thamizh name லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
thamizh name லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 29 டிசம்பர், 2011

ignoring anti-thamizh films will continue: தமிழ்ப்பகைப் படங்கள் புறக்கணிப்பு தொடரும்!


தமிழ்ப்பகைப் படங்கள் புறக்கணிப்பு தொடரும்!

பதிவு செய்த நாள் : 29/12/2011



“தமிழ்ப் பெயர் இல்லாத ஒசுத்தி முதலான படங்களைப் புறக்கணிப்போம்” எனத் தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் வேண்டுகோள் விடுத்திருந்தோம். தொடக்கத்தில் இருந்தே இந்து மக்கள் கட்சி, தமிழ்த்தேசியப் பொதுவுடைமை இயக்கம், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு,  முதலான அமைப்பினரும் குறுந்தகவல் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய அமைப்புகள், குறுந்தகவல் படைப்பாளர்கள், இலக்கிய அமைப்புகள் எனப்பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும்  இணைந்து செயல்படுத்தி வருவதில் மகிழ்ச்சியே. ஆனால், பெருமபாலோர் மறியல், ஆர்ப்பாட்டம், முதலியன மூலம் எதிர்பபை வெளிக்காட்ட வேண்டும் என வேண்டுகின்றனர்.

நம் எதிர்ப்பு ஒசுத்தி படத்திற்கு மட்டும் அல்ல. இராசபாட்டை முதலான பிற படங்களுக்கும்தான். ஒசுத்தி படத்தைப் பொறுத்த வரை திரு இராசேந்தர் வருத்தம் தெரிவித்து, இனி வரும் படங்களில் தமிழில் பெயர் சூட்டுவதாகவும் தாமும் அயற்பெயர் எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்பதாகவும் தெரிவித்தார். அவ்வாறிருக்க ஒரு படத்தை மட்டும் எதிர்ப்பதால் பயனில்லை. இப்பொழுது வெளிவந்துளள இராசபாட்டை முதலான அயற் பெயர்ப் படங்களுக்கும் இனி வர உள்ள விசுவரூபம், மைக் செட் பாண்டி முதலான எல்லா படங்களுக்கும் நம் எதிர்ப்பு தேவை. திரைப்படம் தொடர்பான அமைப்புகளுக்கு இது குறித்து  மடல் எழுதி வருகிறோம். குறுந்தகவல்கள் மூலமாக புறக்கணிப்பு வேண்டுகோளைப் பரப்பியதால் பயன் ஏற்பட்டுள்ளது.

நாம் மேலும முனைப்பாக முதலில்
அயற் பெயர்,
தமிழ்ப்பண்பாட்டிற்கு எதிரான காட்சிகள்
முதலான அனைத்திற்கும் எதிரான நம் கருத்துகளைத் தொடர்ந்து பரப்புவோம்.

கோடை விடுமுறையில் தமிழ் நலன் காக்கும் பரப்புரைகளை விரிவு படுத்துவோம்.

மாணாக்கர்களிடையேயும் இளைஞர்களிடையேயும் உரையாடல்கள், கூட்டங்கள், சந்திப்புகள் முதலானவை மூலம் கலைத்துறை மட்டிலும் அல்லாமல் எல்லாத்  துறைகளிலும் எல்லா நிலைகளிலும் தமிழே தலைமையிடம் பெற வேண்டிய உணர்வை வெளிப்படுத்துவோம்.

தமிழ்நாட்டில்
தமிழுக்கே தலைமை!
தமிழர்க்கே முதன்மை!
என்னும் நிலையை உருவாக்குவோம்.

அவரவர் நாட்டில் அவரவர் வாழும் பொழுது
நற்றமிழ் நாட்டில் நந்தமிழர் வெல்லும் சூழ்நிலையை  உருவாக்குவோம்!

அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்

வெள்ளி, 25 நவம்பர், 2011

தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு: சிம்புவின் 'ஒஸ்தி' படத் தலைப்பு மாற்றப்படுமா?


சினிமா செய்திகள்
சிம்பு நடிக்கும் புதிய படத்துக்கு `ஒஸ்தி' என பெயரிடப்பட்டுள்ளது. இதன்...
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு:
சிம்புவின் ஒஸ்தி படம்
தலைப்பு  மாற்றப்படுமா?
சிம்பு நடிக்கும் புதிய படத்துக்கு `ஒஸ்தி' என பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து அடுத்த மாதம் ரிலீசாகிறது. இந்த நிலையில் ஒஸ்தி தலைப்பை மாற்ற வேண்டும் என்று தமிழ் அமைப்புகள் வலியுறுத்தி உள்ளது.
தமிழ் அமைப்பு கழக தலைவர் லக்குவனார் திருவள்ளுவர் நடிகர் சிம்புக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
 
தமிழ் பெயர்கள் தாங்கி திரைப்படங்கள் வரும் இக்கால கட்டத்தில் ஒஸ்தி என கொச்சைப் பெயரை படத்துக்கு வைத்திருப்பது சரியல்ல. இது போன்ற கொச்சையாக பெயர் வைத்தால் தான் படம் வரவேற்பு பெறும் என்று இல்லை. உசத்தி அல்லது ஒசத்தி என்று பேச்சு வழக்கிலாவது பெயர் வைத்து இருக்கலாம்.
 
நல்ல தமிழ் பெயர் சூட்டினால் சந்தோஷப்படுவோம். தங்கள் பாடல் எழுதும் போது கூட அயல்மொழி கலாவாமல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். `ஒஸ்தி' பெயரை மாற்றா விட்டால் அப்படத்தை தமிழ் மக்கள் புறக்கணிப்பார்கள் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. `ஒஸ்தி'' பெயரை மாற்றலாமா என்று படக்குழுவினர் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. ரிலீஸ் தேதி நெருங்குவதால் தலைப்பை மாற்றுவது சிரமம் என்கின்றனர்.
 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Friday, November 25,2011 05:00 PM, சாமியார் said:
ஒஸ்தி மூன்றேழுத்து சிம்பு மூன்றெழுத்து ராசியில்லை. ஒசத்தி நல்ல பேரு நாலு எழுத்து நாலு பேர் சொன்னா கேட்கணும்
Friday, November 25,2011 04:55 PM, ஆல்வார்கடியன் said:
ஐயா தமிழ் இடி தாங்கி, முதலில் விமான நிலையம் சென்று பாரும். வெளி நாடு செல்லும் தமிழன் யாரும் தமிழில் பேச முடியாது செக்யூரிட்டி செக்கிங்கில். ஒரே இந்தி தான். அதை மற்ற முடியுமா என்று பாரும், பிறகு படத்தின் பெயரை மாற்றலாம்.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .....

புதன், 27 ஜூலை, 2011

வன்முறை, ஆபாசத்திரைப்படங்களுக்கு வரிவிலக்கு இல்லை: தமிழக அரசு

பாராட்டுகள். இதற்கு முன்னர் மோசடியாக வரி விலக்கு பெற்ற நிறுவனங்களிடம் இருந்த அளிக்கப்பட்ட விலக்கினைத் திரும்பப் பெறுவது குறித்தும் ஆராயலாம். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

வன்முறை, ஆபாச திரைப்படங்களுக்கு வரிவிலக்கு இல்லை: 
தமிழக அரசு
First Published : 27 Jul 2011 12:57:21 AM IST

சென்னை, ஜூலை 26: தமிழ்த் திரைப்படங்களில் "யு' சான்று பெற்ற படங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வன்முறை, ஆபாசம் அதிகளவில் இடம்பெற்றிருந்தால் அத்திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படாது என்றும் அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து, வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலாளர் சுநீல் பாலிவால் வெளியிட்ட உத்தரவு:திரைப்படங்களுக்குத் தமிழில் பெயரிடப்படுவதால் மட்டுமே அவை தமிழ் பண்பாட்டுக்கு உகந்ததாகவும் கண்ணியமானதாகவும் உள்ளன என உறுதி செய்ய இயலவில்லை.சில நேரங்களில், தரமில்லாத திரைப்படங்கள் தமிழில் பெயரிடப்படுவதைக் காரணம் காட்டி கேளிக்கை வரியிலிருந்து விலக்கு பெற்று விடுகின்றன. எனவே, கேளிக்கை வரிச்சலுகையை திரைப்படங்கள் பெறுவதற்குத் தமிழில் பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடுதல் தகுதி வரையறைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.திரைப்படத் தணிக்கை வாரியத்திடம் இருந்து "யு' சான்று பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக திரைப்படக் கதையின் கரு இருக்க வேண்டும். திரைப்படத்தின் தேவையைத் கருதி பிற மொழிகளைப் பயன்படுத்தும் காட்சிகளைத் தவிர பெருமளவில் திரைப்படத்தின் வசனங்கள் தமிழ் மொழியில் இருக்க வேண்டும். புதிய குழு: கேளிக்கை வரிவிலக்கு கோரி நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கும் இந்த நிபந்தனைகள் பொருந்தும். திரைப்படங்களைப் பார்வையிட்டு வரிவிலக்குக்குப் பரிந்துரை செய்ய ஒரு புதிய தனிக்குழு ஏற்படுத்தப்படும் என்றார் அவர்.

புதன், 30 மார்ச், 2011

kamal 's new film- viswaruupam: கமலின் புதிய படம் 'வசுவரூபம்'

தமிழ்த்தலைப்பு கிடைக்கவில்லையா?  தமிழில் பெயர் சூட்ட மனம் இல்லையா?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


கமலின் புதிய படம் 'விஸ்வரூபம்'

சென்னை, மார்ச்.29:  நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் 'விஸ்வரூபம்' என்பதாக இருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில தலைப்புகளை பரிசீலித்த பின்னர் இந்த பெயரை தேர்வு செய்துள்ளனர்.படத் தயாரிப்புக்கு முந்தைய அனைத்து வேலைகளையும் ஏறக்குறைய முடித்துவிட்ட இயக்குநர் செல்வராகவன் படத்தின் தலைப்பை பதிவுசெய்ய திட்டமிட்டுள்ளார். கமலும் படத்தின் தலைப்புக்கு ஒப்புதல் அளித்துவிட்டார் என்று கூறப்படுகிறது.இதனிடையே, ஏப்ரல் 3-வது வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சோனாக்ஷி சின்ஹா கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்த படத்துக்காக அவருக்கு ரூ 2 கோடி ஊதியம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.