புதன், 23 செப்டம்பர், 2009

இலங்கைத் தமிழ் அகதிகள் நிலை:
அமெரிக்கா கவலை



வாஷிங்டன், செப். 22: இலங்கை அகதிகள் முகாம்களில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அவதிப்படுகின்றனர். இந்த விஷயத்தில் இலங்கை அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக நியூயார்க்கில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான வெளியுறவு துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கை அகதிகள் முகாம்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் அடைக்கப்பட்டுள்ளது கவலை அளிக்கும் விஷயமாகும். இன்னமும் முகாம்களில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உள்ளனர். இவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டியது மிகவும் அவசர அவசியமானதாகும். முகாம்களில் மூன்று மாதத்திற்கும் மேலாக அவர்கள் அவதிப்படுகின்றனர். இம்மாத இறுதியில் பருவமழை தொடங்க உள்ளது. அப்போது அங்குள்ளவர்களின் நிலைமை மிகவும் மோசமாகும். இதைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த விஷயத்தில் இலங்கையை சர்வதேச சமுதாயம் நிர்பந்தப்படுத்துவதில் பல்வேறு இடர்ப்பாடுகள் உள்ளன. மேலும் இப்பிரச்னைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்படுவதோடு, முகாம்களில் உள்ளவர்களுக்கு நிவாரண உதவிகளை அளித்து புதிய இடங்களில் குடியமர்த்துவதில் உள்ள பிரச்னைகளும் உள்ளன. இருப்பினும் நீண்டகாலமாக இடம்பெயர்ந்த மக்களை இத்தகைய முகாம்களில் தங்க வைப்பதன் மூலம் எதிர்காலத்தில் மேலும் பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே வெகு விரைவாக அவர்களைக் குடியமர்த்த வேண்டும். அனைவரையும் ஒரே சமயத்தில் குடியமர்த்துவது என்பது உடனடியாக இயலாத காரியம். ஏனெனில் இலங்கையின் வடக்குப் பகுதியில் இன்னும் பல விஷயங்களை அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த பணிகள் தொடங்கப்பட்டாலும், முகாம்களில் உள்ளவர்களை இலங்கையின் தெற்குப் பகுதியில் உள்ள அவர்களது உறவினர்களின் வீடுகளில் தங்கிக்கொள்ள அனுமதிக்கலாம். அல்லது முகாம்களில் தங்க விரும்புவர்களை தங்க அனுமதிக்கலாம். முகாம்களில் இருப்பவர்கள் அனைவரும் சோதனை செய்யப்படுவது குறித்து கேட்டதற்கு, முகாம்களில் சேர்க்கப்பட்ட தினத்திலிருந்தே இத்தகைய சோதனைகள் நடத்தப்படுகின்றன. முகாம்களில் தங்கியுள்ளவர்களில் விடுதலைப் புலி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எவரேனும் இருக்கிறார்களா என்று பார்ப்பதில் தவறில்லை. இத்தகைய சோதனை மிகவும் அவசியமானது. ஆனால் முகாம்களில் உள்ள மக்கள் நீண்ட காலம் இதே சூழலில் வசிக்கக்கூடாது என்பதுதான் என்றார் பிளேக்.

கருத்துக்கள்

தமிழர்கள் பகுதிகளில் சிங்களக் குடியேற்றமும் சிங்களப் பெயர் சூட்டலும் சிங்கள விளம்பரமும் தமிழர்களைக் காணாமல் போன பட்டியலில் சேர்க்கும் மறைமுக உயிர்ப்பறிப்பும் 'விசாரணை' பெயரிலான கொடும் வதைகளும் தொடரும் பொழுது இவற்றிற்கெல்லாம் ஒரு வகையில் காரணமான அமெரிக்கா கவலைப்படுவதாக அறிக்கை விடுவதாலேயே ஒன்றும் நடக்காது. உண்மையிலேயே இத் துயரங்கள் நிற்க வேண்டுமெனில் 'தமிழ் ஈழத்தை ஏற்கிறோம்' என ஏற்பிசைவை உடனே வழங்க வேண்டும். இதன் தொடர்ச்சியாகப் பிற நாடுகளும் ஏற்பிசைவு வழங்கும். தமிழ் மக்களின் துயர் நீங்கத் தமிழ் ஈழம் ஒன்றுதான் தீர்வு என்பதை உணர வேண்டும். வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ-உலக நட்புறவு! வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/23/2009 5:41:00 AM

ஈழத்தமிழனின் விடுதலைப் போராட்டத்தினை அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இனவெறி அரசான சிங்கள அரசுக்கு, மனித அழிப்புக்கு எல்லாவித உதவிகளையும் செய்துகொண்டு, தற்பொழுது நீலிக்கண்ணீர் விடவும் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் தயாராக உள்ளன. மனித உரிமைக்கும் உலகமயாமாக்கல் கொள்கையினால் ஆபத்து தொடருகின்றன.- கதிர் நிலவு

By kathirnilavumanian
9/23/2009 5:41:00 AM

Sri Lanka already aquaired Tamils' land and settled thousands of Sinhala Army Officials' families. No matter, who shouts Sri Lanka is agressively implementing its agends according to its plan. When Sri Lanka got independene(1948) Tamils were 30%, 140,000 Tamils are missing since 2008? They have been killed by Sri Lankan army. The whole world has abandoned Eelam Tamils including Tamil Nadu!

By Vani
9/23/2009 12:35:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக