்ரவரி 20-ம் தேதி காங்கிரஸ் ஐவர் குழுவினர் முதல் கட்டமாக பேச்சு நடத்தினர்.  அப்போது 80 தொகுதிகள், ஆட்சியில் பங்கு, குறைந்தபட்ச செயல் திட்டம், கூட்டணி ஒருங்கிணைப்பு குழு ஆகிய கோரிக்கைகள் காங்கிரஸ் தரப்பில் முன் வைக்கப்பட்டதாகவும், இதனை ஏற்றுக் கொள்ளாத திமுக 53 தொகுதிகள் மட்டுமே தரமுடியும் என்று கூறியதாகவும் தெரிகிறது.  பிப்ரவரி 23-ம் தேதி தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ஐவர் குழுவினர் சந்தித்து திமுகவுடனான பேச்சுவார்த்தை விவரங்களை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 25-ம் தேதி திமுகவுடன் ஐவர் குழுவினர் 2-ம் கட்டமாகப் பேச்சு நடத்தினர்.  அப்போது ஆட்சியில் பங்கு, 75 தொகுதிகள் என்பது காங்கிரஸ் சார்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.  இதனை நிராகரித்த திமுக 53-க்கு மேல் தர வாய்ப்பில்லை என்று கூறியதாக தெரிகிறது. அந்த நேரத்தில் அண்ணா அறிவாலயத்தில் இருந்த முதல்வர் கருணாநிதியை ஐவர் குழுவினர் சந்திக்காமல் சென்றது இதனை உறுதிபடுத்துவது போல இருந்தது.  இதனிடையே, கூட்டணி விஷயத்தில் குட்டக் குட்ட குனியக் கூடாது. சுதந்திரமாக சுயமரியாதையுடன் திமுக முடிவெடுக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி திங்கள்கிழமை (பிப்ரவரி 28) வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது. வீரமணி மூலம் தங்களை மிரட்டுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கொந்தளிக்க ஆரம்பித்தனர்.  இந்நிலையில் காங்கிரஸ் ஐவர் குழுவினர் தில்லியில் செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து திமுகவுடன் நடைபெற்ற 2-வது கட்ட பேச்சுவார்த்தை விவரங்களை தெரிவித்தனர். அப்போது சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகம்மது படேல், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் ஆகியோர் உடனிருந்தனர்.  சோனியா-சிதம்பரம் தனியாக ஆலோசனை: இதனிடையே, தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்துடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனியாக ஆலோசனை நடத்தினார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் ஐவர் குழுவின் சந்திப்புக்குப் பிறகு இந்த ஆலோசனை நடைபெற்றது. ஏப்ரல் 13-ல் தமிழக சட்டப் பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி குறித்து இருவரும் விவாதித்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.  திமுக கூட்டணியில் பாமகவுக்கு 31, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 10, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 என ஒதுக்கப்பட்டுள்ளதாலும், குறைந்தது 140 தொகுதிகளில் திமுக போட்டியிட விரும்புவதாலும் காங்கிரஸ் எதிர்பார்க்கும் தொகுதிகள் கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதாகக் கூறப்படுகிறது.  ஆனாலும், ஆட்சியில் பங்கு, 75 தொகுதிகள் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.    இழுபறி இல்லை  ""தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை விவரங்களை சோனியா காந்தியிடம் எடுத்துக் கூறினோம். அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு ஏற்படும். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தில்லியிலா அல்லது சென்னையிலா என்பதை சோனியா காந்தி அறிவிப்பார். திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டில் இழுபறி ஏதுமில்லை'' என்று செய்தியாளர்களிடம் கே.வீ.தங்கபாலு தெரிவித்தார்.

திங்கள், 28 பிப்ரவரி, 2011

யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்போம்: கே.வீ.தங்கபாலு

சோனியா குடும்பத்தைத் தவிர எனச்சொல்ல நினைத்தது விடுபட்டு போயிற்று  . அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் . / தமிழே விழி! தமிழா விழி ! / 

யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்போம்: கே.வீ.தங்கபாலு

First Published : 28 Feb 2011 02:55:46 AM IST


காஞ்சிபுரம், பிப். 27: யார் தவறு செய்தாலும் அவர்களை தட்டிக் கேட்கும் அரசாக மத்திய காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ.தங்கபாலு தெரிவித்தார்.காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஓ.வி.அளகேசனார் நூற்றாண்டு விழாவுக்கு தலைமைத் தாங்கி அவர் பேசியது:காங்கிரஸ் கட்சியை முதன்மையான கட்சியாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். காங்கிரஸ் கட்சி யாருக்கும் தலைவணங்காது. யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்கும் அரசாக காங்கிரஸ் செயல்படுகிறது. ஊழலுக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.சோனியா காந்தியின் வழிகாட்டுதலின் பேரில் காங்கிரஸ் தலைவர்களுக்கு நூற்றாண்டு விழா எடுத்து வருகிறோம். அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாழ்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் தியாகி ஓ.வி.அளகேசனாருக்கு நூற்றாண்டு விழா தற்போது நடைபெறுகிறது. இதுபோல் மதுரையில் கக்கன்ஜிக்கும், கோவையில் சி.சுப்பிரமணியத்துக்கும், திருப்பூரில் கொடிகாத்த குமரனுக்கும் நூற்றாண்டு விழாக்களை நடத்தினோம்.காங்கிரஸ் கட்சியின் நேர்மையும், தன்னலம் இல்லாமல் வாழ்ந்த தலைவர்களையும் நினைவு கூரும் விதமாக இந்த விழாக்களை நடத்தி வருகிறோம்.ஓ.வி.அளகேசனார் விடுதலைப் போராட்டத்துக்காக 6 ஆண்டுகள் சிறையில் இருந்தவர். மகாத்மா காந்தியின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். ரயில்வேத்துறை இணை அமைச்சராக இருந்தபோது ரயில் விபத்து ஏற்பட்டதால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தவர்.மத்திய அரசு சாதி, மதம், இனம் பாராமல் அனைவருக்கும் பொதுவாக செயல்படுகிறது. மத்தியில் ஒரு நல்ல ஆட்சியை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே கொடுக்க முடியும். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, இளம் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரால் காங்கிரஸ் கட்சி புத்துணர்ச்சி பெற்றுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் சிறப்பான பிரதமராக செயலாற்றி வருகிறார் என்றார்.

வெள்ளி, 14 ஜனவரி, 2011

அரசு மருத்துவமனைக்கு இராசீவ் பெயர்: கருணாநிதிக்குத் தங்கபாலு பாராட்டு

சரி!சரி! பாராட்டினால் போதுமா? உடனே கோவன்மீது நடவடிக்கை எடுத்துக்  கூடுதல்தொகுதிகளோ பதவிகளோ கேட்காமல் கூட்டணியை உறுதி செய்யுங்கள்.  எங்களைப் போன்ற அடிமைகள் வேறு யாரும் கிடைக்க மாட்டார்கள் என்பதை உணரச் செய்யுங்கள். தமிழ்நாடே! நீ என்றைக்குத்  தமிழர் நாடாக மாறப் போகிறாய்? 
ஏக்கத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அரசு மருத்துவமனைக்கு ராஜிவ் பெயர்: கருணாநிதிக்கு தங்கபாலு பாராட்டு

First Published : 13 Jan 2011 02:36:55 PM IST


சென்னை, ஜன.13:  சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் பெயர் சூட்டப்படும் என அறிவித்துள்ளதற்கு முதல்வர் கருணாநிதிக்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு பாராட்டு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ராஜிவ்காந்தியின் பெயரை சூட்ட வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றுமாறு சட்டப்பேரவையில் இன்று காங்கிரஸ் கட்சியின் தலைமைக் கொறடா பீட்டர் அல்போன்ஸ் வேண்டுகோள் விடுத்தார்.அதற்கு பதிலளிக்கும்வகையில் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ராஜிவ் பெயர் விரைவில் சூட்டப்படும் என கருணாநிதி அறிவித்தார். மிகப்பொருத்தமும், சிறப்புக்கும் உரிய அந்த அறிவிப்புக்காக முதல்வருக்கு காங்கிரஸ் சார்பில் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாக தங்கபாலு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
கருத்துகள்


பொது கழிப்பிடத்திற்கு வேண்டுமானால் ராஜீவ் காந்தி பொது கழிப்பிடம் என்று பெயரை சூட்டுங்கள்.. வட நாட்டில் எதனை கட்டடங்களுக்கு தமிழர்களின் பெயர் சூட்ட பட்டுள்ளது? ராஜீவ் பெயரை சூட்டினால் 2G spectrum ஊழலில் அடித்த பணம் மீண்டும் நாட்டுக்கு வந்து விடுமா? போபர்ஸ் ஊழல் வழக்குக்கு தீர்ப்பு வந்திடுமா? தமிழக மக்கள் வரிபனத்தில் கட்டப்பட்டு இயங்கும் பொது மருத்துவமனைக்கு ஒரு தமிழின எதிரியின் பெயர் சூட்டுவதை பார்த்து கொண்டிருக்கும் தமிழர்கள் சொரணை என்னவானது? காமராஜரை தவிர வேறு எந்த காங்கிரஸ் காரனையும் தமிழர்கள் மதிக்க வேண்டியதில்லை, தமிழின எதிரி காங்கிரசை தமிழ்நாட்டில் இருந்து வேரறுப்போம்.
By tamilan
1/13/2011 11:07:00 PM
Karuna, the king of all scams, now honoring Himalayan bofors scam. What is the necessity of naming a government hospital after Rajiv Gandhi? What was his achievement? Moreover, he is an alien. Are there any dearth of Tamil Heroes? How about honoring language martyrs of 1965? He is pawning our nation at the feet of hindikarans to stay in power. Wake-up Tamils!. Throw people like Karuna, Jaya and their sycophants out of our nation.
By Raja
1/13/2011 11:00:00 PM
நம் தலை விதி இதை எல்லாம் கேட்க வேண்டும் என்று.
By Sri
1/13/2011 10:07:00 PM
வெட்கம் கெட்டவர்கள்.....தன்மானம் அற்றவர்கள்...சுயலாபத்துக்காக போற்றி துதிபாடுபவர்கள்....பிஸ்கட் போட்டால் வாலை ஆட்டும் பிராணிகள்.....நாளை அணி மாரிடின் குறைக்கவும் செய்வார்கள்....என்ன பிறவிகள் இவர்கள்?....
By raghu
1/13/2011 9:59:00 PM
அப்படியே , சென்னையில் உள்ள சமாதிக்கு "ராஜபக்சே' பெயர் சுட்டலாம். ராஜீவ் ஜி.எச். இக்கு என்ன செய்தார்?
By கரிகாலன்
1/13/2011 8:59:00 PM
கருணாநிதிக்கு வேறு வழி இல்லை.எல்லாம் ஸ்பெக்ட்ரம் படுத்தும் பாடு.இனி அவர் வீட்டுக்கே சோனியா பெயரை வைப்பார்.இருபது வருடம் கழித்து இப்பொழுது தான் ராஜீவ் பெயர் கருனானரிக்கு ஞாபகம் வந்திருக்கு.
By bparani
1/13/2011 7:20:00 PM

பீட்டர் திமுகவுக்கு ஜால்ரா அடிப்பதில் வீரமணியை மிஞ்சிவிடுவார். அவருக்கு அங்கே என்ன காரியம் ஆகவேண்டி உள்ளதோ? இந்த கோரிக்கையை வைத்ததே இளங்கோவன் தான். ஏதோ பீட்டர் சொன்னதைப்போல ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள். வாசன் திமுகவிற்கு எதிராக திரும்பினால் பீட்டரை வைத்து காங்கிரசை உடைக்கவழக்கம் போல ஒரு திட்டத்தை முக வைத்துள்ளார். காங்கிரஸ் கழற்றி விடுமோ என்ற பயம் முகவை ஆட்டுவிக்கிறது.
By ராசா
1/13/2011 6:30:00 PM
முதல்வரும் தங்கபாலுவும் இந்த பொழப்புக்கு ...
By shiva
1/13/2011 5:45:00 PM
அடுத்து கோபாலபுரம் வீட்டிற்கு சோனியாவின் பெயரும்.. சி.ஐ.டி காலனி வீட்டிற்கு ராகுலின் பெயரும் சூட்டப்படும் . தங்கபாலு பாராட்டு விழா எடுக்க வேண்டும்
By tamizhinian
1/13/2011 5:04:00 PM
By naming Rajiv Gandhi, will the prices of Onion and other vegetables will come down to Re.1-00 per kilo or life of Fisherman come alive? In the Parliament or Assembly, important issues are derailed and discussing thanks, names change and immediately thanks by Thanga balu. Peter Alphonse, Gnanasekaran, Social worker Yashodha who got a TNHB facility, are true politicians. Electorate of tamilnadu should appreciate their taking part in the assembly and solved many problems of tamilnadu public, hence, give them this time a big bang similar to gave Thangabalu. Congress should be routed out in tamilnadu, should ensure that they should never get deposit even in panchayat elections.
By V Gopalan
1/13/2011 4:10:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *